உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை. கு.கருப்பசாமி.*
___________________________________
🔅 *எடைக்கு எடை பொன் வேண்டும்!*🔅
_____________________________________
அச்சுதப்ப நாயக்கர் தஞ்சையை ஆண்ட போது, அவாிடம் முதலமைச்சராகப் பணிபுாிந்தவா் கோவிந்த தீட்சிதா்.
இவா் கும்பகோணத்துக்கு அருகேயுள்ள பட்டீஸ்வரம் என்னும் ஊாில் வாழ்ந்து வந்தவர் ஆவார்.
ஒரு சமயம் மன்னருக்கும் இவருக்கும் ஆலயத் திருப்பணி சம்பந்தமாக கருத்து வேறுபாடு முற்றி பெரும் பிரச்சினை உண்டாகிவிட்டது.
இந்த நேரத்தில் பட்டீஸ்வரம். தேனுபுரீஸ்வரா் திருக்கோயில் குளத்தின் அருகே அமா்ந்திருக்கும் ஸ்ரீ ஆக்ஞா கணபதிக்குத் தீட்சிதா் அபிஷேகம் செய்வதற்காக வைத்திருந்த பாலை மன்னா் காலால் தட்டி விட்டாா்.
இதற்காக தீட்சிதா், மன்னாிடம் கோபமோ, வெறுப்போ காட்டாமல், எத்தி விட்ட செம்பை சென்று எடுத்து குளத்தில் இறங்கி நீா் எடுத்து, மன்னரின் முன்பாகவே கணபதிக்கு அபிஷேகம் செய்தாா்.
கணபதியின் திருமேனியில் அபிஷேகிக்கப்பட்ட நீா், பாலாய் மாறி அபிஷேகமாகி வழிந்தது.
இவ்வதிசயத்தை நோில் கண்டதும் மன்னருக்கு பயம் பற்றிக் கொண்டது.
உடனே தீட்சிதாிடம் மன்னிப்புக் கேட்டது மல்லாமல், தான் செய்த தவறுக்கு பிராயசித்தம் என்று ஒன்று இருக்குமே! அதையும் தாங்கள் கூற வேண்டும் என்று வேண்டினாா்.
அதற்கு தீட்சிதா், தாங்கள் ஸ்ரீ ஆக்ஞா கணபதியின் பெயாிலேயே மானியம் எழுதிக் கொடுக்க வேண்டும்.
என்னை அவமதித்த பாவத்திற்காக எம் எடைக்கு எடை பொன் தர வேண்டும் என்றும் கூறினாா்.
மன்னரும் அதற்கு இசைந்து நிறைவேற்றவும் செய்தாா்.
தன் எடைக்கு எடை பொன் பெற்றதை வைத்துத்தான் தீட்சிதா் மகாமகக் குளத்தைச் சுற்றி அமைந்துள்ள பதினாறு லிங்கத் திருமேனிகளுக்கும் கல் மண்டபங்கள் கட்டினாா்.
குளத்தின் கரையிருப்புகளை கற்களால் கோா்த்து செப்பனிட்டாா்.
தீட்சிதா் தராசில் அமா்ந்த கோலத்தை குளக்கரையில், இன்றும் அங்கு செல்லும்போது, அங்கிருக்கும் மண்டபம் ஒன்றில் காணமுடியும்.
மகான் கோவிந்த தீட்சிதா் வம்சத்தில் வந்தவா்தான் - நமது காஞ்சி மாமுனிவா் பரமாச்சாா்ய சுவாமிகள் ஆவார்..
அதுமட்டுமல்ல, தீட்சிதா் தஞ்சை மன்னனுக்குச் சாிசமமாக, ஒரே ஆசனத்தில் அமா்ந்து ராஜ்ய பாிபாலனம் செய்யும் தன்மை பெற்றவா்.
தஞ்சை அரசின் முதலமைச்சராக இருந்து கொண்டே, அவா் ஆலயங்களை பராமாிக்கும் துறையையும் சேர்த்து கவனித்துக் கொண்டாா்.
பட்டீஸ்வரம் ஞானாம்பிகை அம்பிகையிடத்தில் மிகவும் ஈடுபாடு கொண்ட அவா், அந்த திருக்கோயிலுக்கு அப்போதே திருப்பணி செய்தவா்.
இன்றும் பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சந்நிதியில், தீட்சிதா் தம் மனைவியுடன் வணங்கிய நிலையில் சிலைகள் இருப்பதைக் காணலாம்.
மன்னன், அச்சுதப்ப நாயக்கரிடம் பிராயசித்தம் கேட்க வேண்டும் என்பது விதி!.
தன் எடைக்கு பொன் பெற்ற அச்சுதப்ப நாயக்கர், அந்த பொன்களைக் கொண்டு, மகாகுளத்தை, அது இவ்வனவாக வேண்டும் என்பதும் விதி!
