Monday, June 11, 2018

Dakshinamurti ashtakam sloka 1 in tamil


                                                                       2
                                                              ஸ்ரீ ராம ஜயம்

                                                ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்

இந்த நூல் பூஜ்ய ஸ்ரீ பகவத்பாதர் அவர்களால் இயற்றப்பட்டது . எட்டு
ஸ்லோகங்கள் கொண்டது. அத்வைத வேதாந்தத்தின் பரமதத்வத்தை இது தெளிவாக
விளக்குகிறது. அவர்கள் 32 வருஷ காலமே இவ்வுலகில் வாழ்ந்திருந்தார்கள்.
முதல் எட்டு வருஷகாலம் சிறு பிராயத்திலும் , வேதத்தையம் சாஸ்திரங்களையும்
 அப்பியசிப்பதிலும் கழிந்திருக்கவேண்டும். அடுத்த எட்டுவருஷகாலத்தில்,
தனது குருவைத்தேடி அலைந்து, அவருடைய உபதேசத்தால் காசி மாநகரம் செல்வதில்
கழிந்திரு க்க வேண்டும். அந்த காலகட்டத்தில் தான்,அவர்களுக்கு அத்வைத
ஞானம் ஏற்பட்டிருக்க ஏது .ஏனென்றால் காசியில் ஸ்ரீ வேதவ்யாஸ முனிவருடன்
சர்ச்சை செய்யும்பொழுதும், அவர்களுடன் பிரும்மசூத்ரத்தை விவாதம்
செய்யும்பொழுதும், இந்த ஞானம், அவர்களுக்கு
உபயோகிக்கப்பட்டிருக்கவேண்டும்.  ஆனால் இந்த நூலை பிரகடனப்படுத்தியது
பூஜ்ய ஸ்ரீ வேதவ்யாஸாசாரியர் சொல்படி, அத்வைத்ப்ரசாரம் செய்யும்பொழுது ஆக
இருக்கவேண்டும். அதாவது தன்னுடைய 16 வயதிற்கப்புறமேயாக.
அந்த நூலை சிறிது பார்ப்போம்:முதல் ஸ்லோகம் :

விச்வம் தர்ப்பண  திருஸ்யமான நகரீ துல்யம் நிஜாந்தர்கதம்
பஸ்யன் ஆத்மனி மாயையா பஹிரிவ உத்பூதம் யதா நித்ரயா
ய: ஸாக்ஷாத் குருதே ப்ரபோத ஸமயே ஸ்வாத் மானமேவ , அத்வயம்
தஸ்மை  ஸ்ரீ குரு மூர்த்தயே நம இதம்  ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தயே .
இதன் அர்த்தத்தை எனக்குத்தெரிந்தவரையில் இங்கு எழுத முற்படுகிறேன்.

விச்வம் --நாம் காணும் இப்பிரபஞ்சம் ;  தர்ப்பண த்ருச்யமான நகரீ துல்யம்
--( முகம்பார்க்கும் )
 கண்ணாடியில் காணும் நகரம் போன்றது. --அதாவது வாஸ்தவத்தில், விச்வம்
கண்ணாடிக்கு வெளியில் தான் இருக்கிறது. நாம் காணும் நகரமோ கண்ணாடிக்கு
உள்ளே இருப்பதுபோல் நமக்கு த்தெரிகிறது.  ஆக இது, (அதாவது நாம் காணுவது),
 நிஜமில்லை. தோற்றமேதான்.  இந்தத்தோற்றம் மாயையினால் உண்டானது என்று
சொல்கிறார்கள். மாயை என்பது நித்தியமில்லாத ஆனால் தோற்றம் மட்டுமே
அளிக்கக்கூடிய ஒரு வஸ்து என்று கொள்ளவேண்டும். இந்தத்தோற்றத்தை ஸ்ரீ
பகவத்பாதர்கள் , தினமும் நாம் கனவில் காணும் காக்ஷியை உவமிக்கிறார்கள்.
ஆத்மனி-- வாஸ்தவத்தில் தனக்குள்ளேயான ஒரு வஸ்து , யதா நித்திரயா-- எப்படி
நித்திரை செய்யும்பொழுது, நம் கனவில்,  பஹிரிவ உத்பூதம்
--வெளியிலுண்டானதுபோல் (தோற்றமளிக்கிறதோ ) அதுவே  ப்ரபோதஸமயே
--(அப்படியில்லை என்பதை) கண் விழித்தவுடன்  (நாம் அறிகிறோமோ), அவ்வாறு
நம் குருவானவர் நமக்கு தெளிவு படுத்துகிறாரோ, அந்த
தக்ஷிணாமூர்த்தியானவருக்கு இந்த நமஸ்காரம்.

