உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி.*
இப்பதிவு நீளம் கருதி, இன்றும் நாளையும் வ(ள)ரும்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹*பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
*(27-வது நாள்.)*
இப்பதிவும் நீளம் கருதி இன்றும் நாளையும் தொடர்ந்து வ(ள)ரும்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌷 *அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி திருக்கோயில்.*🌷
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*தென்காசி.*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*இறைவன்:*அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி.
*இறைவி:* அருள்தரும் உலகம்மன்.
*தீர்த்தம்:* சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.
*தல விருட்சம்:* செண்பக மரம்.
*ஆகமம்:* காரண ஆகமம்.
*தல அருமை:*
தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் காசிநகருக்குச் சென்று காசிவிசுவநாதரை வழிபட ஆசை கொண்டிருந்தார்.
மன்னனின் குலதெய்வமான முருகப்பெருமான், மன்னனுக்கு சக்திவாய்ந்த அபூர்வமான குளிகை ஒன்றை, அவரிடம் கொடுத்து வானவெளி வழியாக காசிக்குச் சென்று வழிபடச் செய்தார்.
ஆனால், அவ்வாசையும் அவ்வழிபாடும் நிறைவேறிய பராக்கிரம பாண்டிய மன்னனுக்கு, தினமும் இதுபோலவே காசிக்குச் சென்று விசுவநாதரை வழிபட இயலாததை எண்ணி, மன்னன் மனம் வருந்த அழுதான்.
மன்னனின் வருத்தத்திற்கு, இறைவன் அவன் கனவிலே தோன்றி, *நான் இங்கிருந்து அரைக்காத தூரத்தில்தான் இருக்கிறேன்*
நானிருக்குமிடத்தை நீ காண வரும்போது, எறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து சென்று வழிகாட்டும் எனக் கூறி மறைந்தருளினார்.
மறுநாள் அதுபோலவே மன்னன் செல்ல, எறும்புகள் சாரை சாரையாக வரிசைகட்டி ஊர்ந்து செல்ல, மன்னனுக்கு வழிகாட்டியது.
எறும்புகளின் வழிகாட்டி முடிந்த இடத்தைக் கண்டு, மன்னன் அவ்விடத்தை கிளிர்த்திப் பார்க்க, அவ்விடத்தில் சிவலிங்கமும் நந்தியும் இருப்பதைக் கண்டு உடல் பூரித்து ஆர்த்தெழ, அவ்விடத்திலிருந்து சிவலிங்கத்தையும், நந்தியையும் வெளிக் கொணர்ந்தான்.
லிங்கவுரு கிடைக்கப் பெற்ற இடத்திலேயே ஆலயத்தை புணரமைத்தான். கோபுரத்தை கட்டினான்.
தென்காசி என்றும் நகரையும் நிர்மாணித்து, தென்காசி கண்ட பாண்டியன் எனவானான்.
ஆயிரத்து நானூற்று நாற்பத்தைந்தாம் ஆண்டில், பராக்கிரமப் பாண்டியராஜ் ராஜகோபுரத்தை அமைக்கும் பணி துவங்கப்பட்டு சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பின் பட்டத்துக்கு வந்த பராக்கிரம பாண்டியனின் தம்பி சடையவர்மன் குலசேகர பாண்டியனால் ஆயிரத்து ஐநூற்று ஐந்தாம் ஆண்டில் இராஜகோபுரத் திருப்பணி முடிந்தன.
*"உத்திரகாசியில் எழுந்தருளியுள்ள சிவாலயம் ஜீரணமானதாலே தெக்கண காசியாக ஆலயம் செய்து தரவேணும்"* என்று கனவில் தோன்றி அருளிச் செய்தமையாலே, நித்யசச்சிதானந்த சொரூபியாக விளங்கும் பரம்பொருளான காசிவிசுவநாதருக்கு எங்கும் பைம்பொழில் வாவி குளங்களும், நீரோடை ஆறுகளும், அருவிகளும், காடுகளும், குன்றுகளும், பொத்தைகளும், மலைகளும் சூழ்ந்த பொதிகை மலைச்சாரல் சித்ரா நதி தீரத்தில் தென்காசி நகர் உருவாக்கி கி.பி. ஆயிரத்து நானூற்று நாற்பத்தைந்தாம் ஆண்டில், கோயில் கண்டான் மாமன்னன் ஜலடிவர்மன் *"அரிகேசரி பராக்கிரமப் பாண்டியன்"* என கல்வெட்டில் பாடலாகக் கான்க!
*சிறப்பு:*
கோயில் தூண், வாயில் கல் தூண், கிழக்கு முகக் கல்வெட்டு ஆகியவைகளில், *உடையார் விசுவநாதர் உத்திரகாசியில் எழுந்தருளி இருந்த சிவாலயம் ஜீர்ணமாகையாலே தென்னாட்டு சித்ரா நதி,உத்திர தீரத்திலே, நமக்குத் தட்சிண காட்சியாக ஆலயம் செய்து தர வேணும்* என்று எங்களுடைய பெருமான் அரிகேசரித் தேவர் என்ற திருநாமமுடைய பொன்னின் பெருமான் பராக்கிரமப் பாண்டியன் தேவர் இருந்தருளிய இடத்தில் உடனே ஸ்வப்நத்திலே (கனவிலே) திருவுள்ளம் பற்றி அருளுகையிலே........
தட்சிண காட்சியாக திருப்புடைவீடும் உண்டாக்கி உடையார் விசுவநாதரையும் நாச்சியார் உலக முழுதுமுடைய நாச்சியாரையும் பிரதிட்டை செய்தது எனவிளங்கத் தெரிகிறது.
*"ஆராயினும் இந்த தென்காசி மேலும் பொன் ஆலயத்து
வாராததோர் குற்றம் வந்தால் அப்போது அங்கு வந்து அதனை
நேராகவே ஒழித்துப் பரப்பார்களை நீதியுடன்
பாரோர் அணியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே
அரிகேசரிமன் பராக்கியரமன் அரன் அருளால்
வரிசேர் பொழிலணி தென்காசிக் கோயில் வகுத்து வலம்
புரிசேர் கடற்புளி போற்ற வைத்தேன் அன்பு பூண்டு இதனை
திரிசேர் விளக்கெனக் காப்பார் பொற்பாதம் என் சென்னியதோ.
மேற்க்கண்ட விளக்கம், பராக்கிரம பாண்டிய மன்னர் தென்காசி திருக்கோயிலின் வடக்குச் சுவற்றில் பதித்திருக்க காண்போம்.
திருச்சிற்றம்பலம்.
இதனின் மீதி தொடர்ச்சி நாளை வ(ள)ரும்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி.*
இப்பதிவு நீளம் கருதி, இன்றும் நாளையும் வ(ள)ரும்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹*பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
*(28-வது நாள்.)*
இப்பதிவும் நீளம் கருதி நேற்றும் வெளியாகி, இன்றும் தொடர்ந்து வளர்ந்தது.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌷 *அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி திருக்கோயில்.*🌷
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*தென்காசி.*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*முக்கட் சோதி தென்காசி முன்னோன் கதை*
*மிக்க வேதவியாசன் விரித்ததை*
*தக்கவாய் தமிழால் சொலச் சண்பகக்*
*களிற்றின் கழல் பணிந்து ஏத்துவாம்.*
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
*இறைவன்:*அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி.
*இறைவி:* அருள்தரும் உலகம்மன்.
*தீர்த்தம்:* சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.
*தல விருட்சம்:* செண்பக மரம்.
*ஆகமம்:* காரண ஆகமம்.
*சிறப்பான சிற்பம்:*
தென்காசி கோயிலில்,உலகத்திலேயே மிக சிறப்பு வாய்ந்தது என்று சொல்லுமளவுக்கு சிற்பங்கள் பல உள்ளன.
காசிவிசுவநாதர் திருக்கோயிலின் திரு ஓலக்க மண்டபத்தில் எட்டு பெரியதான தூண்கள் நம்மை பிரமிக்க வைத்து நிற்கின்றன.
இவைகளில், தென்திசையில் அக்னி, வீரபத்திரர், மன்மதன், மகாவிஷ்ணு, பத்ரகாளியம்மன் ஆகிய சிற்பங்கள் இருக்கின்றன.
வடவரிசையில் அகோர வீரபத்திரர், ரதி தேவி, ஊர்த்துவ தாண்டவர், மகா தாண்டவர் ஆகிய சிற்பங்கள் இருக்கின்றன.
மேல வரிசையில் பேரழகு பொருந்திய தமிழர்க்கு இரண்டு இருக்கின்றன.
இச்சிலைகள் ஒவ்வொன்றும் தூணுடன் சேர்ந்து தனித்தனியாக ஒரே கல்லில் உருவாகி அமைந்துள்ளது.
அடுத்து, பாலமுருகன் சந்நிதியில் பஞ்சபாண்டவர்கள் சிற்பங்கள் ஐந்தும், யாழி சிற்பங்கள் நான்கும், துவாரபாலகர்கள் இரண்டும், கர்ணன் சிற்பம் ஒன்றும் ஆக மொத்தம் பன்னிரண்டு சிற்பங்கள் இருக்கின்றன.
இச்சிற்பங்களின் மேன்மை என்னவென்றால், இக்கல் சிலைகளில் இருக்கும் நுட்பமான வேலைப்பாடுகளை மரத்தில் கூட செதுக்க முடிவது கடினம்.
ஆனால் அதையெல்லாம் தாண்டி மரத்தில் இழைக்க முடியாததை கல்லில் உருக்கி வடித்தது வைத்திருந்தான் அந்த சிற்பி.
இங்கிருக்கும் காசி தீர்த்தம், வட இந்தியாவில் உள்ள காசியின் தீர்த்தத்திற்கு நிகரானது என் போற்றப்படுகிறது.
*வழிபட்டவர்கள்:*
இந்திரன், நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், வாலி, கண்வ முனிவர் போன்றோர்கள் வழிபட்ட தலம்.
மேலும் நந்தியின் அவதாரத் தலமாகவும் போற்றப்படுகிறது.
சிலாகித முனிவர் குழந்தை வரம் வேண்டிப் பயன் அடைந்ததாக தலவரலாற்றில் உள்ளன.
திருக்கோயிலைக் கட்டிய பராக்கிரமப் பாண்டிய மன்னனின் உற்சவர் சிலை சுவாமி சந்நிதியில் உள்ளது.
திருக்கோயில் விழாக்களுக்கு தலைவராக அம்மன்னன் மதிக்கப்பட்டு, மன்னனுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு வருவது இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
*இராஜகோபுரம்:*
அரிய பெருமை வாய்ந்த இத்திருத்தலத்தில், மாங்குயில் தூண் பதினொன்றும், ஓங்குநிலை என்பதும் கொண்ட கவின்மிகு கலையழகுடன் கி.பி. ஆயிரத்து நானூற்று அறுபத்து மூன்றாம்ஆண்டில், மன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட ராஜகோபுரம் சுமாராக இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்னமே சிதைந்து போனது.
பின் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூறாம் ஆண்டில் ஒன்பது நிலை கொண்ட ராஜகோபுரம் திருப்பணி முழுமையடைந்து குடமுழுக்கு சிறப்பாக நடந்தேறியது.
*சிற்றாறு:*
இயற்கை கொஞ்சும் இடங்களில் எல்லாம் தவழ்ந்து வரும் இச்சிற்றாற்றிற்கு *சிவமது கங்கை* என்ற பெயரும் உண்டு. இவ்விபரம் திருக்குற்றாலத் தலபுராணத்தில் காணலாம்.
வடக்கே கங்கைக் கரையில் வாரணாசி இருப்பது போல் சிவமது கங்கை என்ற பெயரைப் பெற்ற சிற்றாற்றின் கரையில் தென்காசி நகரம் அமைந்துள்ளது.
வடக்கில் உள்ள காசியை விட தெற்கில் உள்ள இத்தென்காசி புனிதமானதென்று புராணங்கள் கூறுகின்றன.
வடக்கில் உள்ள காசியில் *இறந்தால் தான் முக்தி* ஆனால், தென்காசியில், பிறந்தால்; இருந்தால்; இறந்தால் முக்தி.
தென்காசியில் இருப்பாருக்கும் அதனைக் கண்டாருக்கும் முக்தி என்றும் புராணங்கள் உறைக்கிறது.
இத்தகைய பெருமையைக் கொண்ட தென்காசி நகரில் சிற்றாற்றங்கரையில் முதன் முதலில் *காவேரி கங்கை* அம்மனுக்குக் கோயிலமைத்தான் மாமன்னன் பராக்கிரம பாண்டியன்.
*அசையாத ஆனைமுகன்:*
கங்கையம்மன் கோயிலுக்கு முன்புறம் விநாயகரையும் மன்னன் எழுந்தருளச் செய்வித்திருந்தான்.
சிற்றாற்றில் எழுந்தருளியிருக்கும் இவ்விநாயகர் கண் கண்ட தெய்வமாக போற்றப்பட்டு வந்தார்.
ஒரு சமயம், சிற்றாற்றில் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று இரண்டாம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இப்பெரு வெள்ளம் அங்கிருக்கும் பாலத்தையே மூழ்கடித்து பாய்ந்தன.
வெள்ளத்தில் பெரும் பெரும் பாறைகள் உருண்டு ஓடியது. முழு முழு மரங்கள் ஆணிவேருடன் வெள்ளத்தில் விரைந்தன.
விநாயகர் அமர்ந்திருந்த சுற்றுப் பகுதிகளின், கற்களும் மணற்திட்டுகளும் ஆழப்பட்டு கரைந்தொழுகி வெள்ளத்தில் காணாது போயின.
இவ்வெள்ளத்தில் வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டதை அப்போதைய மக்கள் கண்டனர்.
ஆனால், இந்த விநாயகரை மட்டும் வெள்ளம் அசைக்கக்கக்கூட முடியவில்லை.
அப்படியான அந்த ஆனைமுகன் இன்றும் அப்படியே இருக்கிறார் அருள் பாலிக்கிறார்.
இவ்வானைமுகனருகில் திருக்கோயில் தீர்த்தவாரி மண்டபம் இருக்கிறது.
முன்பு இங்கிருந்துதான் காசிவிசுவநாதரின் அபிஷேகத்திற்கு தீர்த்தம் கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது.
மாமன்னன் அமைத்த இத்திருக்கோயில் ஏறத்தாழ இருபது ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
மற்றத் திருக்கோயில்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு இத்திருக்கோயிலுக்கு உண்டு.
இரண்டு பெரிய யானைகள், பெரும் தேர் ஒன்றை இழுத்துச் செல்லும் வண்ணம் இக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலின் இராஜகோபுரத்திற்கு முன்புறம் அழகான திறந்தவெளித் திடல் அமைந்துள்ளன.
கோபுரத்தின் வடக்குப் பகுதியில் மகிஷாசுரமர்த்தினி நின்று அருள்பாலிக்கிறாள்.
கிழக்கு நோக்கி இருந்தருளும் இத்தேவி கைகுவித்து சேவிப்போரின் கண்ணீரை துடைத்து அருள் செய்யும் சக்தியாய் இருக்கிறாள்.
செவ்வாடை உடுத்தி குங்குமம் பொலிந்து மகிடனை காலடியில் கிடத்தி,சூலத்தைத் தாங்கி நிற்கும் இச்சூழலில், சூழ்ச்சிக்காரர்களையும், சூனியம் செய்வோரையும் திருத்த அருள் செய்கிறாள்.
கோபக்கணலோடு, எட்டுக் காயங்களுடன் மகிடனின் தலைமீது நின்றுகொண்டு, மங்கையரின் மாங்கல்யம் காக்கும் தாயாக அருளாட்சி புரிந்து வருகிறாள்.
இரவில், இவள் ஆலயத்துள் நடமாடும் கோலம் நிகழ்ந்த வண்ணம் இருந்து வருகிறது.
இதை பாதுகாவலரான பக்தர்கள் பலர் கண்டும் உணர்ந்தும் இருக்கிறார்கள்.
திருக்கோயிலுக்கு மற்றும், திருக்கோபுரத்துக்கும் இடையில் பரந்து விரிந்த வெளிப்பரப்புள்ள இடம் இருக்கிறது.
இப்போதையுள்ள இவ்வெளிப்பரப்பு, முன்னாளில் தெப்ப குளமாக இருந்ததாம். அந்நாளில் அக் குளத்தை *ஆனந்த தீர்த்தக் கட்டம்* என போற்றி வழங்கி வந்திருக்கின்றனர்.
திறந்த வெளிப் பரப்பில் கோபுரத்தின் தெற்குப் பகுதியில் மேற்கு பார்த்த வண்ணம் துர்க்கை நின்ற கோலத்தில் இருக்கிறாள்.
துர்க்கையை வணங்கி விட்டு, நாளைக்குத்தான் நாம் திருக்கோயிலின் உள் புகப் போகிறோம்.
திருச்சிற்றம்பலம்.
நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களில் தென்காசி தலத்தின் பதிவுகள், நாளைதான் ஆலயத்துக்குள் நுழைகிறோம். தரிசனங்களை மேலும் சில நாட்களாக தொடர்ந்து பதிவு வரும். சிவ சிவ.திருச்சிற்றம்பலம்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி.*
இப்பதிவு நீளம் கருதி சில நாட்களாக வ(ள)ரும்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹*பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
*(29-வது நாள்.)*
இப்பதிவும் நீளம் கருதி நேற்றும் வெளியாகி, இன்றும் தொடர்ந்து வளர்ந்தது.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌷 *அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி திருக்கோயில்.*🌷
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*தென்காசி.*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*முக்கட் சோதி தென்காசி முன்னோன் கதை*
*மிக்க வேதவியாசன் விரித்ததை*
*தக்கவாய் தமிழால் சொலச் சண்பகக்*
*களிற்றின் கழல் பணிந்து ஏத்துவாம்.*
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
*இறைவன்:*அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி.
*இறைவி:* அருள்தரும் உலகம்மன்.
*தீர்த்தம்:* சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.
*தல விருட்சம்:* செண்பக மரம்.
*ஆகமம்:*
*தென்காசியின் மேலும் பலபெயர்கள்:*
சச்சிதானந்தபுரம்.
முத்துத் தாண்ட நல்லூர்.
ஆனந்தக் கூத்தனூர்.
சைவ மூதூர்.
தென்புலியூர்.
குயின்குடி.
சித்தவாசம்.
செண்பகப் பொழில்.
சிவமணவூர்.
சத்தமாதர் ஊர்.
சித்திர மூலத்தானம்.
மயிலைக்குடி.
பலாலிங்கப்பாடி.
வசந்தக்குடி.
கேசிகை.
*விந்தன் கோட்டை:*
விந்தன் கோட்டை என்ற ஊர், தென்காசிக்கு அருகில் அகரக் காட்டிற்கும், சாம்பவர் வடகரை என்ற ஊருக்கும் இடையில் உள்ளது.
விந்தன் கோட்டையிலிருந்து அரசாண்ட பராக்கிரமபாண்டியன், காசிவிசுவநாதருக்குத் தென்காசியில் கோயிலெழுப்பிவித்தமைக்கு வரலாறு உள.
விந்தன் கோட்டையிலிருந்து பராக்கிரம பாண்டியன் *ககனக்குளிகை* வாயில் அமைத்துக் கொண்டு வான்வெளி வீதியில் பறந்து, அதிகாலை நான்கு மணிக்கு
காசிக்குச் சென்று காசிவிசுவநாதரை வழிபட்டு, பின் சூரிய உதிக்கத் தொண்டங்குவதற்கு முன்னமே விந்தன் கோட்டைக்கு வந்து விடுவான்.
ஒருநாள் அரசன் புறப்படுகையில், அரசி தானும் உடன் வருவதாகக் கூற, அவளையும் தன்னோடு அழைத்துக் கொண்டு வடக்கே இருக்கும் காசிக்குப் பறந்து சென்று விசுவநாதரை வழிபட்டு திரும்பிக் கொண்டிருந்தான்.
அப்படி வரும்போது ஒரு சிவலிங்கத்தையும் எடுத்து வந்தான்.
அரசனும் அரசியும் வானவெளியில் பறந்து வருகிற சமயத்தில், அரசி விலக்கானாள்.
எனவே இருவரும் ஒரு சோலைக்குள் இறங்கித் தங்கினர். அரசியார் மூன்று நாட்கள் குளித்ததும், (விலக்கானது சுத்தமான பின்பு) மீண்டும் புறப்பட ஆயத்தமாயினர்.
இவர்கள் சோலையில் தங்கியிருந்தபோது, காசியிலிருந்து எடுத்து வரப்பட்ட லிங்கத்தை கீழே வைத்திருந்தனர். அதையெடுத்துக் கொள்ள முயற்ச்சிகள் கையில்,
சிவலிங்கம் எடுத்த எடுப்புக்கு வரவில்லை. இழுத்த இழுப்புக்கும் அசையவில்லை. அரசனும் அரசியும் ஏங்கினர் கசிந்தனர்.
அப்போது இறைவன் அசரீரியாக..... *"நான் இங்கேயே இருக்க நினைக்கிறேன்"* ஒலித்தது.
இருவரும் அந்த லிங்கத்திற்கு பிரதிஷ்டை செய்வித்து வணங்கிவிட்டு, அச்சோலையிருந்த அவ்விடத்திற்கு சிவகாசி என் ஊரை வழங்கிவிட்டு கோட்டைக்குத் திரும்பி வந்துவிட்டனர்.
கோட்டை திரும்பிய மன்னனுக்கு மனதில் நிம்மதியற்று இருந்து வந்தார்.
அதற்குக் காரணம்; தமக்கு ஒரு சிவலிங்கம் வேண்டும் என்றும், அதற்கும் காசி விசுவநாதர் என் பெயரிட்டு கோயிலெழுப்ப வேண்டும் என்பதும்தான்.
அதற்காகக் கொண்டு வந்த லிங்கம் சிவகாசியில் இருப்பு கொண்டமையால், அந்த எண்ணத்தை நினைத்துத்தான் அவன் அப்படியிருந்தான்.
*கட்டெறும்பு வழி காட்டியது:*
அன்றைய இரவில், மன்னனின் கனவில் ஈசன் தோன்றி......கோட்டையிலிருந்து கட்டெறும்புகள் சாரைவரிசையாக ஊர்ந்து சென்று, அது சென்று முடிவுறும் இடத்தில், நீ நினைத்து ஏங்கும் லிங்கமாக அங்கு நானிருப்பேன்.
அவ்விடத்தில் நீ நினைத்த லிங்கத்திற்கு விசுவநாதர் என பெயரிட்டுக் கொள் என்றார்.
காலையில் அரசன் கண்விழித்ததும், இறைவனின் வாக்குப்படி கட்டெறும்புகளின் சாரை வரிசையைக் கண்டு அதன்பின்னே சென்றான்.
அவ்வெறும்புகள், சிற்றாறின் ஓரமாய் உள்ள செண்பகத் தோட்டத்தில் தன்பயணத்தை முடித்திருந்தது.
*சிற்றாறு:*
இயற்கை கொஞ்ச நாம் மகிழ தவழ்ந்தோடி வரும் இச்சிற்றாறுக்கு *சிவமது கங்கை* என்ற பெயரும் உண்டு என்பதை திருக்குற்றால புராணத்தில் காணப்பெறலாம்.
வடக்கே காசியில் *வாரணாசி* இருப்பது போல், இங்கே *சிவமது கங்கை* என்ற பெயரைக் கொண்ட சிற்றாற்றின் கரையில்தான் தென்காசி விசுவநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
வடக்கில் உள்ள காசியைவிட தெற்காக இந்தத் தென்காசி புனிதமானதென புராணத்தில் உளன.
வடக்கிலுள்ள காசியில் *இறந்தால் தான் முக்தி* ஆனால், தென்காசியில் *பிறந்தால்*-- *இருந்தால்* -- *இறந்தால்* முக்தி.
தென்காசியில் இருப்பார்க்கும் அதனைக் கண்டாருக்கும் முக்தி என்று புராணங்கள் அறிவுறுத்துகின்றன.
*அசையாத ஆனைமுகன்:*
கங்கையம்மன் கோவிலுக்கு முன்புறமாக விநாயகரை மன்னன் எழுந்தருளச் செய்திருயிருந்தார்.
சிற்றாற்றில் எழுந்தருளியிருக்கும் இவ்விநாயகர் கண் கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறார்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று இரண்டாம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பெருவெள்ளம் வர, சுற்றிலும், அருகோரம் எல்லாமும் அகழ்ந்து பாழ்ந்து ஆழமாகிப் போக, இவ் விநாயகரை வெள்ளம் ஒன்றும் செய்யவில்லை.
இன்றும் அந்த ஆனைமுகன் அப்படியே இருக்கிறார்.
இவரிருக்கும் அருகில் திருக்கோயில் தீர்த்தவாரி மண்டபம் இருக்கிறது.
முன்சமயம் இங்கிருந்துதான் காசிவிசுவநாதருக்கு அபிஷேகத்திற்குத் தீர்த்தம் கொண்டு வருவது வழக்கமாக இருந்தது.
*நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களில் தென்காசி தலத்தொடர் இன்னும் சில நாட்களாக பதிவுகள் தவழும்.*
திருச்சிற்றம்பலம்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி.*
இப்பதிவு நீளம் கருதி சில நாட்களாக வ(ள)ரும்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹*பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
*(30-வது நாள்.)*
இப்பதிவும் நீளம் கருதி நேற்றும் வெளியாகி, இன்றும் தொடர்ந்து வளர்ந்தது.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌷 *அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி திருக்கோயில்.*🌷
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*தென்காசி.*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*முக்கட் சோதி தென்காசி முன்னோன் கதை*
*மிக்க வேதவியாசன் விரித்ததை*
*தக்கவாய் தமிழால் சொலச் சண்பகக்*
*களிற்றின் கழல் பணிந்து ஏத்துவாம்.*
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
*இறைவன்:*அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி.
*இறைவி:* அருள்தரும் உலகம்மன்.
*தீர்த்தம்:* சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.
*தல விருட்சம்:* செண்பக மரம்.
*ஆகமம்:* காரண ஆகமம்.
*பெருமைக்குரிய முத்திரைகள்:*
தென்காசி ஆலய திருவோலக்க மண்டபம் எனும் முகப்பு மண்டபத்தை கவினார்ந்த கலைக்கூடம் என்றே சொல்ல வேண்டும்.
இம்மண்டத்தை எட்டு பெரிய தூண்கள் அலங்கரிக்கிறது. இது சாதாரண தூண்கள் அல்ல!, நம்மோடு பேசும் உணர்வைக் கொண்ட பேசாத தூண்கள் இவை.
இதயத்தை ஈர்ப்புக்குள்ளாகும் சிற்பங்கள். காண்போர் கண்ணையும் கருத்தையும் கொள்ளையிட்டு பறிக்கும் கவின்மிகு படைப்புகள்.
கல்லில் உலகத்தின் அழகையெல்லாம் கூட்டிவைத்து நுன்னிய வேலைப்பாடுகளுடன் அமைத்திருக்கிறான் சிற்பி.
மரத்தை இழைத்து அழகுபடுத்துவதைத்தான் பார்த்திருக்கிறோம். இங்கே கல்லையே இழைத்து உருக்கியிருக்கிறார்கள்.
முகப்பு மண்டப தென்திசையில், மேற்கிலிருந்து கிழக்காக
அகோர வீரபத்திரர்,
மன்மதன்,
திருமால்,
காளியும்,
வரிசையில், மேற்கிலிருந்து கிழக்காக,
வீரபத்திர சட்டை நாதர்,
ரதி,
பதஞ்சலி வியாக்கிர பாதருடன் அமைந்த மகாதாண்டவ மூர்த்தி,
ஊர்த்தாண்ட மூர்த்தி ஆகிய சிலைகள் சந்நிதியை நோக்கி இருக்கின்றன.
மேலும் இருபக்கத் தூண்களிலும் இரண்டு அழகிய பெண்களின் சிற்பங்கள் இருக்கின்றன.
வடக்குத் தூணிலுள்ள பெண்ணின் சிற்பம் பெருமைமிகுந்தது. கூந்தை வாரி சடை பின்னலிட்டு, பின்னாலிருந்த பின்னமுடிச்சுக்கள் அற்புதம்.
மேலும், வசீகரமான முகம், காதைக்கொடு கவிதை சொல்கிறேன் எனக்கூறும் கண்கள். குளிர்ந்த நெற்றி, புருவக் கீறல்கள், கூம்புபோல் நாசி, புன்னகை பொதிந்த இதழ், குறுகிய இடை, ஒட்டிய வயிறு, ஒப்பனை சான்று மேன்மையான தொப்புள், ஒசிந்த நிலையில் மயில் போல ஒயில், இழைத்துக் தூண் போன்ற வழவழ முழங்கால்கள், பார்வையை விட்டு திருப்பிப் பார்க்க மறந்து போகும் பாதங்கள், அவற்றிலுள்ள நாடகங்கள், தொட்டுப் பார்க்கத் தூண்டும் சுற்று விரல்கள், கையில் இழைந்தோடிய நரம்புகள், அக்கரத்தில் அணியப் பெற்ற ஒன்பது வளையல்கள், கடகங்களால் அணிந்திருக்கும் உடையின் நளினம், இடக்காலை ஊன்றி எழிலுடன் நிற்கும் கோலம், வலது கை ஆள்காட்டி விரலால் *"விசுவநாதர்"* உள்ளே என சுட்டிக் காட்டும் விதம்.
என்னழகில் மயங்கி விடாதீர்கள், உலகநாயகன் உள்ளே உள்ளான் என்பதைக் கூறும் சிலையாக அமைந்திருப்பதைக் கண்டு ஆனந்தித்தோம்.
தென்புறத் தூணில், மேற்கு நோக்கி வலக்காலை ஊன்றி இன்பச் சாயலோடு, கூந்தலை வாரி முடித்து, இடக்கையில் ரசக்கண்ணாடி தாங்கி, வலக்கை விரலை நெற்றி முன் நிறுத்தி, திலகம் இட்டுக் கொள்வது போலமைப்புடன் காட்சியாயிருந்தது.
வடபுறத்தில் கிழக்கு நோக்கி, ஊர்த்துவ தாண்டவர் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
இந்த கம்பீரத்தில் சினமும் பெருமிதமும் சேர்ந்த முகமாக காணக் கிடைத்தன. பத்து கைகளிலும் முறுக்கேறிய நரம்புகள்.
இடக்காலை அழுத்தமான நிலையில் ஊன்றி, வலக்காலை மேலாக தூக்கி ஆடும் ஊர்த்துவ நடனம் அற்புதமாக இருந்தது.
பத்துக் கைகளிலும் பத்து விதமான திருக்கருவிகள். ஒரு கையில் செங்கோல், ஒரு கையில் நந்திக்கொடி, தாண்டவத்திற்கு தகுந்தவாறு மத்தளம் வாசிக்கும் விஷ்ணு, தாளம் தட்டும் நான்முகன் இவையத்தனையும் ஒருகல்லில் கண்டோம்.
ஆக்கி, அழிவித்து, காத்தது நானே!" எனதான தத்துவத்தையும், நல்லோரைக் காக்க செங்கோல் கொண்டும், ஊழிக்காலத்தில் அனைத்தும் என்பால் ஒடுங்கும் எனக்கூறுகின்ற தத்துவத்தைக் கூறும் சிலை இது.
வட வரிசையில் ஊர்த்துவ தாண்டவருக்கு அடுத்ததாக, மகாதாண்டவர் சிலை இருக்கிறது. இவர் முகத்தில் பெருமிதமான உணர்வு. இவர் கிரேக்கத்தில் எழிலான கைகள், வீரக்கழல்கள், ஒரு கையில் உடுக்கை, மற்றொரு கையில் செங்கோலுடன் கதையும் கொண்டு, கோபக் கணல் தெரிக்கும் நிலையுடன் இருப்பதைக் கண்டோம்.
மகாதாண்டவருக்கு அடுத்த சிற்பமான ரதியின் சிற்பத்தைப் பார்த்தோம். வாரி முடித்தக் கூந்தல், கூரிய முனைமூக்கு, பிறைபோல நெற்றி, ஒடுங்கிய இடை, திரட்சியான........ம், கவர்ந்திழுக்கும் காந்தக் கண்கள், புண்ணகை பூசிய இதழ், அழகூட்டிய அணிகலன்கள், அன்னத்திலமர்ந்த மாட்சி,
அன்ன முதுகில் மடக்கிய வலக்காலுடன், ஊன்றிய காலுடன், கயிற்றைக் கையில் பிடித்திருக்கும் கவின், தோள் மீது அமர்ந்திருக்கும் கிளிகள், கிளியும் பேசுவது போல, இருக்கும் அற்புதத்தைக் கண்டோம்.
ரதியின் சிலையை அடுத்திருந்த வீரபத்திரர் சிலை இருந்தன. நாட்டுப்புறத்திலுள்ள மக்கள் இவரை அக்னி மாடன் என்று கூறுவர். இவர் கையில் சுடர் விட்டு ஒளிர்ந்த தீப்பிழம்பு, கணத்தில் சினம் பொங்கிய முகம், நரம்புகள் புடைத்து வீங்கிய கையில் சூலம் தாங்கி, பார்க்க பார்க்க பயங்கரத் தோற்றத்தோடு நிற்கிறார்.
தென் வரிசையில் மேற்கில், வீரபுத்திரர் இருந்தார். இவர் அரக்கனின் கழுத்தில் சூலத்தை அழுத்தி ஊனியிருந்தார். அரக்கனின் திரேகத்தின் மீது இவரது கால். முகத்தில் சினம். அந்த சினத்தால் மீசை துடித்த நிலை. உதட்டிலும் சினம். கைகளில் கருவிகள். வீரப்பல் அகோரத்துடன்.
அடுத்து, ரதியின் சிற்பத்திற்கு எதிரில், மன்மதன். இவன் முகத்திலோ இன்பச் சாயல். அழகான ஆடை. ஒளிவீசச் செய்யும் அணிகலன்கள். கரும்பிலான வில். நீண்டு வளர்ந்த மலர் அம்பு. கட்டுமஸ்தான உடல்வாகு. பெண்டீர்க்கு கட்டழகு.
அடுத்தது, காணம் மீண்டும் வேணுவனகோபாலன். இதழில் இனிமை. நாதத்தை ரசிக்கும் பசு. இதோடு நாகமும் இசைக்கு மயங்குவது போல. இதோடு அரம்பையர்கள் ஆட்டம். வேய்ங்குழல் மீது பதிந்திருக்கும் விரல்கள்.
அடுத்து, ஊர்த்துவ தாண்டவருக்கு எதிரில் காளியின் நடனம். இவள் காலைத் தூக்கி ஆடாவிட்டாலும், ஆட்டம் ஆடும் அழகு ஒளிக்கற்றைகள். சிறந்த முகம். வீரப்பல்.
விரிசடை பாரதியின்...........
*"வெடுபடு அண்டத்து இடிபலதாளம் போட வெறும்*
*வெளியில் இரத்தக்களியோடு பூதம் பாட பாட்டின்*
*அடிபடும் பொருள் உன் அடிபடும் ஒலியிற் கூட*
*களித்தாடும் கங்காளி சாமுண்டி அன்னை அன்னை*
*ஆடும் கூத்தை நாடச் செய்தார் என்னை"*
இப்பாட்டிற்கு இலக்காண நிலையில் நேர்த்தி........
இச்சிலைகள் சிந்தையை மகிழ்விப்பதற்காக உருவாக்கியதென நிறையவர் நினைக்கினர். மீதப்பேர்கள், ஆழ்ந்த சிந்தையைத் தூண்டுவதற்காக படைக்கப்பட்டதென அறிவார்கள்.
*சிலை சொல்லும் சிந்தனைக்கான ஆதாரம்:*
-------------------------------------
*ஆணவம் கூடாது* என்பதைக் காட்டி நடனப் போட்டியில் காளி தோற்றது,
வாழ்க்கையில் நாத்திகத்தைப் பேசி தெய்வத்தை இழக்கக் கூடாது.
இகழ்ந்தால் நாக்கறுப்பேன் என்பதைக் காட்டும் வீரபத்திரர்.
காம உணர்வும் சிற்றின்பமும் மட்டுமே வாழ்க்கையல்ல, பேரின்பமருளும் பெருமான் உள்ளேயுள்ளார் என்பதைக் காட்டும் காமன் ரதி சிலைகள்.
வாழும் வாழ்க்கை இசையைப் போல இனிக்க, இறைவன் சந்நிதியில் நாகமும் பசுவும் பகைமை நீங்கப் பெறும் என்பதைக் காட்டும் வேணுவனபாலனின் சிலை.
இறைவனை வணங்க செல்பவர்கள், இனி ஆலயத்திலிருக்கும் சிலை உணர்த்தும் நிலையையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிலை கூறும் இச்சிந்தனையைத் தெரிந்துணர்ந்த பின், அடுத்து நந்தி மண்டபத்துக்கு நடந்தோம்.
*நந்தி மண்டபம்:*
நந்தி மண்டபத்திலே நந்தியார் பெருமையான மிடுக்குடன் காட்சியளித்தார் நந்தி பெருமான்.
நந்தியார் இருக்கும் இவர் மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களிலும் கற்சிலைக் காவியங்கள் வடித்திருக்கிறார்கள்.
இரண்டு தூண்களில் இரண்டு அழகான பெண்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
சுமார் ஆறு அடி உயரமுள்ள இச்சிலை பெண்களை பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றியது.
வசீகர முகம், இனித்த புண்ணை, சுண்டியிழுக்கும் கயல்கண்கள், மெலிந்து மற்றும் அழகான இடை, திரட்சியான.......ள், மெலிந்த கை, குச்சியான விரல்கள், அதில் கொஞ்சம் வளர்ந்த நகங்கள், ஆடைகளின் மடிப்புகள், முழங்காலின் முட்டி, பாதங்களிலுள்ள பாடங்கள், கால் விரலில் மெட்டி, வாரி முடித்த கொண்டை, கூந்தல், வடிந்த காது, இச்சிலையைத்தான் தமிழ் அணங்கின் சிலைகள் என்று மக்கள் கூறுகிறார்கள்.
வெண்கவரி வீசிக் கொண்டிருக்கும் இந்த அழகிகள் காசி விசுவநாதருக்கு வெண்கவரி வீசும் புனிதத் தொண்டைச் செய்கிறார்கள். ஆகவேதான், இப்பெண்களின் கையில் வெண்கவரி உள்ளது.
*மணி மண்டபத்தில் உள்ள சிற்பங்கள்:*
இச்சிந்தனைச் சிலைகளைக் கண்டுவிட்ட நாம், அடுத்ததாக மணிமண்டபம் சென்றோம்.
இந்த மணிமண்டபத்திலும் எத்தனை எத்தனை சிற்பங்கள்?'........
பெரிய புராணத்தை சேக்கிழார் பெருமான் தெய்வத் திருப்பாடல்களாக உலகிற்குத் தந்தார்.
இங்கு, பராக்கிரம பாண்டியன் அந்தப் பாடல்களைச் சிற்பங்களாக்கி மணிமண்டபத்தில் அமைத்திருந்தான்.
பெரிய புராணப் பாடலைக் கேட்கும்போது, நமக்கு எவ்வளவு இயல்பு ஏற்படுதோ, அதேபோல பெரியபுராண கற்சிற்பங்கள் நம்மை மெய்சிலிர்க்கச் செய்தன.
*கணையால் தன் கண்ணை பெயர்த்தெடுக்கும் கண்ணப்பநாயனார்,*
*உயிரைக் கொண்டு போக வந்த காதலனுக்கு அஞ்சி சிவலிங்கத்தை தழுவும் மார்க்கண்டேயரின் பினைப்புருவம். சினத்தோடு சீறியெழும் சிவபெருமான்.*
*தியானத்திலிருக்கும் திருமூலர்.*
*திருவிடைமருதூரில் தேவி பசுவாக வந்து, சிவபூசை செய்யும் கீர்த்தி.*
*மயிலாப்பூரில் மயிலாக வந்து தேவி மகாதேவனை வழிபடும் மார்பு.*
*சிறுத்தொண்டர் தன் குழந்தையை வாள் கொண்டு புன்னகையோடு அறுத்துச் படையலிடும் காட்சி. இதோடு, இவர் மனைவி திருவெண்காட்டு நங்கை குழந்தையை பிடித்துக் கொண்ட மான்பு.*
*காரைக்கால் அம்மையாரின் தவக்கோலத்தில்.*
இவ்வளவும் இம்மணிமண்டபத்தில் கண்டோம். பக்தி பெருக்கால் கண்ணீர் அருவியாய் நின்றோம்.
மேலும், *அழலவிர் சடையானின் அன்பர் கடந்து அடாதன, வந்தபோது பரசுவான கருவியால் எறிந்து அடியார்களின் பகைமை அழிக்கும் பண்புடைய எறிபத்தர்.*
*வானாளாவிய புகழ்ச்சோழரின் பெருமை.*
இச்சிற்பத்தின் கீழே *பரசிப்பர நாயகன்* என்ற வரிகள் பொறித்து வைத்துள்ளான் பராக்கிரம பாண்டியன்.
'சிவன் சொத்து குலநாசம்' போல, சிவத்துரோகம் தானே செய்தாலும், தன்னையும் தண்டித்தல் வேண்டும் என்று பராக்கிரம பாண்டியன் இச்சிற்பங்களின் மூலம் குறிப்பால் உணர்த்துகிறார் பராக்கிரம பாண்டியன்.
திருவானைக்காவல் எனும் தலத்தில் *சிலந்திப் பூச்சியும் யானையும் இறைவனை வழிபட்டமையால், மறுபிறப்பில் கோட்செங்கட் சோழன் எனும் மன்னனாக பிறந்தான்.*
இந்தக் காட்சியையும் கல்லில் காவியமாகச் செதுக்கிவிட்டிருந்தான் பராக்கிரம பாண்டியன்.
*இராவணன் கயிலையை பெயர்த்தெடுக்க முயன்று, இறைவனால் தண்டிக்கப்பட்ட காட்சி*யும் கண்டோம்.
*நெஞ்சு நிறைந்த அன்பால், குங்கிலியக் கலயனார் தன் கழுத்தில் கயிற்றைக் கட்டி சிவலிங்கத் திருவுருவை நேர் நிமிரச் செய்த மான்*பும் இங்கே காட்சியாய் இருந்தன.
தீஞ்சொல்லில் வடிக்கப்பட்ட பெரிய புராணத்திற்கு கல்லிலே வடிக்கப்பட்டதை காணும்போது, பெரிய புராணத்தில் சேக்கிழார்க்கு இருந்த ஈடுபாடு போல பாராக்கிரம பாண்டியனுக்கும் இருந்திருக்கிறது என்பதை இக்கல்வி வகைகள் மூலம் அறியச் செய்திருக்கிறான்.
இத்தகைய சிற்பங்களை நாம் பார்த்துக் கொண்ட பின்பு, இந்த மணிமண்டபத்தை விட்டு அடுத்து மகா மண்டபத்திற்குச் செல்ல வேண்டும்.
*கண்கள் தூக்கத்தைப் பணிக்கிறது. எனவே மகாமண்டபத்துக்கு நாளை செல்வோமா?*
இன்னும் சில நாட்களாக தென்காசி தொடர் வ(ள)ரும்.
திருச்சிற்றம்பலம்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி.*
இப்பதிவு நீளம் கருதி சில நாட்களாக வ(ள)ரும்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹*பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
*(31-வது நாள்.)*
இப்பதிவும் நீளம் கருதி நேற்றும் வெளியாகி, இன்றும் தொடர்ந்து வளர்ந்தது.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌷 *அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி திருக்கோயில்.*🌷
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*தென்காசி.*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*முக்கட் சோதி தென்காசி முன்னோன் கதை*
*மிக்க வேதவியாசன் விரித்ததை*
*தக்கவாய் தமிழால் சொலச் சண்பகக்*
*களிற்றின் கழல் பணிந்து ஏத்துவாம்.*
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
*இறைவன்:*அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி.
*இறைவி:* அருள்தரும் உலகம்மன்.
*தீர்த்தம்:* சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.
*தல விருட்சம்:* செண்பக மரம்.
*ஆகமம்:* காரண ஆகமம்.
மகாமண்டத்துள் நுழைந்தபோது தென் வரிசையில் யானை முகத்துடன் கடவுளார் எழிலார்ந்த அமைப்புடன் நம்மை கவர்ந்திழுக்க அவர் முன் சரனைந்தோம்.
எக்காலமும் அருளும் முக்கண்ணன் மகனை, உலக முதல்வனை, தலைக்கு குண்டு வைத்து தோப்புக்கரணமிட்டு வணங்கிக் கொண்டோம்.
பெரிய உருவ பெரிய வயிற்றோடுடைய இவரை வணங்கிக் கொண்ட பின் கருவறை நோக்கிச் செல்ல வேண்டும்;சென்றோம்.
மகாமண்டபத்தை கடந்து உள்ளுக்குள்ளே புக, வடக்கேயுள்ள காசியிலிருப்பதைப் போன்ற கருவறையை அகலமாக அமைந்திருந்தன சுவாமியின் கருவறை.
லிங்கத்திருமேனியை சுற்றி வந்து வணங்கும் நிலைப்பாடுடன் கருவறையை அமைத்திருந்தார் பராக்கிரம பாண்டியன்.
காசியில் உள்ள லிங்கத்தைப் போன்று காட்சியருளும் இப்பெருமானை *ரிக்* வேதப் பெருமான் என மக்கள் போற்றப் படுகிறார்கள்.
கருவறையிலிருக்கும் சிவலிங்கத்தை மன்னன் கோட்டையிலிருந்தவாறு நோக்கும் படி யாக தன் கோட்டையை அமைத்திருந்தான் மன்னன்.
இந்தக் கோட்டை, சுவாமி சந்நிதியிருந்து ஒரு கி.மி. தொலைவுடன் உயர்ந்த இடத்தில் இருந்தன.
மேடான (மேட்டுத் தெருவில்) இடத்திலிருந்தும் இந்த இடத்திலிருந்து இன்றுகூட காசிவிசுவநாதரை நோக்க முடியும்.
கருவறையினுள் கூர்மையாக நம் விழிகளை உள்ளே அனுப்பினோம். அவர் கருணை வடிவமாக காசிநாதர் சிவலிங்கத் திருவுருவோடு அருட்காட்சி வழங்கிக் கொண்டிருந்தார்.
நாடி வரும் மக்களை நானிருந்து உங்களை அரவணைக்கிறேன் என காட்சி தரிசனம் தந்து கொண்டிருந்தார்.
விசுவநாத ஈசனை, தலபுராணத்தில் ஒரு கவிஞர்,..........
*விசுவனே விசுவ நாதன்*
*விசுவேசன், உலகநாதன்*
*பசுபதி,சிவன்,மாயோன்*
*பராபரன, முக்கட் பெம்மான்*
*சிசுவரம் தருவோன், நம்பன்*
*சிவை மணாளன், ஏற்றோன்*
*அசுதையார் நீலகண்டன்*
*அநாதி தென்காசி நாதன்.* என போற்றியுள்ளார்.
பேராயிரம் உடைய பெம்மானே! அடியார்களுக்கு நிம்மதியை வாரித்தரும் அண்ணலே! தீரா நோயை தீர்த்தொழிக்கும் வல்லானே! வேண்டுவோர்க்கு வேண்டுவன ஈய்ந்துமகிழும் வித்தகனே! என பாடியுள்ளார்.
ஆக, இவரைக் கண்களால் தழுவி, கைகளால் தொழுதேத்தி, மனதார மகிழ்ந்து வணங்கிக் கொண்டோம்.
இவ்விதம் வணங்கும்போது.....;நம் எண்ணத்தில்......, *உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன் கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனிமையும், குற்றால மர்ந்துரையுங் கூத்தா உன் குரலை கழற்கே குற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே.* என மணிவாசகரின் மணிமொழிகள் நினைவுக்கு வந்தன.
மணிவாசகர் கூறியதுபோல், *"கசிந்துருகினால், காசிவிசுவநாதன் கண்ணீரை ஒழித்து நல் வரமருளி மண்ணில் நல்ல வண்ணம் வாழ வைப்பான்.
இப்பெருமானின் வணக்கத்திற்கு பிறகு கிடைத்த வெள்ளிய விபூதியை நம் நெற்றிக்கு சொந்தமாக்கிக் கொண்டோம்.
அடுத்திருந்த தென்வரிசையில் இருந்த *சந்திர சேகரை* மனமுருக பிரார்த்தித்து தொழுது கொண்டு நகர்ந்தோம்.
அடுத்து நாம் திரும்பிய திசை நடக்கும் பகுதியில் தெற்கு நோக்கி நின்றாடும் ஆடவல்லான நடராஜப் பெருமானை வணங்கினோம். இவனின் ஆடல்நளின அழகைக் கண்டு மெய்மறந்து, மெய்சிலிர்த்துப் போனோம். சிறிது தாமதித்தே நின்று வணங்கிய பின்தான் நகர்ந்து திரும்பினோம்.
அடுத்துள்ள, காசிவிசுவநாதனே' கதியென இருந்து, அவனுக்கு ஆலயமைத்து, நம் வணக்கத்தை இவனிடம் வந்து கொடுக்க நல்கிய, அச்சிந்தனையாளன் பாராக்கிரம பாண்டியன் சிலைக்கு, சிரம் கவிழ்ந்த வணக்கத்தைத்தான் நம்மால் கொடுக்க முடிந்தது.
பிராகாரத்தில் குளம் வலம்செய்ய ஆரம்பித்தோம். பிரகாரத்தில் சுரதேவர் காட்சி கிடைத்தது. கைதொழுது கொண்டோம்.
இயற்கைக்கு மாறாக, மூன்று கால்களுடன் மூன்று கைகளுடன், மற்ற எல்லா ஆலயத்துள்ளதைவிட பெரிய திருமேனியாய் காட்சி தந்து கொண்டிருந்தார்.
முன்பு இத்தலத்திலுள்ள மக்களிடைய மிகுதியான காச்சல் நோய் தாக்கமானபோது, இவ்வாலத்திலிருக்கும் இச்சுரதேவருக்கு சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் அரைத்து முழுக்கச் செய்வார்களாம். இப்படி செய்தபோது காச்சல் குணமாகியொழிந்து போயிருக்கிறது.
அடுத்து, திருமறை தந்த நால்வருடன் அறுபத்து மூவர் கோளின் திருமேனிகளும் பிராகாரத்தில் இருக்க, ஒவ்வொருவரையும் முன்நின்று வணங்கி நீங்கி வணங்கி விடுபட்டுக் கொண்டோம்.
தென்முகக் கடவுளாய் நம் ஆலமர் செல்வர் தெட்சணாமூர்த்தியை வணங்க முன் நின்றோம்.......
*கல்லாளின் படையமர்ந்து நான்மறை*
*இறக்கம் முதற்கற்ற கேள்வி*
*வல்லார்கள் நால்வர்க்கும் வாக்கிறந்த*
*பூரணமாய் மறைக்கப்பலாய்*
*எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை*
*இருந்தபடி இருந்துகாட்டிச்*
*சொல்லாமல் சொன்னவரை நினையாமல்*
*நினைந்து பவத்தொடக்கைவெல்வாம்.*
என்ற பாடலின் நூல் கையிலிருக்க எடுத்து வாசித்து வணங்கிக் கொண்டோம்.
கன்னிமூலை இருக்க, அக்கன்னிமூலையில் கணபதிபெருமான் காட்சி தர, *விடுவோமா?* உடனே காதைப் பிடித்துத்திருகி தோப்புக்கரணமிட முனைந்தோம்.
