Friday, June 8, 2018

Ashtapadi 13 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

அஷ்டபதி 13
p
அஷ்டபதி 13
சகி கண்ணனைப் பார்த்துவிட்டு திரும்பி வரும்போது பிருந்தாவனத்தில் பூரண சந்திரன் பிரகாசித்தது. ராதை விரஹதாபத்தினால் துன்பமடைந்து சகி இன்னும் வராததைக் குறித்து வருந்துகிறாள்.

1. கதிதஸமயே அபி ஹரி அஹஹ ந யயௌ வனம் 
மம விபலம் இதம் அமலரூபம் அபி யௌவனம்

ஹரி- ஹரியானவன் 
கதிதஸமயே அபி– வருவதாகச் கூறிய வேளையில் 
ந யயௌ-வரவில்லை 
இதம்- இந்த 
மம- என்னுடைய 
யௌவனம் – இளமையும் 
அமலரூபம் அபி –அழகும்
விபலம் – வீண்

யாமி ஹே கம் இஹ சரணம் ஸகீஜன வசனவஞ்சிதா (த்ருவபதம்)

சகீஜனவசனவஞ்சிதா-( கண்ணனை அழைத்து வருவேன் என்ற) சகியின் வார்த்தையும் பொய்யாக
கம் – யாரை 
இஹ – இங்கு
சரணம் யாமி – சரணமடைவேன்?

2. யதனுகமனாய நிசி கனம் அபி சீலிதம் 
தேன மம ஹ்ருதயம் இதம் அஸமசரகீலிதம் (யாமி)

யதனுகமனாய- யார் வரவிற்காக 
கஹனம் அபி- இருளடர்ந்ததாயினும் இந்தக் காடு 
நிசி- இரவில்
சீலிதம் – அடையப்பட்டதோ 
தேன – அவனால்
மம ஹ்ருதயம் – என் இதயம்
அஸமசரகீலிதம் – மன்மதனின் பாணங்களால் கிழிக்கப்பட்டதாயிற்று.

3.மம மரணம் ஏவ வரம் இதி விததகேதனா 
கிமிதி விஷஹாமி விரஹானலம் அசேதனா (யாமி)

அசேதனா- ஆள் அரவமற்ற 
விததகேதனா – வீணான இந்த இடத்தில்( கண்ணன் வராததால்) 
கிம் இதி- எதற்காக 
விரஹானலம்- பிரிவுத்தீயை 
விஷஹாமி – நான் பொறுத்துக்கொள்ள வேண்டும்?
மம- எனக்கு
மரணம் ஏவ- மரணமே 
வரம் இதி- மேலானது

4. மாம் அஹஹ விதுரயதி மதுரமதுயாமிநீ 
காபி ஹரிம் அனுபவதி க்ருத ஸுக்ருத காமிநீ (யாமி)

மதுரமதுயாமிநீ – இந்த இனிமையான வசந்தகால இரவு
மாம்- என்னை 
விதுரயதி- வருத்துகிறது
காபி ஸுக்ருதகாமினி – யாரோ ஒருத்தி புண்ணியம் செய்தவள் 
ஹரிம் அனுபவதி – ஹரியுடன் சுகம் அனுபவிக்கிறாள். 
அதனால் தான் அவன் வரவில்லை என்று எண்ணுகிறாள்.

5. அஹஹ கலயாமி வலயாதிமணிபூஷணம் 
ஹரிவிரஹதஹன வஹனேன பஹுதூஷணம் (யாமி)

வலயாதிமணிபூஷணம்- வளைகள் முதலிய ஆபரணங்கள் ( கண்ணனை சந்திப்பதற்காக பூண்டவை) 
ஹரிவிரஹதஹன வஹனேன- கண்ணனின் விரஹத்தால் நெருப்புபோல சுடுவதால் 
பஹுதூஷணம்- வெறுக்கத்தக்கவையாக 
கலயாமி- எண்ணுகிறேன்

6. குஸும ஸுகுமார தனும் அதனுசர லீலயா 
ஸ்ரகபி ஹ்ருதி ஹந்தி மாம் அதிவிஷமசீலயா(யாமி)

குஸுமஸுகுமாரதனும் மாம் - மலரைப்போல மெல்லிய என் உடலை 
ஹரதி- மார்பில் உள்ள 
ஸ்ரக் அபி – பூமாலை கூட
அதிவிஷமசீலயா- மிகக்கொடியவையான 
அதனுசரலீலயா- மன்மதனுடைய அம்பானதால் 
மாம் – என்னை 
ஹ்ருதி- ஹ்ருதயத்தில் 
ஹந்தி –வேதனை உண்டாக்குகிறது.

7. அஹமிஹ நிவஸாமி நகணிதவனசேதஸா
ஸ்மரதி மதுஸூதன:மாம் அபி ந சேதஸா (யாமி)

ந கணித வனவேதஸா- இந்த மூங்கில் காடுகளை பொருட்படுத்தாமல் 
அஹம் – நான் 
இஹா- இங்கு 
நிவஸாமி- இருக்கிறேன்,
மதுஸூதன: - மதுசூதனன் 
மாம் – என்னை'
சேதஸா அபி – மனதால் கூட
ந ஸ்மரதி- நினைப்பது இல்லை

ஹரிசரண ஸரண ஜெயதேவகவிபாரதீ 
வஸது ஹ்ருதி யுவதிரிவ கோமளகலாவதீ(யாமி)

ஹரிசரண ஸரண- ஹரியின் பாதசேவையில் ஈடுபட்ட
ஜயதேவகவிபாரதி – ஜெயதேவகவியின் கவிதை 
கோமளகலாவதீ-அழகும் கலைத்திறனும் வாய்ந்த 
யுவதிரிவ – பெண்மணியைப்போல 
ஹருதி- ஹ்ருதயத்தில்
வஸது- வசிக்கட்டும்




No comments:

Post a Comment