Thursday, June 13, 2019

Vishnu Sahasranama 423 to 433 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ர நாமம் -41

423.உக்ர: -இந்த நாமம் சாதாரணமாக நரசிம்ஹரைக் குறிக்கும் . உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருசிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம் என்பது நரசிம்ஹ மந்த்ரம். ஆனால் பராசர பட்டரின் வ்யாக்யானத்தின்படி இது கல்கி அவதாரத்தைக் கூறுகிறது என்று சொல்லப்படுகிறது.

தர்ம விரோதிஷு உக்ர: - தருமத்தை எதிர்ப்பவர்களுக்குக் கடுமையானவர்.

424. ஸம்வத்ஸர; -சம்வத்சரம் என்றால் வருடம். ஸம்வஸதி-ஸமயக் நிவஸதி -அஸ்மின் ஜகத்(பூதானி) இதி ஸம்வத்ஸர: -ப்ரபஞ்சம் (எல்லா பொருள்களும் ) இவரிடம் நன்கு வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஸம்வத்ஸர:

425. தக்ஷ:-ஜகத்ரூபேணவர்த்தமானத்வாத்-உலகவடிவாக விருத்தி அடைந்திருப்பவர். ஸர்வகர்மாணி க்ஷிப்ரம் கரோதி- எல்லாக்காரியங்களையும் விரைவில் செய்து முடிப்பவர்.

426.விச்ராம:-சம்சார சாகரத்தில் நீந்திக் களைத்தவர்க்கு இளைப்பாறும் இடமாக இருப்பவர்.

427. விச்வதக்ஷிண: -தக்ஷிண என்றால் திறமையுடைய என்று பொருள். விச்வதக்ஷிண: -எல்லாச் செயல்களிலும் திறமையுடையவர்.

428.விஸ்தார: -விஸ்தார்யந்தே ஸமஸ்தானி ஜகந்தி அஸ்மின் இதி- தன்னிடத்தில் பரந்த உலகை உடையவர். வேதத்தினால் விதிக்கப்படும் முறைகளை வெளிப்படுத்துபவர்.

429. ஸ்தாவர:- ஸர்வத்ர /ஸர்வஸ்மின் திஷ்டதி இதி ஸ்தாவர: -எல்லாஇடத்திலும், எல்லாவற்றிலும் நிலை பெற்று இருப்பவர். சர்வ வ்யாபித்வம், சர்வாந்தர்யாமித்வம்.

430. ஸ்தாணு:-அசையாமல் நிலைபெற்று இருப்பவர். ஸ்தாவரஸ்தாணு: என்பது ஒரே நாமமாக எடுத்துக்கொண்டால், அவர இல்லாத இடமே இல்லை என்பதனால் ஒரே நிலையாகவும் அசைவில்லாமலும் இருக்கிறார். 
ஸ்தாவர என்றால் தர்மத்தை ஸ்தாபித்தவர் , ஸ்தாணு என்றால் அதில் நிலை பெற்று நிற்பவர்.

431. பிரமாணம் – ஞானரூபியாக இருப்பவர். அவரை அறிவதற்கு அவரே பிரமாணம்.

432. /433. பீஜம் அவ்யயம் – ' பீஜம் மாம் ஸர்வபூதானாம் வித்தி பார்த்த ஸனாதனம்,' (ப.கீ. 7. 1௦), "நானே அனாதிகாலம் முதல் எல்லாவற்றிற்கும் காரணம்."

' பிரளய: பிரபவ: ஸ்தானம் நிதானம் பீஜம் அவ்யயம் ',(ப.கீ. 9.18)," நானே தோன்றுதல், இருத்தல், அழிதல் எல்லாவற்றிற்கும் என்றும் மாறாத ஒரே காரணம்."

பீஜம் அவ்யயம் என்ற இரண்டு சொற்கள் எதைக் குறிக்கிறது என்றால், பீஜம் என்றால் விதை. ஆனால் விதை துளிராகிப்பின் மரமாகவோ செடியாகவோ ஆகிறது,. ஆனால் பகவான் விதை அதாவது காரணம் என்றாலும் மாறுவதில்லை. அவ்யயம் என்றால் மாறாதது என்று பொருள்.

No comments:

Post a Comment