Thursday, July 19, 2018

Rudra kotiswar temple-ThevaraVaippu sthalam

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
_______________________________________
*தினமும் ஒரு தேவார வைப்புத் தல தரிசனம்:*
(எல்லோரும் தரிசிக்கச் செல்வதற்காக................)
_____________________________________
*தேவார வைப்புத் தல தொடர் எண்: 24*

*வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:*

*🏜உருத்திரகோடிஸ்வரர் திருக்கோயில், (ருத்திரன் கோவில், திருக்கழுக்குன்றம்):*
_____________________________________
*🌙இறைவன்:* ருத்ரகோடீஸ்வரர்.

*💥இறைவி:*
திரிபுரசுந்தரி.

*📖வைப்புத் தல பதிகம் உரைத்தவர்:*
அப்பர்.

ஆறாம் திருமுறையில், எழுபதாவது பதிகத்தில், எட்டாவது பாடல்.

*🛣இருப்பிடம்:*
சென்னையில் இருந்து செங்கல்பட்டு சென்று அங்கிருந்து திருக்கழுக்குன்றம் செல்லலாம்.

செங்கல்பட்டு - மகாபலிபுரம் சாலை வழியில் செங்கல்பட்டிலிருந்து பதினான்கு கி.மி. தொலைவிலும், கடற்கரை சுற்றுலா தலமான மகாபலிபுரத்தில் இருந்து சுமார் பத்து கி.மி. தொலைவிலும் திருக்கழுக்குன்றம் அமைந்துள்ளது.

செங்கல்பட்டிலிருந்து அடிக்கடி பேருந்துகள் இருக்கின்றன.

செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம், கல்பாக்கம் செல்லும் பேருந்துகளும் இவ்வழியே செல்கின்றன.

திருக்கழுக்குன்றத்தில் இரண்டு கோயில்கள் உள்ளன.

பாடல் பெற்ற தலமான வேதகிரீஸ்வரர் திருக்கோவில் மலை மேலும், மலை அடிவாரத்தில் பக்தவத்சலேஸ்வரர் திருக்கோவிலும் உள்ளன.

பக்தவத்சலேஸ்வரர் திருக்கோவிலின் சங்கு தீர்த்தம் திருக்குளத்திற்குத் தென் கிழக்கில் உருத்திரகோடி ருத்திரன் கோயில் என்ற இந்த வைப்புத் தலக்கோவில் இருக்கிறது.

*ஆலய அஞ்சல் முகவரி:* அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில்,
ருத்திரன் கோவில்
திருக்கழுக்குன்றம் அஞ்சல்,
காஞ்சீபுரம் மாவட்டம்.
PIN - 603 109

🌸 *ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள உஞ்சேனை மாகாளம், பொதியமலை, தஞ்சை, வழுவூர் வீரட்டம், மாதானம், வேதீச்சரம், விவீச்சுரம், கஞ்சாறு, வெற்றியூர், பஞ்சாக்கை ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

உருத்திரகோடி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்.

இந்தப் பதிகம் அப்பர் திருப்புகலூரில் தங்கி இருந்த போது அருளிச் செய்ததாகும்.

🔔உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகா
வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையுங்
கயிலாய நாதனையே காணலாமே.

🙏உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திரகோடி, மறைக்காடு, மேகங்கள் பொருந்திய பொதியமலை, தஞ்சை, வழுவூர் வீரட்டம், மாதானம், கேதாரம், வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகாவூர், வேதீச்சரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கை ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

ருத்திரன் கோயில் என்பது மருவி, மக்கள் வழக்கில் ருத்திரான் கோயில் (ருத்ராங்கோயில்) என்று அழைக்கிறார்கள்.

சிவபெருமானிடத்துத் தோன்றிய கோடி உருத்திரர்கள், காசிப முனிவரிடத்துத் தோன்றிய கோடி அசுரர்களை அழித்து, அப்பழி நீங்க இறைவனை வழிபட்ட தலம் இது.

ருத்திரர் கோடி வழிபட்டதால் ருத்ரகோடி என்று பெயர் பெற்றது. இத்தலம் நீண்ட, பெரிய கற்கோயிலாகும்.

         திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment