Wednesday, July 4, 2018

Rajapathi kailasanathar t temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
_____________________________________
*நவகைலாயம் இராஜபதி ஏழு நிலை திருக்கோபுரத்திற்கு உபயம் செய்யுங்கள்.*
______________________________________
இராஜபதி ஆலய திருக்கோபுரம் வளர்ந்து, இக்கோபுரத்திற்கு உபயம் அளித்த அத்தனை உள்ளன்பர்களும், கோபுரத் திருப்பணியின்போது, வந்திருந்து இணைந்து தரிசித்திட, எல்லாம் பரம்பொருளான ஈசனிடம் விண்ணப்பம் செய்திருக்கிறோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கோபுரத் தரிசனம் கோடி புண்ணியம்! இதை கோபுரத்தை காணும்போதெல்லாம் நமக்குத் தோன்றும்.

இதே கோபுரத் திருப்பணிக்கு பங்கெடுத்தீர்களென்றால், எத்தனை கோடி புண்ணியம்? மில்லியன் கணக்குதான் போங்க!

இதனால் புண்ணியம் தனமாகும். எதிர்காலத்தில் நம் பிள்ளைகளை அது காக்கும்!

புண்ணியம் எங்க செய்ய என்று தேடவேண்டாம். நீங்கள் வாசிக்கின்ற இந்த பதிவுக்கு கீழே இருக்கிறது.

இதில், உங்கள் உபயத்தை ஆலய வங்கி கணக்கில் செலுத்தி, புண்ணிய ரசீதை பெற்றுக் கொள்ளுங்கள்!

இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் திருக்கோபுரம் அமைய உபயம் அனுப்பி விட்டீர்களா?

அனுப்பாதோர் உபயம் அனுப்பி, புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.

ஈசனுக்கு, நம்மால் முடிந்த, நம் பொருளாதார சூழ்நிலைக்குத் தகுந்த உபயத்தை அனுப்பி, ஈசனின் புண்ணியத்தை தனமாக்கி, வருங்கால நம் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லுங்கள்.

இதுவரை உபயம் அனுப்பிய அனைவருக்கும் 'நன்றி' என்று ஒரு வார்த்தையுடன் முடிக்காமல், ஈசனின் கருணை உங்களுக்கு பிரவாகமாக, ஈசனிடம் விண்ணப்பம் செய்து கொண்டோம்.

இனியும் இந்தச் செய்தியை அறிந்து உணர்ந்திருந்தவர்கள், தங்களால் இயன்றதை திருக்கோபுரம் அமைய உபயம் அளிக்குமாறு அனைவரின் பாதகமலங்களில் அடியேன் சென்னிமோதி பணிந்துதெழுந்து வணங்கிக் கேட்கிறேன்...

உபயம் அளியுங்கள்!
உபயம் அளியுங்கள்!!
உபயம் அளியுங்கள்!!!

நீங்கள் அளிக்கும் உபயம், உங்கள் கர்ம வினைகளை ஒழிக்கும். புண்ணியம் சேமிப்பாகும்.

நீங்கள் அளிக்கும் உபயங்கள், திருக்கோபுரத்தில், செங்கற்களாய், காரைபூச்சுக்காளாய், வர்ணங்களாய் உங்கள் பெயரைக் கூறிக் கொண்டிருக்கும்.

ஏன், ஆலயத் தரிசனத்திற்கு செல்லும்போது திருக்கோபுரத்தைக் கடந்து போவேமே!, அப்போது ஒவ்வொருவர் மீதும், உங்கள் உபயம், கோபுர நிழலாய் பதியுமே. இதனால் அவர்களுடைய ஆசி உங்களுடைய விதியை நல்வழிக்கு இழுத்துச் செல்லும்.

இப்புண்ணியம் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு தனமாகத் திரும்பும்.

*மனம் நினைக்க மகேசன் அருளாவான்!*
*உபயம் ஒன்றளிக்க, உமாவும் அபயமாவாள்!*

உபயம் அனுப்பாதவர்கள் கூடிய விரைவில் அனுப்பி ஈசனின் புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.

புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே!

இப்போது, இராஜகோபுரத்திற்கு இரண்டாவது நிலைகைளைத் தாங்கி நிற்கும் சூழ்நிலை நடந்து கொண்டிருக்கிறது.

சிதம்பரம் சென்று வழிபட்டால் முக்தி! திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி! காளையார் கோயிலில் காலடி வைத்தால் முக்தி! திருவாரூரில் பிறந்தால் மோட்சகம்! அது போல, எந்த ஒரு சிவ தல திருக்கோபுரத்திற்கு உபயம் செய்தால் வினை அழியும், புண்ணியம் நல்கும்!

இராஜபதி இராஜகோபுரப் பணிக்கு பங்களிப்பு செய்யும் அடியார் பெருமக்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் என்பதும், அவர்களின் குடும்பம் சந்ததி சந்ததியாக சகல வளங்களும் பெற்று வாழ்வார்கள் என்பதும் ஆன்றோர்களின் வாக்காகும்.

அதற்கிணங்க  இராஜபதி ஆலயத்தில் அமையவிருக்கின்ற இராஜகோபுரத்தால், கோடான கோடி புண்ணியப் பலனை பெறுகின்ற புனிதப் பணிக்கு தாங்கள் மனமுவந்து அளிக்கின்ற ஒவ்வொரு பங்களிப்பும் எம்பெருமான் திருவருளினால் தங்களையும் தங்களின் சந்ததியையும் வாழ வைக்கும் என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை. இது நிறுதிடமான உண்மை. சத்தியம்.

எனவே எம்பெருமானின் பாதார விந்தமாக விளங்குகின்ற இந்த இராஜபதி இராஜகோபுரப் புனிதப் பணிக்கு கிள்ளியாவது வழங்குங்கள்! அருளைப் பெறுங்கள்!!

நம் மேல் அடியெதுவும் விழுந்தால் 'அம்மா' என அலறுவோம். அதேபோல வீட்டு நிலையில் இடிச்சுக்கிட்டா, 'சிவ சிவ' என்போம்!

வாசல் நிலையில் தலையை இடிச்சுக்கிட்டா, உடனே 'சிவ சிவ' 'சிவ சிவ' என மொழிவார்களாம். 

அவன் நாமத்தைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே, வாயிலின் நிலை உயரத்தை குறைவாக வைத்திருந்தார்களாம்.

இப்போது உயரஉயரமாய் வைக்கிறோம். நிமிர்ந்து செல்கிறோம். நிலை இடிப்பதில்லை, சிவ சிவ என சொல்வதில்லை.

இனியேனும் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு வேளைக்கும் சிவ சிவ, சிவ சிவ, என மொழிவோமாக!

சிவ சிவ என்றால் தீவினை
மாயும்!

அதற்காக சிவனே என்று இருந்து விடாதீர்கள். ஈசன் கோபுர உபயம் கொஞ்சம் ஞாபகம் இருக்கட்டும்.
----------------------------------------------------------
*🏜இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் தல வரலாறு:*
அகத்திய முனிவருக்கு, சீடராகிய உரோமச மகரிஷி சிவமுக்தி வேண்டி சிவபெருமானை வேண்டினார்.

ஈசன் அருளால், அகத்திய முனிவர் உரோமச மகரிஷியை அழைத்து அவர் கையில் ஒன்பது தாமரை மலர்களை கொடுத்து, தாமிரபரணி நதி தொடங்கும் இடத்தில் வடுமாறு கூறினார்.

அப்படி இந்த ஒன்பது மலர்கள் ஒதுங்கும் இடத்தில் சிவபூஜை செய்து வந்தால் உனக்கு முக்திபேறு கிடைக்கும் என்று அருளினார்.

உரோம மகரிஷியும் அவ்வாறே  சிவபூஜை செய்து  முக்திபேறு பெற்றார்.

