Thursday, August 3, 2017

Naming a child - periyavaa

குருவே துணை...! பெரியவா சரணம்.....!.

ஜன்மாந்த்ர பூஜையின் பலன்...

கணவன், மனைவி இரண்டு பேருமே பெரியவாளிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள்.

வெகுநாள் கழித்து அந்தப் பெண் கருவுற்றாள்.

ஒருநாள் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது, அவளுக்கு ஒரு அற்புதமான கனவு வந்தது.

"உனக்கு பிறக்கப் போகும் பையனுக்கு என்னுடைய பெயரைத்தான் வைக்க வேண்டும்"

கனவில் வந்தது இந்த அதிரடி உத்தரவு !

போட்டது யார் தெரியுமா?....

அவர்களுடைய குலதெய்வமான, வைகுண்டபதியான ஸாக்ஷாத் ந்ருஸிம்ஹ ஸ்வாமிதான் !

இந்தப் பெண்ணும் கனவில் பகவானிடம் சொல்கிறாள்.....

"எங்களுக்கு எல்லாமே பெரியவாதான்! அவர் என்ன பேர் சொல்றாரோ அதைத்தான் கொழந்தைக்கு வெப்போம்"

"நான்தான் உங்கள் குலதெய்வம். என்னுடைய பெயரைத்தான் வைக்க வேண்டும்"

இந்தக் கனவு ஒரே ஒரு தரம் வந்திருந்தால் அதை வெறும் கனவு, என்று தள்ளலாம்.

ஆனால், லீலாபுருஷனான பகவானோ... லேஸில் விடுவேனா? என்று மறுபடி மறுபடி அவள் கனவில் வந்து, அவளுக்குப் பிறக்கப்போகும் பிள்ளைக்கு, தன் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று அடமோ அடமாக பிடிக்க ஆரம்பித்தான்!

கணவனும், மனைவியும், குழந்தை பிறந்ததும் பெரியவாளிடமே கேட்டுவிடுவோம் என்று நிஶ்சிந்தையாக இருந்தார்கள்.

குழந்தை பிறந்து ரெண்டு மாஸத்துக்கு பிறகு பெரியவாளை தர்ஶனம் பண்ணச் சென்றனர். அதுவரை அது வெறும் "குச்சிலி முச்சிலி! பட்டுக்குட்டி! பப்பு குட்டி!"..தான்! நாமகரணமே பண்ணவில்லை!

குழந்தையை பெரியவா திருவடிகளில் போட்டுவிட்டு, இருவரும் நமஸ்காரம் பண்ணினார்கள்.

அவர்கள் குழந்தைக்கான பெயர், பகவான் நரஸிம்ஹருடைய பிடிவாதம் இதெல்லாம் பற்றி எதுவும் பேச ஆரம்பிக்கும் முன், பெரியவா சிரித்துக் கொண்டே.....

"ஓஹோ! இவன் பொறக்கறதுக்கு முந்தியே... பேர் வெச்சிண்டேன்னா பொறந்திருக்கான்..! இல்லியோ? என்ன... நரஸிம்ஹா!"

பெரியவா, குழந்தையிடம்... குழந்தை போல் பேசி, "நரஸிம்ஹா!" என்ற வீர்யம் வாய்ந்த பகவானின் நாமகரணத்தை தன் திருவாயாலேயே மறுபடியும் ஊர்ஜிதப்படுத்தியதும், பெற்றவர்கள் இருவருக்கும் தூக்கிவாரிப் போட்டது!

என்ன ஒரு பாக்யம்!

பக்த வாத்ஸல்ய பெருமாளே கனவில் வந்து அடம் பிடித்து, தன் நாமத்தையே சூட்டவும், அதே பெயரை பக்த பராதீன பெரியவாளும் வைக்கவும்! ஆஹா! அந்தக் குழந்தையும் ஸரி, அவனைப் பெற்றவளும் ஸரி! பாக்யம் அஹோ பாக்யம்!

இதுதான் ஜன்ம ஜன்ம பூஜாபலன்! அந்தக் குடும்பமும், குறிப்பாக அந்தக் குழந்தையும், ஜன்மாந்த்ரங்களில் ஶ்ரீ லக்ஷ்மீநரஸிம்ஹ ஸ்வாமியை அப்படியொரு உபாஸனை பண்ணியிருக்கிறார்கள் என்பதுதான் ஸத்யம்!

"பகவத் விஷயத்தில் முயற்சியும், அப்யாஸமும் [practice] செய்பவன், ஒரு ஜன்மத்தில் என்னை அடைய முடியாமல் இறக்க நேர்ந்தாலும், மறு ஜன்மத்தில் மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய அவஶ்யமில்லாமல், விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து, என்னை அடைவான். அந்த மறு ஜன்மத்திலும் அவன் உத்தமமான பக்தர்கள், யோகிகள் வீட்டிலேயே பிறப்பான்...." என்று பகவானும் கீதையில் இதையே உரைக்கிறான்.

ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்

No comments:

Post a Comment