Monday, January 21, 2019

Narada bhakti sutra 55 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

நாரத பக்தி சூத்திரம்

சூத்திரம் 55
.தத் ப்ராப்ய ததேவ அவலோகயதி ததேவ ச்ருணோதி ததேவ பாஷயதி ததேவ சிந்தயதி

பராபக்தியை அடைந்தவர் பகவானையே காண்கிறார், அவரைப்பற்றியே கேட்கிறார் , அவரைப்பற்றியே பேசுகிறார், அவரையே எப்போதும் நினைக்கிறார் .

இதையே கிருஷ்ணன் கீதையில், 
மச்சித்தா மத்கதப்ராணா: போதயந்த: பரஸ்பரம்
கதயந்தஸ்ச மாம்நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச .(ப.கீ.1௦.9)
என்று அனன்ய பக்தியின் லக்ஷணத்தைக் கூறுகிறார்.

இதன் பொருள், என்னிடமே லயித்த மனம் உடையவர்கள், எப்போதும் ஒருவருக்கொருவர் என்னைப் பற்றியே அறிந்தும் பேசியும் மகிழ்ச்சி அடைந்து இன்புறுகிறார்கள்.

இதற்கு சரியான உதாரணம் கோபியர் கண்ணனிடம் கொண்ட பக்தியே ஆகும். அவர்கள் எப்போதும் அவனிடம் லயித்த மனதினராய் இருந்ததால் அவர்கள் பேசுவது அவனைப்பற்றியும் அவன் லீலைகளைப் பற்றியும்தான். பாடுவது ஆடுவது எல்லாம் அவன் நினைவாகவே. சுருக்கமாகக் கூறினால் அவர்கள் வாழ்வதே அவனுக்காக என்று இருந்தது. ,

. கிருஷ்ணா கர்ணாம்ருதத்தில் இதை விளக்கும் ஒரு அழகான ஸ்லோகம் காணப்படுகிறது.

விக்ரேதுகாமா கில கோபகன்யா 
முராரி பாதார்ப்பித சித்தவ்ருத்தி 
தத்யாதிகம் மோஹவசாத் அவோசத் 
கோவிந்த தாமோதர மாதவேதி

ஒரு கோபி தயிர் வெண்ணை இவை விற்கக் கிளம்பியவள் எப்போதும் மனம் கண்ணனிடமே லயித்த படியால் தயிர் , வெண்ணை என்று கூவுவதற்கு பதில், கோவிந்தா தாமோதரா மாதவா என்றாளாம்.

ஆழ்வார்களும் மற்ற பக்தர்களும் இதற்கு சான்றாகத் திகழ்ந்தனர். நம்மாழ்வார் கூறியபடி 'உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்,' என்று இருந்தவர்கள்.

No comments:

Post a Comment