Monday, June 24, 2019

About menstruation

தூரம்" (பஹிஷ்டை) பார்ப்பதை பற்றி ஒரு வார்த்தை:

தூரம்' பார்ப்பது முன்னெல்லாம் நம் குடும்பங்களில் சர்வ சகஜமாக இருந்தது. யாரும் இதை பெரிதுப் படுத்துவதுமில்லை; அசாதாரணமான காரியம் என்று நினைக்கவுமில்லை. வீடு சிறியதோ பெரியதோ 'தூரம்' அனுஷ்டித்தார்கள். இல்லத்தில் இருக்கும் பெண்கள் எண்ணிக்கையை பற்றியும் கவலை இல்லை அந்த காலத்தில். 'தூரம்' பார்ப்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.

சமீபத்தில் ஒரு தம்பதியினர் அன்போடு ஒரு வாத்யாரை தங்களது காரில் ஒரு கோவிலுக்கு அழைத்து சென்றார்கள். போகும் வழியில் காரை நிறுத்தி அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த அருமையான இட்லி அதனுடன் மிளகாய் பொடி, சட்னி இத்யாதிகளையும் அன்போடு அவருடன் சேர்ந்து சாப்பிட்டார்கள். அந்த வாத்யாரும் மிக டேஸ்டாக இருக்கே என்று பாராட்டி ஒரிரண்டு இட்லியை அதிகமாகவே சாப்பிட்டார். அவர்களின் அன்பையும் பாராட்டினார்.

சாப்பிட்டு முடித்த அடுத்த க்ஷணம் அந்த வாத்யாருக்கு என்னமோ தோன்றியது. உங்காத்தில் 'தூரம்' அனுஷ்டிப்பதுண்டா என்று கேட்க அதற்கு அந்த பெண்மணியோ "...அதெல்லாம் இல்லை மாமா, இப்போகூட என் பெண் தூரம்தான். நாங்கள் கலப்போம். அதையெல்லாம் எங்களால் பார்க்க இயலவில்லை, யாரும் எங்களை உங்களைமாதிரி கேட்டதுமில்லை..." என்று கூறினார்.

இதில் மற்றொரு கூத்து என்னவென்றால் வெளிநாட்டில் வசிக்கும் நம்மவர்கள் அங்கு அதை செய்கிறேன், இதை செய்கிறேன், எங்காத்தில் அந்த பூஜை இந்த பூஜை என்று பெருமையோடு சொல்லுபவர்களை பலரை கேட்டுள்ளேன் 'அங்கு தூரம் பார்ப்பீர்களா..என்று'. பதில்: மெளனம்தான். கேட்கும் என்னை வினோதமாக வேறு பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். சென்னையில் எனக்கு தெரிந்த ஒரு பெரிய தனி வீடு. அவர்கள் சார்ந்த மடத்திற்கும் அந்த குடும்பம் மிகவும் வேண்டப்பட்ட குடும்பம். . பல ரூம்கள் உள்ளது அவர்கள் இல்லத்தில். ஆனால் 'தூரம்' பார்ப்பதில்லை. .

வேடிக்கை என்னவென்றால் பலருக்கு இப்போது இதில் குற்ற உணர்ச்சியே இருப்பதில்லை. மேலும் 'நாங்கள் தூரமெல்லாம் அனுஷ்டிப்பதில்லை' என்று பெருமையன பேச்சு வேறே.

நினைத்து பாருங்கள், 'தூரம் பார்க்காத' இல்லங்களில் நடக்கும் வைதிக கார்யங்களும், பரிஹார ஹோமங்களும் வேத பாராயாணங்களும் முழு பலனை தருமா என்று?

அது மாத்திரம் அல்ல, 'தூரம்' பார்க்காமல் நாம் எவ்வளவு திரவியம் செலவழித்து எவ்வளவு பெரிய அளவில் எந்த பூஜை புனஸ்காரங்களை செய்தாலும் பலனில்லை; தோஷம்தான் வரும்.

இன்று பல க்ஷேத்ரங்களிலும், கோவில்களும் சாந்நித்யம் குறைந்து வருவதற்கும், சில வேண்டத் தகாத நிகழ்ச்சிகள் அங்கெல்லாம் நடைபெறுவதற்கும் காரணம் நாம்தாம். தூரத்தை அங்கும் நாம் கலக்குகிறோம். இதில் சந்தேகமே வேண்டாம்.

'ஆனால் ஒன்று. 'தூரம்' அனுஷ்டிப்பதில் ஒரு சில 'தளர்த்தல்கள்' ஏற்பட்டாலும் பரவலாக ஒரு 15 வர்ஷங்களுக்கு முன்பு வரையில் மாநகரங்களிலும் வசிப்பவர்கள்கூட 'தூரம்' பார்பத்தில் கண்ணும் கருத்தமாக இருந்தார்கள்.

இப்போதுதான், சுமார் கடந்த பத்து வர்ஷங்களாக, நிலமை மோசமாகயுள்ளது.

'தூரம்' அனுஷ்டிப்பதற்கு மனசும், மனோபாவம்தான் காரணம். இவை இருந்துவிட்டால் இடம் சின்னாதோ, பெரியதோ, கையில் கைக்குழந்தை இருக்கோ இல்லையோ,எப்படியாவது சுத்தமாக இருக்கலாம். ச்ரமம் இருக்கும், மறுக்கவில்லை. ஆனால் இதில் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும். என்ன செய்ய நாம் அந்த மாதிரி குடும்பத்தில் அல்லவா பிறந்திருக்கோம்; நாம் அனுஷ்டித்துதான் ஆக வேண்டும்.

மகா பாரதம்:
இந்த பதிவை எழுதும்போது மகாபாரதத்தில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. துரியோதனனின் ஆக்ஞைக்கு இணங்க துச்சாதனன் த்ரெளபதியை அரண்மனை சபைக்கு அழைத்து வர அவளின் அந்தபுரத்திற்கு சென்றபோது பல காரணங்களை சொல்லி வர மறுக்கிறாள்.

மேலும் பலவந்தப்படுத்தவே "..நான் பஹிஷ்டையில் உள்ளேன். என்னால் எப்படி அரண்மனைக்கு வர முடியும்? வர மாட்டேன். வந்தால் தோஷமல்லவா? நான் எப்படி இந்த பாவத்தை செய்வேன்." என்று கெஞ்சி கதறுவதாக வியாஸ முனி இந்த இடத்தில் மிகத் தெளிவாக பாரதத்தில் விளக்குகிறார்.

படித்ததில் பிடித்தது.

No comments:

Post a Comment