நவகிரகங்களும் இந்த ஒன்பது ஆலயங்களை வழிபட்டு, அவரவர்களுடைய அருட்சக்தியை பெற்றன.

உரோமச மகரிஷி வழிபட்டு முக்திபேறு பெற்றமையால், இந்த ஆலயங்கள் நவ கைலாயங்கள் எனப் பெயர் பெற்றது.

இந்த நவகைலாங்கள் மிகவும் பழமை வாய்ந்தவை.

இந்த நவ கைலாயங்களில், எட்டாவது தலமாக விளங்குவது *இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில்* ஆகும்.

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, தாமிரபரணி ஆற்றின் வெள்ளப் பெருக்கில், முற்றிலும் அழிவுற்றது.

இதன்பிறகு, கோவில்பட்டி கைலாஷ் டிரஸ்ட் மூலம், நிலம் கையகப்படுத்தி இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் பூமி பூஜை செய்து, இரண்டாயிரத்து பத்தாவது ஆண்டில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

வடக்கே காளத்திநாதர் என்றால், இங்கே கைலாசநாதர்.

திருமண, புத்திரபாக்கியம், வியாபாரம், விவசாயம், தொழில் விருத்தி, போன்றவைகளை நிவர்த்தி செய்கிறார் கைலாசநாதர்.

இவ்வாலயத்தில், இராகு, கேது தோஷம், திருமணத் தடை போன்றவைகளுக்குப் பரிகாரமும் செய்யப்படுகிறது.

இவ்வாலயத்தில் பதினாறு பிரதோஷம் பார்த்தால், நினைத்த காரியம் கைகூடும்.

இவ்வாலயத்தில் கண்ணப்ப நாயனார் சந்நிதியும் அமைந்திருக்கிறது.

இங்கு வந்து மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் அபிஷேகம் செய்தால், கணவன் மனைவி ஒற்றுமை கூடும்.

நவலிங்க சந்நிதியில் பக்தர்களே தங்கள் திருக்கரங்களால், அபிஷேகம் செய்து, தோஷ நிவர்த்தி பெறலாம்.

நாமும் ஆலயத் தொண்டுக்கு உபயம் சில செய்தால், நிச்சயமாக அந்த உபயம் உங்கள் வினைகளை அறுக்கும். மேன்மையை கொடுக்கும். 

நாம் பணத்தை சேர்த்து  வைத்திருக்கிறோமோ! இல்லையோ? எப்படியும் வினைகளை கண்டிப்பாக சேர்த்து வைத்திருப்போம். இது நம் உள் மனதில் ஒழிந்திருப்பது அனைவருக்கும் தெரியும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான வினைகளைப்  பற்றிருப்போம். இதன் எதிர்வினைகளை எண்ணாது நாமும், காலத்தைத் தொலைத்துக் கொண்டிருப்போம்.

நோய்க்கு மருந்தொன்று இருப்பதுபோல், வினைகளை அறுப்பதற்கும் ஆலயத் தொண்டாக மருந்து ஒன்று இருக்கிறது.

அனைத்தும் படைக்கும் ஈசன், ஏன் சிலவைகளை மட்டும் நம்மளை வைத்தே செய்ய இயக்குகிறான்?

நாம் செய்த வினையை, நாமலாலேயே அறுப்பதற்காகத்தான், அந்த வாய்ப்பினை ஈசன் நமக்குத் தந்தும் இயக்குகிறான்.

இந்த வாய்ப்பைப் படுத்திக் கொண்டோர், வினை அகழ்ந்து நிம்மதி பெறுவர் என்பது சத்தியம்.

நிம்மதி இருந்தாலே, நமக்கு நல்வன ஒவ்வொன்றும் தன்னாலே வந்து சேருமே! 

