Thursday, August 3, 2017

Pasupatheeswarar temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
        *(38 .வது தொடர்)*
🌿 *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.* 🌿
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.....)
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
🌿 *ஆவூர்ப் பசுபதீச்சுரம்.* 🌿
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*இறைவன்:*
பசுபதீஸ்வரர், அஸ்வத்த நாதர், ஆவூருடையார்.

*இறைவி:*
மங்களாம்பிகை, (இந்த அம்பிகையை குளத்திலிருந்து எடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.)

பங்கஜவல்லி.

(இதுவே பழமையானது. தேவாரத்தில் பங்கைய மங்கை விரும்பும் ஆவூர் என வருகிறது. ஆனால், இங்கு மங்களாம்பிகை சந்நிதிக்கே.)

*தலமரம்:* அரசுமரம்.

*தீர்த்தம்:* பிரம்ம தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பொய்கை ஆறு, காமதேனு தீர்த்தங்கள்.

(காமதேனு தீர்த்தம் தேனு தீர்த்தமாக வழக்கத்தில் மாறியழைக்கப்படுகிறது.)

சோழ நாட்டின் காவிரித்ஸதென்கரையில் அமையப் பெற்றுள்ள 128 தலங்களுள் 21 -ஆவது தலமாகப் போற்றப் பெறுகின்றது.

*இருப்பிடம்:*
கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் வலங்கைமான் வந்து, அங்கிருந்து கோவந்தகுடி வழியாக இத்தலத்தை அடையலாம்.

கும்பகோணத்திலிருந்தும் நேரடியாக பேருந்து வசதிகள் இருக்கின்றன.

*பெயர்க்காரணம்:*
காமதேனு உலகிற்கு வந்த இடம்.

கோ+வந்த+ குடி= கோவந்தகுடி ஆயிற்று.

ஆ என்றால் பசு. பசு வந்த ஊர் ஆவூர் ஆயிற்று. ஆவூர் ஊர் பெயர்.

பசுவத்தீஸ்வரர் கோயில் பெயர், அசுவத்த வனம், மணிகூடகிரி என்கிற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு.

பூலோகத்திற்கு வந்த பராசக்தி, தவம் செய்வதற்காக இங்கு வந்து தங்கினாள்.

அப்போது இந்த இடம் வனமாக காட்சியளித்தது. இந்த வனத்திற்கு வந்த தேவர்கள் தங்களை, மரம் செடி கொடிகளாக மாறிக் கொண்டு அன்னையை வழிபட்டு வந்தனர்.

பராசக்தியின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், ஜடாமுடியுடன் காட்சி தந்தார்.

எனவே, இத்தல இறைவனுக்கு *கர்வதீஸ்வரர்* என்று பெயர் ஏற்பட்டது.

இந்த வனத்தின் பெருமையை காமதேனுவின் கன்றான 'பட்டி' என்ற பசு உணர்ந்தது.

மேருமலையில் ஒரு சமயம் ஆதிசேஷனுக்கும்,  வாயு பகவானுக்கும் கடுமையான யுத்தம் நடந்தது.

அப்போது வாயுபகவானால் வீசியெறியப்பட்ட இரு சிகரங்களில் ஒன்றான மணிகூடதிரி ஆவூரிலும், சுந்தரகிரி திருநல்லூரிலும் விழுந்தது.

மாடக்கோயில் அமைப்புடன் கூடிய தலம்.

கோட்செங்கட் சோழன் திருப்பணி மாடக்கோயில்.

சங்கப்புலவர்களான ஆவூர் கிழார், ஆவூர் மூலங்கிழார் முதலியோரைத் தந்த தலம்.

கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இவ்வூர், சோழ மன்னர்களின் கோட்டையாக விளங்கின.

இத்தலத்தின் கல்வெட்டில், *நித்தவிநோத வளநாட்டைச் சார்ந்த ஆவூர்க் கூற்றத்தைச் சார்ந்த பசுபதீஸ்வரமுடையார்* என இறைவனாரைப் பற்றி பொறிக்கப்பட்டிருக்கிறது.

திருநல்லூர் சப்தஸ்தானங்களுள் இதுவும் ஒன்றான ஆவூர் பசுபதீசுவரர் கோயில் ஆகும்.

*பிற சப்தஸ்தான தலங்கள்:*
திருநல்லூர். கோவிந்தக்குடி,  மாளிகைத் திடல், மட்டியான்திடல், பாபநாசம் (தஞ்சை மாவட்டம்), திருப்பாலைத்துறை ஆகியன.



*தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்* 1-ல் ஒரே ஒரு பதிகம் மட்டுமே பாடியுள்ளார்.

*புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடுவார்தம் மனத்தார்திங்கட்*
*கண்ணிய ரென்றென்று காதலாளர் கைதொழு தேத்த இருந்தவூராம்*
*விண்ணுயர் மாளிகை மாடவீதி விரைகமழ் சோலை சுலாவியெங்கும்*
*பண்ணியல் பாடல றாதஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடுநாவே*
*தேவியோர் கூறின ரேறதேறுஞ் செலவினர் நல்குர வெண்ணைநீக்கும் ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும் அப்பனாரங்கே அமர்ந்தவூராம்*
*பூவிய லும்பொழில் வாசம்வீசப் புரிகுழலார்சுவ டொற்றிமுற்றப்*
*பாவியல் பாடலறாத ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடுநாவே.*

*கோவில் அமைப்பு:*
வெட்டாற்றின் வடபகுதியில் இத்தலம் உள்ளது.

ராஜ கோபுரம் ஐந்து கொண்டு கம்பீரமாக காட்சி தர கோபுரத் தரிசனம் செய்து கொள்கிறோம்.

கோபுரத்தைத் தாண்டி உள் புகுகிறோம். வாகன மண்டபத்தைக் காண்கிறோம்.

அடுத்ததாக நகர, உட்பிரகாரம் வருகிறது.

அங்கே நிருத்த கணபதியும், தட்சிணாமூர்த்தியும், முருகன், மகாலட்சுமி சந்நிதிகள் இருக்க வணங்கிக் கொண்டோம்.

இங்கிருக்கும் முருகன் வில்லும், அம்பும் ஏந்தி வேடுவனாக காட்சி தருவது சிறப்பு.

இதற்கடுத்ததாக நடு மண்டபம் இருக்கின்றது.

இருபத்து நான்கு படிகள் ஏறி நடராஜர் சந்நதிக்கு வருகிறோம். ஆனந்தமயமான அவன் தூக்கிய திருவடியைக் கண்டு வணங்குகிறோம்.

உள் மண்டபத்தில் காமதேனு குளிர குளிர பால் சொரிந்து வழிபட்ட மூலவரைத் தயிசனத்தை கண் இமையாது கண்டு வணங்கித் தொழுது கொள்கிறோம்.

இரண்டு அம்பிகை சந்நிதிகள் இருக்க , இரண்டு அம்மைகளின் கருணை பொழியும் அருளைக் கண்டு வணங்கிக் கொண்டு வெளியேறுகிறோம்.

இந்த இரண்டு அம்பாள்களில் ஒரு அம்பாளான பங்கஜவல்லி அம்மையை தசரதரால் ஸ்தாபிக்கப்பட்டவையாகும்.

அடுத்தாக நாம் காணும், மகாமண்டபத்தின் ஒரே வரிசையில் பஞ்ச பைரவர்கள் உள்ளனர்.

*தல அருமை:*
பொருத்தமான ஒரு நல்ல நாளை தேர்ந்தெடுப்பதற்கு பஞ்சாங்கத்தைப் புரட்டி நாள், வாரம், யோகம், கரணம், திதி என்ற ஐந்தையும் காண்கிறோம்.

இந்த ஐந்தும் நமக்குச் சாதகமாக இருக்க வேண்டுமென்றால், இத்தலத்திருந்து அருள்பாலிக்கும் பஞ்ச பைரவர்களையும் வழிபாடு செய்தால் போதும்.

பைரவருக்கும்,  பஞ்சாங்கத்திற்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது என நினைக்கிறீர்கள்....அப்படித்தானே கேட்கத் தோனுகிறதா?.

உலக நலனுக்காக யாகம் ஒன்றைச் செய்ய தீர்மானித்தார் வசிஷ்டர்.

வேள்விக்குத் தேவைப்படும் பாலுக்காக காமதேனுவை அழைத்தார்.

அதற்கு காமதேனு தேவலோகத்தில் இருந்ததால் என்னால் உடனடியாக புறப்பட்டு வர முடியாது என்றது.

அதற்கு வசிஷ்டர்...."நீ..தெய்வப் பசு என்பதால் உனக்கு இவ்வளவு கெளரவமா?"...எனக் கோபம் கொண்ட வசிஷ்டர் அதே சினத்தோடு.....இறைத் தன்மை மிக்க பசுவான நீ"....இனி நீ இரை தேடித் திரியும் சாதாரணப் பசுவாக பூவுலகில் அலைவாயாக!"... என்று சாபமிட்டார்.

உடனடியாக அமுதமாக இருந்த உடலாலான உடல் நிலை மாறி,  பசியாலும் தாகத்தாலும் தவித்து மேயப் புறப்பட்டது.

அச்சமயம் மேய்ந்து கொண்டிருந்த சாதாரணபசுவின் பக்கமாக நாரதர் வர, பசு நாதரை வணங்கியது.

அவர், அசுவத்த வனம் எனும் அரச மரங்கள் சூழ்ந்த காட்டுப் பகுதிக்குச் செல்!