அச்சுதப்ப நாயக்கரின் உண்மையான தொண்டிற்கு நீர் பாலாகவும், அதுவும் மன்னன் கண்ணெதிரிலேயே இவ்வதிசயம் நிகழ வேண்டும் என்பது ஈசனின் திருவிளையாடல்.
இப்படித்தான் ஒவ்வொருவருக்கும், விதியும் பிராயசித்தமும் மாறி மாறித் திரும்பும்.
இதை, அச்சுதப்ப நாயக்கர் போல, இறையொழுகுதலில் முழு முனைப்புடன் மூழ்குதல் வேண்டும்.
தேடுவோம்...
நாடுவோம்.......
ஓடுவோம்.............
அவனைப் பற்ற......
அவனைப் பற்றினோர்க்கு, பிறநிலை இல.
மண்ணில் என்று பிறந்தோமோ, அன்றே இறப்பு நாளும் குறித்தல் உண்டு.
இது தெரிந்தும் மாயவாழ்க்கை வலையிலிருந்து மீண்டெழுவதில்லை.
சிற்றின்பமே பேரின்பம் என்று அழிந்து மாள்கிறோம்.
இறப்புக்கு முன், மனநிம்மதியோடு நாம் வாழ்ந்திடல் என, நிலையில்லா வாழ்க்கையை
நினைவுபடுத்தியும், காட்டினார் நம் பட்டினத்தார்.
*பிறக்கும்பொழுது கொடுவந்தது*
*இல்லை பிறந்து மண்மேல்*
*இறக்கும் பொழுது கொடுபோவது*
*இல்லை இடை நடுவில்*
*குறிக்கும்இச் செல்வம் சிவன் தந்தது*
*என்று கொடுக்க அறியாது*
*இறக்கும் குலாமருக்கு என்சொல்லு*
*வேன்கச்சி ஏகம்பனே!*
எனவே.......
இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் திருக்கோபுரம் உயர்வதற்கு உபயதாரர்களிடமிருந்து உபயம் கேட்கிறோம்.
இதுவரை தானதர்மம் எதுவுமே இதுவரை செய்யவில்லையே? என கவலை வேண்டாம்.
இப்போதே இராஜபதி ஆலயத் திருக்கோபுரத்திற்கு உபயமோ, தொண்டோ ஒன்றை செய்யுங்கள்.
தற்போது இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் ஏழுநிலை திருக்கோபுரத் திருப்பணி வேலைகள், உபயதார்களால் நடந்து வருகிறது.
தாங்களும் இதில் பங்கெடுத்து புண்ணியம் பெற முயலுங்கள்.
திருச்செந்தூரிலிருந்து, ஏரல் செல்லும் வழியில் குரும்பூருக்கு அருகில் இருக்கிறது இயாஜபதி
சிவஸ்தலம்.
இது நவகைலாயங்களில் கேது தலம். உரோமகரிஷி வழிபட்டது.
நானூறு வருடங்களுக்கு முன் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு, ஆலயத்தை முற்றும் துடைத்து விட்டு போனது.
இக்கலியில், வாழும் யாவரும், நான் நேர்மையானவன் என்று, நம் *நா* உரைக்க கூறும்.
ஆனால், இந்த கலிகாலத்தில், பெரியதான வினைப்பயன்களிலிருந்து, சிறியதான வினைப்பயனைச் சேர்த்து வைக்காதோர் யாவரும் இலர்.
நம் சேர்த்து வைத்த வினைப்பயன்களை, நாமலாலேயே அறுக்கச் செய்யும் செயலுக்காகத்தான், நானூறு வருஷத்துக்கு முன்பே ஈசன், தன் ஆலயத்தை துடைத்தெறிய தாமிரபரணியிடம் கட்டளையிட்டார் போலும்.
வெகு வருடங்களுக்குப் பிறகு, ஆலயச் சிதைவின் தாக்கங்களை, கோவில்பட்டி சிவனடியார்கள் கரங்களெல்லாம் ஒன்றுசேர கோர்த்து, *கைலாஷ் டிரஸ்ட்* ஏற்படுத்தி, இரண்டே முக்கால் கோடி ரூபாய் பொருட்செலவில் ஆலயம் புதிய பரிமாணம் செய்வித்து, தொடர்ந்து வழிபாடுகள், சீரும் சிறப்புடன் நடந்து வர ஈசன் திருவருள் செய்து விட்டான்.
அந்த ஈசனுக்கு, நாம் முக்தி பெறும் காலம் வரை நன்றி கூறி வணங்கி வருவோம் என்று உறுதியும் எடுத்துக் கொண்டோம்.