நம்மகிட்ட இருக்கும் பொருள் என்னென்ன என்று தெரிந்து வைத்திருக்கும் நாம், நம் வினைகளை எவ்வளவு கோர்த்து வைத்திருக்கிறோம், எவ்வளவு புண்ணியத்தைச் சேர்த்து வைத்திருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். - அது முடியவும் முடியாது...

இருந்த வினையை ஒழிக்கவும், புண்ணியத்தைப் பெறவும் ஆலயத் தொண்டு ஒன்றாலே மட்டும் ஒழிக்க முடியும்.

அந்த வினைகளை ஒழிக்க, எவ்வளவோ ஆலயங்களில் மருந்தாக, நமக்கு விதைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது, இராஜபதி கைலாசநாதர் திருக்கோயிலில் திருக்கோபுரத்திற்கு உபயம் கேட்டு பதிவை பதிந்த வண்ணம் உள்ளோம்.

அடியேனுடைய பதிவை தொடர்ந்து நான்கு வருடங்களாக வாசித்து வருவோரில் சிலர், இராஜபதி திருக்கோயில் திருக்கோபுரம் உயர உபயம் அனுப்பி புண்ணியத்தை தனமாகப் பெற்றிருக்கிறார்கள்.

உபயம் அளித்த அவர்களுக்காக, நாங்களும் இராஜபதி கைலாசநாதரிடம்  விண்ணப்பம் செய்து, நல வேண்டுதல் கொடுத்துள்ளோம்.

மேலும், உபயம் அனுப்பாதோர், உங்களின் பொருளாதார நிலைக்குத் தகுந்தவாறு, இருநூறு அனுப்பினாலும் அதையும் ஈசன் புண்ணியமாகவே ஆக்கிவிப்பான்.

இருநூறுதானே என்று அலட்சியம் செய்ய வேண்டாம், உங்களின் நிலையை ஈசன் அறிவான்.

நீங்கள் கஷ்டத்தில் இருந்தாலும், நீங்கள் அனுப்பும் இருநூறு ரூபாய்,... பொருளாதாரத்தில் கொஞ்சம் பலமாக உள்ளோர் அனுப்பும் ஆயிரம் ரூபாய்க்கு சமம்.

இறைவனின் தொண்டுக்கு செலுத்தும் உபயத்தில் ஈசன் எடை பார்த்து புண்ணியம் வழங்குவதில்லை.

உபயம் அளித்தால் புண்ணியந்தான், இதில் ஏற்ற இறக்கமில்லை.

எனவே இருநூறு ரூபாயை மிகையாக எண்ணாது, அனுப்பித் தாருங்கள். உங்களுக்காக இராஜபதி கைலாசநாதரிடம் நல்வன அருள விண்ணப்பிக்கிறோம்.

எத்தனையே நபர்கள் குழுமங்களில், இல்லாத ஒன்றை share செய்யச் சொல்லி வீனே சொல்வர்.

அதையெல்லாம் தவிர்த்து, வினையொழியும் ஒன்றிற்க்காக, அடுத்தவரிடம் இத் தொண்டு செய்தியை கொண்டு சென்று, உபயம் அளிக்க துணையாகுங்கள். இதற்கும் புண்ணியம் உண்டு.

வினை ஒன்று கழிவதற்காக,  ஒருவரால் உபயம் அனுப்ப முடியாத பொருளாதார சூழல் இருந்தாலும், அவர் மற்றொருவரிடம், திருக்கோபுர திருப்பணியைக் கூறி, அவரையாவது உபயம் அளிக்க துணை செய்தீர்களானாலும், அதுவும் உங்களுக்குக்கு புண்ணியம்தான்.

செய்த வினையொழிய உபயமளித்தேன்!, பாவி என்னை வினைக்குள் வந்து மீண்டும் பிறக்க வைக்காதே!
எனச் சொல்லி உபயத்தை அனுப்பி வையுங்கள்.

2019-ல் திருக்கோபுரம் திருப்பணி வேலைகள் முடித்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தயவு செய்து சிவனடியார்கள் அத்தனை பேரின் திருப்பாத கமலங்களை வணங்கிக் கேட்கிறேன்.

