Friday, December 28, 2018

10th paasuram thotru svargam - thiruppavai in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

திருப்பாவை-நோற்றுச்சுவர்க்கம்

1௦. நோற்றுச்சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் 
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் 
நாற்றத்துழாய் முடி நாராயணன் நம்மால் 
போற்றப்பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள் 
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும் 
தோற்றும் உனக்கே பெரும் துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அரும் கலமே 
தேற்றமாய் வந்து திறவேலோரெம்பாவாய்

நோற்றுசுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்- இந்தப்பெண் எல்லோரிடமும் பாவை நோன்பைப் பற்றிப் பேசிவிட்டு இப்போது உறங்குகிறாள். சுவர்க்கம் என்றால் பகவானை அடைவது.

மாற்றம் – மறுமொழி 
நாற்றத்துழாய் முடி நாராயணன் நம் மால் – வாசனை உள்ள துளசியை அணிந்த நாராயணன் என்னும் நம் மால்.

நாராயணன் என்ற நாமம் அவனுடைய சர்வவ்யாபித்வம், அந்தர்யாமித்வம் இரண்டையும் உணர்த்துகிறது. நாரா: என்றால் எல்லா உயிர்களும். அயனம் என்றால் இருப்பிடம். நாராணாம் அயனம் என்றால் உயிர்களின் இருப்பிடம்., எல்லாம் அவனிடத்தில் இருக்கின்றன . இது சர்வவ்யாபித்துவம். நாரா: அயனம் அஸ்ய என்று வைத்துக்கொண்டால் அவனுக்கு எல்லாஉயிர்களும் இருப்பிடம் என்று பொருள் அதாவது சர்வாந்தர்யாமித்துவம்.

நம் மால்- நாராயணனாக இருப்பினும் அவன் நம்முடையவான். ஏனென்றால் பக்தி ஒன்றையே பார்ப்பவன் ஆதலால் நம்மிடையே வித்தியாசம் பாராட்டாமல் அன்பு செலுத்துபவன்.

இதை நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியன் என்றும் எடுத்துக்கொள்ளலாம். நாம் போற்றினால் அருள் தரும் புண்ணியன். அடுத்து வரும் வரிகளைக் கண்டால் புண்ணியன் என்பது இங்கு ராமனைக் குறிக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்- ராமனால் கொல்லப்பட்ட கும்பகர்ணன். கூற்றம் என்பது யமனைக் குறிக்கிறது. கூறு செய்பவன், அதாவது உடலில் இருந்து உயிரைப் பிரிப்பவன்.,

தோற்றும் உனக்கே பெரும் துயில்தான் தந்தானோ – கும்பகர்ணன் தன் நீண்ட தூக்கத்தில் இருந்து ராவணனால் எழுப்பப்பட்டு உடனே போருக்குச்சென்று உயிரிழந்தான். அதனால் அவனால் இழக்கப்பட்ட தூக்கத்தை உனக்குத் தந்தானோ என்கிறாள்.

ஆற்ற அனந்தல் உடையாய்- இவள் தூங்குவதாக்ப் பாசாங்கு செய்கிறாளாம். உண்மையில் தூங்குபவரை எழுப்பலாம் தூங்குவது போல் பாசாங்கு செய்பவரை எழுப்பமுடியாது.

நோற்றுச்சுவர்க்கம்,- நோன்பு நோற்றுப் பெறக்கூடிய சுவர்கத்தை( இங்கு பகவான் திருவடியை) வாசல் திறவாதார்- அதற்கு வாசலான கர்மங்களை செய்யாமலேயே, மாற்றமும் தாராரோ- ஒருவித தடங்கலும் இன்றி., புகுகின்ற அம்மனாய்- அடைகின்ற ப்ரபன்னர்கள்.

இவ்வாறு இந்தப் பாசுரம் சரணாகதியின் பெருமையைக் கூறுகிறது.. ராமாவதாரத்தைப் பற்றிய குறிப்பு இதற்குச் சான்றாகும்., ராமன் சரணாகதரக்ஷணம் என்ற விரதம் பூண்டவன். விபீஷணன் சரணம் அடிய வந்த அப்போது 'யதி வா ராவணஸ்ஸ்வயம், ராவணனே வந்தாலும் அபயமளிப்பேன் என்று கூறியவன்.

மோக்ஷத்திற்குத் தடையாய் உள்ளவை பகவானைப் பற்றிய அறிவின்மையும் உலக சுகங்களில் நாட்டமும். அப்பேர்ப்பட்ட ஜீவர்கள் கும்பகர்ணனையும் தோற்கடிக்கும் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்கள்.

அதனால் பெருந்துயில் எனப்படுகிறது.
இந்தப் பாசுரம் பேயாழ்வரைக் குறிப்பிடுவதாக் எண்ணப்படுகிறது. பொயகை ஆழ்வார் , பூதத்தாழ்வார் இவர்கள் இருவரும் ஏற்றிய விளக்கின் ஒளியால் பகவானைக் கண்டு , ' திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் எனப்பாடியவர். அவர் அதனால் அரும் கலம் எனப்படுகிறார்.

வாசல் திறவாதார் என்பது அவர் வரும்போது அவர்தான் கடைசியில் வந்தவர் ஆனதால் அந்த வீட்டின் இடைகழி திறந்து இருந்தது என்பதைக் குறிக்கிறது. அதன்பின்தான் பகவான் நான்காவதாக வந்து அவர்களுக்கு தரிசனம் அளித்தார். ஆற்ற அனந்தல் என்பது அவர் சீடராகவும் பரமைகாந்தியாகவும் இருந்த திருமழிசைஆழ்வார்

https://drive.google.com/…/1iv7X3DEq2hLVU2QAZGQoK1hJeKWdVP1…

  

No comments:

Post a Comment