Thursday, August 2, 2018

Chappal and broom

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
________________________________________
🌸 *செருப்பும், விளக்குமாறும்!*🌸
_________________________________________
கவி காளமேகப்புலவர் தமிழகம் எங்கும் சுற்றி வந்த போது, சோழ மன்னன் அவைக்கும் பாடிப் பேரும் புகழும் பெற வந்தார்.

அவரது புலமையை அறிந்திருந்த அவைக்களப் புலவர்கள், இவரின் தகுதியைக் குறைக்க எண்ணி திட்டம் வகுத்துக் கொண்டனர். 

அரசனிடம் முன்னமே ஆலோசனைகள் கூறி, இவருடன் வாதிட அனுமதி பெற்றுக் கொண்டனர்.
 
வாதிடும்போது, நெருப்புக் குண்டத்தின்மேல் கயிற்றில் நின்றுகொண்டு, புலவர்கள் கேட்கும் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இயலவில்லை என்றால், நெருப்புக்கு இரையாக வேண்டும் என  விதியாக வகுத்து.....

இதில் வெற்றி பெற்றால், *சிறந்த புலவர்* என்று அனைவரும் ஏற்றுக் கொள்வோம் என்ற நிபந்தனையுடன் போட்டி தொடங்கியது.

புலவர்கள் கேட்ட வினாக்களுக்குக் காளமேகப் புலவர், விதிப்படி நடந்து கொண்டு உடனுக்குடன் வெண்பாவிலேயே விடையளித்துக் கொண்டிருந்தார்.

எல்லா வினாக்களுக்கும் விடையளித்த காளமேகப் புலவரின் புலமையைக் கண்டு வியந்து, அதை வெளிக்காட்டாது அவரை அடக்க எண்ணிய தலைமைப் புலவரான *அதிமதுர கவிராயர்* என்பவர், நையாண்டியும், வெறுப்பும் தொனிக்க,..........

*செருப்பு எனத் தொடங்கி, விளக்குமாறு* என முடிக்க வேண்டும்! என்பது போன்று இந்த இரு பொருள்களின் பெயர்களை அரச சபையில் உதிர்த்து குறிப்பிட்டு, இவற்றைக் கருவாகக் கொண்டு பாடுமாறு கூறினார்.

அதாவது, *செருப்பு* எனத் தொடங்கி *விளக்குமாறு* என்று முடிக்க வேண்டும் என்று அதிமதுர கவிராயர் பாடும்படிக் கூறினார்.

காளமேகமும் தயங்காமல் சபையில் கூறத்தகாத *இடக்கர* வார்த்தைகளான செருப்பு விளக்குமாறு என்ற வார்த்தையான (இடக்கரடக்கல்) இரு சொற்களையும், உச்சரிக்காமல், நற்பொருள் தரும் சொல்லாக *அடக்கி* வாசித்தார்.
 
🔔 *செருப்புக்கு வீரரைச் சென்றுழக்கும் வேலன் பொருப்புக்கு நாயகனைப் புல்ல - மருப்புக்கு தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும் வண்டே விளக்கு மாறே!*
 
🙏போர்க்களத்துக்குச் சென்று, பகைவரைத் துன்புறுத்தும் வேலைக் கையில் கொண்டுள்ள முருகப் பெருமானைத் தழுவுதற்கு உரிய வழியை, தேன் நிறைந்த தாமரை மலரில் தங்கியிருக்கும் வண்டே தெளிவாகக் கூறுவாயாக!' எனத் தலைவி முருகன்மேல் கொண்ட காதலை விளக்குவதாகப் பாடற்கருத்து அமைத்துப் பாடினார்..

செருப்புக்கு என்ற சொல்லை, *செரு+புக்கு* (போர்க்களத்திற்குத் சென்று) என்றும், விளக்குமாறு என்ற சொல்லை *விளக்கும்+ ஆறு+ஏ* (விளக்கும் வழியைக் கூறுவாயாக) என்றும் பிரித்துப் பொருள் கொள்ளச் செய்து, சபையில் கூறத்தகாத சொற்களைக் கூறாமல், அப்பொருளிற்குன்டான வார்த்தையை, சிறப்பான பொருள்தரக் கூடியனவாக அமைத்துப் பாடி அனைவரையும் தன் புலமைத் திறத்தால் அடக்கினார்.

