Friday, September 7, 2018

Brindavana saranga and Tamil film sings

22ஆவது மேஎளகர்த்தா ராகமான கரஹரப்ரியாவின் ஜன்ய ராகங்களில் ஒன்று *ப்ருந்தாவனா சாரங்கா*
தேசீய ராகங்களிலும் ஒன்றான இந்த ராக்கம் மயக்கம் தரவல்ல ராகம் என்றால் மிகையாகாது. பக்தி ரசமும் இந்த ராகத்தில் சொட்டுவதனால் பஜன் மற்றும் ஸ்லோகங்கள் பாட இசைந்த ராகமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:- 

ஆரோகணம்: ஸ் ரி1 ம1 ப் நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி2 ம1 ரி2 ஸ்

இது பிரபலமான் ராகமான மத்யமாவதி போல இருக்கும். ஆனால் ஆரோகணத்தில் கசிக நிஷாததிற்குப் பதிலாக காகலி நிஷாதம் வரும். அதுவே மத்தியமாவதிக்கும் ப்ருந்தாவன சாரங்காவிற்கும் உள்ள வித்தியாசம். வட இந்திய இசையில் உள்ள ப்ருந்த்தாவனி இதை பெரிதும் ஒத்த ராகம். இப்போது ப்ருந்தாவன சாரங்காவில் அமைந்த தமிழ்த் திரைப் படப் பாடல்களைப் பார்ப்போம்.

முதலில் 'வீரபாண்டிய கட்ட பொம்மன்' திரைப்படத்தில் வரும் 'சிங்காரக் கண்ணே' என்ற பாடலைப் பார்ப்போம். வாரலட்சுமி அவர்கள் பாடியது. தமிழ்ப் பாடலின் சுட்டி கிடைக்காதலால் இதே பாடலின் தெலுங்கு வர்ஷன் இங்கு கொடுக்கின்றேன்.



அடுத்து 'படித்தால் மட்டும் போதுமா?' படத்தில் இடம் பெற்ற புகழ் பெற்ற பாடலான 'பொன்னோன்று கண்டேன்' என்ற பாடல்.  சிவாஜிக்கும்,, பாலாஜிக்கும் முறையே டி.எம்.எஸ் அவர்களும் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களும் குரல் கொடுத்திருப்பார்கள்.



ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் ' கண்ணன் முகம் காண' என்ற பாடலை பாடியிருப்பவர்கள் ஜெயச்சந்திரன் மற்ற்றும் வாணி ஜெயராம். 



அடுத்து வருவது 'ஒரு தலை ராகம்' படத்தில் வரும் பாடல். இதில் வரும் பாடல்கள் அனைத்துமே பிரபலமானவை. இதில் மிகவும் இனிமையான பாடல் 'இது குழந்தை பாடும் தாலாட்டு' ஆகும். முரண்பாடுகள் ஒவ்வொன்றையும் பட்டியலிடும் இந்தப் பாடலில்  ப்ருந்தாவன சாரங்கா சொட்டி வழிகின்றது.



'இலக்கணம் மாறுதோ' என்ற இந்தப் பாடல் இடம் பெறும் படம் 'நிழல் நிஜமாகிறது' எஸ்.பி.பியின் இனிய குரலில். 



ஜேசுதாஸ் குரலில் 'மரகதவல்லிக்கு மணக்கோலம்' என்ற பாடல் இடம் பெறுவது 'அன்புள்ள அப்பா' என்ற படம்.



சமீபத்தில் 2005ல் வெளிவந்த பாடல்களில் ப்ருந்தாவன் சாரங்காவில் அமைந்த ஒரு பாடல் 'டீஷ்யூம்' படத்தில் இடம் பெறும் 'நெஞ்சாக் கூட்டில் நீயே நிற்கிறாய்" என்ற பாடல்



- சிமுலேஷன்
Simulation at 9:47 AM
2 comments:

BalHanuman11:16 AM
பிருந்தாவன சாரங்கா ராகத்தில் அமைந்த மேலும் சில பிரபலமான பழைய பாடல்கள்...

1.*பூவரையும் பூங்கொடியே பூமாலை சூடவா* 
(படம்: *இதயத்தில் நீ*-பாடியவர்: *பி.பி.ஸ்ரீநிவாஸ்*,இசை: * 
விஸ்வநாதன்-ராமமூர்த்தி*) 

2.*முத்துநகையே உன்னை நானறிவேன்* 
(படம்: *என் தம்பி*, பாடியவர்: *டி.எம்.சௌந்தர்ராஜன்*, இசை: * 
எம்.எஸ்.விஸ்வநாதன்*) 

3.*முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்* 
(படம்: *நெஞ்சிருக்கும் வரை*, பாடியவர்கள்: *டி.எம்.எஸ்,* *பி. சுசீலா* 
இசை:*எம்.எஸ்.விஸ்வநாதன்)

Reply

No comments:

Post a Comment