Friday, May 24, 2019

Periya nambi stalls the chariot of ranganathar

திருச்சிற்றம்பலம்.
தேரோட்டத்தில் தெளிந்தது.
ஆம் .ஸ்ரீ ரங்கத்தேரோட்டத்தில் நிகழ்ந்தது.
வைஷ்ணவ சம்பிரதாயத்தில் உயர்ந்தவர்,தாழ்ந்தவர் பாகுபாடு கிடையாது.ஆளவந்தாரின் சீடர்களாக
பெரிய நம்பியும்,மாறநேய நம்பியும் இருந்தனர்.மாறநேய நம்பியின் ஜாதி
பட்டியல் பிரிவிலும்,பெரிய-நம்பியின் ஜாதி உயர்வாயும் இருந்தன.மாறநேயர்க்கு பெரிய நம்பி 
அந்திம கிரியைகளைச் செய்தார்.இதனால் ஏனையோர் கோபம் கொண்டு,பெரிய நம்பியை ஜாதியை விட்டு ஒதுக்கி வைத்தனர்.இதன் காரணமாய் அவர் வீட்டு வாசலின் முன்பு முட்களைப் போட்டு நம்பி வெளியே வராதபடி செய்கிறார்கள்.
அந்த சமயத்தில் ஸ்ரீ ரங்கம் கோவிலில்
தேரோட்டம் நடைபெறுகிறது.
தேர் வர ஆரம்பிக்கிறது. இவர் வீட்டைத் தாண்டித்தான் செல்லவேண்டும்.இவரது வீட்டு வாசலில் முட்களைக் கொட்டி வைத்திருப்பதால் நம்பி வெளியே வர முடியவில்லை.ஆனால்  பெரிய நம்பியின் பெண் அத்துழாய் முடீகளை விலக்கி வெளியே வந்து திருத்தேர் முன்பாக விழுந்து நமஸ்கரிக்கிறாள்.
திருஆணை,நின் ஆணை,கண்டாய் நில் என்கிறாள்.தேரை நிறுத்துங்கள்
என்று கூறி,ரங்கநாதா!இஃதென்ன நியாயம்?நீ எப்படிப்பட்டவன் !உனக்கு இந்த வித்தியாசம் எல்லாம் உண்டோ?
தாழ்ந்த ஜாதியில் பிறந்த திருப்பாணாழ்வாரைக் கோவில் அர்ச்சகர் மேல் ஏற்றி வரச் செய்து உன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டாய்.ஆனால் எமது தந்தையான பெரிய நம்பி செய்ததும் சரி என்றால் இத்தேர் நகரக் கூடாது இது உன் மேல்  ஆணை என்று சொல்கிறாள்.தேரும் நகராமல் நின்று விடுகிறது.யாவரும் எம் முயற்சி செய்யினும் தேர் நகரவில்லை.தலைமை அர்ச்சகர் வீட்டிலிருந்த பெரிய நம்பியை கையோடு அழைத்து வரச் செய்து,தேரினுள் பெருமாள் அருகே
உட்கார வைத்ததும் தான் தேரே நகர்கிறது.உயர்வும்,தாழ்வும் தெய்வத்திற்கு இல்லையென்பதும்,தூய அன்பொன்றே ஸ்திரமென்பதும் ஊர்ஜிதமாகிறது.
அண்ணாமலை அண்ணலின்
திருவடிகளுக்கு சமர்ப்பணம்.
என் குருநாதர் திருவடிகளுக்கு சமர்ப்பணம்.

No comments:

Post a Comment