அங்கே, பசுபதீஸ்வரருக்கு பாலைச் சொரிந்து வழிபாடு செய்!. உன் பாவம் உன்னை விட்டு அகழ்ந்து போகும் என்றார் நாரதர்.

பசுவும் நாரதர் கூறியடியே சென்று வழிபாடு செய்தது.

வழிபாட்டில் ஈசன் காட்சி தந்து, பசுவைப்  பீடித்திருந்த  சாபம் விலகப் பெற்றது.

'ஆ' வாகிய பசு வழிபட்டதால் *ஆவூர்* ஆனது.

இறைவனும் *பசுபதீஸ்வரர்* ஆனார்.

இதோடு நாரதர் வேலை முடிந்ததா? என்றால் இல்லை!

இதற்குப் பின் வசிஷ்ட முனிவரைத் தேடிப் போய் பார்த்த நாரதர் வசிஷ்டரிடம்......

தாங்கள் தெய்வீக பசுவிற்கு சாபமிட்டது உங்களுக்கும் அது பெரும் பாவம் ஆகும்! அப்பாவம் விலக நீங்கள் உடனடியாக அப்பசு வழிபாடு செய்த பசுபதியை வணங்குங்கள் என்றார்.

அதற்கு வசிஷ்டரும் இத்தலம் வந்து இறைவனைப் பணிந்து ஆசி பெற்று யாகத்தை முடித்தார்.

இத்தலம் சிலகாலமாக பஞ்சத்தில் சிக்கித் தவித்தது.

தசரதர் ஆண்ட சமயம் அது.

இதைக் கண்டு மனம் வாடி போனார் தசரதர்.

அச்சமயம் நாரதர் அங்கு வந்து சேர்ந்தார்.

பசுபதிநாதர் கோவிலை புணர்நிர்மாணம் செய்யப்பட்டால் பஞ்சம் விலகி ஊர் சீராகும் என்றார் நாரதர்.

அதன்படியே தசரதர் கோவிலைச் செப்பனிட்டார். குடமுழுக்குச் செய்திட்டார் தசரதர். ஊர் செழுமை உண்டாகி பஞ்சம் ஒழிந்தொலைந்து போனது.

*தல பெருமை:*
பஞ்சாங்கத்தின் அங்கங்களான நாள், வாரம், யோகம், கரணம், திதி ஆகியவற்றின் அதிபதியாகத் திகழ்பவர் பைரவர்.

காலத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை பைரவருக்கு உண்டென்பதால் *காலபைரவர்* எனப் பெயர் பெற்றார்.

அவரே இங்கே ஐந்து வடிவங்களில் காட்சி தருவதால் இது சிறந்த பரிகாரத் தலமாக சொல்லப்படுகிறது.

நாம் அனைவரும் நிச்சயம் ஏதாவது ஒருநாளில், ஒரு கிழமையில், யோகம், கரணம், திதியில் தான் நிச்சயம் பிறந்திருப்போம்.

பிறக்கும் பொழுது யாராலும் தோஷம் ஏதும் இல்லாத நாள் என்றெல்லாம் தேர்வு செய்து பிறக்க முடியாது.

ஆனால், எத்தகைய தோஷத்தாலும் அதிகமாக  பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், அவரவர் பிறந்த நாளில் (ஆவூர்) இத்தலம் வந்து பஞ்ச பைரவரை வழிபட்டால் போதும், காலத்தைக் கட்டுப் படுத்தும் பைரவர் பம் வாழ்வில் நல்ல காலமே நிலவச் செய்வார்.

இறைவன் விளங்கும் விமானம் அழகிய மலை உச்சியைக் கொண்டுள்ளதால் *மணிகூடம்* என்றும் வழங்கப்படுகிறது.

பிரம்மன், சப்தரிஷிகள், கணங்கள், தேவர், இயக்கர், கந்தவர், இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், திருமால், தசரதர் ஆகியோர்கள் வழிபட்டு அருள் பெற்ற தலம்.

தர்மத்துவஜன் எனும் அரசன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி குட்ட நோய் நீங்கப் பெற்ற தலம்.

*பூஜை:*
சிவாகம முறையில் இரண்டு கால பூஜை.

காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை,

மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு, பசுபதீஸ்வரர் திருக்கோயில், 
ஆவூர் அஞ்சல்,
(வழி) கும்பகோணம்,
வலங்கைமான் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்-612 701

*தொடர்புக்கு:*
மகாலிங்க அய்யர்.
94863 03484
பிச்சை குருக்கள்.
94448 61548
  
         திருச்சிற்றம்பலம்.

*நாளைய தலம்.....திருச்சத்தி முற்றம்.... வ(ள)ரும்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள்,இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment