Thursday, August 3, 2017

Thirunageswaram temple

உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை. கு.கருப்பசாமி.*
பதியும் பணியாய் பணியே அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
           *(தல தொடர்.47)*
☘ *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.* ☘
(நேரில் சென்று தரிசித்ததைப் போல......)
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
  ☘ *திருநாகேஸ்வரம்.* ☘
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*இறைவன்:*
நாகேசுவரர், நாகநாதர், செண்பகாரண்யேசுவரர்.

*இறைவி:*
குன்றமா முலையம்மை, கிரிகுஜாம்பிகை, பிறையணிவாணுதலாள்.

*தலமரம்:* செண்பக மரம்.

*தீர்த்தம்:* சூரிய தீர்த்தம் உள்பட பன்னிரண்டு தீர்த்தங்கள்.

சோழ நாட்டின் காவிரி தென்கரையில் அமைந்துள்ள 128 தலங்களுள் 29- வது தலமாக இத்தலம் போற்றப்படுகிறது.

*இருப்பிடம்:*
கும்பகோணத்திலிருந்து கிழக்கே ஆறு கி.மீ தூரத்தில் உள்ளது.

*பெயர்க்காரணம்:*
ஆதிசேஷன், தட்சகன், கார்கோடகன் முதலிய நாகராஜாக்களால் பூஜிக்கப் பெற்றதால் இத்தலம் நாகேச்சுரம் எனவாயிற்று.

செண்பகவனம், கிரிகன்னிகை வனம் என்பன இத்தலத்திற்கு வேறு பெயர்களும் உண்டு.

*கோவில் அமைப்பு:*
காவிரியாற்றின் தென்பகுதியில் பதினைந்து ஏக்கர் நிலப்பரப்பளவுடன் அமைந்திருக்கிறது இத்தலக் கோவில்.

ஐந்து நிலை இராஜ கோபுரத்தை முதன் முதலாக நம் கண்களுக்குப் புலப்படவும், *சிவ சிவ! சிவ சிவ!!* என வணங்கி மொழிகிறோம்.

இக்கோயில், மூன்று பிரகாரங்களுடன் அமைந்திருக்கிறது.

சூரிய தீர்த்தமான கரையில் மழுப்பொறுத்த விநாயகர் சந்நிதி.

இரண்டாம் பிரகாரத்தின் தென்மேற்கில் நாகாராஜா உருவம் அமைந்துள்ளது.

சேக்கிழார் பெருமான் இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவன்பால் பேரன்பு செலுத்தி நாள்தோறும் வழிபட்ட தலம்.

உள்நுழைந்தவுடன் நிருத்த கணபதியை வணங்கித் தொழுதெழுகிறேம்.

மற்றும் நந்தி தேவரும், விநாயகரையும் வணங்கிக் கொண்டோம்.

இதனின் இடப்புறம் சூரிய புஷ்கரணியும், வலதுபுறமாய் நூற்றுக்கால் மண்டபத்தையும் கண்டு ஆனந்தித்து நகர்கிறோம்.

மூலவரை வணங்கித் தொழுது கொள்கிறோம்.

மூலவரின் கருவறையை அடுத்த முல் பிரகாரத்தில் மேற்புற விநாயகர், சந்திரசேகர், முருகன், பஞ்சலிங்கம், லக்குமி முதலிய சந்நிதிகள் உள்ளன.

வடபுறத்தில் அறுபான்முன்மை நாயன்மார்கள், நடராசர் சந்நிதிகளும், பள்ளியறையும் உள்ளன.

தென்பால் சேக்கிழாரும், அவர் தாயார் பாலறாவாயர், நால்வர் சந்திதிகளும், மற்றும் சேக்கிழார் மண்டபமும் இருக்கிறது.

சுவாமி கோவிலானது சோமாஸ்கந்தர் அமைப்புடையதாக விளங்குகிறது.

நாகநாதசுவாமி, முருகன், பிறையணி வால்நுதழ் அம்மை சந்நிதிகள் இங்கு சிறப்பினைக் கொண்டவை.

கோஷ்டத்தில் மகேஸ்வர மூர்த்தங்கள் இருக்கின்றன.

பெருமானுக்கும், அம்மைக்கும் உண்டான இருவடிவங்களாவது செண்பக மரத்தடியில் அமைந்த நாகநாதர் சந்நிதியும், அர்த்தநாரீஸ்வரர் சந்நிதியும், பிறையணிவால் நுதழ் உமை சந்நிதியும், கிரிகுஜாம்பிகை சந்நிதியும் ஆகும்.

*தேவாரம் பாடியவர்கள்.*
*சம்பந்தர்*-2-ல் இரண்டு பதிகமும்,
*அப்பர்*--4-ல் ஒரு பதிகமும், 5-ல் ஒரு பதிகமும், 6-ல் ஒரு பதிகமும்,
*சுந்தரர்* 7-ல் ஒரு பதிகமும் ஆக மொத்தம் ஆறு பதிகங்கள்.

