Thursday, June 13, 2019

Papahara dasami - Day of Ganga avatar

*பாபஹர தஶமீ (கங்கா தஶஹரா) 12-06-19 புதன்கிழமை* 

ज्येष्ठे मासि सिते पक्षे दशमी हस्तसंयुता ।
हरते दश पापानि तस्माद्दशहरा स्मृता ।।

ஜ்யேஷ்டே மாஸி ஸிதே பக்ஷே தஶம்யா ஹஸ்தஸம்யுதா ।
ஹரதே தஶபாபாநி தஸ்மாத்தஶஹரா ஸ்ம்ருதா  ।। 

சாந்த்ரமான படி ஜ்யேஷ்ட மாஸத்தில் ஶுக்லபக்ஷ தஶமி திதியும் ஹஸ்த நக்ஷத்ரமும் சேரும் நாளே  பாபஹர தஶமீ இன்று முறைப்படி கங்கை காவேரி போன்ற புண்ய நதிகளிலோ குளம் கிணறு வீடு முதலானவற்றிலோ முறைப்படி ஸ்னானம் செய்ய வேண்டும் இப்படிச் செய்வதால் உடல் மனது வாக்கு ஆகியவையால் செய்த பத்துவிதமான பாவங்கள் விலகி இஹபர ஸௌக்யங்களை பெற்று பரமஶ்ரேயஸ்ஸை அடைவோம்.


பத்து வித பாபங்களின் விவரம்

1) ஶரீரத்தால் செய்வது மூன்று

1) நமக்குக் சம்பந்தம் இல்லா பொருள்களை நாம் எடுத்துக் கொள்வது , 2) பிறரைத் துன்புறுத்துவது ,3) பிறர் மனைவி மீது ஆசைப்படுவது

2) மனதால் இழைக்கப்படும் பாபங்கள் மூன்று:

1)  மற்றவர்கள் பொருளை அடைய திட்டமிடுவது , 2) மனதில் கெட்ட எண்ணங்களை நினைப்பது , 3) மனிதர்களிடமும் பொய்யான ஆசை கொள்வது.

3) வாக்கினால் செய்வது நான்கு!

1) கடுஞ்சொல் , 2) உண்மையில்லாத பேச்சு , 3) அவதூறாகப் பேசுவது , 4) அறிவுக்குப் பொருந்தாமல் ஏடாகூடமாகப் பேசுவது.

*वर्षकृत्यदीपिकः* 
*வர்ஷ க்ருத்ய தீபிகா*

No comments:

Post a Comment