Tuesday, November 13, 2018

Krishnangaraka caturdashi tarpanam

06.11.2018 அன்று க்ருஷ்ணாங்காரக சதுர்த்தசீ.

 க்ருஷ்ணபக்ஷ சதுர்த்தசீயும் செவ்வாய் கிழமையும் சேரும் நாள் ஸூர்யக்ரஹணத்திற்கு சமமானது.

இந்த வருடம் 6-11-2018 செவ்வாயன்று தீபாவளி
இன்று காலை ஸ்நானம், ஸந்த்யாவந்தனம் முடித்துவிட்டு யமதர்ப்பணம் செய்ய வேண்டும்.

 கங்கா ஸ்நானம் ஆனபிறகு , புதுவஸ்த்ரம் தரித்தபிறகு , மடிக்காக ப்ராதஸ்நானம் செய்யும்போது , கிருஷ்ணாங்காரக ஸ்நானம், பிறகு நித்யகர்மாவான ஸந்த்யாவந்தனம், (ஸமிதாதானம்-பிரஹ்ம்மசாரிகள், ஔபாஸனம்-கிருஹஸ்தர்கள்) செய்துவிட்டு ஜீவத்பித்ருக்கள்  உட்பட அனைவரும் யமதர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஆசமனம் செய்துவிட்டு
"க்ருஷ்ணாங்காரக சதுர்த்தசீ புண்ய காலே யம தர்ப்பணம்   கரிஷ்யே" என்று ஸங்கல்பம் செய்து ஸுத்த ஜலத்தால் பின் வருமாறு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

 (ஒவ்வொன்றும் மூன்று முறை)
1.யமாயநம: யமம் தர்ப்பயாமி
2.தர்மராஜாயநம: தர்மராஜம் தர்ப்பயாமி
3.ம்ருத்யவேநம: ம்ருத்யும் தர்ப்பயாமி
4.அந்தகாயவேநம: அந்தகாயம் தர்ப்பயாமி
5.வைவஸ்வதாயநம: வைவஸ்வதம் தர்ப்பயாமி
6.காலாயநம: காலம் தர்ப்பயாமி
7.ஸர்வபூத க்ஷயாயநம: ஸர்வபூதக்ஷயம் தர்ப்பயாமி
8.ஔதும்பராயநம: ஔதும்பரம் தர்ப்பயாமி
9.தத்நாயநம: தத்நம் தர்ப்பயாமி
10.நீலாயநம: நீலம் தர்ப்பயாமி
11.பரமேஷ்டினேநம: பரமேஷ்டினம் தர்ப்பயாமி
12.வ்ருகோதராயநம:வ்ருகோதரம் தர்ப்பயாமி
13.சித்ராயநம:சித்ரம் தர்ப்பயாமி
14.சித்ரகுப்தாயநம: சித்ரகுப்தம் தர்ப்பயாமி

பின்னர் பின் வரும் ச்லோகம் சொல்லி ப்ரார்த்திக்கவும்.

யமோ நிஹந்தா பித்ரு தர்மராஜோ
 
வைவஸ்வதோ தண்டதரஸ்ச கால:

ப்ரேதாதிபோ ம்ருத்யுரகா(அ)பஹாரீ

க்ருதாந்தகோ மே ஸுப மாதநோது

நீலபர்வத ஸங்காஸ! ருத்ர கோப ஸமுத்பவ!

காலதண்ட தர! ஸ்ரீமன்! வைவஸ்வத! நமோஸ்துதே

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

No comments:

Post a Comment