*தலமான்மியம்:*
நாகராஜன் ஒரு சிவராத்திரியில் நான்கு யாமங்களில் முதல் யாமத்தில் வில்வ வனமான குடந்தைக் கீழ்க் கோட்டத்திலும், இரண்டாம் யாமத்தில் செண்பக வனமான இத்திருநாகேச்சுவரத்திலும்,மூன்றாவது யாமத்தில் திரு வன்னி வனமான திருப்பாம்புரத்திலும், நான்காம் யாமத்தில் புன்னை வனமான நாகூரிலும் வழிபட்டு பேறு பெற்றான்.

இந்த நான்கு தலங்களிலும் நாகராசன் பெயராலேயே வழங்கப்படுதல் கண்கூடு.

இத்தலத்தில் நந்திகேசவர், சூரியன், விநாயகர், நளன், பராசரர் பாண்டவர்கள், வசிட்ட முனிவர், இந்திரன், பிரம்மன், பகீரதன், சித்தரசேனன், நாக மன்னர்களான ஆதிசேஷன், தக்கன், கார்க்கோடன், செளனக முனிவர், கதிரவன், நர்க்குணன், ராக்கதம், பைசாசம், வேதாளம், ராகு பகவான் வழிபட்டு பேறு பெற்ற தலமிது.

வெளிப் பிரகாரத்தில் விளங்கும் ராகு பகவான் சந்நிதியில் பாலாபிஷேகம் ராகு நேரத்தில் செய்தால், ராகு கேது தோஷங்களும் சர்ப்ப தோஷங்களும் நிவர்த்தி பெறுகிறது.

கேரள நாட்டு மன்னனான சம்புமாலி என்பவன் பொன்னால் பல அறங்கள் செய்து வந்தான்.

காலாங்கிரி முனிவர் அவனிடம் சென்ற போது அதற்கு முதல் நாளே அவன் அறத்தை முடித்து விட்டானாதாலால், அவனால் அம்முனிவருக்கு பயன் கிட்டவில்லை. 

வெகுண்ட முனிவர் அவனை அலகை உருப்பெற்று அலைக என்று சாபமிட்டார்.

பதைத்த மன்னன் பலவாறாகப் புலம்பி முனிவரிடம் கழுவாய் வேண்டினான்.

சற்றே மனமிரங்கிய முனிவரும் அவ்வலகை உருவுடன் அவன் ஆயிரத்தெட்டு சிவத் தலங்களையும் கண்டு வணங்கி இறுதியில் செண்பக வனம் எனும் திருநாகேச்சுவரத்திற்கு வந்து சூரிய புஷ்கரணியில் நீராடி நாகநாதப் பெருமானையும், குன்றுமாமுலையம்மையையும் வணங்கி சாப நீக்கம் பெறுமாறு கழுவாய் கூறினார்.

அவ்வாறே சம்புமாலி மன்னனும் விமோசனம் பெற்றான்.

அலகை உருக்கொண்ட சம்புமாலியின் உருவம் அலங்கார மண்டபத்தில் ஒரு தூணில் காணப்படுகிறது.

ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் சம்புமாலி நாடகத்தை புதுத் தெருவில் நடத்தி வருகின்றார்கள்.

*ராகு பெயர்ச்சி விழா:*
ஒன்றறை வருடங்களுக்கு ஒருமுறை ராகு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி இடம் பெயர்வார். இதனையொட்டி லட்ச்சார்ச்சனை மற்றும் சந்தனக் காப்பு ஆகியவை நடைபெறும்.

*திருவிழாக்கள்:*
சித்திரை பெளர்ணமியில் சிங்கார வேலர் புறப்பாடு.
வைகாசி பூசத்தில் சேக்கிழார் பெருவிழா.
ஆனித் திருமஞ்சனம்.
ஆடிப்பூரம்.
ஆடி 18- ஆம் பெருக்கு.
ஆவணி விநாயகர் சதுர்த்தி.
புரட்டாசி நவராத்திரி விழா.
ஐப்பசி கந்த சஷ்டி விழா.
கார்த்திகை மாதம் 3- வது வெள்ளிக் கிழமையில் தொடங்கி பத்து நாட்கள் பெருவிழா நிகழ்வுறும்.
ஒன்பதாம் நாளில் தியுத்தேர்.
கடைசி ஞாயிறு சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெறும்.
மார்கழியில் நடராஜர் புறப்பாடு.
தை முதல் நாளில் கிரிகுஜாம்பிகை புனுகு சட்டம் சார்த்துதல்.
தை இரண்டாம் நாளில் லட்ச்சார்ச்சனை தொடக்கம்.
மாசி சிவராத்திரி விழா.
பங்குனியில் உத்திரம், சுப்பிரமணியர் தெப்ப உலா.

*பூஜை:*
காமீக ஆகம முறையில் ஐந்து கால பூசை.

காலை 6.00 மணி முதல் பகல் 12.45 மணி வரை,

மாலை 4.00 மணி முதல் இரவு 8.45 மணி வரை.

(ராகு கால நேரத்தில் சந்நிதி திறந்திருக்கும்.)

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு, நாகநாதசுவாமி திருக்கோயில், 
திருநாகேசுவரம் அஞ்சல்- 612 204
கும்பகோணம் வட்டம், 
தஞ்சை மாவட்டம்,

*தொடர்புக்கு:*
புலவர் முத்துக்குமாரசுவாமி.
0435-- 2463354.
94434 89833

       திருச்சிற்றம்பலம்.

*நாளைய தலம்.......திருவிடை மருதூர்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத்  தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment