Wednesday, June 27, 2018

Trilokanathar temple- vaippu sthalam

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி.*
____________________________________
*தினமும் ஒரு தேவார வைப்புத் தல தொடர்:*
எல்லோரும் தரிசிக்கச் செல்வதற்காக...................
_____________________________________
*தேவார வைப்புத் தல தொடர் எண்:19*

*வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:*

*🏜திரிலோகநாதர் திருக்கோயில், இரும்புதல் - (இரும்புதலை)*
______________________________________
மக்கள் வழக்கில் இத்தலத்தை இரும்புதலை என்று அழைக்கிறார்கள்.

(ஆங்காங்கு சில இடங்களில் 'இரும்புத்தலை' என்றும் எழுதப்பட்டுள்ளதை  காணமுடிகிறது.)

*🌙இறைவன்:* திரிலோகநாதர்.

*💥இறைவி:* திரிலோகநாயகி.

*🌊தல விருட்சம்:* வில்வம்.

*🍃ஆலயப் பூஜை காலம்:*
காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*தொடர்புக்கு:* 
சந்திரசேகர சிவாச்சாரியார்.
04374- 311358

சோமாஸ்கந்த குருக்கள்.
பூண்டி (தஞ்சை நீடாமங்கலம்.) 99446 87952

*📖வைப்புத் தல பாடல் உரைத்தவர்:*
அப்பர்.
ஆறாம் திருமுறையில், ஐம்பத்தோராவது பதிகத்தில், ஆறாவது பாடலில் இருக்கிறது.

*🛣இருப்பிடம்:*
கும்பகோணம் - பாபநாசம் - திருக்கருகாவூர் - சாலியமங்கலம் பாதையில் திருக்கருகாவூரை அடுத்து ஐந்து கி.மீ -ல் இரும்புதலை (இரும்புத்தலை) எனும் பெயர் பலகை காணப்படும்.

பெயர்ப் பலகையுள்ள இவ்விடத்திலிருந்து எளிதில் இத்தலத்தை அடையலாம்.

*சிறப்புகள்:*
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

சித்திரைப் பௌர்ணமி அன்று மட்டும் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

இவ்வூர் சிவாலயக் கல்வெட்டில் *'மனுகுல சூளாமணி மங்கலத்து திருஇரும்புதல் உடைய மகாதேவர்'* என்று உள்ளது.

*கல்வெட்டு:*
இரண்டாம் குலோத்துங்கன், ராஜேந்திர சோழன் அரியணை ஏறி பத்தாம் ஆண்டு நிறைவானபோது, இத்திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்ததாக கல்வெட்டு கூறுகிறது.

இவனது திருப்பணிக்கு ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்னதான தலம் இது.

இரும்புதல் என்பது ஒரு பழைய திருக்கோயிலின் பெயர். "இரும்புதலார் இரும்பூளையுள்ளார்" என்று பாடினார் திருநாவுக்கரசர்.

சோழ நாட்டில் ஆவூர்க் இரும்புதல் கூற்றத்தில் அவ்வாலயம் அமைந்திருந்தது.

இரும்புதலுடைய மகா தேவர்க்கு இராஜராஜன் முதலாய பெருமன்னர் விட்ட நிவந்தங்கள் என்று சாசனத்தில் காணப்படும்.

அக்கோயில் மனுகுல சூளாமணி சதுர் வேதி மங்கலம் என்ற ஊரில் இருந்ததாகக் கூறுவர்.

*தல அருமை:*
திருவீழிமிழலையில் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு வீழிநாதஸ்வாமியை வணங்கி, ஒரு குறைவாக இருந்த மலருக்காக, தன்கண்ணையே ஆயிரமாவது மலராக இட்டு, இழந்துவிட்டிருந்த சக்ராயுதத்தை பெற்றார் மகாவிஷ்ணு.

இச்செயலைக் கண்டு மகாலட்சுமி ஏளனம் செய்ததால், சிவனின் சாபத்திற்கு ஆளாக நேர்ந்தது.

இந்த சாபத்தால் மாதங்கியாக பரச்சி என்னும் புலையலாகப் பிறந்து, பின் வணங்கி சாபம் நீங்கி இழந்த அழகை மீண்டும் பெற்றார்.

பஞ்ச் ஆரண்யங்களான தண்டகாருண்யம், நைமிசாரண்யம், வடாரண்யம், ஜம்பகாரண்யம், மாதவி வனம் - திருக்கருக்காவூரின் வரிசையில் வில்வாரண்யம் இது.

திருவீழிமிழலையில்  இருந்து இந்தத் தலத்தைப் பாடியுள்ளார் அப்பர் பெருமான்.

இத்தலத்தில், சம்பந்தர், மற்றும் அப்பர் பெருமானின் மூல விக்கிரகங்கள் இருப்பதால், பாடல் பெற்றும் பின்னர் அது கிடைக்காமல் போயிருக்கலாம் என்று நம்பிக்கை இருந்து வருகிறது.

பெரும்புலியூர், இன்னம்பர், இரும்புளை வரிசையில், இரும்புதலார் என அப்பர் பெருமான் குறிப்பிட்டிருக்கிறார்.

திரு விரும்புதல் என்கிற சொல் மருவி திரு இரும்புதல் ஆனதென்பர்.

மகாலட்சுமி வணங்கி சாபம் நீங்கப் பெற்ற தலம் இது. 

வில்வாரண்யச் க்ஷேத்திரமாக உள்ளது.

அம்பாள் ஜடாமகுட ரூபியாக இரண்டு கரங்களில் தாமரை மலருடன்  மற்றிரு கரங்களில் அபய
வரதத்துடனும் காட்சி தருகிறாள்.

அம்பாள் நின்ற கோலம். மகாலட்சுமியின் அம்சமான காட்சி.

அம்பாள் மத்ய ஸ்தாபனம். அதாவது சிவனுக்கு இடப்புறமாகவோ, வலப்புறமாகவோ இல்லாமல், மூலஸ்தானத்திலேயே அம்பாள் விளங்குவது விசேஷம்.

சித்ரா பெளர்ணமியில் பஞ்ச மூர்த்தி வெள்ளாற்றுக் காவேரியில் எழுந்தருளல் விசேஷம்.

இங்குள்ள நடராஜருக்கு வருடத்தில் ஆறு அபிக்ஷேங்கள்.

கோஷ்டத்தில் வலஞ்செய்கையில், வராஹி, சனி, சூரியன், பைரவர், விநாயகர், துர்க்கை ஆகியோரும் இருக்க தரிசிக்கலாம்.

இங்கு நவக்கிரகங்கள் இடமில்லை.

           திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment