Tuesday, April 16, 2019

About women by manu Smriti in Tamil

🙋‍♀️பெண்மயை போற்றும் மனுஸ்மிருதி🙋‍♀️

1) பெண்ணின் விவாஹ (திருமண) காலத்தில் அவளுக்கு கொடுக்கப்பட்ட ஆடை, ஆபரணம், வாகனம் இவற்றை அவளது கணவன், தந்தையோ உபயோகப்படுத்தக்கூடாது. (மனு 2-52)

2)  எந்த வீட்டில் பெண்கள் சந்தோஷமடைக்கிறார்களோ அந்த வீட்டில் எல்லா தெய்வங்களும் சந்தோஷமடைகின்றன.
எந்த வீட்டில் அவ்வாறு பெண்கள் சந்தோஷம் அடையவில்லையோ அந்த வீட்டில் செய்யப்படும் காரியங்கள் பலனில்லாது போகின்றன. (மனு 2-56)

3) பெண்களை அவளது தந்தை உபசரிக்க வேண்டும், இல்லையென்றால் அந்த பெண்ணின் சாபத்தால் அந்த குடும்பம் அழியும் (2-58)

4)   நன்மையை விரும்பும் மனிதர்கள் எப்போதும் தன் வீட்டு கல்யாணம், விரதங்கள், போன்ற காலங்களில் உடன் பிறந்த பெண்களுக்கு நகை, உடை, சாப்பாடு இவற்றால் சந்தோஷப்படுத்தவேண்டும்.(2-59)

5)  கணவன் தன் மனைவியைத் தவிர வேறு பெண்ணை நினைக்காது இருக்கவேண்டும். (2-60)

6) குருடன், மூடன், நொண்டி, எழுபது வயதான முதிய ஆண் பெண்  இவர்களிடம் சிறிது கூட வரி வாங்கக்கூடாது.( 8-394) 

7)        இரண்டு மாதத்திற்க்கு மேற்பட்ட கர்பிணியிடம் ஓடக்காரன் கூலி வாங்கக்கூடாது (8-407)

8)எல்லாவர்ணத்தினரும் மனைவியை காப்பாற்றுவதே மேலான தர்மம் என அறியவேண்டும். 

சக்தியில்லாத கணவனாயினும் மனைவியை காப்பாற்ற முயற்சிக்கவேண்டும். (9-6)

9) கணவனும் மனைவியும் சரிநிகர் சமானம் (9-45)

10)  அண்ணனின் மனைவி தம்பிக்கு தனது குருவின் மனைவியை போன்றவள். தம்பியின் மனைவி அண்ணனுக்கு மருமகள் போன்றவள்.(9-57)  

11) பெண்ணுக்கு ருதுக்காலம் வந்துவிட்டாலும் அதாவது வயதுக்கு வந்தாலும், கல்யாணமாகாது தன் வீட்டில் இருக்கும்படி நேர்ந்தாலும் பரவாயில்லை மாறாக நல்ல குணமில்லாத ஆணுக்கு (வரனுக்கு) பெண்ணை கொடுக்கக்கூடாது.(9-89)

No comments:

Post a Comment