Thursday, August 3, 2017

What you give & get - Periyavaa

குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.

"என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.

என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. 

என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை" என்றார்.

புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்...

"ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள். 

தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். 

அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின. 

உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.

அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான். 

அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான்! எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான்.

இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை. 

நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது.

*#உன் #மனதைக் #குழந்தையைப் #போல் #வைத்திரு.

#உலகம் #உனக்கு #சொர்க்கமாகும்*" என்றார் குரு.

No comments:

Post a Comment