அரசனும் வியந்து போனார். தனி மனித வெறுப்பைத் தவிர்த்து, காளமேகத்துக்கு உரிய சிறப்பும் பாராட்டும் அளித்து மகிழ்ந்து வழியனுப்பி வைத்தான்.

இப்பாடலில் முருகனின் வெற்றிச் சிறப்பையும், இயற்கை வருணனையையும் தமிழ்ச் சொற்களாக அலங்கரிக்கின்றன.

நம் தமிழ் மொழியின் சிறப்புதான் எவ்வளவு உயர்ந்ததாக கொண்டுள்ளது!. அதைப் பயன்படுத்தி பயனுறச் செய்த காளமேகத்தின் கவித்திறப் புலமையை என்னவென்று போற்றுவது!

புலவர்கள் கவிபாடி, பேரும், புகழும், பொருட்ச் செல்வமும், இறை கருணையும் பெற்று வாழ்ந்தது அந்தக் காலம்.

இதுபோல கவிபாடும் திறன் நம்மிடம் இல. ஆனால், அவர்கள் போல நன்மதிப்பு பெற முனைதல் பெற நினைத்தல் எல்லோருக்கும் உண்டு.

ஆதலால், இறை தொண்டு, ஆலய உபயம், ஆலய உழவாரம், சைவ சமய வகுப்பு ஏற்படுத்துதல், அடியார்களுக்கு துணை செய்தல், ஆலய ஹோமங்களுக்கு பூர்ணாதிகளை வாங்கிக் கொடுத்தல், அனைவரையும் சிவசமயம் சாரச் செய்தல், ஏழ்மையான ஆலயத்திற்கு விளக்கெரிய உதவிடுதல், அடியார்களுடன் கூடி திருமுறை பாடுதல், போன்ற காரியங்களில் நாம் ஈடுபட, நமக்கும் பேர் புகழ் புண்ணியம் வந்து சேர்ந்து, நம் வினைகளும் அறுபடும்.

திருச்செந்தூரிலிருந்து, ஏரல் செல்லும் வழியில் குரும்பூருக்கு அருகில் இருக்கிறது இயாஜபதி 
சிவஸ்தலம்.

இது நவகைலாயங்களில் கேது தலம். உரோமகரிஷி வழிபட்டது.

நானூறு வருடங்களுக்கு முன் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு, ஆலயத்தை முற்றும் துடைத்து விட்டு போனது.

இக்கலியில், வாழும் யாவரும், நான் நேர்மையானவன் என்று, நம் *நா* உரைக்க கூறும்.

ஆனால், இந்த கலிகாலத்தில், பெரியதான வினைப்பயன்களிலிருந்து, சிறியதான வினைப்பயனைச் சேர்த்து வைக்காதோர் யாவரும் இலர்.

நம் சேர்த்து  வைத்த வினைப்பயன்களை, நாமலாலேயே அறுக்கச் செய்யும் செயலுக்காகத்தான், நானூறு வருஷத்துக்கு முன்பே ஈசன், தன் ஆலயத்தை துடைத்தெறிய தாமிரபரணியிடம் கட்டளையிட்டார் போலும்.

வெகு வருடங்களுக்குப் பிறகு, ஆலயச் சிதைவின் தாக்கங்களை, கோவில்பட்டி சிவனடியார்கள் கரங்களெல்லாம் ஒன்றுசேர கோர்த்து, *கைலாஷ் டிரஸ்ட்* ஏற்படுத்தி, இரண்டே முக்கால் கோடி ரூபாய் பொருட்செலவில் ஆலயம் புதிய பரிமாணம் செய்வித்து, தொடர்ந்து வழிபாடுகள், சீரும் சிறப்புடன் நடந்து வர ஈசன் திருவருள் செய்து விட்டான்.

அந்த ஈசனுக்கு, நாம் முக்தி பெறும் காலம் வரை நன்றி கூறி வணங்கி வருவோம் என்று உறுதியும் எடுத்துக் கொண்டோம்.

மேலும், ஆலயத்திற்கு ஏழுநிலை திருக்கோபுர திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

இரண்டாவது நிலை திருப்பணி வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது.

மூன்றாவது நிலை திருப்பணி வேலைகளுக்கு நிதி வந்து சேர்ந்து விட்டது.

நான்காவது நிலையிலிருந்து, ஏழாவது நிலை வரைக்குண்டான நிதியை, உபயதாரர்களிடமிருந்து, கையேந்தி கேட்கிறோம்.

தயவு செய்து திருக்கோபுர திருப்பணிக்கு உபயம் தாருங்கள்!, தாருங்கள்!!, தாருங்கள்!!!

நாம் எங்கோ இருக்கிறோம், இவ்வாலயம் எங்கோ இருக்கிறது, என எண்ணி இருந்து விடாதீர்கள் பெருமான்களே!

நம் வினைப்பயன்களை நாமே அறுத்துக் கொள்ள, அவன் சிதைந்து காட்டியருளி, நமக்கும் ஒரு காலநேரத்தை உருவாக்கி, இதன் மூலம் உங்களுக்கும் இந்தச் செய்தியை கொண்டு வந்து சேர்த்துள்ளான்.

வினைப்பயன் அழியும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, *நம் பாவம் நம்மோடு போகட்டும், நம் பிள்ளைகளின் காலம் நிம்மதி பெறட்டும்* என்று இவ்வாலயத் திருக்கோபுரத்திற்கு உபயம் அனுப்புங்கள்.

ஒவ்வொரு சிவாலய
உபயத்திற்கும் நிச்சயம் அளவற்ற  பலன் உண்டு.

எங்கோ எப்போதோ யாருக்கோ செய்த பாவங்கள் கூட சிவபெருமான் இருப்பிடத்திற்கு நாம் அளிக்கும்போது, நம் வினைப்பயன்கள் நீர்த்துப் போகும்.

பாவங்களை கழுவிக் களைவதில் சிவபெருமானுக்கு நிகர் சிவபெருமானே.

ஆகையால் தான்  புராணங்கள் முதல் இதிகாசங்கள் வரை அனைவரும் பாவங்களை தீர்க்க சிவபெருமானையே பூஜித்து வந்திருக்கிறார்கள்.

சிவபெருமானை தஞ்சமடைவதால் மட்டும் எப்பேற்பட்ட பாவத்தையும் போக்கிக்கொள்ளலாம்.

அவனைத் தஞ்சமடைய, அவன் அளித்த இந்த பிறப்பு வாழ்விலிருந்து, அவனுக்கு உபயங்கள், தொண்டுகள் செய்து வருவது மூலமே தீர்வு கிடைக்கும்.

பிரசித்தி பெற்ற ஆலயங்களின் அனைத்து தல வரலாறுகள் மூலமாகவும், நாயன்மார்கள்  தொண்டு மூலமாகவும் இந்த பேருண்மையை நாம் கேட்டிருப்போம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உபயதார்களால் உயரமாய் உருவாகி வரும் இத்திருக்கோபுரத்திற்கு, பக்தர்கள், சிவனடியார்கள், வணிகர்களிடமிருந்து உபயம் கேட்டு வருகிறோம்.

உபயங்களை அனுப்பி, புண்ணியத்தை தனமாக்கி, வினைப்பயனை அறுங்கள்.

பணத்தை வங்கி கணக்கில் அனுப்ப வேண்டிய முகவரி.

*கைலாஷ் டிரஸ்ட்*
*Kailash Trust*
*இந்தியன் வங்கி.*
*Indian bank*
**கோவில்பட்டி கிளை*
*Kovilpatti branch*
*A/Ç no: 934827371*
*IFSC code: IDIBOOOKO51*
*Branch code no: 256*
-----------------------------------------------------------
நன்கொடை உபயம் செய்பவர்கள், செக்/டி.டி யாகவும் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.

செக்/டி.டி - 
"கைலாஷ் டிரஸ்ட்" என்ற பெயர் இடவும்.

*செக்/டி.டி அனுப்ப வேண்டிய முகவரி:*

கைலாஷ் டிரஸ்ட்.
94/207, தனுஷ்கோடியாபுரம் தெரு.
கோவில்பட்டி.
Pin.628 501
தூத்துக்குடி மாவட்டம்.
Cont..98422 63681

மற்றும்,

*கோவை.கு.கருப்பசாமி.*
69.B, பெரியசாமி லே அவுட், இரண்டாவது வீதி,
இரத்தினபுரி போஸ்ட்,
கோயமுத்தூர். 641 027
தொலைபேசி: 99946 43516

திருக்கோபுர திருப்பணிக்கு உபயம் செய்யுங்கள்!
திரும்ப பிறப்பில்லா பேறு பெற்றுய்யுங்கள்!!

          திருச்சிற்றம்பலம்.

_____________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment