Thursday, July 5, 2018

Bhaja govindam in Tamil -Intro

Courtesy:Smt.Dr.Sroja Ramanujam

மோஹமுத்கரம் அல்லது பஜகோவிந்தம்- முன்னுரை

பஜகோவிந்தம்

( பத்மா கோபால் அவர்கள் மிக அழகாக பஜகோவிந்தம் ச்லோகங்களை எளிய தமிழில் கவிதை ரூபத்தில் மொழிபெயர்த்து இருக்கிறார். எனக்கு இதைப்பற்றி எழுதவேண்டும் என்ற ஆவல் கொஞ்ச நாட்களாகவே இருந்தது. அதைப்படித்ததும் நாளை சங்கர ஜெயந்தி என்ற நினைவு வரவே இதைத் தொடங்குகிறேன்., மேலும் எனக்கு ஸ்லோகத்தை மொழிபெயர்க்கும் சிரமம் இல்லாமல் பத்மா அவர்கள் செய்துவிட்டதால் அந்த மொழிபெயர்ப்பையே அவருடைய அனுமதியுடன் உபயோகிக்கிறேன்.)

இந்த க்ரந்தம் மோஹமுத்கரம் என்றும் கூறப்படுகிறது. முத்கர என்றால் சுத்தி, (hammer). அக்ஞானம் என்னும் மோகத்தை உடைப்பதால் இதற்கு இந்தப்பெயர் வந்தது.

(Moha mudgara, popularly known as Bajagovindam,is a short lyric, high in poetic excellence and magnificent in philosophical content. Hence this is an important work of Sankara, though a short one . The lilting verses set to music makes it easy to remember thus enhancing the quality of poetry and the selected verses of this lyric have been immortalized by the divine music of the great M.S.Subbhalakshmi.)

ராஜாஜி பஜகோவிந்தத்திற்கு உரை எழுதுகையில் கூறுகிறார் , அறியாமை அகன்றால் ஞானம் பிறக்கிறது. அதுவே செயலாக பரிணமிக்கும்போது பக்தி தோன்றுகிறது.

விவேகம் வைராக்கியம் இரண்டும் தோன்றிய மனதில்தான் ஞானம் பிறக்கும். ஞானமும் பக்தியும் முக்தி என்னும் பறவையின் இரு இறக்கைகள். ஒன்றுமட்டும் இருந்தால் மேலே பறக்க முடியாது. சங்கரர் ஞானத்தையும் பக்தியையும் ஒன்றாகக் கலந்து இதைத் தந்துள்ளார்.

இது தோன்றிய வரலாறு பின்வருமாறு. 
சங்கரர் காசியில் சீடர்களுடன் நடந்துபோய்க் கொண்டிருந்த போது ஒரு வயதானவர் பாணினி சூத்ரமான 'டுக்ரின்ஹிகர,ணே' என்பதை உருப்போட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார். பகவந்நாமாக்களை சொல்லாமல் இதைச் சொல்லிக்கொண்டிருப்ப்தைப்பார்த்து அனுதாபம் கொண்டு பஜகோவிந்தம் பஜகோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே என்று தொடங்கும் ச்லோகங்களைக் கூறினார்.

முதல் ச்லோகத்திற்குப்பின் பன்னிரண்டு ஸ்லோகங்கள் சங்கரரால் சொல்லப்பட்டவை ஆகும். முதல் ஸ்லோகம் ஒவ்வொரு ச்லோகத்திற்குப் பின்னும் கோரஸ் ஆக சொல்லப்படுகிறது., அடுத்த பதினான்கு ஸ்லோகங்கள் அவருடைய சீடர்களால் சொல்லப்பட்டவை என்று கருதப்படுகிறது. கடைசி நான்கு ஸ்லோகங்கள் சங்கரரின் வாக்காகும்.
நாளை முதல் ச்லோகங்களைப் பார்க்கலாம்


No comments:

Post a Comment