பெரிய வடிவம் தாங்கி இருக்கும் கன்னி கணபதியை வணங்கி நகர்ந்தோம்.
வலம் வருகையில், மேற்கு பிரகாரத்தில் வந்தபோது, செந்தருவாகிய மகாலட்சுமி கிழக்குப் பார்த்த வண்ணம் வருவோர்க்கு அருளை வாரித் தந்த வண்ணமிருந்தாள்.
பெயருக்கேற்றாற்ப்போலதான் மகாலட்சுமியின் அமைப்பும் இருந்ததன். இவளிடம் நாம் வேண்டிக் கொண்டதெல்லாம் *ஒழுக்க தனம் தந்தருள்வாய்* என்றுதான் வேண்டினோம்.
இவளை வணங்கி நகர, இவளின் சந்நிதிக்கு அடுத்து, முருகப்பெருமான் இருந்தார். கருணை முகங்கள். (எவ்வாலயத்தில் தான் இவர் கருணை இல்லாதிருந்தார். இவரிருந்த எவ்விடத்திலும் கருணை முகத்தைத் தானே கண்டு வந்திருக்கிறோம்.) அதுபோலதான் கருணை முகத்தை இங்கு கண்டோம், வணங்கினோம்.
இவரின்முகங்கள் ஆறிலும் அருட்கைகள், பன்னிரண்டையும் கொண்டு கருணை வெள்ளமாய், இருதேவியருடன் உடனிருந்து, மயில்மீதமர்ந்த நிலையில் அற்புதத் திருவுருவாய் காணக்கிடைத்தார்.
*காரி* என்றும் சனி பகவான் தனி சந்நிதி கொண்டு தெற்குப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்து வருவோர்க்கு அருள இவர் காத்திருந்தார்.
உலகெலாம் புரந்த ஒப்பற்ற ஒளிர்மேனியாள் *அம்மையே!"* அழைக்கப்பெற்ற காரைக்காலம்மையார், ஆடவல்லாரின் திருநடனத்தைக் கண்டு களிக்கும் திருக்கோலத்தை இங்கு வடிமைத்திருக்கின்றதைக் கண்டு, இவ்வம்மை முன்பு கண்ணீர் உகுத்து, அம்மையின் பக்திப்பாங்குகளை நினைந்து நினைந்து உருகி வணங்கிக் கொண்டோம்.
வடக்குப் பிரகாரம் வந்தபோது, வியாக்கரபாதரும், பதஞ்சலியும் நடராஜரின் ஆட்டத்தைக் கண்டுகளித்த வண்ணம் உள்ள சிற்பமேனி அமைப்புகளைக் கண்டு, சிலிர்த்துப் போனோம். உரோமக்கால்கள் குத்திடனானோம்.
அடுத்ததாக சண்டிகேசுவர் இருந்தார். இவரை வணங்கும் முறையுடன் வழிபட்டு வணங்கி, நம்மிடம் உள்ளன இல்லாதன இவையினை, அவரிடம் ஒப்புவித்து வணங்கித் திரும்பினோம்.
அடுத்துக் காசிக்கிணறு என்ற தீர்த்தக் கிணறு ஒன்றும் இருக்கக் கண்டோம். இலக்கியம் மையும் பராக்கிரம பாண்டியனே உருவாக்கி முனைந்தானென, அருகிருந்தோர் கூறினர்.
இக்காசிக் கிணற்றின் மேல் பாகத்தை, மிகப் பெரியதான கற்தூண்கள் இரண்டு தாங்கி நிற்கின்றன. இக்காசிக் கிணற்றில் தீர்த்தம் எப்போதும் சுரந்து கொண்டே இருக்கிறதாம்.
கங்கைக்கும் இக்கிணற்றுக்கும் தொடர்பு இருக்கும் வகையில், பராக்கிரம பாண்டியன் இக்கிணற்றை உருவாக்கினான் என்று அறிஞர்கள் கூறியதான செய்தி உண்டு.
இக்காசிக் கிணற்றுத் தீர்த்த்தை வணங்கித் திரும்பியபோது, இத்தலத்தின் தலவிருட்சமாக குறும்பலா விருட்சத்தைக் கண்டோம், வணங்கினோம்.
விசுவநாதர் திருக்கோயிலுக்கு, செண்பக மரமும், குறும்பலாவும் தலவிருட்சங்களாக இருந்தன என்று தலபுராணத்தில் அறியப் பெற்றிருந்தோம்.
திருஞான சம்பந்தப் பெருமான் குற்றாலத்திற்கு எழுந்திருந்த சமயத்தில் அக்கோயிலின் தலவிருட்சமாக குறும்பலாவையும் பாடியிருக்கிறார். அந்தப் பாடல் இக்குறும்பலாவிற்கும் பொருந்தும்.
குறும்பலா பதிகத்தில் உள்ள திருப்பாடல் ஒன்றில்.....
*திருந்த மதிசூடி தெண்ணீர் சடைகரந்து தேவிபாகம்*
*பொருந்தி பொருந்தாத வேடத்தால் காடு*
*உறைதல் புரிந்த செல்வர்*
*இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை*
*இன வண்டு யாழ்செய்*
*குறுந்த மணம் நாறும் குன்று இடம் சூழ்*
*தண் சாரல் குறும்பா வேண்டும்.* என்று.
காசிவிசுவநாதரையும் மற்றோரை மும் வணங்கிப் பின், கொடிமரத்தின் முன் அருகே சிரம் புஜம் கரம் தேய விழுந்தெழுந்து வணங்கிக் கொண்டோம். சிறிது ஓய்வுக்காக அருகேயிருந்த திண்டில் அமர்ந்தோம்.
*ஓய்வுக்குப்பின் அம்மையை நாளை தரிசிக்கலாம்.*
இன்னும் சிலநாள் தென்காசி தலப்பதிவு
வ(ள)ரும்.
திருச்சிற்றம்பலம்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி.*
இப்பதிவு நீளம் கருதி, இன்றும் நாளையும் வ(ள)ரும்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹*பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
*(32-வது நாள்.)*
இப்பதிவும் நீளம் கருதி, இன்னும் சிலநாள் தொடர்ந்து வளரும்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌷 *அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி திருக்கோயில்.*🌷
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*தென்காசி.*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*முக்கட் சோதி தென்காசி முன்னோன் கதை*
*மிக்க வேதவியாசன் விரித்ததை*
*தக்கவாய் தமிழால் சொலச் சண்பகக்*
*களிற்றின் கழல் பணிந்து ஏத்துவாம்.*
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
*இறைவன்:*அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி.
*இறைவி:* அருள்தரும் உலகம்மன்.
*தீர்த்தம்:* சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.
*தல விருட்சம்:* செண்பக மரம்.
*ஆகமம்:* காரண ஆகமம்.
*அம்மனின் அருள் கோலம்:*
அம்மன் சந்நிதியின் வலப்புறத்தில் வல்லப கணபதி இருந்தார்.
இவரை கைதொழுது வணங்கிக் கொண்டோம். இடப்பக்கத்திலிருந்த முருகனையும் வணங்கிக் கொண்டோம்.
பின்பு, அம்மன் சந்நிதிக்கு மற்றும் புக நடந்தோம். அப்போது அம்மன் சந்நிதிக்கு முன்பாக, தரையில் இரண்டு கற்களில், பராக்கிரம பாண்டியனும் அவனுடைய தேவியும் அம்பிகையை நோக்கியபடி கீழேவிழுந்து இருகரங்களையும் கூப்பி வணங்கும் முறையுடன் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன அன்று.
அம்பிகையை வணங்கச் செல்லும் அடியார்களின் திருவடிகள் *எங்கள் முடிமேல் படட்டும்* என்ற சிந்தனையோடு பராக்கிரமப் பாண்டியன் செதுக்கி வைத்திருந்தான்.
அடியார்களுக்கெல்லாம் அடியனாகிய என்னையும் ஆட்கொண்ட அன்னையின் திருவடிகளே சரணம் என்ற முறையில் மன்னனும் தேவியும் விழுந்த வண்ணம் வணங்குகிறார்கள்.
(இன்று இவ்வாலயத் தரையில், கீழே விழுந்து வணங்கும் பாண்டியன் சிலை மட்டுமே உள்ளது. தேவியின் சிலை இல்லை. காரணம் தெரியவில்லை.)
மேலும் சிற்பத்தில் *உலகமுழுதுடையாள் உலகம்மனாலயம்* என பொறிக்கப்பட்டிருப்பதை இன்று போனாலும் காணலாம்.
நெஞ்சம் நெகிழும் இச்சிற்பக் காட்சியைக் கண்டு தொடர்ந்து சென்று அம்மையின் முன் வந்து நின்றோம்.
அங்கே அம்மை, அழகே வடிவெடுத்து உலகம்மனாக அருள்காட்சியைக் அருளியவண்ணமிருந்தாள்.
எவ்வுலகையும் எவ்வுயிரையும் ஈன்றெடுத்தும் எழில் அழியா செவ்வியளாக காட்சிதரும் அம்மையைக்காண கண்கள் ஆயிரம் பத்தாது.
அவள் புகழைப் பாட நாவுகள் எவ்வளவு பாடினாலும் முழுமை அடையா!. அருள் பொலிமும் திருவருள் முகம். குங்குமம் இழைந்தோடிய நெற்றி! கருணைகடாட்சமான கண்கள். கூர்மையான மூக்கில் அணிகலன். குங்கலத்துடன் தொங்கிய காதுகள். அபயம் தந்திடும் திருக்கரங்கள்.
வலக்கையில் தாமரை, என் திருவடி அடைந்தார்க்கு சரணம் எனக்காட்டும் இடக்கை.
இடக்காலை வளைத்துத் நிற்கும் அழகு, பத்மபீடம், மங்களகரத்துடன் ஜொலிக்கும் வளையல்கள், போன்ற இவையனைத்து அம்சங்களோடு காணப்பெறும் அம்மை, நம் நெஞ்சையெல்லாம் நெகிழ்விக்கிறாள் உலகம்மை.
*முருகு லுக்கு குழலாளை சிந்தும் நல்னுதலாளை முதுமீனோக்கால்*
*கரு ஓங்கி குடிதழைய அருள் சுரந்து மடைதிறந்த கண்ணினாளை*
*உரு ஓங்கு களப மணி முலையாளை கொடியிடைப்பட்டு உடையாளை*
*மரு ஓங்கு பதத்தாளை தென்காசி உலகாளை மனத்துள் வைப்போம்*
என்று திருச்சிற்றம்பல கவிராயர் பாடிப் பரவுகின்றார்.
*உலகம்மை தல அருமை:*
மிகவும் பழங்காலத்தில் தென்காசி செண்பக வனமாக இருந்தது. தென்காசிக்கு அருகிலுள்ள விந்தன் கோட்டையிலிருந்து குலசேகரப் பாண்டியன், செண்பக வனத்துக்குள் இருந்த காசி விசுவநாதரை வழிபட்டு வந்தான்.
நெடுங்காலமாக இவனுக்குப் பிள்ளைப் பேறு இல்லாமலிருந்தான். ஆகவே மன்னன் காசிவிசுவநாதரை கசிந்துருகி வேண்டினான்.
வேண்டுதலுக்கு ஏற்ப உலகம்மையே அவனுக்கு மகளாகப் பிறந்தாள்.
அவளுக்குக் குழல்வாய் மொழி என்ற பெயரைச் சூட்டி வளர்த்து வந்தான். வளர்ந்து வந்த இத்திருமகளையே காசிவிசுவநாதர் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட இடம் *குலசேகரநாதர் கோயில்.*
குலசேகர நாதனுக்கு உலகநாதபாண்டியன் என்ற பெயரும் உண்டு.
உலகநாதப் பாண்டியனின் பேரனே பராக்கிரம பாண்டியன் ஆவான். இவன் காசிவிசுவநாதரை காசிக்குச் சென்று ககனக் குளிகை மகிமையால் நாள்தோறும் வடகாசிக்கு வான்வெளியில் பறந்து மிதந்து சென்று வழிபட்டு வரலானான.
இறைவனோ, உன் மூதையார் வழிபட்ட சிவலிங்கம் செண்பக வனத்தில் இருக்கிறதென்றும், அவ்விடத்தின் வழியை கட்டெறும்புகள் உனக்கு காட்டுமென்றும் கூறினான். ஆதலால் அவ்விடத்தை சென்றறிந்த பாண்டியன் ஆலயத்தை எழுப்பினான்.
பாண்டியனின் மகளாகப் பிறந்த உலகம்மை இன்று பாருக்கெல்லாம் தாயாக நின்று அருள்பாலிக்கிறாள்.
உலகம்மையை வணங்கி பிரகாரம் வந்தபோது, கன்னிவிநாயகரையும், முருகப் பெருமானையும் வணங்கிக் கொண்டோம்.
அம்மனின் சந்நிதிக்கு இடப்புறமாய் சேவைகள் மண்டபம் சிறியதாகவும் அழகானதாகவும் அமைந்துள்ளன.
இங்கு கூட, பராக்கிரம பாண்டியனும், அவனது மனைவியும் முருகப்பெருமானை வணங்கி நிற்கும் கோலத்தான சிற்பங்கள் இருக்கின்றன.
அம்மன் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தை நாம் சுற்றி வரும் போது, பல்வேறு கல்வெட்டுக்களைக் காணப்பெற்றோம்.
திருச்சிற்றம்பலம்.
நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களில் தென்காசி தலத்தின் பதிவுகளில், நாளை பாலமுருகன் ஆலயத்துக்குள் நுழைகிறோம். தரிசனங்கள் மேலும் சில நாட்களாக தொடர்ந்து பதிவுகள் வரும். சிவ சிவ.திருச்சிற்றம்பலம்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி.*
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹 *பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
*(33-வது நாள்.)*
இப்பதிவும் நீளம் கருதி, இன்னும் சிலநாள் தொடர்ந்து வளரும்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌷 *அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி திருக்கோயில்.*🌷
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*தென்காசி.*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*முக்கட் சோதி தென்காசி முன்னோன் கதை*
*மிக்க வேதவியாசன் விரித்ததை*
*தக்கவாய் தமிழால் சொலச் சண்பகக்*
*களிற்றின் கழல் பணிந்து ஏத்துவாம்.*
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
*இறைவன்:*அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி.
*இறைவி:* அருள்தரும் உலகம்மன்.
*தீர்த்தம்:* சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.
*தல விருட்சம்:* செண்பக மரம்.
*ஆகமம்:* காரண ஆகமம்.
இவ்வாலயத்தில் அம்மன் சந்நிதிக்கும், சுவாமி சந்நிதிக்கு மற்றும் நடுநாயகமாய் பாலமுருகன் சந்நிதிக்குள் வணங்கி நின்றோம்.
முருகனை வணங்கிவிட்டு சிறிது ஓய்வெடுப்பதற்காக பக்கத்திலிருந்த தின்னையின் மீது அமர்ந்தோம்.
எங்களோடு அருகிலிருந்தோர்...."இந்த பாலமுருகன் சந்நிதி முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னதாக, *பொருந்தி நின்று பெருமாள்* சந்நிதியாக இருந்தன என கூறினர்.
பராக்கிரம பாண்டியனுக்குப் பின்னர், தென்காசியில் அரசாட்சி செய்து மன்னர்கள் திறமையின்மை அற்றவர்களாக இருந்தனர்.
அதனால் முகமதியர்கள் ஆட்சியை தன்வசப்படுத்திக் கொண்டனர்.
அச்சுத களப்பாளன் என்ற கன்னட தேசத்து அரசன், முகமதியர்களை எதிர்த்து போரிட்டு வென்று தென்காசியை கைப்பற்றி விட்டனர்.
அந்த அச்சுத களப்பாளன், தான் வென்றெடுத்த தென்காசி நகரை பராக்கிரம பாண்டியனின் வழியினருக்கு மீண்டும் கொடுத்து அரசாளச் செய்வித்தான்.
இதற்கு நன்றிக் கடனாக பாண்டியன் தன் மகளை அச்சுத காளப்பனுக்கு திருமணம் செய்து வைத்தான்.
அந்த சமயத்தில், அச்சுத களப்பாளன் பொருந்தி நின்று பெருமாளுக்கு இங்கு சந்நிதி எழுப்பிவித்தான்.
அதன்பின், இருநூறு ஆண்டுகள் கழித்து, தென்காசியை ஆண்ட பாண்டியர்கள், பொருந்தி நின்று பெருமாளை சிற்றாற்றங்கரையில் தனிக்கோயிலாக எடுப்புவித்து அங்கே எழுந்தருளச் செய்து விட்டனர்.
பொருந்தி நின்று பெருமாள் இருந்த சந்நிதி பல ஆண்டுகளாக நெல் சேமித்து வைக்கும் நெல்சேராக இருந்தது.
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தேழாம் ஆண்டில், பொருந்தி நின்று பெருமாள் இருந்த இடத்தில் பாலமுருகனை எழுந்தருளச் செய்தனர்.
பாலமுருகன் சந்நிதியிலும் கலை நுனுக்கம் பொதிந்த சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு பிரமித்துப் போக வணங்கிக் கொண்டோம்.
மேலும் இங்கு பஞ்ச பாண்டவர்கள் சிலைகள், கர்ணன் சிலை போன்றவைகள் மிக நுட்பத்தன்மையுடன் செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டோம்.
*தரணி பீடம்:*
பாலமுருகனை வணங்கியபின், திருச்சுற்று மதிலை சுற்றி வலம் வந்தோம்.
அவ்வலத்தில், வடக்குப் பகுதியில் ஈசானத்தில் அழகுடன் கூடிய சிறிய மண்டபம் அமைந்திருப்பதைக் காணப்பெற்றோம்.
இம்மண்டபத்திலும் கல்தூண் ஒன்றில், பராக்கிரம பாண்டியனின் உருவ வடிவம் அருமையாக செதுக்கப்பட்டு நெஞ்சு நிமிர்த்தி நின்றார்.
கூப்பிய கரங்களுடன் உடைவாளைத் தாங்கி, ஒதுங்கி நிற்கும் இப்பாண்டியனின் வடிவம் நம் மனதை கசக்கிக் கரைத்தது.
ஓங்கி உயர்ந்த நிலை பாடத்தையும், உயர்ந்த கோபுரத்தையும் அமைத்த இப்பாண்டிய மன்னன், தான் விலகி நின்று இறைவனை வணங்குவது போல, உள்ளதைக் காணும்போது, இதயம் நெகிழ்கிறது.
அதன்பின்பு, வடக்குச் சுற்றில் வலம் செல்கையில், சகஸ்கரலிங்கத்தை இம்மன்னன் நிறுவிவிட்டுயிருந்தான்.
ஆயிரத்தெட்டு லிங்கங்களை ஒருங்கே வணங்க வேண்டும் என்பன உணர்வோடு, லிங்கத்தை அமைத்தான் போலும்..........
ஆயிரம் சிறிய சிறிய லிங்கங்களை அமைத்து, அதை பெரிய லிங்கத்தில் கூட்டுவித்து, சகஸ்கரலிங்கம் அமைக்கப் பெற்றுள்ளது. இந்த லிங்கத்தை வணங்குவோர் ஆயிரத்தெட்டு லிங்கங்களை வணங்கிய பலன்களைப் பெறலாம்.
சகஸ்கரலிங்கத்தை அடுத்து சக்தியின் தரணி பீடம் அமைந்திருந்தன.
உலகிற்கெல்லாம் தாயாக உலக நாயகியான அம்பிகை தரணி பீடத்தில் எந்திர சொருபமாகக் காட்சி தருகிறார்.
குற்றாலத்தில் பராசக்தி பீடமும், தென்காசியில் தரணி பீடமும் அமைந்திருப்பது தென்காசி வட்டார மக்களுக்கும், நமக்கும் கிடைத்த பெரும் பாக்கியம்.
சக்தியின் இயந்திரம் நாற்பது முக்கோணங்களைக் கொண்டதாகும்.
அடியார்களின் வேண்டுதலை இந்த நாற்பது முக்கோண சக்தி பீடம் நிறைவேற்றி வைப்பதை இன்றும் காணமுடிகிறது.
காரிய சித்தி தருவதால் சித்தி பீடம் என்றும் கலைஞானங்களை எல்லாம் வாரி வழங்குவதால் கலைப்பீடம் என்றும், இன்பங்களை வழங்குவதால் போக பீடம் என்றும் இப்பீடத்தை போற்றப்பட்டு வருகின்றனர்.
தரணி பீடத்தை தரிசித்து நகர்ந்த பின், அடுத்ததாக மதுரை மீனாட்சியும் சொக்கலிங்கப் பெருமானும் எழுந்தருளியிருந்த திருக்கோலத்தைக் கண்டு, சொல்லொண்ணா மகிழ்வு கொண்டோம். வணங்கி ஆனந்தித்தோம்.
அன்னை மீனாட்சியை தங்களது குலதெய்வமாக போற்றிக் கொண்டாடி வந்தவர்கள் பாண்டிய மன்னர்கள்.
அதை நினைவுகூறும் விதமாகத்தான் மன்னனும் இத்தலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இங்கு கோயில் எழுப்பி வைத்தான்.
சொக்கநாதரின் வணக்கத்திற்கு பிறகு, இத்திருக்கோயிலின் காவல் தெய்வமான, பைரவரையும் எழுந்தருளிவித்திருந்தான்.
பொதுவாக எல்லாக் கோயில்களிலும், பைரவ மூர்த்தி ஆலயத்தின் உள் பிரகாரத்தில் அமைந்திருப்பார்.
ஆனால், தென்காசி திருக்கோயிலில் பைரவர் வெளிப் பிரகாரத்தில் அமைந்திருப்பதைப் பார்க்கும்போது, இதில் ஏதோ தனிச்சிறப்பு இருப்பதாக எண்ணிக் கொண்டோம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, அர்த்தசாம பூசை நிறைவுற்றதும், கோயிலைப் பூட்டி சாவியை பைரவ மூர்த்தியின் திருவடியில் வைத்து விடுவது வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அர்த்த சாமப் பூசையினை நிறைவேற்றியதும், பட்டர் சாவிகளைக் கொண்டு வந்து *"யதார்த்தா சவுகரியம் சுவாமி சந்நிதி மரசாதன்கரே"* என்று பைரவர் திருவடியில் வைத்து விடுவர்.
இதற்கிடையே ஒரு தம்பதியர் வந்து வடைமாலை பார்த்தி வழிபட்டனர். அவர்களை அருகில் விபரம் கேட்டோம் அதற்கு அவர்கள்..........
இவருக்கு வடைமாலை சார்த்தி வழிபட்டால், நினைத்த காரியம் நடக்கும். அதற்காக இதைச் செய்கிறோம் எனக் கூறினார்கள்.
முகப்பு மண்டபத்தில் மேற்கு முகமாகத் துர்க்கை எழுந்தருளியிருந்தாள்.
மேற்கு முகமான துர்க்கை கண் கண்ட தெய்வம். இவள் மாங்கல்ய பாக்கியத்தை தந்தருளுகிறாள்.
ஆதலால் வெள்ளிக்கிழமையான இன்றும், (செவ்வாய்க்கிழமைகளிலும்) துர்க்கையின் அருள் வேண்டி கூட்டமாய் கூடுவதைக் கண்டோம்.
திருச்சிற்றம்பலம்.
நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களில் தென்காசி தலத்தின் பதிவுகளில், நாளை *நம் திருவடி தொழுவேன் எனப் சொல்லிய பராக்கிரம பாண்டியனின் மனதுக்குள் நுழைகிறோம்.* இத்தென்காசித் தரிசனங்கள் மேலும் சில நாட்களாக தொடர்ந்து பதிவுகள் வரும். சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி.*
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹 *பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
*(34-வது நாள்.)*
இப்பதிவும் நீளம் கருதி, இன்னும் சிலநாள் தொடர்ந்து வளரும்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌷 *அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி திருக்கோயில்.*🌷
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*தென்காசி.*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*முக்கட் சோதி தென்காசி முன்னோன் கதை*
*மிக்க வேதவியாசன் விரித்ததை*
*தக்கவாய் தமிழால் சொலச் சண்பகக்*
*களிற்றின் கழல் பணிந்து ஏத்துவாம்.*
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
*இறைவன்:*அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி.
*இறைவி:* அருள்தரும் உலகம்மன்.
*தீர்த்தம்:* சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.
*தல விருட்சம்:* செண்பக மரம்.
*ஆகமம்:* காரண ஆகமம்.
*பராக்கிர பாண்டியனின் சிந்தனை:*
காசிவிசுவநாதருக்கும், உலகம்மைக்கும் பெருமைமிக்க கோயிலை எடுப்பதில்லை பராக்கிரம பாண்டியனால், வருங்கால நிலையை எண்ணி பலமாக சிந்தித்தான்.
"எம்பெருமானுக்கு கோயில் எடுப்பிக்க நினைத்தேன்!' அவனருளால் அது நிறைவேறப்பட்டது.
அவனருளாலே இவ்வாலயம் நிலைத்தும் நிற்க வேண்டும் என்றும் நினைத்தான்.
ஒருவேளை இடையில் பழுதேதும் ஏற்படின்?, என்ன செய்வது?, என நாடாளும் அவன் சிந்தித்து மனங்கசிந்தான். அவனிடமிருந்த பக்தியின் வெளிப்பாடு அவனை இவ்வாறு சிந்திக்கத் தோனியது.
*இறைவனுக்கு எடுப்பித்த இவ்வாலயம்* காலத்தால் சிதைவு ஏற்படுமாயின், அச்சிதைவுகளை அகற்றிச் செப்பும் செய்வோர்களின் திருவடியில், நான் மாண்டே போயிருந்தாலும் என் மனம் அவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்கும் என்றான்.
அதுவும் நான் உயிரோடு இருக்கையில் நடப்பின், *உலகத்தார் கண் முன்னே அவர்களின் காலடியில் விழுந்து வணங்குவேன்* என்றான்.
கோயிலுக்கு சிதைவேதும் ஏற்படாதினும், மேலும் மேலும் ஆலயத்தை விருத்தி செய்வோர் திருவடிகளிலும் என் திருமுடியை தாழ்த்தி இறைஞ்சுவேன் என்று வருங்காலத்தினை எண்ணி கசிந்துருகி மது மட்டுமல்ல, மனதிலுள்ள இவ்வாக்கிய வரிகளை *இத்தென்காசி கோயிலை திரிசேர் விளக்கெனக் காப்பவர்கள் திருவடியை என் திருவடி மேல் தாங்குவேன்* என்று கல்வெட்டிலும் பொறித்து வைத்தான்.
சாத்திரங்களையும், ஆகம நூல்களையும் ஆராய்ந்து அமைக்கப்பட்ட காசி விசுவநாதர் ஆலயத்தைச் காப்பவர் தள் தம் பரம்பரையினரையும் வணங்கி அவர்களும் நலமும் வளமும் பெறுவார்கள் என்கின்றார் பராக்கிரம பாண்டியன். அவர்களுக்கு நான் குற்றவேல் பணி செய்வேன் என்கின்றான் கொற்றவனான பராக்கிரம பாண்டியன்.
மனத்தாலும் நினைக்க முடியாத இத்தென்காசிக் கோயிலை அமைக்கப் பணித்தான் காசிவிசுவநாதன்.
அவனது ஆலயத்தைச் செம்மைபடுத்தும் நிருபர் தம்மை, என் தலை மீது சூட்டிக் கொண்டேன் என்கிறான் மாமன்னன்.
இக்கோயிலைப் புரப்பவர்தம் குடி வாழையடி வாழையாகத் தழைக்கும் என்கிறான் அந்தப் பாண்டிய மன்னன்.
*இதோ அதுக்கான பாடல்:*
ஆராயினும் இந்தத் தென்காசி மேவும் பொன் ஆலயத்து
வராததோர் குற்றம் வந்தால் அப்போது அங்கு வந்து அதனை
நேராகவே ஒழித்துப் புரப்பார்களை நீதியுடன்
பாரோர் அறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே!
அரிகேசரிமன் பராக்கிரமன் அரன் அருளால்
வரிசேர் பொழிலணி தென்காசிக்கோயில் வகுத்துவலம்
புரிசேர் கடற்புவி போன்ற வைத்தேன் அன்பு பூண்டு இதனை
திரிசேர் விளக்கெனக் காப்பார் பொற்பாதம் என் சென்னியதே!
சாத்திரம் பார்த்து இங்கு யான் கண்ட பூசைகள் தாம் நடத்தி
ஏத்தி அன்பால் விசுவநாதன் பொற்கோயில் என்றும் புரக்கப்
பார்த்திபன் கொற்கைப் பராக்கிரம மாறன் பரிவுடன் அங்கு
கோத்திரம் தன்னில் உள்ளார்க்கும் அடைக்கலம் கூறினேனே!
சேலேறியவயல் தென்காசி ஆலயம் தெய்வச் செயலாலே
சமைந்தது இங்கு என்செயல் அல்ல அதனை இன்னும்
மேலே விரிவு செய்தே புரப்பார் அடி வீழ்ந்தவர்
தம் பால் ஏவல் செய்து பணிவன் பராக்கிரம பாண்டியனே!
மனத்தால் வகுக்கவும் எட்டாத கோயில் வகுக்க முன் நின்று
என்னைத் தான் பணிகொண்ட நாதன் தென்காசியை என்று மண்மேல்
நினைத் தரதரஞ் செய்து அங்கு காவல் புனையும் நிருபர்தம்
தனைத்தாம் நின்று அஞ்சித் தலை மீது தரித்தனனே!
பூந்தண் பொழில் புடைசூழும் தென்காசியைப் பூதலத்தில்
தாத்தம் கிளையுடனே புரப்பார்கள் செந்தா மரையாள்
காந்தன் பராக்கிரமக் கைதவன் மானகவசன் கொற்கை
வேந்தன் பணிபவராகி யெந்நாளும் விளங்குவரே!
இத்தகைய அருமையான பாடலுடன் பாடிய பராக்கிரம பாண்டியனின் தமிழ்ப்புலமைபற்றிப் பெரும்புலவர் ஒருவர்...........
"எண்ணீர்மை நூலுக்கு அகத்தியனாம் இவன் என்பதெல்லாம்
வெண்ணீர்மை யன்றி விரகல்ல விகரமாறன் செஞ்சொல்
புண்ணீர்மை தேரும் பராக்கிரம மாறன் பாதங்கழுவும்
தண்ணீர் குடித்தல்லவோ கும்பயோனி தமிழ்க்கற்றதே!- என பாடியுள்ளார்.
அகத்தியனே பாண்டியனின் பாதம் கழுவிய நீரைக் குடித்துத் தான் தமிழைக் கற்றானாம்.
பைந்தமிழ் நிறை புலமை பெற்றவன் பராக்கிரம பாண்டியன் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
திருச்சிற்றம்பலம்.
நெல்லை மாவட்ட சிவாலயத் தல பதிவுகளில் தென்காசி தலத்தின் பதிவில் நாளை *கோபுர வரலாறைக் காண்போம்.* இத்தென்காசித் தரிசனங்கள் மேலும் சில நாட்களாக தொடர்ந்து பதிவுகள் வரும். சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி.*
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹 *பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
*(35-வது நாள்.)*
இப்பதிவும் நீளம் கருதி, இன்னும் சிலநாள் தொடர்ந்து வளரும்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌷 *அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி திருக்கோயில்.*🌷
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*தென்காசி.*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*முக்கட் சோதி தென்காசி முன்னோன் கதை*
*மிக்க வேதவியாசன் விரித்ததை*
*தக்கவாய் தமிழால் சொலச் சண்பகக்*
*களிற்றின் கழல் பணிந்து ஏத்துவாம்.*
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
*இறைவன்:*அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி.
*இறைவி:* அருள்தரும் உலகம்மன்.
*தீர்த்தம்:* சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.
*தல விருட்சம்:* செண்பக மரம்.
*ஆகமம்:* காரண ஆகமம்.
*கவினழிந்த கோபுரம்:*
தென்காசியில் ஆண்ட கொற்றவர்களும் கோட்டையும் அழிந்து போன சமயம்.....
முகமதியர்கள் தென்காசியைக் கைப்பற்றிக் கொண்டனர்.
தெலுங்கு நாட்டிலிருந்து வந்த நாயக்க மன்னர்கள் நெல்லைச் சீமையைக் கைப்பற்றி, தங்கள் ஆட்சிக்கு உறுதுணையாக விளங்க, பாளையப் பாட்டுக்களையும் ஜமீன்களையும், உருவாக்கி ஆட்சி செய்து வந்தனர்.
பாளையப்பட்டுக்களால் உருவாக்கப்பட்ட ஜமீன்தார்கள் வரி வசூல் செய்து நாயக்க மன்னர்களுக்குக் கொடுத்து வந்தனர்.
இந்த சமயத்தில், மேல்நாட்டிலிருந்து கிழக்கிந்தியக் கம்பெனியர்கள், நெல்லைச் சீமைக்கு வந்தனர்.
தங்கள் ஆட்சியை இங்கே நிலைநிறுத்தத் திட்டம் வகுத்தனர். அதற்கான வழி ஏற்படுவதற்காக, பாளையக்காரர்களுக்குள் உட்பகையை உருவாக்கித் தூண்டிவிட்டனர்.
முடிவில் கிழக்கிந்தியக் கம்பெனியின் களுக்குள், அவர்கள் வகுத்த திட்டம் சாதகமாக்கி வெற்றியும் கண்டனர்.
திருநெல்வேலியிலிருந்த பாளையக்காரர்களுக்கும், ஜமீன்தார்களுக்கும் ஆங்கிலச் சீமைக்காரன்களுக்கும், மக்களிடமிருந்து வரிவசூல் பன்னுவதில் தொடர்ச்சியாக போர் எழுந்த வண்ணம் இருந்தன.
ஜமீன்தாரர்களையும், பாளையக்காரர்களையும் அழிக்க, ஆங்கிலேயர்கள் புதுப் புதுவிதமான வரிச்சுமைகளை சுமத்தியும், புதிய புதிய வாரிசுகளையும் உருவாக்கி அதற்கான ஆவணங்களையும் திருத்தி எழுதி வைத்தனர்.
ஆங்கிலேயரின் அடாவச் செயலைக் கண்டவர்கள், கோயில்களிலும் மறைவிடங்களிலும் உரிமை முறை பற்றிய ஆவணங்களை மறைத்து வைத்தனர். அப்படி மறைத்து வைக்கப்பட்ட இடங்களில் ஒன்றுதான் தென்காசிக் கோபுரத்திற்குள்.
உண்மையான வாரிசுகளை வஞ்சகம் செய்து, போலிகளை உருவாக்க எண்ணிய ஆங்கிலேயர்களுக்கு போலியான வாரிசுகளும் துணையாகச் செயல்பட்டனர்.
இதன் காரணமாய், தென்காசிக் கோபுரத்துக்குள் ஆவணம் ஒழித்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்த அவர்கள்.........
பல நூறு நெருப்புப் பந்தங்களை தயார் செய்தனர். எண்ணெய்களில் ஊறச்செய்தனர். ஒரே நேரத்தில் மொத்த எண்ணெய்ப் பந்துக்களிலும் தீ ஏற்றிக் கொண்டனர்.
அனைவரும் ஒன்று சேர, தென்காசிக் கோபுரத்திற்குள் ஏறி, நிலை படிகளில் தீப்பந்தங்களை செருகி விட்டனர். மறைத்து வைத்த ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகிப் போனது.
தீயில் எரிந்து சாம்பலாகிப் போனது ஆவணம் மட்டுமல்ல!, தென்காசிக் கோபுரமும் கூடத்தான்!,
இவை திருநெல்வேலி வரலாற்றுக் குறிப்பில் காணலாம். அதில்,1771-ஆம் ஆண்டு தென்காசியில் ஆவணக் காப்பகம் ஒன்று நெருப்புக்கு இரையாகியது என நூலிலிருப்பதைக் காணலாம்.
பிரிதொருவான மற்றொரு குறிப்பிலும் 1814-ஆம் ஆண்டு தென்காசி வட்டக் கருவூல உட்பகை காரணமாக எழுந்த கருத்து வேற்றுமைகளினால், பாளையக்கார் ஒருவராலேதான் தீ வைத்துக் கோளுத்தப் பட்டதென கூறுகிறது.
செனக்கி எனும் வெளிநாட்டுப் பாதிரியார் ஒருவர் 1792- ல் வந்து கோபுரத்தை பார்வையிட்ட அவர்.... தென்காசி கோபுரத்தைக் கண்டு ஒரு குறிப்பு வரைந்துவிட்டுச் சென்றிருந்தார்.
அவர் வரைந்த அந்தக் குறிப்பில், *தென்காசி கோபுரம் அழகோவியமாய் காட்சியாகி, அதன் மேலுள்ள கடிகாரம் நேரக்குறிப்பை சரியாகக் காட்டிக் கொண்டிருந்தன*- எழுதி வரைந்திருந்தார்.
ஆனால், 1824-ல் நில அளவை சரிபார்த்த போது ஒரு குறிப்பை அளித்தனர். அந்தக் குறிப்பில்,.....
*தென்காசி கோபுரம் தீ வைக்கப் பெற்று, அழிந்து, பரிதாபப் பார்வையிலுள்ளது என எழுதியிருக்கின்றார்.*
திருநெல்வேலி வரலாற்றுக் குறிப்பான அதே நூலில் 1796-ல் தென்காசிக் கோபுரத்தில் தீ வைக்கப்பட்டது என்கிறது.
இவற்றையெல்லாம் ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்தோமானால், 1792-க்குப் பின்பும், 1824-க்கு முன்பும், உள்ள இந்த இடைப்பட்ட காலத்தில் பாளையக்காரர்களுக்குள் ஏற்பட்டிருந்த பகைமையாலும், வெள்ளையர்களின் சூழ்ச்சியாலும் உட்பகையாலும், ஆவணங்களை அழிப்பதற்காக வைக்கப்பட்ட நெருப்பு, ஆவணத்தோடு கோபுரமும் கவினழிந்து போய்விட்டன தெரிய முடிகிறது.
மாமன்னன் அரிகேசரி பராக்கிரம பாண்டியனால் உருக்குபோல உருவாக்கப் பெற்ற கோபுரம், அரசியல் சூழ்ச்சியால் நெந்நாக்குத் தீக்களுக்கு இரையாகிப் போனது.
*(இடியும் மின்னலும் கோபுரத்தை தாக்கி அழித்ததாக நம்மில் நிறையவர்கள் சொல்வதும் கூறுவதுமாக உள்ளோம். அது உண்மை இல்லை. இடியும் மின்னலும் கோபுரத்தை தாக்கி அழிக்கவில்லை.)*
தென்காசி ஆலயத்திற்கு *"வராததோர் குற்றம்வரின் அதனைப் புரப்பவர்களின் திருவடித்தாமரைகளை உலகறியப் பணிந்தேன்"*
என்று நாடாண்ட மன்னன் பணிவோடு கசிந்துருகினான்!"
பராக்கிரம பாண்டியனின் இந்த உருக்கமான வேண்டுகோளை,...... அப்போதே உருப்படாத அரசியல் சூழ்ச்சியினைக் கண்டு, இப்போது எண்ணி நோக்கின் நெஞ்சு வலிக்கிறது.
தென்காசிக் கோபுரம் முடி சாய்ந்து கவினழிந்து நிற்கும் காட்சியைக் கண்ட போதெல்லாம், தென்பாண்டிய மக்கள் நெஞ்சு உருகி உருகிப் போயினர்.
முடிசாய்ந்த கோபுரத்தினைத் தலைநிமிரச் செய்ய, உங்கள் ஐயா தர்மமிடுகிறார் என்று ஒரு தாய் தாலாட்டாய் பாடினாள்.
*"காசி வடகாசி*
*கண்கண்ட தென்காசி*
*தென்காசிக் கோபுரம்*
*சிரசு முடி சாயுதென்று*
*பொன் காசு தர்ம மிடும்*
*புண்ணியரே உங்கள் ஐயா"*. என்கிறது அந்தத் தாலாட்டுப் பாட்டு.
இந்தத் தாலாட்டைப் பாடிய அந்த அன்னையின் உருக்கம்தான் என்ன?
இந்தத் தாலாட்டைப் பாடியது செங்கோட்டையிலிருந்த தொழிலதிபர் ஒருவரின் அன்னையார் திருமதி.வி. ராஜாம்பாள் ஆவார்கள்.
பராக்கிரம பாண்டிய மன்னன் உருவாக்கிய கோபுரம் கலையிழந்து, கவினழிந்து, கரியாகப்பட்டு, பிளவாகி இரண்டாகப்பட்டு,.........
இப்போது வானினை நோக்கி தீக்காயப்பட்ட கோபுரம் கதறியது.
*எண்ணை உயர்ந்து பார்த்து நோக்கச் செய்த பாண்டியனே!, நீ மீண்டும் இம்மன்னுலகில் பிறப்பாயாக! எண் தலையை நிமிரச் செய்வாயாக! என நூற்றி ஐம்பது ஆண்டுகளாகக் கதறி நெடிய தவம் செய்தது.*
திருச்சிற்றம்பலம்.
நெல்லை மாவட்ட சிவாலயத் தல பதிவுகளில் *தவமிருந்த தென்காசி கோபுரத்திற்கு ஈசன் எவ்வாறு அருளினார்?* நாளை இத்தென்காசித் தரிசனங்கள் மேலும் சில நாட்களாக தொடர்ந்து பதிவுகள் வரும். சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்
*கோவை கு.கருப்பசாமி.*
_____________________________________
🌹 *பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
______________________________________
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
*(38-வது நாள்.)*
இப்பதிவும் நீளம் கருதி, இன்னும் சிலநாள் தொடர்ந்து வளரும்.
______________________________________
🌷 *அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி திருக்கோயில்.*🌷
____________________________________
*தென்காசி.*
_____________________________________
*முக்கட் சோதி தென்காசி முன்னோன் கதை*
*மிக்க வேதவியாசன் விரித்ததை*
*தக்கவாய் தமிழால் சொலச் சண்பகக்*
*களிற்றின் கழல் பணிந்து ஏத்துவாம்.*
______________________________________
*இறைவன்:*அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி.
*இறைவி:* அருள்தரும் உலகம்மன்.
*தீர்த்தம்:* சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.
*தல விருட்சம்:* செண்பக மரம்.
*ஆகமம்:* காமிக ஆகமம்.
*ஒன்பது நிலைக்கோபுரத் தொடக்கவிழா:*
1984-ல் தொடக்கவிழா.
கோபுரத்தின் அடித்தள வேலை முடிந்ததுதான் தென்காசி மக்களுக்கு அப்போது நம்பிக்கை பிறந்தது.
பொருளாதாரத்தில் கோபுரத்தின் வேலை தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காக, அப்போது திருப்பணிக்குழுத் தலைவராக இருந்த டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்கள், முதல்நிலை தளத்தின் முழுச்செலவினையும் தன் பொறுப்பில் செய்து கோபுர வளர்ச்சிக்கு வித்திட்டார்கள்.
திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் சார்பில், இரண்டாம் நிலை தளத்தை முடித்துக் கொடுத்து இசைந்தது.
பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் சார்பில், மூன்றாம் நிலை தளத்தையும் செய்து அதற்குண்டான பொருளாதாரத்தை செலவழித்தது.
இதேபோல, நான்காம் நிலைத் தளத்தை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பில் நடத்திவிக்கப்பட்டது.
மதுரை, மீனாட்சியம்மன் சுந்தேரேசுவரர் திருக்கோவில் சார்பாகவும், ஐந்தாம் நிலை கோபுரத் தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தாராகள்.
திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பிலும், ஆறாம்நிலை தளத்தையும் உருவாக்கிக் கொடுக்க, அதற்குண்டான பொருளாதார நிலையை கொடுத்து செய்வித்தன.
ஏழாம் நிலை தளத்தை, சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சார்பில் பொறுப்பை எடுத்து நடத்தித் தந்தது.
தென்காசி வட்டாரத்திலிருக்கும் நாடார்சமுதாயத்தினரால், எட்டாவது நிலைத் தளத்திற்கு செலவாகும் செலவுக்குண்டான பொறுப்பை அவர்கள் ஏற்று நடத்தி செய்வித்தார்கள்.
அடியமைத்தவனே முடியினையும் செய்விக்கும் தத்துவம், இத்தென்காசித் திருக்கோயிலுக்குப் பொருத்தமாக அமைந்தது.
'ஆம்!".. முதல்நிலை தளத்தினை உருவாக்கித் தந்த திருப்பணிக் குழுத்தலைவர் டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் அவர்களே, ஒன்பதாம் நிலைத் தளத்தின் கோபுரத்தின் செலவினையும் ஏற்று நடத்தி செய்வித்தார்கள்.
*செப்புக் கலசம்:*
கோபுரத்தின் கொடுமுடியில் (உச்சியில்) பதினோறு செப்புக் கலசங்கள் நிறுவப்பட்டன.
ஒவ்வொரு கலசத்தின் எடை நூற்று பத்து எடை.
கலச உயரம் ஆறே முக்கால் அடி.
கலச சுற்று விட்டம் இரண்டரை அடி.
கலசத்தை தாங்கும் அடித்தளத் தேக்கு மரம் ஒன்பதரை அடி தண்டுப் பலகைகள்.
கலசங்களில் ஒவ்வொன்றிலும், *வரகு* என்கிற காரியத்தை நிறைத்தனர்.
(செப்புக் கலசங்களில் வரகுத் தாணியங்களை நிரப்பி உயரத்தில் நிறுத்தியிருந்தால், நிறுத்தியிருக்கும் அக்கட்டிடத்தின் (கோபுரம்) இடி மின்னலைத் தாங்கச் செய்யும் ஆற்றல் இவைக்களுக்குள்ளது.)
இக்கோபுரத்தை, சிற்ப கலைமாமணி முத்தையா ஸ்தபதி அவர்களின் தலைமையின் கீழும், திரு நந்தகுமார் அவர்களின் நிர்வாக மேம்போக்குடன் உருவாக்கப் பெற்ற இத்தென்காசிக் கோபுரத்தின் மொத்த உயரம் நூற்றி எழுபத்தெட்டு அடி உயரம் கொண்டவையாகும்.
இந்தக் கோபுரச் சுற்றில் மொத்தம் என்னூறு சிலைகள் நிறுவி பொருத்தியிருக்கிறார்கள்.
*கோபுரழகு:*
கோபுரத்தின் கிழக்குத் திசையில், சிவ தாண்டவத்துடன் அமைக்கப் பட்டிருந்தது.
கோபுரத்தின் மேற்குத் திசையில், சிவன், திருமால் சிலைகளுடனும்....
வடக்குத்திசைக் கோபுரத்தில், ஒன்பது மாடங்கள். ஒவ்வொரு மாடங்களுக்கும் ஒவ்வொரு பிரம்மாவாக, ஒன்பது பிரம்மாக்களை இருத்தியிருக்கிறார்கள்.
தெற்கில், முனிவர்களுடனும், தட்சிணா மூர்த்திகள் ஒன்பது மாடங்களிலும் ஒன்பது
தட்சிணாமூர்த்திகள் அமையப்பெற்றிருக்கிறார்கள்.
எட்டுத் திக்கிலும் அஷ்டதிக்கு பாலகர்களை காட்சியாக்கியிருக்கிறார்கள்.
கிழக்குத் திசையில் உள்ளது போல், ஜெய விஜயா என்கின்ற துவாரபாலகர்கள் மேற்கான முகத்திலும் அமையப் பெற்றிருக்கிறார்கள்.
அதோடு சிவன், யானையை சம்காரம் செய்ய யானை வயிற்றிலிருந்து வெளிப்படும் கஜசம்கார மூர்த்தி, பிட்சாடனர், ஆணும் பெண்ணும் சமமே என்பதை உலகிற்கு உணர்த்தும் அர்த்தநாரீசுவரர், சிவனும் மாலனும் ஒன்றே என்கின்ற தத்துவத்தைப் போதித்துக் காட்டும் அரிகரன், நடராசர், உக்ர தாண்டவர், ஊர்த்தவர் போன்றோர் இருக்கப் பெற்றிருக்கிறார்கள்.
*அற்புதக் காட்சி:*
இன்னும் ஒர் அற்புத அமைப்பு நம் கண்களுக்கக் காட்சியாக்கியிருக்கிறார்கள். கங்கை நதியான வள்ளி, சிவபெருமானிடம் கோபித்துக் கொண்டு சிவபெருமான் தலையிலிருந்து இறங்கிப் போகும் கங்கையை சிவபெருமான் ஒரு கையால் தடுத்தி நிறுத்திக் கொள்வது போலும், இன்னொரு கையால், தன்னருகில் இருக்கும் பார்வதிதேவியை அரவணைத்துக் கொண்டு, சமாதானப் பார்வையோடு பார்க்கும் சிவபெருமானின் சங்கடமானதொரு நிலையை சிற்பியின் கைவண்ணம் உருக்கி உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள்.
இன்னொரு அற்புதக் காட்சி.....
*மீனாட்சி திருக்கல்யாணக் காட்சி.* திருமால், சொக்கநாதரிடம் மீனாட்சி அன்னையைத் தாரை வார்த்துக் கொடுக்கும் காட்சி.
திருமாலின் அருகாக குபேரன் இருக்கிறார்.
மீனாட்சி அன்னை,பெண்களுக்குரிய தான் நாணத்துடானான ஓரப்பார்வையில் சொக்கநாத சிவனை நோக்கும் நளினம், இதோடு- அம்பாளும் சிவசங்கரானாரும் ஆலிங்கனம்----, சிவலிங்கத்தின் முன்னே தன் கண்ணைப் பிடுங்கி அப்புறம் கண்ணப்ப நாயனார், இக்காட்சிகளைப் பொழுதேனும் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருந்தது.
இது சிலைகள் அல்ல!, நம் உள்ளத்தை சிலிர்க்க வைக்கும் உயிர்கள்.
*அகத்தியர்:*
அகத்தியர் போன்றோருடனான முனிவர்களின் சிலையமைப்புகள், பஞ்சமுகக் கணபதியார், நர்த்தன கணபதியார், சித்திபுத்தி சமேத கணபதியார், லெட்சுமிதேவியும்.................அப்பப்பா!"......
அழகின் அரசி என்று திருமகளை, கூறக் கேள்விப்பட்டியிருப்போம். இந்த லெட்சுமியின் எழில் உண்மை. இதை உறுதியாக்கும் கொள்ளையழகு......
இதற்க்கெல்லாம்..ஈடாகத் திருமால்...பாமா...ருக்மணி சமேத கோபாலன், வராக மூர்த்தி, நரசிம்மர் எனக் கூறிக்கொண்டே போகலாம்.
நான்திசைகளிலும் கோபுரத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் பூதத்தார்களின் அழகேயழகு!
இப்பூதத்தார்கள் தாங்கி நின்றாற் போதாது என்று, மேலும் ஆண்களும் பெண்களும், அழகிய முன்கொண்டையோடு, நெற்றி நிறைந்த விபூதிக் கீற்றுகளுடன், இலாவாகமாக வளைந்த இடுப்புடன் நின்று, வெண்பா மரம் வீசிக் கொண்டிருக்கும் பெண்களின் கண்களைப் பாருங்கள்....... .......நம் விழிகள் விலக மறுக்கிறது.
*உச்சியில் ஒட்பம்:*
ஒன்பதாவது நிலைத் தளத்தில், அதில் வெளிப்பிரகாரம் அமைத்திருக்கிறார்கள்.
