Friday, June 28, 2019

One pointedness- Periyavaa

மனமே அடங்கு
________________

 [ தெய்வத்தின் குரல்  - (ரா. கணபதி அவர்கள்) ]

மனசை இப்படி அப்படிப் போகாமல், நல்ல விஷயத்தில் நினைவைச் செலுத்தும்படி செய்ய வேண்டும்.  எண்ணெயை விட்டால் அது எப்படிப் பிசிர் இல்லாமல் ஒரே இழையாக விழுகிறதோ (இதைத் 'தைலதாரை'  என்பார்கள்) அது மாதிரி மனம் நல்ல நினைவில் ஒருமுகப்பட்டுச் செல்ல வேண்டும். 'ஸ்வாமி, ஸ்வாமி'  என்ற நல்ல வஸ்துவை அப்படியே நினைத்துக் கொண்டிருக்கும்படி, மனத்தை அப்பியாசப்படுத்த வேண்டும். 
*

சாவதற்குள் இந்த மனசை அடக்க ஒருவழி தேடியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் மறுபடி பிறப்புதான்; மறுபடி  மனசின் ஓயாத ஒட்டம்தான். 
*

மனசை அடக்க முழுப் பிரயத்தனமும் பண்ண வேண்டும். அப்படிப் பண்ணி ஜெயித்தவன்தான் 'யுக்தன்'  என்கிற யோகி. அவன்தான் 'ஹுகி' உண்மையான ஆனந்த ஆத்மா என்கிறார் கிருஷ்ண பகவான்.
*

'யோகமெல்லாம் ரிஷிகள் சமாச்சாரம், நமக்கு வருமா?' என்று விட்டு விடலாகாது. மருந்து யாருக்கு வேண்டும்?  வியாதி உள்ளவனுக்குத்தானே? நமக்குத்தான் மனோவியாதி எனவே நாம்தான் அதை அடங்குகிற மருந்தைச்  சாப்பிட வேண்டும்.

- மஹாஸ்வாமிகள்

No comments:

Post a Comment