Monday, June 24, 2019

Narada bhakti sutram 82 to 84 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

நாரத பக்தி சூத்திரம்

82.குண-மாஹாத்ம்யாஸக்தி- ரூபாஸக்தி- பூஜாஸக்தி-ஸ்மரணாஸக்தி- தாஸ்யாஸக்தி-ஸக்யாஸக்தி-வாத்ஸல்யாஸக்தி- காந்தாஸக்தி-ஆத்மநிவேதனாஸகதி- தன்மயதாஸக்தி-பரமவிரஹாஸக்தி- ரூபா ஏகதா அபி ஏகாதசதா பவதி

பக்தி ஒன்றே ஆயினும் பதினொன்று விதத்தில் பரிணமிக்கிறது.
பகவானின் குணங்களில் ஆர்வம், (வியாசர், வால்மீகி) அவன் அழகில் பிரேமை, (கோபியர்) அவன் ஆராதனையில் ஈடுபாடு, (அம்பரீஷன்)அவனை தியானிப்பதில் ஊக்கம்,(பிரஹ்லாதன்) அவன் சேவையில் ஆர்வம்,(ஹனுமான் ) அவனை நண்பனாகக் கருதுதல்,( அர்ஜுனன், உத்தவர்) குழந்தையாகக் கருதுதல், (யசோதை, பெரியாழ்வார்) கணவனாகக் கருதுதல், ஆண்டாள்),தன்னையே அர்ப்பணித்தல், அவன் மயமாகவே ஆகிவிடுதல், அவனைவிட்டு பிரிதலில் உண்டாகும் துயரம், (ஆழ்வார்கள், பாண்டுரங்கபக்தர்கள்) இவையாகும்.

83.இத்யேவம் வதந்தி ஜனஜல்பநிர்பயா: ஏகமதா: குமார-வியாஸ-சுக- சாண்டில்ய-கர்க- விஷ்ணு- கௌண்டின்ய-சேஷ- உத்தவ –வாருணி- பலி ஹனுமத்-விபீஷணாதய; பக்த்யாசார்யா:

இவ்விதம் உலக நிந்தைக்கு பயப்படாமல் அவனிடம் லயித்த மனத்துடன் இருந்த ஸனத்குமாரர், வியாசர், சுகர், சாண்டில்யர், கர்கர், விஷ்ணு (பாஞ்சராத்ரம், கீதை உபதேசம் செய்ததால் )கௌண்டில்யர், ஆதிசேஷன் , உத்தவர், ஆருணி, பலி, ஹனுமான் , விபீஷணன் முதலியோர். , பக்தியை போதித்த ஆசார்யர்கள் ஆவர்.

84.ய இதம் நாரதப்ரோக்தம் சிவானுசாஸனம் விச்வஸிதி ச்ரத்ததே ஸ பக்திமான் பவதி , ஸ ப்ரேஷ்டம் லபதே ஸ ப்ரேஷ்டம் லபதே

இந்த நாரதரால் கூறப்பட்ட மங்களகரமான உபதேசத்தை யார் நம்பிக்கையுடன் பின்பற்றுகிறாரோ அவர் சிறந்த பக்திமானாக ஆகிறார். அவர் பகவானுக்கு மிகவும் உகந்தவராகிறார்.

நாரத பக்தி சூத்திரம் முடிவுற்றது

  

No comments:

Post a Comment