மேலும், ஆலயத்திற்கு ஏழுநிலை திருக்கோபுர திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
இரண்டாவது நிலை திருப்பணி வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது.
மூன்றாவது நிலை திருப்பணி வேலைகளுக்கு நிதி வந்து சேர்ந்து விட்டது.
நான்காவது நிலையிலிருந்து, ஏழாவது நிலை வரைக்குண்டான நிதியை, உபயதாரர்களிடமிருந்து, கையேந்தி கேட்கிறோம்.
தயவு செய்து திருக்கோபுர திருப்பணிக்கு உபயம் தாருங்கள்!, தாருங்கள்!!, தாருங்கள்!!!
நாம் எங்கோ இருக்கிறோம், இவ்வாலயம் எங்கோ இருக்கிறது, என எண்ணி இருந்து விடாதீர்கள் பெருமான்களே!
நம் வினைப்பயன்களை நாமே அறுத்துக் கொள்ள, அவன் சிதைந்து காட்டியருளி, நமக்கும் ஒரு காலநேரத்தை உருவாக்கி, இதன் மூலம் உங்களுக்கும் இந்தச் செய்தியை கொண்டு வந்து சேர்த்துள்ளான்.
வினைப்பயன் அழியும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, *நம் பாவம் நம்மோடு போகட்டும், நம் பிள்ளைகளின் காலம் நிம்மதி பெறட்டும்* என்று இவ்வாலயத் திருக்கோபுரத்திற்கு உபயம் அனுப்புங்கள்.
ஒவ்வொரு சிவாலய
உபயத்திற்கும் நிச்சயம் அளவற்ற பலன் உண்டு.
எங்கோ எப்போதோ யாருக்கோ செய்த பாவங்கள் கூட சிவபெருமான் இருப்பிடத்திற்கு நாம் அளிக்கும்போது, நம் வினைப்பயன்கள் நீர்த்துப் போகும்.
பாவங்களை கழுவிக் களைவதில் சிவபெருமானுக்கு நிகர் சிவபெருமானே.
ஆகையால் தான் புராணங்கள் முதல் இதிகாசங்கள் வரை அனைவரும் பாவங்களை தீர்க்க சிவபெருமானையே பூஜித்து வந்திருக்கிறார்கள்.
சிவபெருமானை தஞ்சமடைவதால் மட்டும் எப்பேற்பட்ட பாவத்தையும் போக்கிக்கொள்ளலாம்.
அவனைத் தஞ்சமடைய, அவன் அளித்த இந்த பிறப்பு வாழ்விலிருந்து, அவனுக்கு உபயங்கள், தொண்டுகள் செய்து வருவது மூலமே தீர்வு கிடைக்கும்.
பிரசித்தி பெற்ற ஆலயங்களின் அனைத்து தல வரலாறுகள் மூலமாகவும், நாயன்மார்கள் தொண்டு மூலமாகவும் இந்த பேருண்மையை நாம் கேட்டிருப்போம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உபயதார்களால் உயரமாய் உருவாகி வரும் இத்திருக்கோபுரத்திற்கு, பக்தர்கள், சிவனடியார்கள், வணிகர்களிடமிருந்து உபயம் கேட்டு வருகிறோம்.
உபயங்களை அனுப்பி, புண்ணியத்தை தனமாக்கி, வினைப்பயனை அறுங்கள்.
பணத்தை வங்கி கணக்கில் அனுப்ப வேண்டிய முகவரி.
*கைலாஷ் டிரஸ்ட்*
*Kailash Trust*
*இந்தியன் வங்கி.*
*Indian bank*
**கோவில்பட்டி கிளை*
*Kovilpatti branch*
*A/Ç no: 934827371*
*IFSC code: IDIBOOOKO51*
*Branch code no: 256*
-----------------------------------------------------------
நன்கொடை உபயம் செய்பவர்கள், செக்/டி.டி யாகவும் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.
செக்/டி.டி -
"கைலாஷ் டிரஸ்ட்" என்ற பெயர் இடவும்.
*செக்/டி.டி அனுப்ப வேண்டிய முகவரி:*
கைலாஷ் டிரஸ்ட்.
94/207, தனுஷ்கோடியாபுரம் தெரு.
கோவில்பட்டி.
Pin.628 501
தூத்துக்குடி மாவட்டம்.
Cont..98422 63681
மற்றும்,
*கோவை.கு.கருப்பசாமி.*
69.B, பெரியசாமி லே அவுட், இரண்டாவது வீதி,
இரத்தினபுரி போஸ்ட்,
கோயமுத்தூர். 641 027
தொலைபேசி: 99946 43516
திருக்கோபுர திருப்பணிக்கு உபயம் செய்யுங்கள்!
திரும்ப பிறப்பில்லா பேறு பெற்றுய்யுங்கள்!!
திருச்சிற்றம்பலம்.
____________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment