Friday, June 8, 2018

Nellaippar temple - Sthala puranam

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
____________________________________
🌸 *உன்னிடம் இருக்கிறது!, கொடு.*🌸
_____________________________________
நெல்லுக்கு வேலியிட்டதால் திருநெல்வேலி.

நெல்லை காத்தவர் நெல்லையப்பர்.

இதே நெல்லையப்பர் திருத்தலத்தில், நெல்லையப்பர் எனும் சுவாமியின் திருநாமம் கொண்ட ஒரு புலவர் வாழ்ந்து வந்தார்.

இவர், இலக்கண இலக்கியங்களில் பெரும் புலமை கொண்டிருந்தவர்.

எப்போதும்போல, தம்வீட்டில் சில பேர்களும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார் புலவர்.

அப்போது, திருநெல்வேலி ஆலயத்திலுள்ள சுவாமியான நெல்லையப்பர், துறவி வேடம் தரித்துக் கொண்டு, புலவர் நெல்லையப்பரைக் காண வந்தார்.

புலவர், துறவியை வணங்கி வரவேற்று ஆசனம் கொடுத்து அமரச் செய்து........

சுவாமி!.. தாங்கள் யார்?.. தங்களுக்கு என்ன வேண்டும்?.. வந்த நோக்கம் என்ன? என வினவினார்.

துறவி வேடத்திலிருந்த சிவபெருமானோ,......

நாம் யாசகம் எதுவும் கேட்டு உம்மை நாடிவரவில்லை. வேறொன்றை வேண்டியே இங்கு வந்தோம். தருவேன் என்று வாக்களித்தால் அது என்னவென்று கூறுவோம் என்றார்.

தாராளமாக கேளுங்கள்!. தாங்கள் நினைத்திருப்பவை, அவை என்னிடம் இருந்தால் கண்டிப்பாக தருவேன் என்றார் புலவர் நெல்லையப்பர்.

உம்மிடம் திருநெல்வேலி தலபுராணம் உள்ளது, அதை எம்மிடம் தந்தால், பத்து நாட்களுக்குள் அதை எழுதி முடித்து, திரும்பத் தந்து விடுவேன் என்றார் சுவாமி நெல்லையப்பர்.

இதற்கு புலவர் நெல்லையப்பர், தாங்கள் கூறும் நூல் அடியேனின் இல்லை சுவாமி!, இருந்தால்தான் கொடுக்க முடியும். என்னிடம் அது இல்லாதாயின் நான் என் செய்வேன் என்றார்.

அது உம்மிடம் இருக்கிறது!, மறைக்காமல் அப்புராணத்தை என்னிடம் கொடு என்றார் துறவி நெல்லையப்பர்.

இச்சமயத்தில், புலவர் நெல்லையப்பருடன் கூடயிருந்து உரையாடிக் கொண்டிருந்த, அனவரத விநாயகம் என்பவர் புலவர் நெல்லையப்பரைப் பார்த்து,........

நீங்களும், பத்து நாள் கழித்துத் தருகிறேன்!, என தருவதாகச் சொல்லுங்கள்! இதைக் கேட்டு துறவியும் போய்விடுவார் என கூறினார்.

புலவர் நெல்லையப்பரும், அனவரத விநாயகம் சொல்லச் சொன்னது போலவே, பத்து கழித்துத் தருகிறேன் என துறவியிடம் கூறினார்.

துறவி நெல்லையப்பர், புலவர் நெல்லையப்பரின் நெற்றியில் வெள்ளிய விபூதியை குளிர பூசிவிட்டு.... ..‌... மகனே!
சொன்ன சொல்லைக் காப்பாற்று! நான் புறப்படுகிறேன் என்று கூறிச் சென்று விட்டார்.

பொழுது விடிந்தது. வீட்டுக் கதவை யாரோ தட்டுவது சத்தம் கேட்டு, புலவர் கதவைத் திறந்தார்.

வாசலில், அந்தணர் ஒருவர் நின்றிருந்தார். அவர் கையில் ஏடு ஒன்றையும் வைத்திருந்தார்.

வாருங்கள், தங்களுக்கு என்ன வேண்டும்? என்றார்.

குறுக்குத்துறையில் தங்களுக்கு மண்டபம் ஒன்று இருப்பதாய் கேள்விப்பட்டோம். தாங்கள் அனுமதித்தால், அந்த மண்டபத்தில் வைத்து பத்து நாட்கள், இந்த திருநெல்வேலி மான்மியத்தை பாட விரும்புகிறோம் என்றார்.

அந்தணர் இவ்விதம் கேட்டதும், புலவர் நெல்லையப்பருக்கு வியப்பாக இருந்தது........

நேற்று வந்த துறவியோ, திருநெல்வேலி தலபுராணம் கேட்டார்!, இன்று வந்திருக்கும் அந்தணர் தல புராணத்தைப் பாட மண்டபம் கேட்கிறாரே என ஒன்றும் புரியாமல் விழித்து, அந்தணர் பாடிக் கொள்ள அனுமதியும் கொடுத்தார்.

இத்தோடு சிவபெருமான் விடவில்லை. அன்றைய தின இரவில், புலவர் நெல்லையப்பர் இருக்கும் தெருவில் வசித்து வந்த, முத்தப்பப் பிள்ளை என்பவரின் கனவில் தோன்றினார்.

அன்பனே!, யாம் நெல்லை ஆலயத்தில் குடியிருக்கும் நெல்லையப்பன். வடமொழியில் உள்ள திருநெல்வேலி மான்மியத்தை, தமிழ்ப் பாடல்களாக பாடும்படி, இத்தெருவிலுள்ள புலவன் நெல்லையப்பரிடம் சொல்! என கூறி மறைந்தருளிப் போனார்.

கனவு கண்டு, மெய்சிலிர்த்துப்போய் எழுந்த முத்தப்ப பிள்ளை, நெல்லையப்ப புலவரின் இல்லம் சென்று, ஈசனின் கட்டளையைக் கூறினார்.

முத்தப்ப பிள்ளை சொல்லிய வார்த்தைகளைக் கேட்டு, புலவர் நெல்லையப்பர் ஆனந்தக் கண்ணீர் ஒழுக்கினார்.

*காண்பாரார் கண்ணுதலோன்!, காட்டாக் காலே!* என திருமுறை உரைக்கிறது.

ஈசனே!, எம்பெருமானே!, என் தெய்வமே!, நீ உணர்த்தா விட்டால் நான் எவ்வாறு உணர்வேன்!, என முறையிட்டு, ஈசன் திருவடியில் விழுந்தெழுந்து முறையிட்டு அழுதார்.

நீயே வந்து தலபுராணம் எழுதச் சொல்லியிருக்கிறாய்!, அதை நான் உணராத போது, அடுத்தவர் கனவில் போய் அறிவுறுத்தியிருக்கிறாய்!, என்று சொல்லி, உடனடியாக தலபுராணம் எழுதத் தொடங்கினார்.

எழுதினார் எழுதினார்... மொத்தம் ஆறாயிரத்து என்னூற்று தொன்னித்திரண்டு பாடல்களை எழுதினார்.

இந்நூலை எழுதி வரும் போது, ஒவ்வொரு நாள் இரவிலும், புலவரின் கனவில் வந்த ஈசன், எழுதிய பாடலில் சில திருத்தங்களைச் செய்யச் சொன்னார்.

அதன்பின் நூல் அரங்கேற்றம் ஆனது.

*தாருகாவனத்து வாழுந் தாபர் முன்னோர் காலஞ் சேருமெய்த் தருமந்தானே தெய்வமென்றிருந்தேன்கோனைக் கோரமாய் நிந்தை செய்த கொடியதோர் பாவந் தீர வாரமாய் தொழுது போற்றி மகிழ திருமூல லிங்கம்.*
                -திருநெல்வேலித் தல புராணம். 

புலவரிடம் தலபுராணத்தை கேட்டு எழுதச் சொன்ன ஈசன், நம் வாழ்விலும் ஒவ்வொரு திசையிலிருப்பவரிகளிடம், ஒரு திறனைக் கொண்டு வரச் செய்ய ஏதுவனாவான்.

இதைத் தெரிந்து செயல்பட்டு புண்ணியம், தொண்டு, ஆலய தர்மங்கள் போன்றவற்றை பெருக்கிக் கொள்ளவேண்டியது நமது பொறுப்பு ஆகும்.

இப்போது, திருச்செந்தூரிலிருந்து- குரும்பூர் - ஏரல் பாதையில், கைலாசநாதர் ஆலயம் புதியதாய் கட்டி முடிக்கப்ப்பட்டு இருக்கிறது.

இவ்வாலயத்திற்கு இராஜ கோபுரம் எழுப்ப வேண்டும் என்பதை உணர்ந்த, கைலாசநாதர் திருக்கோயில் தலைவர் குரு பாலசுப்பிரமணியம் அவர்களால், கோவில்பட்டி "கைலாஷ் டிரஸ்ட்" ஏற்படுத்தப்பட்டு, திருக்கோபுரப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கோபுரம் உயர்வதற்கு  பொருளாதாரம் கருதி பொதுமக்களிடமிருந்தும், வணிகர்களிடமிருந்தும், பக்தர்களிடமிருந்தும், சிவனடியார்களிடமிருந்தும் உபயம் பெறப்பெற்று வரப்படுகிறது.

உபயமும் வந்து சேர்ந்த வண்ணம், ஈசன் அருளிக் கொண்டிருக்கிறான்.

புலவர் நெல்லையப்பருக்கு, நெல்லை நெல்லையப்பர் உணர்த்திக் காட்டியதுபோல, தாங்களுக்கும் இதை உணர்த்திக் காட்டியிருக்கிறார்.

ஈசனுக்கு, நம்மால் முடிந்த, நம் பொருளாதார சூழ்நிலைக்குத் தகுந்த உபயத்தை அனுப்பி, ஈசனின் புண்ணியத்தை தனமாக்கி, வருங்கால நம் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லுங்கள்.

இதுவரை உபயம் அனுப்பிய அனைவருக்கும் 'நன்றி' என்று ஒரு வார்த்தையுடன் முடிக்காமல், ஈசனின் கருணை உங்களுக்கு பிரவாகமாக, ஈசனிடம் விண்ணப்பம் செய்தோம்.

இனியும் இந்தச் செய்தியை அறிந்து உணர்ந்திருந்தவர்கள், தங்களால் இயன்றதை திருக்கோபுரம் அமைய உபயம் அளிக்குமாறு அனைவரின் பாதகமலங்களில் அடியேன் சென்னிமோதி பணிந்துதெழுந்து வணங்கிக் கேட்கிறேன்...

உபயம் அளியுங்கள்!
உபயம் அளியுங்கள்!!
உபயம் அளியுங்கள்!!!

நீங்கள் அளிக்கும் உபயம், உங்கள் கர்ம வினைகளை ஒழிக்கும். புண்ணியம் சேமிப்பாகும்.

இப்புண்ணியம் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு தனமாக அமையும்.

*மனம் நினைக்க மகேசன் அருளாவான்!*
*உபயம் ஒன்றளிக்க, உமாவும் அபயமாவாள்!*

உபயம் அனுப்பாதவர்கள் கூடிய விரைவில் அனுப்பி ஈசனின் புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.

புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே!

இப்போது, இராஜகோபுரத்திற்கு இரண்டாவது நிலைகைளைத் தாங்கி நிற்கும் சூழ்நிலை நடந்து கொண்டிருக்கிறது.

இத்துடன் இராஜபதி ஆலய காணொலியும், வாசிக்கும் பத்திரிக்கையும் இணைத்தனுப்பி உள்ளோம்.

பணத்தை வங்கி கணக்கில் அனுப்ப வேண்டிய முகவரி.

*கைலாஷ் டிரஸ்ட்*
*இந்தியன் வங்கி.*
**கோவில்பட்டி கிளை*
*A/Ç no: 934827371*
*IFSC code: IDIBOOOKO51*
*Branch code no: 256*

நன்கொடை உபயம் செய்பவர்கள், செக்/டி.டி யாகவும் அனுப்பலாம்.

செக்/டி.டி - "கைலாஷ் டிரஸ்ட்" என்ற பெயர் இடவும்.

செக்/டி.டி அனுப்ப வேண்டிய முகவரி:

கைலாஷ் டிரஸ்ட்.
94/207, தனுஷ்கோடியாபுரம் தெரு.
கோவில்பட்டி.
Pin.628 501
தூத்துக்குடி மாவட்டம்.
Cont..98422 63681
-----------------------------------------------------------
*இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் தல அருமை:*
அகத்திய முனிவருக்கு, சீடராகிய உரோமச மகரிஷி சிவமுக்தி வேண்டி சிவபெருமானை வேண்டினார்.

ஈசன் அருளால், அகத்திய முனிவர் உரோமச மகரிஷியை அழைத்து அவர் கையில் ஒன்பது தாமரை மலர்களை கொடுத்து, தாமிரபரணி நதி தொடங்கும் இடத்தில் வடுமாறு கூறினார்.

அப்படி இந்த ஒன்பது மலர்கள் ஒதுங்கும் இடத்தில் சிவபூஜை செய்து வந்தால் உனக்கு முக்திபேறு கிடைக்கும் என்று அருளினார்.

உரோம மகரிஷியும் அவ்வாறே  சிவபூஜை செய்து  முக்திபேறு பெற்றார்.

நவகிரகங்களும் இந்த ஒன்பது ஆலயங்களை வழிபட்டு, அவரவர்களுடைய அருட்சக்தியை பெற்றன.

உரோமச மகரிஷி வழிபட்டு முக்திபேறு பெற்றமையால், இந்த ஆலயங்கள் நவ கைலாயங்கள் எனப் பெயர் பெற்றது.

இந்த நவகைலாங்கள் மிகவும் பழமை வாய்ந்தவை.

இந்த நவ கைலாயங்களில், எட்டாவது தலமாக விளங்குவது *இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில்* ஆகும்.

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, தாமிரபரணி ஆற்றின் வெள்ளப் பெருக்கில், முற்றிலும் அழிவுற்றது.

இதன்பிறகு, கோவில்பட்டி கைலாஷ் டிரஸ்ட் மூலம், நிலம் கையகப்படுத்தி இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் பூமி பூஜை செய்து, இரண்டாயிரத்து பத்தாவது ஆண்டில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

வடக்கே காளத்திநாதர் என்றால், இங்கே கைலாசநாதர்.

திருமண, புத்திரபாக்கியம், வியாபாரம், விவசாயம், தொழில் விருத்தி, போன்றவைகளை நிவர்த்தி செய்கிறார் கைலாசநாதர்.

இவ்வாலயத்தில், இராகு, கேது தோஷம், திருமணத் தடை போன்றவைகளுக்குப் பரிகாரமும் செய்யப்படுகிறது.

இவ்வாலயத்தில் பதினாறு பிரதோஷம் பார்த்தால், நினைத்த காரியம் கைகூடும்.

இவ்வாலயத்தில் கண்ணப்ப நாயனார் சந்நிதியும் அமைந்திருக்கிறது.

இங்கு வந்து மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் அபிஷேகம் செய்தால், கணவன் மனைவி ஒற்றுமை கூடும்.

நவலிங்க சந்நிதியில் பக்தர்களே தங்கள் திருக்கரங்களால், அபிஷேகம் செய்து, தோஷ நிவர்த்தி பெறலாம்.

_____________________________________
*திருக்கோபுரத்திற்கு உபயம் அளியுங்கள்!*
*திரும்ப பிறப்பில்லா நிலை பேறு பெறுங்கள்!!*


         திருச்சிற்றம்பலம்.

____________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment