Tuesday, December 4, 2018

Srimad Bhagavatam skanda 5 adhyaya 18,19 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 5- அத்தியாயம் 18/19

அத்தியாயம் 18/19
பத்ராஸ்வ வர்ஷத்தில், தரும பிரஜாபதியின் புத்திரனான பத்ரச்ரவஸ் ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியை சமாதியோகத்தால் சாக்ஷாத்கரித்து ஆராதிக்கிறார்.
ஹரிவர்ஷத்தில் பகவான் நரஹரி ரூபத்தில் ப்ரஹ்லாதனால் ஆராதிக்கப்படுகிறார்.

கேதுமால வர்ஷத்தில் லக்ஷ்மீ தேவி காமதேவ ரூபத்தில் உள்ள பகவானை ஆராதிக்கிறாள். 
ரம்யக வர்ஷத்தில் பகவான் மத்ஸ்ய ரூபத்தில் வைவஸ்வத மனுவால்ஆராதிக்கப்படுகிறார்.

ஹிரண்மய வர்ஷத்தில் கூர்ம வடிவில் பகவான் வாசம் செய்கிறார். அவரை பித்ருதேவதைகளின் பதியான அர்யமாஉபாஸிக்கிறார்.

உத்தரகுரு வர்ஷத்தில் பகவான் இருப்பது வராஹ ரூபத்தில் யக்ஞபுருஷராக இருக்கிறார். அவர் அங்கு பூமிதேவியால் ஆராதிக்கப்படுகிறார்.

கிம்புருஷ வர்ஷத்தில் ஸ்ரீராமராக ஹனுமானால் உபாஸிக்கப்படுகிறார் .

பாரத வர்ஷத்தில் பகவான் நர நாராயணராக கல்பத்தின் முடிவு வரை தருமம் ,ஞானம் , வைராக்கியம், ஐஸ்வர்யம், சாந்தி,அடக்கம் இவற்றை வளர்த்து ஆத்மச்வரூபத்தை அடைவிக்கும் தவத்தை செய்கிறார்.
இங்கு நாரத மகரிஷி வர்ணாச்ரம தர்மங்களுடன் கூடிய பாரத மக்களுடன் பகவானை பரமபக்தியுடன் வழிபடுகிறார். சாங்க்யத்தையும் யோகத்தையும் பகவானின் பெருமையையும் விளக்கும் பாஞ்ச ராத்ர ஆகமத்தை பகவானாலேயே உபதேசிக்கப்பெற்று ஸாவர்ண மனுவிற்கு உபதேசிக்கப்போகிறார் ,.

பாரத வர்ஷத்தின் பெருமை விளக்கப்படுகிறது. பாரத வர்ஷத்தில் பிறந்தவர்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. விண்ணுலகம் (புண்யகர்மாவினால்) மண்ணுலகம் ( மறுபிறவி) அல்லது நரகம் ( பாப கர்மாவினால்) . இதன் வழியே சென்று சத்சங்கத்தின் மூலம் பாபங்களும் புண்ணியங்களும் தீர்ந்து முக்தியை அடைகின்றனர்.'

தேவர்கள் இதன் பெருமையை பினவருமாறு உரைக்கின்றனர்.
பாரத வர்ஷம் கர்ம பூமியாதலால் பகவத் பக்தியின் மூலம் முக்தி கிடைக்கிறது. யாக யக்ஞங்கள் மூலம் சுவர்க்க பதவி அடைந்து என்னபயன்? பாரத வர்ஷத்தில் பிறந்து மனித ஆயுள் குறைவானதாக இருந்தாலும் அதன் மூலம் பிறவிப்பிணியை தொலைக்க முடிகிறதே!

பகவத் கதைகள் என்ற நதிகள் எங்கு பாயவில்லையோ, பக்தர்கள் எங்கு இல்லையோ , எங்கு பகவதாராதனங்களும் உத்சவங்களும் இல்லையோ அந்த இடம் தேவலோகமானாலும் விலக்கத் தகுந்ததே.

ஹரிஸ்மரணையுடன் கூடிய
பிறவி கிடைக்குமாகில் சுவர்க்க வாசம் கூட ஒரு பொருட்டில்லை. இந்த வர்ஷத்தில் ஹரியானவர் தம்மைப் பூஜிப்பவர்க்கு விசேஷ மங்களத்தை அருளுகிறார்.

No comments:

Post a Comment