Sunday, July 30, 2017

Pancavarneswarar temple, Uraiyur

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                   *(24)*
🍁 *சிவ தல அருமைகள்,பெருமைகள் தொடர்.* 🍁
********************************************
       🍁 *மூக்கீச்சுரம்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*இறைவன்:* பஞ்சவர்ணேஸ்வரர்.

*இறைவி:* காந்திமதி.

*தீர்த்தம்:* சிவ தீர்த்தம்.

*தலமரம்:* வில்வமரம்.

சோழநாட்டில் காவிரி தென்கரையில் அமையப்பெற்றுள்ள 128 தலங்களுள் ஐந்தாவதாகப் போற்றப்படுகிறது.

*இருப்பிடம்:* திருச்சி நகரின் ஒரு பகுதி உறையூர்.

இதுவே முக்கீச்சுரம் எனப்படுகிறது.

திருச்சி உறையூர் பேருந்துகள் அடிக்கடி உள்ளன.

*பெயர்க்காரணம்:* சோழ மன்னர்களின் தலைநகரமாக உறையூர் ஒரு காலத்தில் விளங்கி வந்தது.

புகழ்ச்சோழர் ஆண்ட பதி இது.

*"ஊரெனப்படுவது உறையூர்"* என்னுந் தொடர் இதன் சிறப்பினை யுணர்த்தும்.

உறந்தை என்றும் இதற்கு பெயர் உண்டு.

வீரவாதித்தன் என்னும் சோழமன்னன் உலா வரும்போது அவனது யானையைக் கோழி ஒன்று வென்றமையால் கோழியூர் என்று பெயர்.

இதை யுணர்த்தும் சிற்பங்கள் ஆலயத்துள் பலவிடங்களில் உள்ளது.

*கோவில் அமைப்பு:*
கோயில் கடைவீதியில் அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கி முகப்புடான வாயில்.

கல் மண்டபம்.

உள் சென்றால், பெரிய நந்தியைத் தரிசிக்கலாம்.

கொடிமரம் செப்பினால் கவசமாக பொருத்தி சூழப்பட்ட அமைப்பு.

உள்கோபுரத்தையும் தாண்டி நுழைந்து சென்றால், முன்மண்டபத்தில் வலப்பால் நின்ற திருக்கோலத்துடன், அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.

மூலமூர்த்தி மிகவும் சிறிய சுயம்பு லிங்கத் திருமேனி.

உள்ளங்கையளவே கிழக்கு நோக்கி உள்ளது.

நடராஜ சபை உள்ளது.

உள் மண்டபத்தில் இடபக்க முதல் தூணில் உப்புறம் யானைமீது அம்பாரியில் சோழ மன்னன் வரும் போது, அந்த யானையைக் கோழி குத்திக் தாக்கும் சிற்பம் உள்ளது.

இதன் பக்கத்தில் உதங்க முனிவர் இறைவனை வழிபடும் சிற்பம் இருக்கிறது.

புகழ்ச்சோழர் திருமேனியைக் காணலாம்.

உதங்கமகரிஷியின் எதிரில் நடராஜ சபை இருக்கிறது.

கோஷ்ட மூர்த்தமாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவரிடத்தில் மகாவிஷ்ணு, பிரமன், துர்க்கை ஆகிய திருவுருவங்கள் உள்ளன.

பெரியதும் சிறியதுமாக இரு தட்சிணாமூர்த்தி உருவங்கள் உள்ளன.

பெரிய உருவம் சிறந்த சிற்பக் கலையழகுடன் திகழ்கின்றது.

சிறியது சோழர் காலத்தியது.

பெரியதாக வைக்க எண்ணி நாட்டுக் கோட்டை தகரத்தார் தம் திருப்பணியில் செய்து இரண்டையும் வைத்து விட்டார்கள்.

திருமாலுக்கு எதிரில் உள்ள தூணில் பிட்சாடனர் உருவம் உள்ளது.

இதற்கு எதிர்க் கம்பத்தில் தாருகாவனத்து ரிஷிபத்தினிகளின் உருவங்கள் உள.

