Thursday, May 23, 2019

Gracing a murderere - Periyavaa

எதிரிகளை வெல்ல ஒரே வழி
--------------------------------------------

ஒரு நாள் காஞ்சி மடத்தின் வாசலில், முரட்டுத்தனமான ஒருவன் தலை குனிந்தபடி நின்றிருந்தான். பக்தர்களுடன் பேசிக் கொண்டிருந்த காஞ்சிப்பெரியவர் அவனை தற்செயலாக பார்த்தார். மடத்திற்குள் வரத் தயங்கிய அவனது கண்களில் இருந்து, கண்ணீர் பெருகியது.

''அவனிடம் பேசி விட்டு வருகிறேன். என்னை தனியாக சந்திக்க விரும்புகிறான்'' என்று சொல்லி வெளியே சென்றார்.

காஞ்சிப்பெரியவரும், அவனுமாக சிறிது நேரம் பேசிக் கொண்டனர். கண்களைத் துடைத்த அவன் காஞ்சிப்பெரியவரை விழுந்து வணங்கினான்; சுவாமிகள் ஆசியளிப்பதை மடத்திற்குள் இருந்த பக்தர்கள் பார்த்தனர்.

அவர்களுக்குள் பேசிய விஷயம் என்ன என்பது, யாருக்கும் தெரியவில்லை. அவன் சென்றதும் மடத்திற்குள் வந்தார் காஞ்சிப்பெரியவர். அனைவரும் உற்று பார்த்தனர்.

'' அவன் ஒரு கொலைகாரன்; ஆறுதல் தேடி என்னிடம் வந்தான். கொலைப்பாவம் செய்து விட்டதால் மடத்திற்குள் வரத் தயங்கினான். அதனால் கோயிலாக விளங்கும் மடத்திற்கு வெளியே சென்று ஆறுதல் சொன்னேன்.
அவன் தன் மனைவி மீது சந்தேகப்பட்டான். ஒருமுறை அவளும் துரோகம் செய்தாள். உணர்ச்சி வசப்பட்டு அவளைக் கொன்றான். நீதிமன்றம் அளிக்கும் தண்டனையில் இருந்து தப்பித்தாலும் மனச்சாட்சி அவனைக் கொல்கிறது.
தப்பு செய்தவரை தண்டிக்க நாம் யார்? அதற்குத் தானே நீதிமன்றம் இருக்கிறது. பகவான் இருக்கிறார். மனைவி தப்பானவள் என்று தீர்ப்பு சொல்லி, தண்டனை வழங்கும் அதிகாரம் இவனுக்கு ஏது?
'' பக்தியுடன் ராம நாமத்தை இடைவிடாமல் சொல். கொல்லப்பட்ட மனைவியின் ஆன்மா நற்கதி அடைய வழிபாடு செய்'' என சொல்லி விட்டு வந்தேன்.

"உண்மையில் கொலை செய்தது யார்? அவனுடைய கோபமே, அதற்கு காரணம். மனிதனின் எதிரிகளான காமம், கோபத்தை வெல்ல வேண்டும். காமத்தை அடக்காதவள் கணவனுக்கு துரோகம் செய்தாள். கோபத்தை அடக்காதவன் அவளைக் கொன்று பாவியானான். உணர்ச்சிகளை வெல்ல கடவுளின் திருவடிகளைச் சரணடைவது ஒன்றே வழி'' என்றார்.

நன்றி: திருப்பூர் கிருஷ்ணன்.


No comments:

Post a Comment