இந்த வெளிப்பிரகாத்திலிருந்தவாறு தென்காசியையும் இதையொட்டியிருக்கும் ஊர்களையும் பார்க்க பார்க்க முடிகிறது.
அற்புதமான காட்சிகள், தென்றல் காற்றுகள், பசுமைமிக்க வயல்கள், மரங்கள், சாலைகள், அதில் ஊர்ந்து செல்லும் அழகுகள், கோபுரயுயர்வுக்கு சிறகு விரித்த பறவைகள், கட்டிடங்கள், மாடவீதிகள், குற்றாலருவி நீர்வீழ்ச்சிகள், வெள்ளிய நீர் வழிதல்கள், இதுமட்டுமல்ல-- திருமலைக்குமாரசாமி மலைக்கோயிலும் கூட தெரிந்தன.
கோபுரத்தின் முகப்பு நாசியில், சிவசக்தி அமர்ந்திருந்தார்.
முகப்பு மகாநாசியில் திருமால், காயத்திரி, சாவித்திரி அமர்ந்திருந்தனர்.
கோபுரத்தின் சிகரத்தில் வடக்கு தெற்குப் பகுதிகளில் *மாநாசி* அமைத்திருக்கிறார்கள்.
இந்த நாசி, மாநாசிகள், மேலேயிருந்து பார்ப்பது, வேறொரு அழகிலும் மேன்மையாகத் தெரிந்தன.
மனுசாரம், காசியபம் போன்ற சிற்ப சாஸ்திர நுணுக்கங்களுடன் அமைக்கச் செய்திருந்த சிற்பி...., "இக்கோபுரத்தை சுவாமி படுத்திருக்கும் நிலையில் அமைத்திருக்கிறேன். காரணம், தொலைவிலிருந்து கோபுரத்தைத் தரிசனம் செய்வோர்க்கு, சுவாமியின் திருவடிகளைத் தரிசனம் செய்வது போலாகும் என்று ஸ்தபதி முத்தையா அவர் கூறினார்கள்.
இத்திருக்கோபுரத்தின் உள்ளார அடிப்பகுதியிலிருந்து முடிப்பது திக்கும் செல்ல, கோபுரத்தின் உட்புறபகுதியில் படிக்கட்டு அமைந்திருந்த விதம், இப்படிக்கட்டுக்களிலேறி ஒன்பதாவது நிலைத் தளத்திற்கும் சென்று, அந்த முடித் தளளத்தில் வெளிப்பிரகாரத்தில் வலம்செய்து ஒன்பது கலசங்களையும் கண்டு வணங்கித் திரும்பியது *இதுவும் ஓர் கிரிவலம்* என்றே கொளலாம்.
திருச்சிற்றம்பலம்.
நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களின் தென்காசிப் பதிவுகள் மேலும் சில குறிப்புகள் கிடைக்கப்பெறவே, இத்தென்காசிப் பதிவு இன்னும் சில நாட்களாக தொடர்ந்து பதிவுகள் வ(ள)ரும்.
*************************************
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்
*கோவை கு.கருப்பசாமி.*
_____________________________________
🌹 *பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
______________________________________
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
*(39-வது நாள்.)*
இப்பதிவும் நீளம் கருதி, இன்னும் சிலநாள் தொடர்ந்து வளரும்.
______________________________________
🌷 *அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி திருக்கோயில்.*🌷
____________________________________
*தென்காசி.*
_____________________________________
*முக்கட் சோதி தென்காசி முன்னோன் கதை*
*மிக்க வேதவியாசன் விரித்ததை*
*தக்கவாய் தமிழால் சொலச் சண்பகக்*
*களிற்றின் கழல் பணிந்து ஏத்துவாம்.*
______________________________________
*இறைவன்:*அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி.
*இறைவி:* அருள்தரும் உலகம்மன்.
*தீர்த்தம்:* சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.
*தல விருட்சம்:* செண்பக மரம்.
*ஆகமம்:* காமிக ஆகமம்.
தென்காசி தலபுராணத்தில் முப்பது படலங்கள் உள்ளன.
*நாரதன் மாற்றியும் கேட்டு வரம் பெற்ற படலம்:*
தென்காசியின் சிறப்புகளை கேட்டுத் தெளிந்தான் நாரதன்.
இந்திரனின் அவைக்கு நாரதன் சென்று பலவாறாக அவரை புகழ்ந்து பாடினான்.
இப்புகழ்ச்சியைக் கேட்ட அரிமித்திரன் என்பவன் பொறாமைக்குள்ளானான்.
திருமாலை அனுகி, தங்களையும், இந்திரனையும் நாரதர் சமமாக நினைத்து பாடினார் என கூறிவிட்டான்.
சினம் கொண்ட திருமாலின் நாரதனின் வீணையும் இசையும் அழியட்டும் என்று சபித்தார்.
நாரதர் அஞ்சி, அவரை சரணடைந்தார்.
அதற்கு திருமால், நீ தென்காசிக்குச் சென்று காசிவிசுவநாதரை வணங்கினால் உன் சாபம் நீங்கப் பெறும் என்று சாபவிமோசனம் கொடுத்தார்.
நாரதன் தென்காசிக்கு வந்து சித்திரா தீர்த்தத்தில் நீராடி, காசிவிசுவநாதரை கசிந்துருகித் தொழுதான்.
பெருமானோ....., வடகிழக்கு திசையிலுள்ள தீர்த்தத்தில் தீர்த்தமாடி கூகை வடிவமாக வாழும் கெளசிய முனிவரிடம் நீ உபதேசம் பெறுவாய் என்றார்.
பெருமான் கூறியபடி, நாரதன் புண்ணிய நீராடி கெளசிக முனிவனிடம் வந்து சேர்ந்தான்.
அப்போது கெளசிய முனிவர் சோலையில் கூகை வடிவமாக இருந்தார்.
அவர், நாரதருக்கு சிவபெருமானின் தத்துவங்களை விளக்கி, காசிவிசுவநாதரின் பெருமைகளைக் கூறி, சிவ வழிபாட்டின் சிறப்பினையும் எடுத்துரைத்தார்.
நாரதரும் கெளசிகரின் அருளுரையை ஏற்று காசிவிசுவநாதரை வணங்கினால் சாப விமோச்சனம் பெற்றார்.
*மலைகளின் சிறகை அரிந்த படலம்:*
அக்காலத்தில் மலைகள் அனைத்திற்கும் இறகுகள் இருந்தன.
இதனால் இவைகள் பறந்து பறந்து சென்று ஊர்களை அழித்து வந்தன.
மக்களும், நாட்டையாளும் மன்னர்களும், இந்திரனிடம் சென்று, மலைகளின் அழிச்செயல்களைப் பற்றிக் கூறினர்.
இந்திரனோ, தென்காசி நகருக்கு வந்து தீர்த்தமாடி, காசிவிசுவநாதரை வணங்கி வலிமை பெற்று மலைகளுக்கிருக்கும் சிறகையெல்லாம் அறுத்தெறிந்தான்.
அந்த மலைகளில் ஒன்றுதான் *மைநாக மலை*
அது காசி விசுவநாதரை வணங்கியதால் நீ கடலுக்குள் சென்று மறைந்து விடு என்று இறைவன் கட்டளையிட்டார்.
அம்மலையும் கடலுக்குள் சென்று மறைந்தது.
அந்த மலையை அழிக்க இந்திரன் தன் வஜ்ஜிராயுதத்தை ஏவி விட்டான்.
அந்த வஜ்ஜிராயுதத்தைக் கொண்டு இந்திரனால் வெற்றி பெறமுடியவில்லை. தோல்வியுற்றான்.
அப்போது பெருமான் இந்திரனிடம்....,அறிவுரை செய்து, *மைநாகம்* அங்கே இருக்கட்டும் என்று அருள் செய்தார்.
*அகத்திய படலம்:*
இமயமலையில் சிவபெருமானுக்கும் பார்வதிதேவிக்கும் திருமணமச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
வானவர்களும், வானவர்களும் அங்கே கூடி குழுமியிருந்தார்கள்.
இதன் காரணமாய் வடநிசை தாழ்ந்து போயின.
தென்திசை உயர்ந்து மேலோங்கி நின்றது.
இதை சமப்படுத்த எண்ணிய சிவபெருமான்.... அகத்தியரிடம் நீ தென்திசை சென்று பொதிகை மலையில் தங்குகிறார்! என்றார்.
பெருமானே!" நான் தென்திசை சென்றால் தங்களின் திருமணத்தை காணநேராதே?" என்றார் அகத்தியர்.
தென்காசியில் வைத்து ஐப்பசி மாதம் உத்திரநாளன்று என் திருமணக் காட்சியை நீ காண நேரும்! என அருள்பாலித்தார்.
இன்னும் பல படலங்களுடன் நாளைய அடுத்த பதிவில்.
திருச்சிற்றம்பலம்.
_____________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்
*கோவை கு.கருப்பசாமி.*
_____________________________________
🌹 *பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
______________________________________
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
*(40-வது நாள்.)*
இப்பதிவும் நீளம் கருதி, இன்னும் சிலநாள் தொடர்ந்து வளரும்.
______________________________________
🌷 *அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி திருக்கோயில்.*🌷
____________________________________
*தென்காசி.*
_____________________________________
*முக்கட் சோதி தென்காசி முன்னோன் கதை*
*மிக்க வேதவியாசன் விரித்ததை*
*தக்கவாய் தமிழால் சொலச் சண்பகக்*
*களிற்றின் கழல் பணிந்து ஏத்துவாம்.*
______________________________________
*இறைவன்:*அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி.
*இறைவி:* அருள்தரும் உலகம்மன்.
*தீர்த்தம்:* சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.
*தல விருட்சம்:* செண்பக மரம்.
*ஆகமம்:* காமிக ஆகமம்.
தென்காசி தலபுராணத்தில் முப்பது படலங்கள் உள்ளன. நேற்று பதியப்பட்ட படல பதிவுகளில் மேலும் சில படலங்கள்.
*குலசேகரனுக்கு மகப்பேறு அருளிய படலம்.*
தென்காசிக்கருகே விந்தன் கோட்டையை ஆண்டுவந்த குலசேகர பாண்டியனுக்கு வெகுநாளாய் மகப்பேறு வாய்க்காததால், அதை நினைத்து நினைத்து வருந்தியழுதான்.
ஈசனை வேண்டி வேண்டிப் பணிந்தான். அப்படியொரு நாள் பணிந்து வேண்டிக் வணங்கிய பொழுது......
ஈசனின் அசரீரியாக, *செண்பகத் தோப்புக்கு வந்து வழிபடு"* என ஒலித்தார்.
அசரீரியின் படி வழிபாட்டைச் செண்பகத் தோப்புக்கு சென்று வழிபட்டு வரலானான்.
ஈசன் அருளும் காலம் கூடிவந்ததால், குலசேகரனுக்கு ஆண் மகவு பிறந்தது.
அந்த மகவுக்கு, உலகநாதன் என பெயரிட்டு வளர்த்து பருவவயதின்போது, திருமணத்தையும் செய்வித்து வைத்தான்.
பின்பு, உலகநாதனுக்கும் குழந்தைப் பேறு வாய்க்காதிருந்தது. உலகநாதன் காசிவிசுவநாதனை கசிந்துருகி வேண்டி வழிபாடுகளை தொடர்ச்சியாக செய்துவித்து வந்தான்.
ஒரு சமயம் உலகநாதன் செண்பகத் தோப்பில் உலவிவந்தபோது, அத்தோப்பில் ஒரு பெண் குழந்தையைக் காணநேர்ந்தான்.
அந்க் குழந்தை உலகநாதனின் கண்களுக்கு பராசக்தி வடிவருளாகத் தெரிந்தது.
அந்தக் குழந்தையை அரண்மனைக்கு எடுத்து வந்து, *குழல்வாய்மொழி* என பெயரிட்டழைத்து வளர்த்து வரலானான்.
குழல்வாய்மொழியாள் பருவத்தை எட்டினாள். பருவமடைந்த குழல்வாய்மொழி சிற்றாங்கரையில் சோலே ஒன்றினை உருவாக்கச் செய்து, அச்சோலையிலே முழுநேரமும் சிவபெருமானை நினைத்து வழிபட்டு வந்தாள்.
வழிபாட்டில் குழல்வாய்மொழியாள், *இறைவா!" உன்னையே நான் கணவனாக அடையவேண்டும்* என வழிபாட்டைத் தொடர்ந்தாள்.
ஒரு நாள் வழிபாட்டின்போது, *ஐப்பசி உத்திரநாளில் உன்னை மணந்து கொள்வேன்"* என்று இறைவன் கூறியருளினார்.
அதுபோலவே, ஐப்பசி உத்திரநாளில் இறைவன் குழல்வாய்மொழி அம்மையை தன் திருமணம் புரிந்து கொண்டார்.
திருமணம் நடைபெற்ற நிலையிலையே, இறைவனும் குழல்வாய்மொழியம்மையும் ஆலயத்துள் புகுந்து மறைந்தருளி மறைந்தனர்.
*மிருகண்டு முனிவரின் வரம் பெற்ற படலம்:*
திருக்கடவூர் என்ற ஊரில் கெளசிகன் எனும் முனிவன் கடுந் தவத்தை மேற்க்கொண்டிருந்தான்.
முனிவனின் முன்பு பிரசன்னமாகி மாலன், *நீ தென்காசி சென்று உலகநாதனை வணங்கு வாயாக!* அவனடி பணிந்து நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும். என்று கூறினார்.
உடனே, மிருகண்டு முனிவர் தன்தந்தையார் கெளசிக முனிவரைக் கண்டு, மாலன் கூறிய செய்தியைச் சொன்னார்.
உடனடியாக, கெளசிக முனிவரும், அவர்முன் மிருகண்டு முனிவரும் தென்காசி வந்து காசிவிசுவநாதரை வழிபட்டு தவம் செய்து வந்தனர்.
தவம் செய்து, மருத்துவத்தில் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகன் பிறந்தான். அவன்தான் *மார்க்கண்டேயன்* ஆவான். இவனே சிவனை வணங்கி எமனை வென்று, என்றும் பதினாறு வயதுடையனோனனாய் காணக் கிடைத்தான்.
*குடிலை உபதேசப் படலம்:*
சிவபெருமான் பழந்தானத்திலிருந்து உலகம்மைக்குக் *குடிலை* என்ற மந்திரத்தை உபதேசித்தருளினார்.
*குடிலை* என்பதற்கு *ஓம்* என்பது பொருளாகும். அறிவே வடிவான தெய்வத்தை அவன் தந்த அறிவைக் கொண்டு அறிந்து அறிவால் வழிபடுவது குடிலை. இதைத்தான் குழல்வாய்மொமியம்மைக்கு சிவபெருமான் உபதேசம் செய்திருந்தார்.
*தரணிப் பீடம்:*
தென்காசியை தரணி பீடம் என்று சொல்வது உண்டு. பராசக்தியின் வடிவமாக இருக்கின்ற அம்பிகை தரணி பீடத்தில் நாற்பது முக்கோண வடிவில் எழுந்தருளியுள்ளார்.
இந்த நாற்பது முக்கோண வடிவில் எழுந்தருளியுள்ள அம்பிகையை வணங்கும் முறையினை மும் அதனால் பெரும் பயன்களையும் இப்படத்திலே குறிப்பிட்டுள்ளார்.
*நந்தி உபதேசம் பெற்ற படலம்:*
சிலாதர முனிவன் என்ற ஒரு முனிவன் தென்காசிக்கு வந்து, விசுவநாதரை வணங்கி பிள்ளைப்பேறு அருளுமாறு வேண்டினான்.
இறைவன் அருளால் வயலில் அவன் உழும்போது, ஒரு ஆண்பிள்ளையைக் கண்டெடுக்கப்பட்டான்.
அந்த பிள்ளைக்கு *நந்தி* எனப் பெயரிட்டு வளர்த்தான். நந்தியின் எதிர்காலம் அறிய ஜோதிடரை நாடினார்.
கணித்த ஜோதிடரோ, இக்குழந்தை இன்னும் ஒர் ஆண்டே உயிர் வாழும் என அச்சோதிட வல்லுனர் கூறினார்.
நந்தியும் இறைவன் அருளால் இதையறிந்து காசிவிசுவநாதரை வழிபட்டான்.
தன்னை வணங்கிய நந்தியைப் பார்த்து, ஈசன்....,. *நந்தி! உனக்கு என்றும் அழிவென்பதில்லை* மேலும் *நீ என் சந்நிதிதானத்தில் எனனெதிரில் அதிகாரத்தோடு அமர்வாய்* என்று வனத்தை அளித்தார்.
அன்று முதல் ஈசன் முன்பு அமரும் பாக்கியத்தை நந்தி பெற்றார்.
*வாலி வரம் பெற்ற படலம்:*
இராமாயணத்தில் வரும் வாலி, சீரிய சிவபக்தன் ஆவான்.
இராமாயனக் கோர்வையில் இவன் அங்கிருந்தாலும், சித்தத்தில் எப்பொழுதும் சிவனையே நினைந்து கொண்டிருப்பவன்.
தென்காசிக்கு அருகில் உள்ள வாலியின் பொத்தைக்கு வந்து சிவனை நினைந்து தவம் செய்து தன்னை எதிர்ப்போர்களின் பாதி பலன் தனக்கு வர வேண்டும் என்ற வரத்தினைப் பெற்றான்.
வாலி வழிபட்டதால் இறைவன், வாலிநாதன் எனப் பெயர் பெற்றார்.
திருச்சிற்றம்பலம்.
*நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களின் தொடரான தென்காசித் தொடர், இன்னும் சில நாட்களாக தொடர்ந்து பதிவுகள் வ(ள)ரும்.*
*******************************************
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்
*கோவை கு.கருப்பசாமி.*
_____________________________________
🌹 *பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
______________________________________
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
*(41-வது நாள்.)*
இத் தென்காசித் திருக்கோயில் பதிவு நாளையுடன் மகிழ்ந்து நிறையும்.
______________________________________
🌷 *அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி திருக்கோயில்.*🌷
____________________________________
*தென்காசி.*
_____________________________________
*முக்கட் சோதி தென்காசி முன்னோன் கதை*
*மிக்க வேதவியாசன் விரித்ததை*
*தக்கவாய் தமிழால் சொலச் சண்பகக்*
*களிற்றின் கழல் பணிந்து ஏத்துவாம்.*
______________________________________
*இறைவன்:*அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி.
*இறைவி:* அருள்தரும் உலகம்மன்.
*தீர்த்தம்:* சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.
*தல விருட்சம்:* செண்பக மரம்.
*ஆகமம்:* காமிக ஆகமம்.
தென்காசி தலபுராணத்தில் முப்பது படலங்கள் உள்ளன. நேற்று பதியப்பட்ட படல பதிவுகளில் மேலும் சில படலங்கள்.
*கண்ணுவர் நடனம், கண்ட படலம்.*
கண்ணுவர் என்னும் முனிவர் தவ வலிமை பெற்றவர்.
இவருக்கு சிவபெருமானின் ஆனந்த நடனத்தைக் கண்டு மகிழ ஆவல் கொண்டார்.
அதனால், தென்காசி நகருக்கு வந்து புலியூரிலமர்ந்து வழிபாடுகளை செய்து வந்தார்.
தில்லையில் பதஞ்சலி முனிவரும், புலிக்கால் உடைய வியாக்கர பாதரும் ஆனந்த நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை கண் கண்டு மகிழ்ந்தார்கள்.
புலிக்கால் முனிவரின் பெயரைத் தாங்கிய புலியூரில் கட்டுவர் தவம் செய்தார்.
அங்கு சிவபெருமான் நடராஜ திருக்கோலம் கொண்டு வேங்கை மரத்து நிழலில் தை அமாவாசை நாளன்று ஆனந்த தாண்டவம் புரிந்து கண்ணுவருக்கு காட்சி கொடுத்தார்.
அந்த ஆனந்தக் காட்சி இன்றளவும் நடந்து வருகின்றன.
காசிவிசுவநாதர் கோயிலின் வடக்கு உட்பிரகாரத்தில் மேற்கிலிருந்து கிழக்கான வரிசையில் ஆறுமுகப் பெருமான் சந்நிதி இருக்கிறது.
இதற்கு அடுத்து, வியாக்கர பாத்ரும், பதஞ்சலி முனிவரும் ஆனந்த தாண்டவம் ஆடும் காட்சியினைக் கண்டு மகிழ்ந்த நிகழ்வை சிற்பமாகச் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.
*செண்பகப் பாண்டியனுக்கு காட்சி கொடுத்த படலம்:*
தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியனுக்கு செண்பகமாறன், காசிகண்ட பாண்டியன் என்ற பல பெயர்கள் உண்டு.
இவன் முருகப் பெருமானை எப்போதும் வணங்கி வருகின்றனர் இயல்புடையவன்.
நாள்தோறும் காசிக்கு செல்ல வேண்டும் என்ற கருத்துடையவன்.
ஒரு நாள் முருகப் பெருமான் இவன் கனவில் தோன்றி இவன் கையில் ஒரு ககனக்குளிகையைக் கொடுத்தார்.
ககனக்குளிகையை வாயில் இட்டால் யாருக்கும் தெரியாமல் வானில் பறந்து செல்லும் ஆற்றல் வந்து விடும்.
பாண்டியன் அந்த குளிகையை வாயிலிட்டுக் கொண்டு நாள்தோறும் காசிக்குச் சென்று வழிபட்டு வந்தான்.
ஒரு நாள் மனைவியும் இவனும் செல்ல காசியிலிருந்து சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு வந்து இங்கு வந்து பிரதிஷ்டை செய்து திருக்கோயில் அமைத்தான்.
மேலும் இப்புராணத்தில் திருக்கோயிலின் சிறப்புகளையும் ஆசார விதிகளையும் கூறி தலபுராணத்தை முழுமை படுத்தினார் அழகிய திருச்சிற்றம்பலக் கவிராயர்.
இறந்தார்க்கு முக்தியை தரும் காசியை விட பிறந்தார்க்கும், இறந்தார்கள் கும்பாபிஷேகம் வழிபட்டாருக்கும் முக்தி தரக்கூடிய தலம் தென்காசி.
விசுவநாதரையும் உலகம்மையையும் வழிபடுவதால் இன்பம் ஓங்கும். துன்பம் நீங்கும். பகை அழியும். வெற்றி கிட்டும். அறிவு நிலை பெருகும். திருமணம் நிகழும். பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும். பிணி எல்லாம் தீரும். வறுமை நீங்கப் பெறும். பெருமை வந்து சேரும். பேறுகள் அனைத்தும் வந்து கூடும் என்பதைக் கண்கூடாகக் காணலாம். இது உண்மை. வெறும் புகழ்ச்சி அல்ல!.
*மருத்துவரான உலகம்மை:*
உலகம்மைக்குத் திருப்பணி செய்து வரும் அன்பர்களுள் கணபதி என்பவரும் ஒருவர்.
கணபதியின் மூத்த மகள் பிரசவ வலி வந்து அதைப் பொறுக்கும் திராணி இல்லாமல் உருள புரள துடித்தாள்.
மருத்துவர்களிடம் கூட்டிப் போய் காண்பித்தனர். மருத்துவர்கள் பார்த்து விட்டு, குழந்தை நெஞ்சுக்கு ஏறி விட்டது. இரண்டு உயிர்களையும் காப்பாற்றுவது கடினம் என கைவிரித்தார்.
உடனே கணபதி, அம்மையை நினைத்து அழுது புலம்பினார்.
அவர் அழுது புலம்புகையில், *"அம்மையே! லோகநாயகியே!! -என் மகள் கருக்கொண்ட நாளிலிளேயே, பிறக்கும் பிள்ளைக்கு உன் பெயர் வைக்கிறேன் என வேண்டிக் கொண்டேனே? ....*
இப்பொழுது நிலையை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய்!, *நீ காத்தருள வேண்டும் கருணைக் கடலே!"* என நினைந்து நினைந்து உருகி கண்ணீர் உகுத்தார்.
அதே நேரம்...பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த தாய்க்கு உருளல் புயல் நின்று மூச்சு மட்டுமே இருந்தது.
இதைக் கண்டு சுற்றத்தார்கள் அனைவரும் வேதனை கலந்த பயத்துடன், என்னாவாகும் என? எல்லோரும் பிரசவ அறைக்கு வெளியில் காத்து நின்றனர்.
திடீரென *வீய்ய்* என குழந்தையின் அழுகுரல் கேட்டது.
அறைக்கு வெளியே காத்திருந்த சுற்றத்தார்களையும் உடனிருந்தவர்களையும் இந்த குழந்தையின் அழுகுரல் திரும்பிப் பார்க்க வைத்தது.
மருத்துவர்களும் அதன் பின்பே பிரசவ அறைக்குள் வேகமெடுத்து விரைந்தார்கள்.
அப்போது மருத்துவரின் கண்களுக்கு அறை சன்னல் கம்பி இடைவெளிகளுக்கிடையே அழகிய பெண் குழந்தை வெளியேறினதைக் கண்டார்கள்.
பின், பிரசவத் தாயை நோக்க,........ அந்தத் தாயும் மருத்துவரிடம்......., "குழந்தை வடிவான ஒரு பெண்வந்து, எனக்கு குழந்தையை பிரசவிக்க வைத்துவிட்டு, வந்த இந்த சன்னல் வழியே திரும்பச் சென்று விட்டாள் எனக் கூறினாள் கணபதியின் மனைவி.
அந்த அம்மை லோகநாயகியே என் மகளை காப்பாற்றியிருக்கிறாள், என கண்கலங்கி கூறி அம்மையை நினைந்து நினைந்து மீண்டும் தொழுதார்.
இது, கலியுக ஆண்டான 1972-ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம்.
*நம்பினோர் நல்லா உளர்.*
*நம்பாதோர் மனம் கேடாவர்.*
திருச்சிற்றம்பலம்.
நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களில் நாளைய பதிவு
*தென்காசி திருக்கோயில் தெப்ப வழக்கு.*
நாளையுடன் நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களின் தென்காசி தல அருமைகள் பெருமைகள் மகிழ்ந்து நிறையும்.
*******************************************
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்
*கோவை கு.கருப்பசாமி.*
_____________________________________
🌹 *பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
______________________________________
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
*(41-வது நாள்.)*
இத் தென்காசித் திருக்கோயில் பதிவு நாளையுடன் மகிழ்ந்து நிறையும்.
______________________________________
🌷 *அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி திருக்கோயில்.*🌷
____________________________________
*தென்காசி.*
_____________________________________
*முக்கட் சோதி தென்காசி முன்னோன் கதை*
*மிக்க வேதவியாசன் விரித்ததை*
*தக்கவாய் தமிழால் சொலச் சண்பகக்*
*களிற்றின் கழல் பணிந்து ஏத்துவாம்.*
______________________________________
*இறைவன்:*அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி.
*இறைவி:* அருள்தரும் உலகம்மன்.
*தீர்த்தம்:* சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.
*தல விருட்சம்:* செண்பக மரம்.
*ஆகமம்:* காமிக ஆகமம்.
_______________________________________
*தெப்பக்குள வழக்கு:*
திருக்கோயில்களை, அரசு எடுத்துக் கொள்ளும் காலத்திற்கு முன்பான சமயத்தில்.............
காசி விசுவநாதர் கோயிலின் தெப்பக்குளத்தைப்பற்றிய உரிமைப் பிரச்சனை எழுந்தது.
வழக்கு கோர்ட்டு வரை சென்றது.
எதிர்வாதி- முகமதிய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் இவ்வழக்கைத் கொடுத்திருந்தனர்.
வழக்கில்.....
திருக்கோயிலைச் சார்ந்திருந்த வர்கள் தெப்பக்குளம் காசிவிசுவநாதர் திருக்கோயிலுக்கே சொந்தமானவை என்றனர்.
முகமதிய சமுதாயாதச் சேர்ந்தவர்களோ, தெப்பக்குளம் எங்களுக்குரியாதனது என்றனர்.
வழக்கின் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.
தீர்ப்பு கூறும் வேளை வந்தது.
ஆனால், திருக்கோயிலைச் சார்ந்திருந்தவர்களுக்கு ஒரு வித பயம் இருந்தது. மனம் கசிந்தனர். என்னவாகுமோ தவித்தனர்.
அந்த பயத்துக்குக் காரணம்............
தீர்ப்பைக் கூறப்போவது ஒரு முகமதியர் என்பதால்....
தீர்ப்பை வாசிக்கும் முன்தின இரவு,.........
இரண்டு பெண் குழந்தைகள் நீதிபதியின் வீட்டிற்க்கு சென்றிருக்கின்றனர்.
ஒரு குழந்தை துர்க்கை போல சூலத்துடனும், மற்றொரு குழந்தை லோகநாயகி போல கையில் தாமரைப் பூவுடனும்........
நீதிபதியிடம், சான்றுகள் அனைத்தையும் ஒப்பித்தனர் அப்பெண் குழந்தைகள்.
சான்றுகளைக் கேட்டு அதிர்ந்த நீதிபதி, அதிர்ச்சியாகி படீரென படுக்கையினின்று எழுந்தார்.
குழந்தைகளைக் காணவில்லை.
விடிந்தது.
தீர்ப்பு வாசிக்கும் இடத்தில்...
தீர்ப்பினைக் கேட்க, திருக்கோயிலைச் சார்ந்திருந்தவர்களும், முகமதியர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் குழுமியிருந்த நிறைந்திருந்தார்கள்.
கூடவே, தென்காசி ஊர்பொதுமக்கள், வர்த்தகர்கள், இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும்............
இருக்கைக்கு அமர்ந்த நீதிபதி......, இவ்வழக்கு சம்பந்தமான சான்றுகள் அனைத்தையும் இந்த நீதிமன்றம் தீர சரிபார்த்து விட்டது.
வாதம் தொடுத்தது இருசாராராயினும், தெப்பக்குளம் சார்ந்த இடமும், அதன் பலன் அனைத்தும், மேலும் சான்றுகள் அனைத்தும் தேவைக்கு நிறைய அதிகமாகவே அறியப்பட்டது.
சான்றுகள் அனைத்தும், 'தெப்பகுளம்' காசிவிசுவநாததிருக்கோயிலுக்கே என உறுதிபட நம்புகிறது.
ஆகையால் இந்த நீதிமன்றம், தெப்பக்குளம் காசிவிசுவநாதர் திருக்கோயிலுக்கு உரியது என சான்றுரைக்கிறது.
இது கதையல்ல? வரலாறான உண்மை!
சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.
நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களில் இன்றைய பதிவுடன் மகிழ்ந்து நிறைவாய் கூறியிருந்தோம். இன்னும் சில குறிப்புகளுடன் நாளைய பதிவுடன் நிறைசெய்து மகிழ்கிக்கிறோம்.
நாளையுடன் நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களின் தென்காசி தல அருமைகள் பெருமைகள் பதிவு மகிழ்ந்து நிறையும்.
திருச்சிற்றம்பலம்.
*******************************************
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்
*கோவை கு.கருப்பசாமி.*
_____________________________________
🌹 *பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
______________________________________
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
*(41-வது நாள்.)*
இத் தென்காசித் திருக்கோயில் பதிவு நாளையுடன் மகிழ்ந்து நிறையும்.
______________________________________
🌷 *அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி திருக்கோயில்.*🌷
____________________________________
*தென்காசி.*
_____________________________________
*முக்கட் சோதி தென்காசி முன்னோன் கதை*
*மிக்க வேதவியாசன் விரித்ததை*
*தக்கவாய் தமிழால் சொலச் சண்பகக்*
*களிற்றின் கழல் பணிந்து ஏத்துவாம்.*
______________________________________
*இறைவன்:*அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி.
*இறைவி:* அருள்தரும் உலகம்மன்.
*தீர்த்தம்:* சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.
*தல விருட்சம்:* செண்பக மரம்.
*ஆகமம்:* காமிக ஆகமம்.
_______________________________________
*வேம்புப்பட்டர்:*
உலகம்மன் கோயிலுக்கு பூசைகள் செய்து வந்தவர் வேம்புபட்டவர் என்பவர்.
இவர் பலமுறை உலகம்மையின் எழிற்கோலத்தை கண்டு வணங்கப் பெற்றிருக்கிறார்.
சின்னஞ்சிறு பெண்போல சிற்றாடை கட்டி, பூசை வேளைகளில் வந்து, பழம் வெற்றிலைகளை எடுத்துச் செல்லுவதை இவ்வேம்புபட்டர் பலமுறை கண்டிருக்கிறார்.
இரவில் நடுநிசியில் குழந்தை வடிவாகவே உலகம்மை கோயிலுக்குள் சுற்றி வருவதையும், கோபுரப்பணி நடந்து கொண்டிருக்கும் போதும், கோபுரம் வரை சென்று பார்வையிட்டதை வேம்புபட்டரும் மற்றும் பலரும் கண்கூடாகக் கண்டிருக்கிறார்கள் என்பன செய்தியும் உண்டு.
கோபுரம் கட்டிக் கொண்டிருந்த வேளையில், பெண் பணியாளர்கள் சிலரின் செவிகளில், சலங்கை சத்தம் நடந்து செல்லும் பாங்குடன் காதொலியாக கேட்டிருக்க கொண்டிருக்கின்றனர்.
(கட்டுமான பெண் பணியாளர்கள் யாரும், சலங்கை அணிந்து வேலை செய்வார் கிடையாது என்பது நோக்கத் தக்கது.)
விசுவனே விசுவ நாதன்,
விசுவேசன், உலகநாதன்
பசுபதி, சிவன், மாயோன்
பராபரன், முக்கட் பெம்மான்
சிசுவரம் தருவோன், நம்பன்
சிவை மணாளன், என்றோர்
அசுதையார் நீலகண்டன்
அநாதி தென்காசி நாதன்.
மணிவாசகரின் வாக்கான.......
உற்றாரை யான்வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றால தமர்ந்துரையுங் கூத்தா உன் குரலை கழற்கே குற்றாவின் மனம் போலக் கசிந்துருகி வேண்டுவனே!
என்கிற மணிவாசகரின் வாக்கிற்கேற்ப கசிந்து உருகினால் காசிவிசுவநாதர் கண்ணீரைத் துடைத்துத் வரங்களை வாரி வழங்கி மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைப்பார்.
இத்துடன் நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களின் தென்காசி தல பதிவு மகிழ்ந்து நிறைந்தது.
சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.
நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களில் நாளைய பதிவு *அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயில். குற்றாலம்.*
திருச்சிற்றம்பலம்.
*******************************************
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment