Monday, April 9, 2018

Chair given by a muslim to Pudhu Periyavaa

இன்னும் ஒரு செய்தி, திரு. பாலு.
நமது காஞ்சி மடத்திற்கு எதிரே ஆசாரித் தொழில் பார்க்கும், ஒரு  முகமதியர் கடை உள்ளதாமே. அந்த முகமதியர், மடத்திற்குத் தேவையான மரப்பொருள்களை (கட்டில் முதலானவை)  செய்து கொடுப்பவராம்.
 அந்த முகமதிய ஆசாரியரை, தற்போது 'முக்தி'யடைந்த ஆச்சாரியார், கடந்த நான்கு நாட்களுக்கு முன் தன்னை சந்திக்கக் கூறியுள்ளார். அவரும் உடனடியாக ஐெயேந்திரரை  சந்திக்க, நம் ஆச்சாரியார் அவரிடம் நலன் விசாரித்துவிட்டு,  'பாய், நான் தற்போது அமர்ந்திருக்கும் நாற்காலி அவ்வளாக சௌரியப்படல. நல்ல ஒரு மர நாற்காலியை உன் கையாள் செய்து கொடு' என்று கேட்டாராம்.
அந்த முகமதிய ஆசாரியும் ஒரே நாளில் செய்து  மடத்தில் கொண்டுபோய் வைத்து, ஐெயேந்திரரை அதில் அமர்ந்து பார்க்கக்  கேட்க, ஆச்சாரியாரும் அதில் அமர்ந்து, சிரித்தபடியே, நாற்காலி வசதியாக இருக்கிறது என்று கூறி, ஆப்பிள் ஒன்றை தன் கையால், அவருக்குக் கொடுத்து, ஆசீர்வதித்துள்ளார். இன்று ஐெயேந்திரர்,  அதே மர நாற்காலியில் அமர்ந்துதான்  ஐீவசமாதி அடைந்துள்ளார்!
ஆச்சாரியாரின் உடலுக்கு, நம் இளைய மடாதிபதி அவர்கள் 'அபிஷேகம்' செய்யும் போது, ஒளிபரப்பப்பட்டதற்கிடையே, அந்த முகமதிய ஆசாரி, தொலைக் காட்சியில் கண்ணீர் மல்க கூறிய போது, நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதேன்.
ஒரு இந்து மதத் தலைவரின் உடல், ஒரு சாதாரன முகமதியன் செய்து கொடுத்த நாற்காலியுடன் ஐீவசமாதி!!

No comments:

Post a Comment