ஸ்ரீ கமலாம்பா நாமாவளி−87
தொடர்ச்சி
தனது தாயிடமிருந்து ஒரு பிறப்பு.பின்பு கர்பாஷ்டமத்தில் உபநயனம் என்ற சடங்கால் பெற்ற மறுவிபிறவி என இரு பிறப்புடையவர்கள் த்விஜர்கள்.இவர்கள் கூட்டத்தால் ஒரே சமயத்தில் வழிபடப் படுபவள் "ஸ்ரீ காயத்ரி".அவள் காலை சந்தியில் காயத்ரியாகவும்,மதியம் சாவித்ரியாகவும்,மாலை சந்தியில் சரஸ்வதியாகவும் மூன்று காலம் த்விஜர்களால் வணங்கப்படுகிறாள்.இவ்விதம் த்விஜர்கள் மனத்தில் மூன்று காலமும் தேவி சஞ்சரிக்கின்றாள்.
அவர்கள் நடத்தும் யாகத்தில் ஸ்வாஹா தேவியாகவும்,பித்ரு யக்ஞத்தில் ஸ்வதா தேவியாகவும் சஞ்சரிக்கிறாள்.சூர்ய உபாசனா வேத மந்திரத்தைக் கோஷிக்கும்போது,அசௌ ஆதித்யோ அஹமஸ்மி என்று சூர்யனான தேவியேயாகிறான்.
பொதுவாகவே யக்ஞங்கள் நடத்தும் த்விஜர்கள் மூன்று முறையில் யாகம் செய்கின்றனர்.அதாவது1.வேத முறை (வைதிகாக்னி வளர்த்து செய்தல்)
2.தாந்த்ரீக முறை.
3.ஆகமம்.(சிவாக்னி/பாலாக்னி)
எல்லா முறையிலும் மூல"மந்திரமோ அல்லது வேத ருக்கு" ஒன்றேதான்.இந்த யாகத்தில் வேத ,மந்திர வடிவே தேவிதான்.ஆக அவளே யக்ஞகர்த்தா,யஜமானன்,யக்ஞம் என்று மூன்றுமாகி"சஞ்சரிக்கிறாள்.
தத்வ ரீதியாக ப்ரும்மஸ்வருபிணியான தேவி சஞ்சரிக்காத இடமே இல்லை.ஒவ்வொரு மனிதரிடமும் சத்சித்ஆநந்த ரூபமாக இருக்கிறாள்.நாம்தான் அதை உணராமல்,நான் என்ற அஹங்கார கூட்டத்தினால் சுமை தாங்கீயாக வாழந்து வருகிறோம்.யாராவது சுமையை இறக்கி வைத்தால் ஒருவேளை நாம் அவளை அறிய முற்படலாம்.
கடைத்தெருவில் சுமை தொழிலாளி ஒரு 70கிலோ மூட்டையை தூக்கி கொண்டு இறக்க வேண்டிய இடத்திற்கு செல்கிறான்.அப்போது அவனிடம் ஒருவர் குடும்ப விபரம் கேட்டார்.அவனால் பதில் தர முடியல.காரணம் முதுகில் சுமை அழுத்த நின்று பதில் தர முடியல.பக்கத்தில ஒருவர் சாமி! சுமை இறக்கிவைக்க உதவுங்க விபரம்
சொல்லுவான் என்றார்.
குடும்ப விபரம் கேட்டவர் மூட்டைச் சுமையே இறக்கி வைக்க உதவினார்.அப்போதுதான் அவனால் முதலில் நிற்க முடிந்தது.அப்புறம் அவரை முகம் பார்த்து எல்லா கேள்விக்கும் பதிலளித்தான்.
சாதாரண சுமைக்கே இப்படின்னா,சம்சார சாகரம் என்ற பெருஞ்சுமையே இறக்கி வைக்க யார் உதவுவார்?இறக்கினாத்தானே நம் காலில் நாம் நிற்க முடியும்,யோசிக்க முடியும்?
இங்கு தான் தேவி உதவி தருகிறாள்.நல்ல சத்குருவை கொடூத்து முதலில் சுமையை இறக்கீ வைப்பாள.அவள் நம்மை உண்மை புரிய வைப்பாள்.இங்கனம் சதா காலமும் நம் மனதில் சஞ்சரித்து
தேவி நமக்கு மோக்ஷமளீக்கிறாள்.அவளே வைராஜ மார்க சஞ்சாரி.,என்று அறிவோம்.
No comments:
Post a Comment