ஒவ்வொருத்தரும் இருநூறு ரூபாயாவது கைலாசநாதர் வங்கி கணக்கிற்கு உபயம் செய்யுங்கள் அடியார்களே!.

ஒவ்வொரு வாட்சப் குழுவின் அட்மின்களும் உறுப்பினர்களும், முகநூல் அக்கெளண்டர்களும், அந்தந்த குழு உறுப்பினர்களும் உபயம் அளியுங்கள் அடியார்களே!, பெருமான்களே!,
ஆன்மிக அன்பர்களே!

பாராமுகமாய் இருக்க வேண்டாம் அடியார்களே!

தயவு செய்து, இனியும் இந்தச் செய்தியை அறிந்து உணர்ந்திருந்தவர்கள், தங்களால் இயன்றதை திருக்கோபுரம் அமைய உபயம் அளிக்குமாறு அனைவரின் பாதகமலங்களில் அடியேன் சென்னிமோதி பணிந்துதெழுந்து வணங்கிக் கேட்கிறேன்...

உபயம் அளியுங்கள்!
உபயம் அளியுங்கள்!!
உபயம் அளியுங்கள்!!!

நீங்கள் அளிக்கும் உபயம், உங்கள் கர்ம வினைகளை ஒழிக்கும். புண்ணியம் சேமிப்பாகும்.

நீங்கள் அளிக்கும் உபயங்கள், திருக்கோபுரத்தில், செங்கற்களாய், காரைபூச்சுக்காளாய், வர்ணங்களாய் உங்கள் பெயரைக் கூறிக் கொண்டிருக்கும்.

ஏன், ஆலயத் தரிசனத்திற்கு செல்லும்போது திருக்கோபுரத்தைக் கடந்து போவேமே!, அப்போது ஒவ்வொருவர் மீதும், உங்கள் உபயம், கோபுர நிழலாய் பதியுமே. இதனால் அவர்களுடைய ஆசி உங்களுடைய விதியை நல்வழிக்கு இழுத்துச் செல்லும்.

இப்புண்ணியம் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு தனமாகத் திரும்பும்.

*மனம் நினைக்க மகேசன் அருளாவான்!*
*உபயம் ஒன்றளிக்க, உமாவும் அபயமாவாள்!*

உபயம் அனுப்பாதவர்கள் கூடிய விரைவில் அனுப்பி ஈசனின் புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.

புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே!

பணத்தை வங்கி கணக்கில் அனுப்ப வேண்டிய முகவரி.

*கைலாஷ் டிரஸ்ட்*
*Kailash Trust*
*இந்தியன் வங்கி.*
*Indian bank*
**கோவில்பட்டி கிளை*
*Kovilpatti branch*
*A/Ç no: 934827371*
*IFSC code: IDIBOOOKO51*
*Branch code no: 256*
-----------------------------------------------------------
நன்கொடை உபயம் செய்பவர்கள், செக்/டி.டி யாகவும் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.

செக்/டி.டி - 
"கைலாஷ் டிரஸ்ட்" என்ற பெயர் இடவும்.

*செக்/டி.டி அனுப்ப வேண்டிய முகவரி:*

கைலாஷ் டிரஸ்ட்.
94/207, தனுஷ்கோடியாபுரம் தெரு.
கோவில்பட்டி.
Pin.628 501
தூத்துக்குடி மாவட்டம்.
Cont..98422 63681

மற்றும்,

*கோவை.கு.கருப்பசாமி.*
69.B, பெரியசாமி லே அவுட், இரண்டாவது வீதி,
இரத்தினபுரி போஸ்ட்,
கோயமுத்தூர். 641 027
தொலைபேசி: 99946 43516

          திருச்சிற்றம்பலம்.

*திருக்கோபுரம் உயர உபயமளியுங்கள்!*
*பிறப்பில்லா பேறு பெற்றுய்யுங்கள்!*

___________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment