Wednesday, September 20, 2017

Kailasanatha swamy temple

உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹*பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
             *(9-வது நாள்.)*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌷 *அருள்மிகு கைலாசநாதசுவாமி திருக்கோயில்.*🌷
             *திருநெல்வேலி.*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*இறைவன்:*
அருள்மிகு கைலாசநாதர்.

*இறைவி:* அருள்தரும் செளந்தரவல்லி அம்மன்.

*தீர்த்தம்:* தாமிரபரணி.

*தல விருட்சம்:* வில்வம்.

*ஆகமம்:* காமிக ஆகமம்.

*தல அருமை:* 
--------------------------
*கந்தமார் தருபொழில் பத்திகள் பாய்லர் மதுத் தில்லை, சிந்துபூந்துறை கமழ் திருநெல்வேலி* என திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற எழில் மிக்க சிந்துபூந்துறையிலே தாமிரபரணி ஆற்றின் கரையினிலே திருக்கோயில் அமைந்திருக்கிறது.

நெல்லையப்பர் காந்திமதி அம்மையுடன் எழுந்தருளி வந்து சிந்துபூந்துறையிலே தீர்த்தமாடும் இடத்திற்கு அருகே தைப்பூச மண்டபமும், அதையொட்டி திரேக்கோயிலும் தோன்றியதாக வரலாறு.

*அமைப்பு:*
குருந்து செட்டியார் எனும் ஒரு பணக்கார அன்பர் தமக்கு குன்ம வயிற்று வலியை தீர்த்து வைத்த பெரியவர் ஒருவருக்கு சமாதி அமைத்து, அவர் நினைவாக இத்திரேக்கோயிலை கட்டினார்.

மதில் சுவர்களையும் புணரமைத்தார்.

செட்டியாருடைய உருவம் கொடிமரத்திற்குப் பக்கத்தில் உள்ள தூணில் காணமுடிகிறது.

நல்லக்கண்ணு முதலியார் எனும் அன்பர் ஒருவர் இத்திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்வித்து, ஆலயத்திற்காக நிலங்களையும் வாங்கி அளித்திருக்கிறார்.

இச்சரித்திரத்தை திருக்கோயிலின் வடகிழக்கு மூலையில்  பொறிக்கப்பட்டுள்ளது.

முருகேச முதலியார் என்பவரால் இத்திருக்கோயிலின் முன் மண்டபத்தை கட்டித் தருவித்திருக்கிறார்.

இதன் சான்றான கல்வெட்டு மண்டபத்தின் வலப்புறமும் இடப்புறமும் இருக்கக் காணலாம்.

*திருவிழாக்கள்:*
*வைகாசி:* பிரமோற்சவம் பத்து நாட்கள்.
ஒன்பதாம் நாள் திருத்தேர் பவனி.

*ஆவணியில்:* விநாயகர் சதுர்த்தி.

*புரட்டாசியில்:* நவராத்திரி.

*ஐப்பசியில்:* கந்த சஷ்டி, மற்றும் திருக்கல்யாணம்.

*கார்த்திகையில்:* திருக்கார்த்திகை விழா.

*மார்கழியில்:* திருப்பள்ளியெழுச்சி, மற்றும் திருவாதிரை.

*மாசியில்:* மகாசிவராத்திரி.

*பூஜைகாலம்:* 
காலை 6.30 -க்கு திருவனந்தல்.

காலை 8.30-க்கு காலசந்தி. 

காலை 10.00- மணிக்கு உச்சிக்காலம்.

மாலை 6.30-மணிக்கு சாயரட்சை.

இரவு 8.30- மணிக்கு அர்த்தசாமம்.

*சிறப்பு:* 
இத்திருத்தலத்து ஈசனை காம்போதி ராகத்தில் அமைந்த *திரு கைலாசநாதர் பஜே* என்றான
இறைவியை ரஞ்சனி ராகத்தில் அமைந்த *பருவத ராஜகுமாரி பார்வதி* என்றான பாடல்களை நாதஜோதியான *முத்துசுவாமி தீட்சிதர்* பாடியிருக்கிறார்.

*இருப்பிடம்:* திருநெல்வேலி சந்திப்பில் இருந்து அரை கி. மி. தொலைவில் உள்ள கைலாசபுரத்தில் அமைந்திருக்கிறது.

*அஞ்சல் முகவரி:*
செயல் அலுவலர்,
அருள்மிகு சாலைக்குமாரசுவாமி திருக்கோயில்,
திருநெல்வேலி சந்திப்பு, 
தொலைபேசி எண்: 0462 2333675.

(இக்கோயிலைப் பற்றிய தொடர்புக்கு, நேற்று வந்த பதிவில் உள்ள  சாலைக்குமாரசுவாமி திருக்கோயில் முகவரியே இத்திருக்கோயில் தொடர்புக்கும் ஒன்றானது.)

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!

           திருச்சிற்றம்பலம்.

நெல்லை மாவட்ட சிவாலயத்தில் நாளைய தினம்...... *அருள்மிகு. சொக்கநாதசுவாமி* திருக்கோயில் வ(ள)ரும்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment