பலர் வாழ்வில் பற்பல அற்புதங்கள் செய்யும் அந்த காஞ்சி தெய்வம் இந்த நாயிர் கடையான அடியேன் என் வாழ்வில் செய்த அற்புதம்
கடந்த செப்டம்பர் 2016 என் வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்த மாதம் என் பணி இடம் தனி வாழ்வு எல்லா இடத்திலும் பிரச்சனையின் அணிவகுப்பு.
காரணம் ஒன்றும் இல்லா பிரச்சனைகள் என்ன செய்வது என்றே புரியாத புதிர் ..
வழியேதும் இன்றி resignation letter ஐ தந்து விட்டேன்.
புது வேலைக்கு அப்லே செய்து மூன்று மாத notice period ல் இருந்தேன் . திக்கற்றவர்க்கு அந்த அனாத ரட்சகி த்ரிபுரசுந்தரி சந்திரமெளலீஸ் வர தம்பதியும் குருவாக பிருந்தாவனத்தில் இருந்து அருளும் அந்த பரமேஸ்வரனையும் விட வேறு கதிதான் ஏது ..
காஞ்சி சலோ ...
என் நண்பர் ஸ்ரீ ராம் மற்றும் நான் காலை சென்னையில் இருந்து கிளம்பி வரதர் காமாக்ஷி கைலாசநாதர் ஏகம்பம் முதலிய ஸ்வாமிகளை தரிசித்து ஸ்ரீ மடத்திற்கு மதியம் 12.30 மணி அளவில் சென்று தரிசித்தோம்
அன்று மடத்தில் மிகுந்த கூட்டம்
அதிஷ்டான முன் அமர்ந்து அந்த தயா பரணை காண காண கண்களில் நீர்வீழ்ச்சி என்ன ஏன் பா இப்படி சோதிக்கிற உன்ன விட்டா வேறு கதி இல்ல அப்படிங்கற காரணத்தால் இப்பிடி அழ வைக்கிற யா என கேள்விகள் ஐந்து முறை சுற்றி வந்து நமஸ்காரம் பன்னுர து என் வழக்கம் அன்று அவ்வாறு நான் சுற்றினேன்
அன்று
அதிஷ்டான நேர் பின்புறம் உடல் முழுவதும் விபூதி தரித்து ருத்திராட்ச தாரியாக ஒருவர் அமர்ந்து அனுஷ்டானம் செய்து கொண்டு என்னை மிக கூர்மையாக பார்த்தார் ...
இரண்டாம் முறை சுற்றும் போது உத்தரவு இடும் தோனியில் சாப்டுட்டு போ என்று கூறி ைார் நான் சரி என்று தலை மட்டும் ஆட்டிவிட்டு என் பிரதட்சணத்தை தொடர்ந்து நிறைவு செய்து மீண்டும் முன் மண்டபத்தில் அமர்ந்து அந்த தயாநிதியைக் கண்டு மனம் கசிந்து கிளம்ப எத்தனிக்கையில் மண்டப ஒரத்தில் இருந்து என்னை அழைக்கும் சத்தம் நான் திரும்பி பார்க்கையில் நான் முன்பு கண்ட அதே நபர் இப்போது இங்கே
வா என அழைத்தார் நான் என் நண்பர் அருகில் சென்றோம்
என்னை கூர்ந்து பார்த்து உன் பெயர்
எங்கிருந்து வர
என்ன பன்னுர எனக் கேள்விகள் நான் பதில் கூறினேன்
என்னை கூர்ந்து பார்த்து தன் மடியில் இருந்து இரண்டு பெட்டலம் என் கையில் போட்டர் எல்லாம் சரி ஆகிடும் நல்லா இருப்ப
சாப்டுட்டு போ மீண்டும் உத்தரவு
வேறு என்ன செய்வது என தெரியாது மடத்து போஜன சாலைக்கு சென்று அமர்ந்தோம்
மதியம் சந்திரமெளலீஸ் வர பிரசாதம் ஆகிய உணவை உண்டு வந்து அந்த நபரை தேடினேன் எங்கும் காண முடியவில்லை
பின் கிளம்பி வீடு வந்து மறுநாள் அந்த விபூதியை இட்டுண்டு வேலைக்கு போறேன் சத்திய மா எனக் கே ஒன்னும் புரியல இத்தனை நாள் நான் எவ்வளவு முயன்றும் முடியாத கார்யம் எல்லாம் தானாக நடக்கிறது .
மீண்டும் முன்னெற்றம் திடீர் என நான் கனவிலும் எதிர்பாரா இடங்களில் இருந்து interview call...
நான் சென்ற எல்லா இடத்திலும் selected...
demand என் கையில்
என் பழைய பணி இடத்திலும் எனக்கு மீண்டும் நற்பெயர் resignation ஐ திருப்ப வாங்கி கோ எனக் அவர்களே கேட்கும் அளவு மாற்றம் ...
நான் மீண்டும் மடத்திற்கு சென்று அன்று சந்திக நபரை பல முறை தேடியும் யாருக்கும் தெரிய வில்லை ..
இன்று நான் வேலை செய்யும் நிறுவன தலைவர் மஹா பெரியவா அத்யந்த பக்தர் ..
என் தலைவிதியை மாற்ற தான் அந்த தீனதயாளன்
காஞ்சி ப்ரத்யக்ஷ பரமேஸ்வரன் விபூதி ப்ரசாதம் தந்தnனோ
இப்போதும் தன் பக்தர்கள் கண்ணீரை துடைக்க அந்த கருணை சமுத்திரம் ....... சமுத்திரமn இல்லை அந்த கருணை தெய்வம்
அங்கே ப்ருந்தாவனத்தில் அமர்ந்து உள்ளது
தன்னை நம்பிய யாரையும் என்றும் நான் கைவிட மாட்டேன்னு என் மூலமா மீண்டும் மீண்டும் நிருபிக்கிறார்
குரு உண்டு பயமில்லை
குறையெதும் இனி இல்லை
ஆனந்த கண்ணீருடன்
பால சிவ சுப்பிரமணியன்
ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர
மஹா பெரியவா துணை
No comments:
Post a Comment