ஸ்ரீமத்பாகவதம்- ஸ்கந்தம்6- அத்தியாயம் 4.5.6
அத்தியாயம் 4- தக்ஷ வம்சம்
தக்ஷன் ப்ரசெதஸ்,மரீஷா இவர்களின் புதல்வன். இவன் தக்ஷ யக்ஞத்தில் சிவனின் கோபத்தால் கொல்லப்பட்ட தக்ஷனே ஆவான் . மறுபிறவியில் ப்ராசேதஸ் என்ற தக்ஷ பிரஜாபதியாகப் பிறந்தான்.
இவனிடம் இருந்து உலகத்தில் உள்ள எல்லாப் பிறவிகளும் தோன்றின. முதலில் மானசீகமாக தேவர்கள் அசுரர்கள் மனிதர்கள் இவர்களை சிருஷ்டித்தான். ஆனால் அவர்களால் சிருஷ்டி பெருகாததைக்கண்டு விந்தய மலைச்சாரலில் சென்று தவம் இயற்றினான்.
முடிவில் பகவான் ப்ரத்யக்ஷம் பஞ்ச ஜனன் என்ற பிரஜாபதியின் மகளான அஸிக்நீ என்ற பெண்ணை மனைவியாக ஏற்று பிரஜோற்பத்தி செய்யும்படி கூறினார்.
அத்தியாயம் 5
தக்ஷன் அஸிக்நீயிடம் ஹர்யச்வர்கள் எனப்பெயர் கொண்ட பதினாயிரம் புதல்வர்களை உண்டாக்கினார். அவர்கள் பிதாவின் கட்டளைப்படி ப்ரஜோற்பத்திக்காக தவம் இயற்றப்போகையில் நாரதர் அவர்களைக்கண்டு அவர்கள் மனதை பிரவ்ருத்தி மார்கத்தில் இருந்து நிவ்ருத்தி மார்கத்தில் திருப்பினார். அதன்படி அவர்கள் கேட்டு முக்தி மார்கத்தில் சென்று மோக்ஷம் அடைந்தனர்.
தக்ஷன் தன் புத்திரர்களின் முடிவைக் கேட்ட தக்ஷன் மனம் வருந்தி மறுபடியும் சபலாச்வர் என்ற ஆயிரம் புத்திரர்களை உண்டாக்கினான். அவர்களும் அதே போல் நாரதர் உபதேசத்தால் பிரம்ம மார்க்கத்தில் சென்று முக்தி அடைந்தனர்.
அதைக்கண்ட தக்ஷன் மிகுந்த கோபம் கொண்டு அங்கு வந்த தேவரிஷியான் நாரதரைப் பார்த்து அவரைப் பலவாறு நிந்தித்து சந்ததியாகிய நூலை அறுத்ததால் அவர் தங்கும் இடம் இல்லாமல் மூவுலகும் சுற்றிக்கொண்டு இருக்க சாபமளித்தான். நாரதரும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு உலக நன்மைக்காக த்ரிலோக சஞ்சாரி ஆனார்.
. அத்தியாயம் 6
பிறகு தக்ஷன் ப்ரம்மாவால் தேற்றப்பட்டு அஸிக்நியிடம் 6௦ பெண்களைப் பெற்றான்.. அவர்களில் 1௦ பேரை தர்ம பிரஜாபதிக்கும், 13 பேரை கச்யபருக்கும், 27 பேரை சந்திரனுக்கும் ( 27 நக்ஷத்திரங்கள்) பூதன், அங்கிரஸ், க்ருசாச்வன் இவர்கள் ஒவ்வொருவருக்கும் இரு பெண்களையும், மீண்டும் கச்யபருக்கே மீதியுள்ள நால்வரையும் மணம் செய்து கொடுத்தான்.
கச்யபரின் மனைவியான அதிதி நாராயணனே தன்க்குப் புத்திரனாக அமைந்த பாக்கியம் பெற்றாள். விவஸ்வான், அர்யமா , பூஸா, த்வஷ்டா, சவிதா, பாகன், தாதா , விதாதா, வருணன் , மித்திரன், சக்ரன் (இந்திரன்), உருக்ரமன் (வாமனர் ) இவர்கள் அதிதியின் புதல்வர்களே.
விவஸ்வான் என்கிற சூரியனின் மனைவி ஸம்ஞா தேவி. இவளுடைய புதல்வர் ஸ்ராத்த தேவர் என்கிற வைவஸ்வத மனு. யமன் யமி என்ற இரட்டையர்களும் இவளுக்குப் பிறந்தவர்களே.
த்வஷ்டா ரசனா என்னும் அசுர நங்கையை மணந்தார். அவளுக்குப் பிறந்தவ்ர்கள் சந்நிவேசன், விஸ்வரூபன்.
அவமதிக்கப்பட்ட தேவ குருவால் கைவிடப்பட்ட தேவர்கள் இந்த விச்வரூபனைத் தங்கள் புரோஹிதராக ஏற்றனர்.
அடுத்து தேவர்கள் ப்ருஹஸ்பதியை அவமதித்ததைப் பற்றியும் அதன் விளைவுகளும் கூறப்படுகின்றன
No comments:
Post a Comment