Monday, June 11, 2018

ashtapadi 14 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

அஷ்டபதி 14

அஷ்டபதி 14.
சகி திரும்பி வந்து ஒன்றும் பேசாமல் நின்றாள். அதைப் பார்த்து ராதை கண்ணன் தன்னைவிட மேலான ஒரு யுவதியுடன் ரமித்துக் கொண்டிருக்கிறான் அதனால்தான் சகி மௌனமாக் இருக்கிறாள் என்று எண்ணி அந்த அழகி அவனுடன் ரமிப்பதை நினைக்கிறாள்.

1.ஸ்மரஸமரோசிதவிரசிதவேஷா 
தலிதகுஸுமதள விரலித கேசா
ஸ்மரஸமரோசிதவிரசிதவேஷா – மன்மத லீலைக்கொப்பான ஆடை அணிகளுடன் 
தலிதகுஸுமதள விரலித கேசா- தளர்வான கூந்தலில் இருந்து நழுவும் மலர்களுடன்

காபி மதுரிபுணா விலஸதி யுவதி: அதிககுணா (த்ருவபதம்)

காபி-யாரோ ஒருவள் 
அதிககுணா – என்னை விட சிறந்த அழகு, குணம் உடையவள் 
மதுரிபுணா-கண்ணனுடன் 
விலஸதி-விளையாடுகிறாள்

2.ஹரிபரிரம்பண வலிதவிகாரா
குசகலசோபரி தரளிதஹாரா (காபி)

ஹரிபரிரம்பண – ஹரியை தழுவுதலால் 
வலிதவிகாரா- உணர்ச்சி பெருகுபவளாய் 
குசகலசோபரி –கலசங்கள் போன்ற ஸ்தனங்களின் மேல்
தரளிதஹாரா- புரளும் ஹாரத்தை உடையவளாய்

3. விசலத் அலக லலிதானனசந்த்ரா
ததரபான ரபஸக்ருத தந்த்ரா(காபி)

விசலத் அலக –புரண்டு விழும் கூந்தலால்
லலிதானனசந்த்ரா- அழகுடன் கூடிய சந்திரன் போன்ற முகத்தை உடையவளாய்
ததரபான – கண்ணனுடைய அதரபானத்தால் 
ரபஸக்ருததந்த்ரா- உணர்ச்சிமேலிட்டு தன் நினைவிழந்தவளாய்

4.சஞ்சலகுண்டல லலிதகபோலா
முகரிதரஸன ஜகனகதிலோலா (காபி)

சஞ்சல குண்டல- அசையும் காதணிகளால் 
லலிதகபோலா- அழகுறு கன்னங்களை உடையவளாய்
ஜகனகதி லோலா- இடுப்பு அசைவதனால் 
முகரிதரஸன- சப்திக்கும் மணிகளை உடைய இடை ஆபரணம் உடையவளாய்

5.தயிதவிலோகித லஜ்ஜிதஹஸிதா
பஹுவித கூஜித ரதி ரஸ ரஸிதா

தயிதவிலோகித-பிரியனான கண்ணனை பார்த்து 
லஜ்ஜிதஹஸிதா- வெட்கத்துடன் சிரிப்பவளும்
ரதிரஸரஸிதா- காதல் விளையாட்டினால் மகிழ்ந்து 
பஹுவிதகூஜித –பலவிதமான மதுர ஓசைகள் செய்பவளும்

6. விபுலபுலக ப்ருதுவேபதுபங்கா
ச்வஸிதநிமீலித விகஸதனங்கா(காபி)

விபுலபுலக ப்ருதுவேபதுபங்கா-புளகாங்கிதம் மற்றும் வியர்வை இவைகளால் பாதிக்கப்பட்டு
ச்வஸிதநிமீலித - பெருமூச்சினாலும் கண்மூடுவதாலும் 
விகசதனங்கா – காதலை வெளிப்படுத்துபவளாய்

7.ஸ்ரமஜலகணபரஸுபகசரீரா
பரிபதிதோரஸி ரதிரணதீரா(காபி)

ஸ்ரமஜலகணபரஸுபகசரீரா- வியர்வை சூழ்ந்த அழகிய சரீரம் உடையவளாய் 
பரிபதிதோரஸி ரதிரணதீரா- காதல் விளையாட்டில் விட்டுக்கொடுக்காது கண்ணனின் மேல் விழுந்தவளாய்
எவளோ ஒருவள் கண்ணனுடன் ரமிக்கிறாள்.

ஸ்ரீ ஜெயதேவ பணிதஹரிரமிதம் 
கலிகலுஷம் ஜனயது பரிசமிதம்
ஸ்ரீ ஜெயதேவரால் கூறப்பட்ட ஹரியின் காதல் லீலைகள் கலியுகத்து தீமைகளை அகற்றட்டும்.




No comments:

Post a Comment