Wednesday, June 27, 2018

How Krishna took bath - A poem in tamil

Courtesy:Smt.Padma Gopal

(சொக்கத் தங்கமாய் இரு..)

கருப்பெல்லாம் போகட்டும்;
கரகரன்னு உன்ன தேக்கறேன்;
சருமம் எல்லாம் செவப்பாக்க−
சந்தனத்தால் இழைக்கிறேன்;

கையும் காலும் நீட்டி வெச்சு−
பையப்பைய நீவறேன்;
மையை போல இருக்கும் கருப்பு−
மறையுதானு பாக்கறேன்!

நிமித்திப் போட்டு, மார்பு நடுவில்−
நாலு தைலம் தடவறேன்;
உமியடுப்பில தண்ணி போட்டு,
உனக்கு இதமா விடுகிறேன்;

அரச்சு வெச்ச வாசப் பொடிய−
அங்குலம் விடாம சேக்கறேன்;
அதுக்கு மேலே, பதமா, இதமா−
அடுக்கு பன்னீர் ஊத்தறேன்;

கேசமெல்லாம் மாசு போக−
கோதிக் கோதி அலசறேன்;
தூசு, தும்பு விழி விழாம−
துப்போட நான் இருக்கறேன்!

அச்சுதன் நீ என்று தெரிந்து−
ஆராய்ந்தே, நீராட்டுறேன்;
பச்சப் பிள்ளையா வரித்து, உன்னை−
புளகாங்கிதமும் அடையறேன்!

எம்பி எம்பி குதிக்காம−
என் முழங்காலில், நீ படுக்கற!
எப்பவுமே, என் பிள்ளையா−
என் பிடியில் நீயும், அடங்கற!

சொன்ன பேச்சு கேட்டுக் கொண்டு−
சொக்கத் தங்கமா, நீ இருக்கற;
என் பிள்ளமாதிரி யாருண்டுனு−
இறுமாந்து, நானும் இருக்கறேன்!




No comments:

Post a Comment