Monday, June 3, 2019

Narada bhakti sutram 75 to 81 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

நாரத பக்தி சூத்திரம்

72.நாஸ்தி தேஷு ஜாதிவித்யாரூப குல தநக்ரியாதி பேத: 
பக்தர்களுக்குள் ஜாதியோ, கல்வியோ, உருவமோ , குலமோ, செல்வமோ, உத்தியோகமோ பேதமில்லை. நந்தனார் ,திருப்பாணாழ்வார், குலசேகரர், நம்மாழ்வார், வியாசர், வால்மீகி , மீரா , மற்றும் பண்டரிநாதனின் பக்தர்கள் இதற்கு உதாரணம். 
73. யத: ததீயா: 
ஏனென்றால் அவர்கள் பகவானுடையவர்கள். பக்தி என்பது பேதமற்றது. 
74. வாதோ நாவலப்ய: 
பகவானைப் பற்றியோ பக்தர்களைப் பற்றியோ வாதப்ரதிவாதங்கள் அனாவசியமானவை.
75.பாஹுல்யாவகாசத்வாத் அநியதத்வாத் ச
வாதப்ரதிவாதம் என்பது அவரவர் கருத்துப்படி வேறுபடுமே தவிர உண்மையை நிர்ணயிக்க இயலாது. 
76. பக்தி சாஸ்த்ராணி மனநீயானி தத் போதககர்மாணி கரணீயானி
பக்தியைக் கூறும் சாத்திரங்களை ( ராமாயணம் , பாகவதம் முதலியவை) நன்கு அறிந்துகொள்வதன் மூலம் பக்தியானது பின்பற்றப் படுகிறது. 
77. ஸுக து:க இச்சா லாபாதி த்யக்தே காலே ப்ரதீக்ஷமாணே க்ஷணார்தமபி வ்யர்த்தம் ந நேயம்.
சுகம், துக்கம், ஆசை , லாபநஷ்டம் இவைகளை விட்ட பக்தனுக்கு ஒரு க்ஷணம் கூட பகவானை நினைக்காமல் இருப்பது வீணாகும்.
78.அஹிம்சா சத்யசௌச தயா ஆஸ்திக்யாதி சாரித்ரியாணி பரிபாலநீயானி
பக்தனானவன் அஹிம்சை, சத்தியம், தூய்மை, தயை, வழிபாட்டு முறை இவைகளை நன்கு கடைப் பிடித்தல் வேண்டும். 
79. ஸர்வதா ஸர்வபாவேன நிஸ்சிந்தை:பகவானேவ பஜனீய: 
வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் எப்போதும் மற்ற எண்ணமற்று பகவானையே தியானிக்க வேண்டும். 
80. ஸ கீர்த்யமான: சீக்ரமேவ ஆவிர்பவதி அனுபாவயதி பக்தான்
இவ்வாறு ஆராதிக்கப்பட்டால் பகவான் விரைவில் தோன்றி பக்தனை ஆட்கொள்கிறார். 
இதற்கு பக்தர்களின் சரித்திரங்களே உதாரணம்.
81. த்ரிஸத்யஸ்ய பக்திரேவ கரீயஸீ, பக்திரேவ கரீயஸீ.
ஸத்யம் ஞானம் ஆனந்தம் ஆகிய உண்மைக்கு ( பிரம்மத்திற்கு ) பக்தியே மேலானது.

அடுத்த பதிவில் முடிவுறும்.

  

No comments:

Post a Comment