ஆத்மனி --உள்ளேயான (ப்ரகாசிக்கும்படியான வஸ்து, அது தானே வெளியில்
இருப்பதாக நமக்குத்தோற்றமளிக்கிறது) அது என்ன? என்றகேள்வி இங்கு
எழுகிறது. அதுவே பிரும்மம் . அதை யாரும் கண்டதில்லை. காணவும் முடியாது.
நமக்குத்தெரிந்ததெல்லாம் , நாம் காணும் தோற்றமாகிய இப்பிரபஞ்சம் தான்.
இத்தோற்றத்தை வைத்துக்கொண்டு தான்,நாம் வாஸ்தவமான நிஜத்தை
அறிந்துகொள்ளவேண்டும். இந்தவகையில் மாயையிலான இத்தோற்றம் தான்,  நமக்கு
வாஸ்தவமான ஆனால் காணவே முடியாத, ப்ரும்மத்தை அனுமானத்தால் அறிய
உதவுகிறது.  ப்ரும்மத்தை நேரிடையாக யாருமே ஏன், வேதத்தால் கூட,
அறியமுடியாது.
சரி, இங்கு அத்வைதம் எங்கே வந்தது ? நாம் காணும் இப்பிரபஞ்சம் முழுவதுமே,
 தோற்றமாக இருக்கும்பொழுது, தோற்றமான  இப்பிரபஞ்சத்தை உருவாகினது  யார்
என்ற கேள்வியும் எழுகிறது. தோற்றமே காரணமாக இருக்கமுடியாது. அந்தக்காரணம்
தான் பிரும்மம் என்று அறியப்படுகிறது. முழுவதும்  தோற்றமாகிய
பிரபஞ்சத்தையல்லாது வேறு ஒன்றும் இல்லாதிருக்கும் நிலையில், நம்முடைய
கணிப்புப்படி , இந்தத்தோற்றத்திற்கு காரணமான  பிரும்மமும் ஒன்றாகத்தானே
இருக்கமுடியும் ? ஆக, பிரும்மமும்  ஒன்றேயாகத்தான் இருக்கவேண்டும் என்று
இதனால் சித்தமாகிறது. இந்த தத்துவத்தைத்தான் அத்வைத ஸித்தாந்தமும் நமக்கு
அறிவிக்கிறது.
முதல் ஸ்லோகத்தை இங்கு பார்த்தோம். மற்றவையை பின் வரும் ஸ்லோகங்களில்
பார்க்க முயலலாம்.
பரமேஸ்வ்ரரான தக்ஷிணாமூர்த்தி இதைத்தான் பிரும்மரிஷிகளான நால்வருக்கு
இந்ததத்வத்தை , தன்  மௌன முத்திரையால், உபதேசம் செய்தார்.

அத்வைத தத்துவம் எல்லோராலும் அறியப்படவேண்டிய ஒன்று. நமது ஆன்மீக
மடல்களான பிராமின் டு டே , வைதிகஸ்ரீ, காமகோடிப்ரதீபம் போன்றவை
இந்தத்தத்துவத்தைப்பிரசாரம் செய்தால் நல்லது. என்றால், அப்பொழுதுதான்
இந்தசுலோகத்தை படிக்கும் ஜனங்களால் உள்ளதை உள்ளவாறு அறியமுடியும்.

ச. சிதம்பரேச ஐயர்.  6 மே 2018

No comments:

Post a Comment