Friday, June 28, 2019

If the food is digested by reciting vedas, then.....

எவன் கொடுத்த உணவு ஒருவன் வயிற்றில் நின்று
வேதம் ஓதுவதால் ஜீரணம் ஆகிறதோ
அவனுடயை ஏழு கோத்திரங்களும்
101 குலங்களும் கடைத்தேறுகின்றன.

         வேதம்  உச்சரிக்கும்   ஒரு   உத்தமனுக்கு  ( கவனம் .......உச்சரிப்பது  மட்டுமல்ல ........அதன் பலனாக  சித்தசுத்தியும் , சாந்தியும்  நிரம்பப்பெற்ற   முமுக்ஷு வான )  ப்ரம்ம  தேஜஸ்விக்கு ........ஒருவேளை  உணவை   பசிக்கு  கொடுத்து   பாராயணமோ ,  வேதம்  ஓதுதலை  சிரத்தையாக  செய்பவர்   எனில் ...............உணவு  கொடுத்தவருக்கு   கிடைக்கும்  புண்ணியம்  என்ன ?

       ஏழு  கோத்திரங்கள் ...........108  குலங்கள் கடைத்தேறுகின்றன,     என்ன  சொல்லவருகிறது.   இது ?  ஒரு (  எ. கா. )  உபநயனத்தின்  போது ஆதானத்தில் 100 ம் ,  உபநயனத்தில்  100 ம்  ப்ராம்மண  போஜனம்  செய்வித்தல் வேண்டும்  என்று  தர்ம சாஸ்திரம்   விதித்தாலும் ,  நடைமுறையில்  அவ்விதம்  நடத்தப்படுகிறதா ? இப்போது  நம்முடைய  சௌகரியத்திற்கு  ஏற்றவாறு  ப்ராம்மண  போஜனம்  செய்விக்கிறோம்  அல்லவா ?  ஆக  ப்ராம்மண  போஜனம்  அவசியம்  என்பதைப்போல ............

     ஏழு  கோத்திரக்காரர்களும் ,  108 குல  பெரியோர்களும்  ( இங்கு  பட்டியலிட  முடியாது .  கோத்திரம் (Gotra) என்பது குடும்பப் பெயர் போன்றதாகும். வர்ணாச்ரம தர்மப்படி முதல் மூன்று ஆசிரமத்தினர்க்கு கோத்திரங்கள் உண்டு.[1] வேதகால ரிஷிகளின் வழிவந்தமையால், அவர்களின் பெயர்களைக் கொண்டே கோத்திரங்களின் பெயர்களும் அமைந்த்துள்ளது. ஜாபாலி கோத்திரம், சௌனக கோத்திரம், பாரத்துவாஜ கோத்திரம், மார்க்கண்டேய கோத்திரம் போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும் . வேதங்களின் படி ஒரே கோத்திரத்தில் பிறந்த ஆணும் பெண்ணும் சகோதர சகோதரிகளாவர்..........குலமும்  இதை போன்றதே ....! )

    ஒரு  குலத்தில்  தோன்றிய  ஞானியின்  மகிமையால்   அவருக்கு  முன்பும் ,  பின்பும்  27  தலைமுறைகள்  இயல்பாக  முக்தியை  சார்வர்   என்பர்.   எனில்   எல்லோரும்  அடைவார்களா ?  கேட்பது  அபத்தமாகும்.   தொடர்ந்து  ஓரிரு  ஞானிகள்  தோன்றலாம் ...........அதோடு  முடிந்தும் போகலாம்.  ஆனால்  அதில்  அடுத்து  தோன்றி  வருவோருக்கு ...............முன் தோன்றிய  ஞானியின்  தபஸால்  எளிதில்  ஞான மார்க்க  கதவு  திறக்கப்படுகிறது.  அதைக்  குறிக்கவே  27 தலைமுறை  முக்தி எளிதாம்  என்பது ...............  

   ஒரு   முத்துக்கு  பின்னர்  சிப்பிகளும்  தோன்றலாம். ஒரு  ஞானிக்கு  பின்னர்  குப்பையும்  வரலாம்.  நம்மால்  எதையும்  நிர்ணயிக்க  முடியாது.  ஆயினும்  அவர்கள்  முன்னோருடைய  ஞானப்பாதையை , தர்மத்தை  கடைபிடிப்பவராயின்  அவரை  வணங்குகிறோம்  அல்லவா !  

     இங்கு  அப்படிப்பட்ட  ஒருவர்  அமைவாராயின்  .........மிக சத்தியதோடு  வேதங்களை,  உபாசனைகளை , பூஜைகளை ,  ஹோமங்களை,  வேதாந்த  விசாரம்  செய்து,  தன்னை  சுற்றிலும்   அமைதி  பரப்புவாராயின் , 
 சாந்தியை  எந்த  நிலையிலும்  கொண்டவராயின்    அப்படிப்பட்ட   சாதுவுக்கு ,  உத்தம  ப்ராம்மணனுக்கு உணவு  தானம்  செய்வதன்  பலனே  இங்கு  குறிப்பிடப்படுகிறது.  அவர்  வயிற்றில்  உள்ள பசியை  ஆற்றினால் .........இங்கு  உள்ள  எல்லா  உயிர்களுக்கும்  உணவிட்ட  பலனாகும் .....என்பதை  வழியுறுத்தியே   மேற்கண்ட  வாக்கியம்  உணர்த்துகிறது !

No comments:

Post a Comment