உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
_____________________________________
*தினமும் ஒரு தேவார வைப்புத் தல தரிசனம் எண்: 35.*
(எல்லோரும் தரிசிக்க செல்வதற்காக...........)
_____________________________________
*தேவார வைப்புத் தல தொடர் எண்:*
*வைப்புத் தல அருமைகள் பெரூமைகள்:*
*🏜உருத்திர கோடீஸ்வரர் திருக்கோயில், கடம்பை இளங்கோயில்,(கீழக்கடம்பூர்*
____________________________________
*🌙இறைவன்:*
உருத்திர கோடீஸ்வரர், ருத்ராபதி.
*🔱இறைவி:*
*📖தேவார பதிகம் உரைத்தவர்:*
அப்பர்.
ஆறாம் திருமுறையில், எழுபதாவது பதிகத்தில், ஐந்தாவது பாடலில் இத்தலத்தைப் பற்றின குறிப்பு காணப்படுகிறது.
*🛣இருப்பிடம்:*
சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி சென்று, பின் அங்கிருந்து எய்யலூர் வழியாக மேலக்கடம்பூர் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தை அடைவதற்கு முன்பாகவே கீழக்கடம்பூர் என்ற ஊர் வரும்.
இந்த கீழக்கடம்பூரில் தான் கடம்பை இளங்கோவில் என்ற வைப்புத் தலம் உள்ளது.
*📮ஆலய அஞ்சல் முகவரி:*
அருள்மிகு உத்ராபதீஸ்வரர் திருக்கோயில்,
கீழக்கடம்பூர்,
மேலக்கடம்பூர் அஞ்சல்,
காட்டுமன்னார்குடி வட்டம்,
கடலூர்மாவட்டம்,
PIN - 608 304
இவ்வாலயம் முற்றிலும் சிதலமடைந்து விட்டது.
தற்போது தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
புனரமைப்பு வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள கொடுங்கோளூர், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர், நியமநல்லூர், எழுமூர், ஏழூர், தோழூர், ஏமகூடமலை (ஏமகூடம்) ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
🔔கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர்
கொங்கணம் குன்றியூர் குரக்குக் காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவு
நின்றியூர் நீடூர் நியம நல்லூர்
இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர்
எறும்பியூர் ஏராரும் ஏமகூடம்
கடம்பை இளங்கோயில் தன்னினுள்ளும்
கயிலாயநாதனையே காணலாமே.
🙏🏻கொடுங்கோளூர், அஞ்சைக்களம், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர், குரக்குக்கா, நெடுங்களம், நன்னிலம், நெல்லிக்கா, நின்றியூர், நீடூர், நியமநல்லூர், இடும்பாவனம், எழுமூர், ஏழூர், தோழூர், எறும்பியூர், அழகிய ஏமகூடம், கடம்பை இளங்கோயில் ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாமே.
கடம்பூர் பெயரில் இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று கீழக்கடம்பூர், மற்றொன்று மேலக் கடம்பூர்.
கீழக் கடம்பூர் தேவார வைப்புத் தலம், மேலக் கடம்பூர் தேவாரப் பாடல் பெற்ற தலம் ஆகும்.
மேலக் கடம்பூர் தலத்துக்கு, கீழக் கடம்பூர் வழியாகவே செல்ல வேண்டும்.
வைப்புத்தல ஆலயம் இந்நாளில் முற்றிலும் சிதலமடைந்து இருக்கிறது.
தற்போது தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறதது.
தொல்பொருள் ஆய்வுத்துறையின் பெரும் முயற்சியால் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
மேலக்கடம்பூரிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலத்தைப் போல இவ்வாலயமும் நல்ல நிலையில் இருந்த போது மிகுந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கோவிலாக இருந்திருக்க வேண்டும் என எண்ணத்தை தோற்றுவிக்கிறது.
உத்திராபதி கோயில் என்று இப்பகுதி மக்கள் இவ்வாலயத்தை குறிப்பிட்டு வருகின்றனர்.
சிதைந்து விட்ட இவ்வாலயத்தின் இறைவனை ஒரு கீற்றுக் கொட்டகையில் வைத்து தீபமேற்றி வழிபாடு தொடரப்பட்டு வருகின்றனர்.
இக்குறிப்பு யாவும் இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டில் குறிப்பெடுத்தவையாகும். இன்றையளவில் எங்ஙன என அறியவில்லை.
*அப்பரின் அவா:*
நிறைய தண்ணீர் பாயும் குளங்களுடனும் அழகான நந்தவனங்களுடனும் கோயில்களைக் அமைக்க முற்பட வேண்டும் என பாடுபட்டார் அப்பர் பெருமான்.
ஒருவருக்கு புண்ணியம் கிட்ட வேண்டுமானால் கோயில் கட்டுமானத்தில், தன்னை ஈடுபடுத்தி வருதல் சிறப்பாம்.
யாகம் செய்வோர், கிணறு வெட்டுவோர் ஆகியோருக்குக் கிடைக்கும் புகழ் கோயில் கட்டுமாணத்தில் பங்கு கொள்வது கிடைக்குமாம்.
கோயில்களின் உன்னதத்தையும் தொன்மையையும் வித்தியாசங்களையும் வகைகளையும் அப்பர்பெருமான் வகைப்படுத்தி சிலாகித்தே வந்துள்ளார்.
கரக்கோயில், இளங்கோயில், கொகுடிக் கோயில், மணிக்கோயில், ஞாழற்கோயில், ஆலக் கோயில், திருக்கோயில் என ஏழு வகையான ஆலயங்கள் உள்ளன.
தொல்லியல் துறையில் கோயிலை *கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் கந்த சருக்கரையும் மெழுகும் என்றயிவை பத்தே சிற்பத் தொழிலுக்கு உறுப்பாகும்* என்று விளக்குகிறது.
அதாவது தெய்வத் திருமேனிகளைச் செய்ய இந்தப் பத்துப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன எனவாகும்.
*பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோடு எட்டும், மற்றும் கரக்கோயில், கடிபொழில் சூழ் ஞாழற்கோயில், கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில், இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து, தாழ்ந்து, இரைஞ்ச, தீவினைகள் தீரும் அன்றே* என்று அப்பர் பெருமான், தேவாரம் ஆறாம் திருமுறையில் விவரிக்கிறார்
No comments:
Post a Comment