Thursday, July 19, 2018

Kalambagam - irattai pulavar -spiritual story- river changes its course

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு. கருப்பசாமி.*
''''''''''''''''''''''"""""""""""""""""""""""""""""""""""""""""""""
🍁 *இடம் மாறி ஓடிய ஆறு*🍁
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
தமிழுக்குத் தொண்டாற்றிய புலவர்கள் பலருள் இரட்டைப் புலவர்கள் சிறப்பு வாய்ந்தவர்களாக இருந்தனர்.

சோழநாட்டில் வாழ்ந்த ஒரு வேளாளர் தம்பதிக்கு, சிவபெருமானின் திருவருளால், அஸ்வினி தேவர்களின் அம்சமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர்.

ஒருவர் பிறவியேலேயே கண் பார்க்க இயலாதவர்.
மற்றொருவர் கால் நடக்க இயலாதவர்.

இதனால் மனமுடைந்த தம்பதியரிடம்,..... உங்கள் பிள்ளைகளுக்கு ஊனம்
இருந்தாலும், ஞானம் மிகப் பெற்று, ஞாயிறு போன்று பிரகாசித்து, ஞாலத்தை வலம் வருவார்கள் என்று,
பிறந்திருக்கையில் பெரியோர்கள் வாழ்த்திச் சென்றார்கள்.

அதனாலேயே, முன்னவருக்கு முதுசூரியர் என்றும், இளையவருக்கு இளஞ்சூரியர் என்றும் பெயரிட்டனர்.

சிறு வயதிலேயே இருவரும் தமிழ்ப்பற்று மிகுந்து விளங்கினர். தமிழைக் களங்கமறக் கற்றுச் சிறந்தனர்.

இருவரும் மனமொத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.
கால் நடக்க இயலாதவர் ஜமுதல் இரண்டு வரிகளைப் பாட, செய்யுளின் தன்மை மாறாமல் அடுத்த இரண்டு வரிகளை கண் பார்க்க இயலாதவர் பாடி
வருவாயினர்.

பெரியோர்கள் வாழ்த்தியது போல, ஞாலத்தை (தேசங்களை) வலம் வர இரட்டையர்கள் கிளம்பிச் சென்றார்கள்.

பல சமஸ்தானங்களுக்குச் சென்று பாடி, பெரிய அளவு தொகை வாங்காமல் சிறு அளவிலே பணம் பெற்று அதில் வாழலாயினர்.

கண்பார்க்க இயலாதவர் நடக்க இயலும். கால்
நடக்க இயலாதரால் கண் பார்க்க இயலும். ஆகையால்
முன்னவர், பின்னவரைத் தன் தோளிலே சுமந்து கொள்ளச் செய்து, அவரின் வழிகாட்டுதலில் செல்வராமினர்.

இவர்கள் ஒவ்வொரு தேசமாகச் சென்று பாடல் பாடிவருகலாயினர்.

இவர்களுடைய பாடல்களில் சைவப்பற்று ஓங்கி இருந்தது. சிவாலயங்களுக்குச் சென்று அங்கிருக்கும் சிவனைப் பாடி மகிழ்ந்திருந்தனர்.

கலைமகளின் திருவருளை பெற்ற இருவரும், செல்லும் இடங்களில் தங்கள் தெய்வீகப் புலமையை வெளிப்படுத்தி, மக்களுக்கு நல்வழிகாட்டி, தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

தங்களுக்கு அங்கச் சேதாரம் இருப்பதை உணராத அளவிற்கு, எப்போதும் தெய்வ சிந்தனையில் மூழ்கி பாடியபடி இருந்தனர்.

ஒரு சமயம், திருவாமாத்தூர் சிவபெருமான் ஆணையின்படி, ஈசன் பேரில், *கலம்பகம்* எனும் நூலில் உள்ள பாடல்களை பாடினார்கள்.

தகவலறிந்த அரசர், அந்நூலை அரங்கேற்றம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தார்.

தெய்வீக தன்மை பெற்ற இந்த இரட்டை புலவர்களின் திறமையை அறிந்த ஹஅறிஞர்களும், புலவர்களுமாக ஏராளமானோர் கூடிவிட்டிருந்தனர்.

அரங்கேற்றம் துவங்கியது. புலவர்கள் இருவரும்,
*கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்* எனும் தொடர் வாயிலாக கலம்பகம் எனும் தமிழ் வகைப் பாடல்கள் பாடுவதில் மிகவும் தேர்ந்தவர்களாக இருந்தனர்.

பாடல் அறங்கேற்றத்தில்,  *ஆற்குழையோ.. .. .. மேற்கரை கோயில் கொண்டார் புரஞ்சீறிய வெங்கணைக்கே*. என பாடினார்கள்.

இப்பாடலில், ஆமாத்தூர் வழியாக ஓடும் பம்பையாற்றுக்கு மேற்கே கோயில் அமைந்துள்ளது எனப் பாடிவிடுகின்றார்.

இதைக் கேட்டதும், அனைவரும் அதிர்ச்சியாயினர்.

காரணம், கோயில், ஆற்றின் கீழ்க்கரையில் இருந்தது.

ஆனால், இரட்டைப் புலவர்களோ, ஆற்றின் மேல்கரையில், கோயில் இருப்பதாக பாடிவிட்டனர்.

இதனால், கூட்டத்தில் சலசலப்பு தோன்றி விவாதமானது.

இவர்களா தெய்வ புலவர்கள்?… என, வசை பேசி, ஏளனம் செய்தார்கள் குழுமியிருந்த அத்தனைபேர்களும்.

இரு புலவர்களும், யாமும் அறியோம், ஈசன் பொய் சொல்லான். இது, தெய்வத்தின் கட்டளைப்படி எழுதப்பட்டது, அதன்படிதான் பாடினோம் என்றனர் இருவரும்.

அறிஞர்கள் இதை ஏற்கவில்லை. அரசரிடம் சென்று நடந்ததைக் கூறி, அரங்கேற்றத்தை நிறுத்தி விட்டனர்.

*கலம்பகம்* பாடிய கவிஞர்கள் இருவரும், ஆலயம் சென்று ஈசனிடம் முறையிட்டு விட்டு, தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பி விட்டனர்.

அன்றிரவு, மழை பொத்துக் கொண்டு பெய்தது. ஆற்றில் வெள்ளம் பரந்து பெருக்கெடுத்து ஓடியது.

விடிந்ததும் பார்த்தால், கோயிலுக்கு இடப்புறமாக ஓடிய நதி, தன் பாதையை மாற்றி, கோவிலுக்கு வலப்புறமாக ஓடிக் கொண்டிருந்தது.

இதன் காரணமாக, ஆற்றின் கீழ்க்கரையில் இருந்த கோயில், ஆற்றின் மேல்பக்கமாக அமைந்து காணப்ட்டது.

அதாவது, இறைவன் எழுந்தருளிய கோயில், ஆற்றின் மேல்பகுதியில் அமைந்துள்ளது என, புலவர்கள் பாடியது உண்மையாகி விட்டது.

புலவர்களின் தெய்வீக தன்மையை அனைவரும் பாராட்டினர்.

அப்புலவர்களோ, இது சிவபெருமானின் அருள் என்று, எம்பெருமானின் கருணையை நினைத்து, கண்ணீர் வடித்தனர்.

இவர்கள் திருவாமாத்தூர் எனும் இத்திருத்தலத்திலேயே வாழ்ந்து, வீடு பேற்றையும் அடைந்தனர்.

சிவபெருமான், அடியார்களுக்காக ஆற்றின் போக்கையே மாற்றி, அவர்களின் பெருமையை பறை சாற்றிய ஞான பூமி இது!

இந்த இரட்டைப் புலவர்கள் பாடிய, அக்கலம்பக நூல் இன்றுமுள்ளது. படித்து, பரம்பொருளின் கருணையை அடையுங்கள்.

மெய்யாலும் முழுமையாக நம்மை, அவனிடம் ஒப்படைக்கும்போதுதான், ஈசன் அருட்செய்ய அருளாகுகிறான்.

எப்படி அருட்செய்வானவன்?, என்ற ஐயப்பாடு இருத்தலே கூடாது. ஐயம் இருந்தால், மனம் முழுமையாக ஈடுபாடு அடையவில்லை என அர்த்தம்.

இரட்டைப் புலவர்களுக்குள், தேகத்தில்தான் குறை இருந்தது. அந்த குறையைக்கூட நினையா அளவிற்கு, ஈசன் மீது பக்தியைக் கொண்டிருந்தனர்.

அதனால் ஈசன், அவர்களுக்கு துணை செய்தவனான். பெருகியோடிய வழித்தடத்தையே மாற்றி ஓடி, இரட்டைப் புலவர்களின் பக்தியை உலகிற்கு எடுத்துக் காட்டியருளினார்.

No comments:

Post a Comment