உறையூர்க் கோயிலில் சிற்பங்களுக்குக் குறைவில்லை என்பது போல, 

கருவறையின் வெளிப்பக்கச் சுவரில் மேல்புறத்தில் நான்கு பக்கங்களிலும், வரிசையாக இறைவனின் பல்வகையான தாண்டவச் சிற்பங்கள் கலையழகுடன் காட்சி தருகின்றது.

*தல அருமை:*
மூவேந்தர்களும் வழிபட்ட தலம்.

உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து காலங்களில் ஐந்து வண்ணங்களோடு காட்சி நல்கிய தலம்.

இதனால் இறைவனுக்குப் பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர்.

பழமையும் சிறப்பும் உடைய இப்பதி இன்று வாணிபத்தில் மேலோங்கியுள்ளது.

அம்பாளின் சந்நிதியின்-- கருவறையின் வெளிப்புறத்தில் வலம் வரும் போது பறவையின் கால், மனித உடல், யானையின் முகம் கொண்ட அழகான சிற்பம் உள்ளன.

அதன் மறுபக்கத்தில் யானையைக் கோழி கொத்துவது போல மிக அழகான சிற்பம் உள்ளன.

இங்கிருக்கும் தீர்த்தம் --சிவதீர்த்தம். இத்தீர்த்தம் கோவிலினுள் உள்ளன.

இத்தீர்த்தத்தின் சிறப்பு என்னவென்றால், திருப்பாராய்த்துறையில் இருந்து வாழ்ந்து வந்த அன்பரொருவர் திருநீற்றைப் பெற்று வாயால் ஊதிய பாவத்திற்காகக் காட்டுப் பன்றியாய்ப் பிறந்து, பலகாலம் திரிந்து கடைசியில் வில்வ வனமாகிய இத்தலத்தை அடைந்து, அழிக்கத் தொடங்கிய போது வேடர்கள் அதுகண்டு துரத்த அப்போது அப்பன்றி ஓடமாட்டாது இங்குள்ள சிவதீர்த்தத்தில் வீழ்ந்தது.

இத் தீர்த்தத்தில் வீழ்ந்தமையால் அப்பன்றி பேறு பெற்று உய்ந்தது.

அத்தகைய உயர்ந்த தீர்த்தம் இத் தீர்த்தமாகும்.

இச் சிறப்பினை விளக்கும் சிற்பங்களான, இத் திருக்குளத்தில் இறங்கும் போது வலப்புறத்திலுள்ள கல்லில் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

*புகழ்ச்சோழர்:*
தம்முடைய சேனைகள் வெற்றி கொண்ட படுகளத்தில் துண்டிக்கப்பட்ட ஒரு தலையில் சிவனடியார் வளர்க்கும் சடைமுடியைப் பார்த்துத் துடித்த சோழ மன்னன் நெருப்பு மூட்டி அத்தலையை தன் தலை மீது வைத்து தூக்கிச் சென்று தீயுனுள் மூழ்கி புகழுடம்பு எய்தினார். எனவேதான் அவருக்கு புகழ்ச் சோழர்.

*திருவிழா:*
வைகாசி விசாகத்தில் பத்து நாட்களுக்குப் பெருவிழா நடைபெறுகின்றது.

மாதாந்திர விசேஷங்களான மாதபிறப்பு, சதுர்த்தி, கிருத்திகை, பிரதோசம், பெளர்ணமி மற்றும் புகழ்ச் சோழர், கோட்செங்கோட்சோழன் குருபூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

*பூஜை:*
காமீக ஆகம முறையில் நான்கு கால பூஜை.

காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை,

மாலை.4. 00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு, பஞ்சவர்ணேஸ்வர் திருக்கோயில்,
உறையூர் மற்றும் 
அஞ்சல்- 620 003
திருச்சி மாவட்டம்.

*தொடர்புக்கு:*
0431--2768546

           திருச்சிற்றம்பலம்.

*நாளை....திரிசிராப்பள்ளி.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செயுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment