Sunday, July 30, 2017

HH.Sri Mahadevendra saraswati swamigal - Parameshti guru of Periyavaa

ஸ்ரீ மஹாதேவேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள்,மகா பெரியவாவின் பரமோஷ்டி குரு இவரும் மாபெரும் மகானாக வாழ்ந்தவர்

மத்யார்ஜுன க்ஷேத்திரம் என அழைக்கப்படும் திருவிடைமருதூர் என்ற ஸ்தலத்தில் இவர் அவதரித்தார். தஞ்சாவூரை ஆண்டு வந்த மகாராஷ்டிர மன்னர் சரபோஜி மகாராஜா பரம்பரையினருக்கு இப்பெரியவர்களின் முன்னோர்கள் குரு ஸ்தானமாக இருந்தார்களாம். இவர்கள் கர்நாடக ஹோஸினி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கன்னட மொழியைத் தாய் பாஷையாக கொண்டவர்கள் என்றும் ஹரித கோத்திரத்தில் தோன்றி ரிக் வேதத்தைக் கடைப்பிடித்து ஆச்வலாயன ஸுத்ரத்தைப் பின்பற்றியவர்கள் பூர்வாசிரமத்தில் மகாலிங்கம் என அழைக்கப்பட்ட இவர் பிற்காலத்தில் மகா புருஷனாக விளங்குவார் என்பதற்கான பல அறிகுறிகளையும் பெற்றிருந்தார். இவரின் புத்தி நுட்பத்தையும், ஆர்வத்தையும், ஆசாரத்தையும் கவனித்த அறுபத்தி நான்காவது பீடாதிபதியான ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெற்றோர்களின் அனுமதியின் பேரில் மடத்தின் வித்வத் கோஷ்டியில் மகாலிங்க சாஸ்திரிகளைச் சேர்த்தார.

 தனக்குப் பிறகு பட்டத்துக்குத் தகுதியானவர் மகாலிங்க சாஸ்திரிகள்தான் எனத் தீர்மானித்த பெரியவா, அவருடைய  *_பெற்றோர்கள் சம்மதத்தைப் பெற்று ஒரு நன்னாளில் சன்யாஸ ஆசிரமத்தையும் கொடுத்து காமகோடி பீட சம்பிரதாயப்படி நான்கு மகாவாக்யங்களையும் உபதேசித்து  போதித்து மஹா தேவேந்திர சரஸ்வதி என்ற சன்யாஸ நாமாவையும் சூட்டியருளினார்கள.
 பாரத தேசத்தின் பல பாகங்களிலும் விஜயம் செய்து அருள்பாலித்த சுவாமிகள் இளையாற்றங்குடி என்னும் சேத்திரத்திற்கும் வந்தார். அவரால் இத்தலம் பூலோக கைலாசமாக விளங்கியது.  *_இவருக்கு முன் காமகோடி பீடத்தில் பிரகாசித்து வந்த அறுபத்தி நான்கு ஆச்சார்யர்களையும் குறித்த குருபரம்பரா ஸ்தோத்திரத்தை இங்கு இயற்றினார்கள். விரோதி வருஷம் பங்குனி மாதம் எட்டாம் தேதி அமாவாசை (தர்ச தினம்) (20.3.1890) குரு வாரம் கைலாச நாதனுடைய சன்னதியில் அகண்டாகார பிரம்மசைதன்யன் ஆனார்கள்.

சுவாமிகள் கடைசி காலத்தில் இளைப்பாற வந்ததால் இளையாற்றங்குடி புகழ் பெற்ற தலமாயிற்று! ஒவ்வொரு வருடமும் பங்குனி மாத அமாவாஸ்யை நாளில் மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை மிகச் சிறப்பாக இளையாற்றங்குடியில் நடைபெறுகிறது.
நகரத்தார்களால் ஓர் ஆலயம் கட்டப்பட்டு அதில் ஆதி சங்கர பகவத் பாதாசார்யருடைய விக்ரஹமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. யஜுர் வேத பாடசாலை சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. சுவாமிகள் வம்சத்தினர் சிரத்தையோடு ஆராதனை விழாவில் பங்கேற்பது மிகவும் முக்கியமான விஷயமாகும்.

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாத அமாவாசையன்று சுவாமிகளின் ஆராதனை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Tomorrow is #137th #Aradhana of HH at Illayathangudi.

No comments:

Post a Comment