உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி.*
___________________________________
*தினமும் ஒரு தேவார வைப்புத் தல தொடர்:*
(எல்லோரும் தரிசிக்கச் செல்வதற்காக..........)
___________________________________
*தேவார வைப்புத் தல தொடர் எண்:15*
*வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:*
*🏜கைலாயநாதர் திருக்கோயில், ஆறைமேற்றளி - (திருமேற்றளி)*
___________________________________
*🌙இறைவன்:* கயிலாய நாதர்.
*💥இறைவி:*
சபள நாயகி.
*🛣இருப்பிடம்:*
கும்பகோணம் - தாராசுரம் - பட்டீச்சரம் வழியாக பாபநாசம், தஞ்சாவூர் செல்லும் சாலையில் செல்ல சாலையோரத்தில் கோயில் உள்ளது.
*📮ஆலய அஞ்சல் முகவரி:*
அருள்மிகு கயிலாயநாதர் திருக்கோயில்,
திருமேற்றளி,
பட்டீஸ்வரம் அஞ்சல்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்,
PIN - 610 104
*🍃ஆலயப் பூஜை காலம்:*
ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது. பட்டீஸ்வரத்தில் இருக்கும் திரு கோவிந்தராஜன் என்பவரைத் தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம். கோவிந்தராஜன் தொடர்பு கைபேசி எண்: 97158 46398
*📖தேவார வைப்புத்தலப் பாடல் உரைத்தவர்:* சுந்தரர்.
ஏழாம் திருமுறையில், முப்பத்தைந்தாவது பதிகத்தில், முதலாவது பாடல்.
*கோவில் அமைப்பு:*
ஆலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை.
சுற்றிலும் மதிற்சுவரும் இல்லை.
அர்த்த மண்டபத்துடன் கூடிய மூலவர் கருவறையும் வெளியே நந்தி மண்டபம் மட்டும் இன்றைய நாளில் கோயிலாக இருக்கிறது.
மூலவர் கருவறையும், நந்தி மண்டபமும் சற்று உயரமான இடத்தில் சில படிகள் ஏறிச் செல்லும் படி அமைந்துள்ளது.
மூலவர் கைலாசநாதர் கிழக்கு நோக்கி கருவறையில் அருட்காட்சி தருகிறார்.
அம்பாள் மற்றும் விநாயகர் சந்நிதிகள் முற்றிலும் சிதிலமடைந்து விட்டதால் அங்கிருந்த சிலா மூர்த்தங்கள் கருவறை அர்த்த மண்டபத்தினுள் வைக்கப்பட்டுள்ளன.
ஊர் மக்கள் உதவியுடன் ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது.
பிரதோஷம், சோமவாரம், சிவராத்திரி ஆகிய தாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தேவலோகத்து பசுவான காமதேனுவின் புதல்வியருள் ஒருவளான சபளி என்பவள் இத்தலத்தில் இறைவனையும், அம்பிகையையும் வழிபட்டுள்ளாள்.
மற்றைய புதல்விகளில் பட்டி பட்டீஸ்வரத்திலும், விமலி பழையாறை வடதளியிலும், நந்தினி முழையூரிலும் பூஜை செய்துள்ளனர்.
ஆனி மாதம் முதல் நாளன்று பட்டீஸ்வர இறைவன் இத்தலத்திற்கு பல்லக்கு உற்சவத்தன்று எழுந்தருளுவார்.
*தல அருமை:*
இத்தலத்தை திருமேற்றளி என்று மக்கள் வழங்குகிறார்கள்.
மேலும், மக்கள் பேச்சு வழக்கில் திருமேற்றளிகை என்றும் சொல்கின்றனர்.
காமதேனுவின் புதல்வியருள் 'சபளி' என்பவள் பூசித்தது.
ஏனையவை 'பட்டி' பூசித்தது - பட்டீச்சரம்.
விமலி பூசித்தது - பழையாறை வடதளி.
நந்தினி பூசித்தது - முழையூர் ஆகும்.
*சிறப்புக்கள்:*
ஆனி மாதம் முதல் நாள் பட்டீச்சரப் பெருமான் பல்லக்கு உற்சவத்தில் இவ்வூருக்கு வந்து செல்வார்.
கருவறையில் தாரா லிங்கமாக மூலவர் உள்ளார்.
*கருவறை விபரம்:*
கருவறை மண்டபத்தில் மூலவருக்கு முன்பாக சூரியன், சண்டிகேஸ்வரர், விநாயகர், பைரவர், சபளிநாயகி ஆகியோரது சிலைத் திருமேனிகள் இருக்கிறது.
சற்று உயர்ந்த தளத்துடன் கருவறை அமைந்துள்ளது. விமானம், முன்மண்டபத்துடன் கூடிய சிறிய கோயிலாகவும் இருக்கிறது.
கோயிலுக்கு முன்பாக சிறிய மண்டபத்தில் நந்தியும் பலிபீடமும் காணப்படுகின்றன.
கோயிலின் கோஷ்டத்தில் சிற்பங்களும் காணப்படுகின்றன.
கோயிலுக்கு முன்பாக இடிபாடான நிலையில் கட்டட அமைப்பு காணப்படுகிறது.
இடிபாடுடனான இந்த நிலை, ஒரு காலகட்டத்தில் கோபுரமாக இது இருந்திருக்க வாய்ப்புள்ளது போல் காணப்படுகிறது.
ஆறை மேற்றளி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்
இந்தப் பதிகம் திருப்புறம்பயம் தலத்திற்குரிய பதிகத்திற்குள் அமையப்பெற்ற பதிகமாகும்.
🔔அங்கம் ஓதியோர் ஆறை மேற்றளி நின்றும் போந்து வந்து இன்னம்பர்த் தங்கி னோமையும் இன்னது என்று இலர் ஈசனார் எழு நெஞ்சமே கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி வானவர் தாந்தொழும் பொங்கு மால்விடை ஏறி செல்வப் புறம்பயம் தொழப் போதுமே.
🙏மனமே, ஆறு அங்கங்களையும் ஓதியவராகிய அந்தணர்கள் திரு ஆறை மேற்றளியில் இருந்து புறப்பட்டு வந்து திருஇன்னம்பரில் பலநாள் தங்கியும் நம்மை இங்குள்ள இறைவர் இனி நாம் செய்யத்தக்கது இன்னது என்று தெளிவித்தார் இல்லை. ஆதலின் வானவர்கள் தம் நிலையினும் மேன்மேல் உயர்தற் பொருட்டு இரவு எல்லாம் காத்து நின்று விடியலில் ஏத்தித் தொழுகின்ற, அழகு மிக்க பெரிய விடையை ஏறும் பெருமானது செல்வம் நிறைந்த திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம், புறப்படு.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment