Wednesday, July 4, 2018

Ashtapadi summary

அஷ்டபதியின் விளக்கம்*



*அஷ்டபதி 1*   நாராயணனின் பத்து அவதாரங்களைப் பற்றியது.

*அஷ்டபதி 2*  இந்த அஷ்டபதி கிருஷ்ணனை துதிப்பதாக அமைந்துள்ளது.

*அஷ்டபதி 3*   ராதை கண்ணன் மற்றவர்களுடன் விளையாடுவதை செய்வதைப் பார்த்து பொறாமை கொண்டு அவனை விட்டு நீங்குகிறாள். ராதை ஜீவாத்மா என்று பார்த்தால், ஜீவன் தன் அந்தராத்மாவான பகவானுடன் இணையத் துடிக்கிறது.

*அஷ்டபதி 4* கிருஷ்ணன் கோபியருடன் ராஸலீலை செய்வதை தோழி வர்ணிக்கிறாள்.

*அஷ்டபதி 5*  ராதை கோபித்து அவனை விட்டு நீங்கினாலும் அவன் நினைவை தடுக்க முடியாமல் அவனை நினைத்து கூறும்

*அஷ்டபதி 6*  ராதா அவனுடன் இருந்த  அனுபவத்தை நினைந்து அவனைத் தன்னுடன் சேருமாறு செய்ய தோழியை வேண்டுகிறாள்.

*அஷ்டபதி 7*  கிருஷ்ணனும் ராதை கோபித்துக் கொண்டு சென்றதைப் பார்த்து வருந்துகிறான். அவனுடைய மனோநிலையைக் குறிப்பது இந்த அஷ்டபதி.

*அஷ்டபதி 8*  கிருஷ்ணனை அழைத்து வர ராதையால் அனுப்பப்பட்ட சகி அவனிடம் சென்று ராதையின் நிலையைக் கூறுகிறாள்

*அஷ்டபதி 9* சகி கிருஷ்ணனிடம் ராதையின் நிலையை மேலும் வர்ணிக்கிறாள்

*அஷ்டபதி 10*  ராதையின் நிலையை அறிந்ததும் கண்ணன் தான் அங்கேயே இருப்பதாகச சொல்லி ராதையை அங்கு அழைத்து வரும்படி சகியிடம் கூறுகிறான்

*அஷ்டபதி 11* சகி கண்ணன் இருக்குமிடத்திற்கு செல்வதற்கு ராதையை தூண்டுகிறாள்

*அஷ்டபதி 12* சகி மீண்டும் கண்ணனிடம் சென்று ராதையின் நிலையைக் கூறுகிறாள்.

*அஷ்டபதி 13*  ராதை ,  சகி இன்னும் வராததைக் குறித்து வருந்துகிறாள்

*அஷ்டபதி 14*. சகி திரும்பி வந்து ஒன்றும் பேசாமல் நின்றாள். அதைப் பார்த்து ராதை கண்ணன் மறந்துவிடடான் என எண்ணுகிறாள்

*அஷ்டபதி 15* ராதை கண்ணன் வேறு கோயியையுடன்   இருப்பதால்தான் வரவில்லை என்று எண்ணி துயரமடைகிறாள்

*அஷ்டபதி 16*. யார் கண்ணனுடன் இருக்கிறாளோ அவர்கள் கொடுத்து வைத்தவள். ஏனென்றால் இந்த வேதனையை அனுபவிக்கவில்லை என்று ராதை சொல்லுகிறாள்

*அஷ்டபதி 17*  ராதை கண்ணனை   நினைத்து  ஏங்குகிறாள்

*அஷ்டபதி 18*  சகி ராதையிடம் கண்ணன் தானே வந்த பின்பு அவனை போகச்சொன்னது தவறு என்று கூறுகிறாள்

*அஷ்டபதி 19*  அவள் சமாதானம் ஆகி இருப்பாள்என்று கண்ணன் மறுபடி அவளிடம் வரநினைப்பது

*அஷ்டபதி 20* கண்ணன் ராதை இன்னும் தயங்குவதைப் பார்த்து அவளாக வரட்டும் என்று அவர்கள் சந்திக்கும் இடத்தில் சென்று காத்திருக்கிறான்.

*அஷ்டபதி- 21* ராதை,  கண்ணன் இருக்கும் இடம் நோக்கி செல்ல நினைக்கிறாள்

*அஷ்டபதி 22* ராதை கண்ணன இருக்கும் இடம்போய் அவனைக் காண்கிறாள் (கல்யாண அஷ்டபதி)  ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இணையும் இடம்

*அஷ்டபதி 23* ராதையிடம் கண்ணன் பேசுகிறான்.

*அஷ்டபதி 24* கண்ணனுடன் இணைந்த பிறகு ராதா கண்ணனை நோக்கி இவ்வாறு கூறுகிறாள்.

No comments:

Post a Comment