Tuesday, April 16, 2019

Tulasi sloka

_உ_
*இன்று ஒரு ஸ்லோகம்*

ஸ்ரீ துளசி ஸ்தோத்திரம்.
 

*நமஸ் துளசி கல்யாணி,     நமோ விஷ்ணுப்ரியே சுபே நமோ மோக்ஷப்ரதே தேவி  நமஸ் ஸம்பத் ப்ரதாயினே*

பொருள்

வாழ்வில் சகல நன்மைகளும் தரும் துளசி தேவியே உமக்கு நமஸ்காரம்
விஷ்ணு் ப்ரியையும் மங்களமானவளும் ஆகிய துளசி தேவியே உமக்கு நமஸ்காரம்
மோட்ஷம் அளிப்பவளாகிய துளசி தேவியே உமக்கு நமஸ்காரம்
சகல சம்பத்துகளும் அளிப்பவளாகிய துளசி தேவியே உமக்கு நமஸ்காரம்

துளசி மாடத்தை மூன்று முறை வலம் வரும் போது மேற்படி ஸ்லோகத்தை கூறினால் ஸ்ரீமஹாலட்சுமி கடாக்ஷம் உண்டாகும்.

*துளசியின் சில பெருமைகள்*

திருமாலை இடைவிடாது துதித்துக் கொண்டிருப்பவள் துளசி, அவளின் இன்னொரு வடிவமே பூமியின் கண்ணுள்ள துளசிச் செடியாகும். திருமாலின் வெவ்வேறு அவதாரங்களான கிருட்டிணன் ,
விட்டலர் வணக்கங்களின் போது துளசியின் இலை கொண்டு வழிபடுவார்.
வைணவ ஆலயங்களில் துளசி தீர்த்தம் நைவேதனமாக வழங்கப்படும். இதற்கு பெருமாள் தீர்த்தம் என்று பெயர்.

துளசியின் நுனியில் பிரம்மதேவரும், அடியில் சிவபெருமானும், மத்தியில் திருமாலும் வாசம் செய்கின்றனர். தவிர பன்னிரண்டு ஆதித்யர்கள், பதினோரு ருத்திரர்கள், எட்டு வசுக்கள், அக்னி தேவர்கள் இருவர் மற்றும் புஷ்கரம் முதலிய தீர்த்தங்கள், கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள், வாசுதேவர் போன்ற தேவர்கள் துளசி தளத்தில் வசிக்கின்றனர். துளசி இலை பட்ட நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். இதனால் தான் துளசி நீரால், இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

*பிருந்தா, பிருந்தாவனீ, விஸ்வபூஜிதா, விஸ்வபாவனி, புஷ்பஸாரா, நந்தினீ, துளசீ, கிருஷ்ண ஜீவனி, ஏதந் நாமாஷ்டகம் சைவ ஸ்தோத்ரம் நாமார்த்த ஸம்யுதம் ய: படேத் தாஞ்ச ஸம்பூஜ்ய ஸோஸ்வமேதபலம் லபேத்..*

மஹா விஷ்ணு புகழ்ந்து போற்றிய இந்த துதியின் எட்டு நாமங்களும் காரண பெயர்கள் ஆகையால் இதை மனனம் செய்வோர் அசுவமேத யாகம் செய்த பலனை அடைவார்கள்.

துளசி ஒரிடத்தில் மிக நெருங்கி அடர்ந்து இருப்பதால் அவளை *பிருந்தை* என்று போற்றுகிறோம்..!
பிருந்தாவனம் தோறும் இருந்து *பிருந்தாவனீ* என்ற பெயர் பெற்றாள்.
அகில ப்ரபஞ்சத்தினால் பூஜிக்கப்பட்டு *விஸ்வபூஜிதை* என்ற பெயர் பெற்றாள்.
எண்ணற்ற ப்ரபஞ்சமெல்லாம் பரிசுத்தமாக்கி *விஸ்வபாவனீ* என்ற பெயர் பெற்றாள்.
மலர்களின் மீது ப்ரீதி உள்ள தேவர்களும் அவைகளால் ஆனந்தமடையாமல் துளசி யாலேயே ஆனந்த மடைந்ததால் *புஷ்ப ஸாரா* என்ற பெயர் பெற்றாள்.
அடைந்ததுமே ஆனந்தத்தை அளிக்கும் தன்மையினால் *நந்தினீ* என்ற பெயர் பெற்ற துளசி. க்ருஷ்ணனால் உருக்கொன்டு வாழ்வதால் *க்ருஷ்ண ஜீவனி* என்ற பெயர். பெற்றவள்.

*ௐ சாய்ராம்*

No comments:

Post a Comment