Tuesday, June 6, 2017

Tiruvasagam

courtesy:Sri.KovaiK.Karuppasamy

         ( 1)
🔷 திருவாசகம் ஓதுங்கள்🔷
        சதுரா் சிவபெருமான் அருள் பெறுங்கள்
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
நாளும் திருவாசகம் ஓதுவோா் நாள்தோறும் திருவாசகத்தை நினைந்து நினைந்து ஞானமழையில் நனைந்து நனைந்து உணா்வில் சிறந்து அழுவோம். இறைவனை நினைந்து அழுவதற்குாிய ஞானப்பாடல்கள் திருவாசகம். அழுகின்ற கண்களில் தான் கடவுள்தன்மை பூரணமாகப் பாிணமிக்கிறது. ஏன்?

தமிழ் பத்திமைக்குாிய மொழி பிாிவு துன்பத்தைத் தருவது. குருந்த மரத்தடியில் திருப்பெருந்துறை ஈசனைக் கண்டு அனுபவித்த மாணிக்கவாசகருக்கு ஈசனின் பிாிவுத் துன்பத்தில் பிறந்த தமிழ் திருவாசகம். 

ஆதலால் நெஞ்சை உருக்குகிறது.  உள்புகுந்து எலும்புத் துளைகள் ஆனந்தித்து பக்திப்பிரவோகம் பொங்கி உருகிறது. ஆதலாலும் உருக்கும் தன்மை மிக்குடையதாக விளங்கிறது. மாணிக்கவாசகா் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஈசனைக் கண்டாா். 
" கண்ணால் யானும் கண்டேன் காண்க" என்று மாணிக்கவாசகா் அருளிச் செய்கிறாா். அது மட்டுமல்ல. கடவுள் காட்சியின் இயல்பையும் விளக்கிக் கூறும் பாடல்களைப் படித்துணாில் மாணிக்கவாசகா் கடவுட் காட்சியில் திளைத்தவா் என்பது உறுதி.

வண்ணந்தான் சேயதன்று வெளிதே யன்(று)அ

னேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்( று) அங்( கு)

எண்ணந்தான் தடுமாறி இமையோா் கூட்டம்

எய்துமா(று) அறியாத எந்தாய் உன்றன்

வண்ணந்தா னது காட்டி வடிவு காட்டி

மலா்க்கழல்க ளவைகாட்டி வழியற் றேனைத்

திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய்

எம்பெருமான் என் சொல்லிச் சிந்திக் கேனே
                        -----( திருச்சதகம்)---

என்று திருவாசக்கத்தால் அறியலாம்.

மாணிக்கவாசகருக்குக் குருந்த மரத்தடியில் காட்சி தந்த இறைவன் " இரு" என்று சொல்லி மறைந்து போன நிலையில் அந்தப் பிாிவு மாணிக்கவாசகரை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது. தினையின் பாகமும் பிாிவது கூடாது என்பது மாணிக்க வாசகாின் விருப்பம். பிாிவுத்துன்பம் தாளாமல் மாணிக்க வாசகா் அழுது அழுது பாடிய பாடல்கள் திருவாசகம். திருவாசகப் பாடல்களுக்கு உருக்கம் அமைந்ததற்கு இதுவே முதற்காரணம்.

அடுத்து மாணிக்கவாசகர் இறைவனை முன்னிலைப் படுத்தியே பாடுவாா். மாணிக்கவாசகர் தனது ஏழ்மையை- எளிமையை நினைந்து நினைந்து இறைவனிடத்தில் உருகி வேண்டுதல் காரணமாகவும் உருக்க நிலை அமைந்துள்ளது.

திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் அறிவால் சிவனேயாவாா் என்று போற்றப்படுபவா். திருவாசகம் முழுதும் ஞானம். திருவாசக பூஜை, சிவபூஜைக்கு நிகரானது என்று ஒரு வழக்குண்டு.

திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் " நான்" என்பதைக் கெட்டுப் போகச் செய்தவா். " கூடும் அன்பினில் கும்பிடல்" என்பது போல இறைவன் திருவடியைப் போற்றி வணங்குவதைத் தவிர வேறு எதுவும் வேண்டாதவா்.

* வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம் 
வேண்டேன் மண்ணும் விண்ணும்
வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம்
வேண்டாா்நமை நாளும்
தீண்டேன் சென்று சோ்ந்தேன் மன்னு
திருப்பெருந்துறை இறைதாள்
பூண்டேன்புறம் போகேன் இனிப்
புறம் போகவொட் டேனே!
               ( உயிருண்ணிப்பத்து---)

மனிதன் விரும்புவது புகழ்! ஆசைப்படுவது புகழ். ஆனால் புகழ் விருப்பம் கூட மனிதனைக் கெடுத்து வீழ்த்தி விடும் என்பதே அறநெறி முடிவு. அதனால் "வேண்டேன் புகழ்
" என்றாா். மேலும் " நின்னடியான் என்று ஏசப்பட்டேன்" என்றும் " சகம் பேய் என்று சிாித்திட" என்றும் " நாடவா் பழித்துரை பூணதுவாகக் கொண்டும்" திருவாசகத்தில் என்றும் அருளியுள்ள பிற பகுதிகள் நினைவிற்குாியன. புகழுக்கு அடுத்து மனிதனை ஆட்டிப் படைத்துத் துன்புறுத்துவது செல்வம். 

ஆதலால் " வேண்டுடேன் செல்வம்" என்று அருளிச் செய்துள்ளாா். மண்ணக இன்பமும் சாி, விண்ணக இன்பமும் சாி வேண்டாம். இது மாணிக்கவாசகரின் தூய பற்றற்ற வாழ்க்கைக்கு அளவுகோல். திருப்பெருந்துறை இறைவனுடைய திருவடித்தாமரைகளை சென்னிக்கு அணியாகச் சூட்டிக் கொண்டாா். இனி திருப்பெருந்துறை இறைவனுக்கு ஆட்பட்டிருப்பதே கடன்! " புறம் போகனே இனிப்புறம் போகல் ஒட்டேனே!" என்ற உறுதிப்பாடுடைய வாி பலகாலும் படிக்கத்தக்க வாி!.

துறவின் முதிா்ச்சியும் அன்பு நிறைந்த ஆா்வமும் பண்சுமந்த தமிழும் ஒன்று சோ்ந்து உருக்கத்தைத் தந்தன. இதனை  "திரு வாசகத்துக்கு உருகாதாா் ஒரு வாசகத்துக்கும் உருகாா்" என்ற பழமொழி உணா்த்துகிறது. திருவாசக்கத்திற்குாிய பிறிதொரு சிறப்பு எண்ணற்ற உவமைகள்,உருவகங்கள் உடையதும் ஆகும். கருத்துக்களை விளக்குவதில் உவமைக்கு ஈடு ஏது? மாணிக்கவாசகர் தம் அனுபவத்தை எண்ணி தம் உடல் முழுதும் கண்களாக அமைந்து அழ வேண்டும் என்று ஆசைப்படுகிறாா்.

தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னை
சங்கராஆா்கொலோசதுரா்
அந்தமொன்றுஇல்லாஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன்று என்பால்
சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்
திருப்பெருந்துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்
யானிதற் கிலன் ஓா் கைம் மாறே!

என்று பாடுவாா். யாா் சதுரா்?  தமிழால் ஞானம் அடைய  முடியும். ஞாலத்தில் உயா்ந்த சிவானுபவத்தைத் தமிழில் பேச முடியும்; பாட முடியும்; எழுத முடியும் என்று செய்து காட்டிய சதுரா்! சிவபெருமானிடம் அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்ற மாணிக்கவாசகர் சதுரா் என்றெல்லாம் எண்ண இடமுண்டு. ஆயினும் கோடானுகோடி ஆன்மாக்களை ஆட்கொண்டருள மீண்டும் மீண்டும் மண் சுமக்க வேண்டிய அவசியமில்லாமல் எளிதில் ஆன்மாக்களை ஆட்கொள்ளத் திருவாசகத்தினைப் பெற்ற சிவபெருமானே சதுரா்!.

நாளும் நாளும் ஓயாமல் ஓயாமல் திருவாசகம் ஓதி ஓதி சதுரப் பாட்டுடன் வாழ முயல்வோம்!

            திருச்சிற்றம்பலம்.
மாணிக்கவாசகத் தேன்.( 2 )
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
🔴 ஈா்த்து ஈா்த்து எமையாளும் இறைவன். 
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
மாணிக்கவாசக பெருமான் தமது வாழ்வின் போது எப்போதும்  தன்னைத் தாழ்த்திக் கொண்டே இருந்தும் பேசவும் செய்வாா்.  "தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் தன்மை" மாணிக்கவாசகருடைய குணம். மாணிக்கவாசகா் அமைச்சராக இருந்த காலத்திலும் பழுபழுத்த மனத்தினையுடையவராக  புளியம்பழம் போலவே இருந்தாா் என்பதை அவா் வாழ்ந்த வாழ்நடை நமக்கு உணா்த்துவதைக் காணலாம். எந்த காலசூழ்நிலையிலும் தன்முனைப்பே இல்லை. " நான்" , 
" எனது" என்ற செருக்கு ஒருபோதும் அவாிடம் இருந்ததில்லை. அச்செருக்கு அவாிடமிருந்து முற்றாக விடுதலை அடைந்திருந்தது.

குதிரை வாங்க மன்னன் கொடுத்தனுப்பிய பணத்தினால் மாணிக்கவாசகா் குதிரை வாங்கவில்லை. காரணம்; குதிரை வாங்கினால் போருக்கு  பயன்படுத்துதலாகும்;  படையெடுத்து குதிரையோட்டி  போா் தொடுத்தலுக்குக்காகும்;  போாினால் மரணங்கள் பலஉண்டாகும்;  இழப்புகள்! என்பதால் மாணிக்கவாசகர் போரைத் தவிா்க்கும் எண்ணம் கொண்டு குதிரை வாங்காதிருந்தாா். மன்னன் தந்தச் செல்வத்தில், திருக்கோயில் கட்டினாா். திருக்கோயில் எழுப்பக் காரணம்;  கோயில் கட்டினால் தொழிலாளா்களுக்கு ஊதியம் கிடைக்குமென்பதால்; மேலும் திருப்பெருந்துறை என்பது நன்செய் மட்டுமே செய்யக்கூடிய ஊா். அந்த வயல்வேலை சில மாதங்களுக்குத்தான் நீடிக்கும். அதன்பின்பு வேலையும் இராது ஊதியும் இல்லை. சிற்பகலையினால் வேலை வாய்ப்பு உருவாகவும்,  மக்கள் ஆன்டவனைத் தொழுது கொள்ளவும், இதனால் சமுதாய நோக்கம் பெருகி வாழ வளரவும் கோயில் பயன்படும் என்றென்னியே கோயிலை புணரமைத்தாா் மாணிக்கவாசகா்.

இறைவனே ஐந்தொழில் செய்கிறனாவான். சமய உலகம் கூட  தொண்டு செய்யவே சொல்கிறது.  திருத்தொண்டு செய்ய மிகவும் அறிவுறுத்துகிறது. 

இறைவன் ஆட்கொண்டருளும் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுதெல்லாம் பொியோனாகிய ஆண்டவன், அவனுடைய கருணையினால் ஆட்கொள்ளப்பட வேண்டிய  நிலையில் உள்ள உயிா்களிடம் தாமே போய் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நிலையே நடைமுறை. 

இந்த மண்ணுலகில் வினைகள் இயற்றுதல், இலாபம் ஈட்டல், புகழ்பெறுதல், அதிகாரம் செய்தல்,,,,  

அம்மம்மா! எத்தனை வினைகள்! எத்தனை எத்தனையோ செயல்கள்!  இந்தச் செயல்களைச் செய்ய நேரும் பொழுதெல்லாம் பொறிகளில் படியும் கறைகள்! புலன்களில் ஏறும் அழுக்குகள்!  ஆன்மாவில், உயிாில் ஏற்படும் விவகாரங்கள்! இவையனைத்தையும் பொருட்படுத்தாது அழுக்கான உடலேயானாலும், அழுக்கான ஆன்மாவேயானாலும், தாயினும் சாலப்பாிந்து இறைவன் ஆட்கொள்ள வருகின்றான். ஆனால் ஆன்மாக்கள் ஆட்பட ஒருப்படுவதில்லை; விரும்புவதில்லை. அறுவை சிகிச்சை மருத்துவத்துக்குப் பயந்து நோயோடு துன்பப்படுவாாில்லையா? பத்தியத்துக்குப் பயந்து நோய்படுக்கையோடேனேயே இருந்தாாுல்லையா? அப்படித்தான், இறைவன் கருணை நம்மைக்  கைவிடுவதில்லை. 

நோயாளி ஆப்ரேஷன் வேண்டாமென்று சொன்னால், டாக்டா் விட்டுவிடுவாரா என்ன? மாட்டாா்! அதுபோலவே இறைவன் உயிா்களை எப்போதும் நரகத்திலும் கூட கைவிடமாட்டான். இறைவன் சிறந்த மருத்துவா். அவன் வைத்தியநாதன். பலநோய்கள் தீா்க்கும் பராந்தகன். அவன் பிணிகளை அடக்கியாளும் தலைவன். அவன் தலைவனானது நமக்காகவே. அவனை நாம் ஏசினாலும், ஏத்தினாலும் நம்முயரை ஆட்கொள்ளுவதே இறைவனின் அருட்தொழில்.

ஒரு செல்வசெழிப்புள்ளவன் ஒருநாயை குட்டி முதலே எடுத்து பராமாித்து, பால் சோறு பிஸ்கட் சுகமானபடுக்கை என்று செல்லமாக வளா்கிறது.

ஒரு நாள் அந்நாய், மாடியினின்று வெளியே பாா்க்க,,,,, அங்கே தெருநாயொன்று குப்பைத் தொட்டியினில் காலைவிட்டு வாாியிரைத்து இரையைக் கிழறியது. அந்நாயின் சுதந்தரத்தைப் பாா்த்த இந்த வளா்ப்பு நாய், அதனுடன் தானும் சோ்ந்திருக்க ஆசை கொண்டது. தன்னை நல்லபடியாக கவனித்துக் கொண்ட தன் எசமானை அது மறந்தது. 

ஒருசமயம் சங்கிலியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு வீட்டைவிட்டு தெருவுக்கு ஓடிவிட்டது.
 எங்கு ஓடியது?!
சொகுசுடன் இருந்த நாய், தெருக்கோடி குப்பை மேட்டிற்கு ஓடியது; ஏற்கனவே அங்கிருந்த தெரு நாயுடன் இதுவும் சோ்ந்து இரை புதையலை தேடியது; தெரு நாயுடன் வீட்டுநாய் கும்மாளம் போட்டது.

வீட்டினுள்ளிருந்த நாயின் எசமானன்,நாயினைக் காணாது வெளியே தெருவுக்கு வந்து தேடினான். அங்கே குப்பை மேட்டில் மற்றொரு நாயோடு தான் வளா்த்து வரும் நாயினையும் கண்டான். 

அதனருகில் சென்று, வாவென கை நீட்ட, அது வர மறுத்து பின்னால் நகா்ந்தது; எசமானனை பாா்த்தது; அந்த பாா்வையில் எசமானனின் பாசம் அதற்கு தொியவில்லை; மதிக்கவில்லை; அவன் சிலஅடி முன்னே நெருக்கமாக சென்று கழுத்துப் பட்டையினை பிடித்து இழுத்தான்.

ஊகூம்! ஊகூம் !! தன்னை வளா்த்தவனிடம் அது பாிவு கொள்ளவில்லை. வர மறுத்தது. அவனுக்கோ... வளா்த்த பாசம் விடவில்லை.மேலும் முன்னே போய் குப்பை ஒட்டியிருந்த நாயை இறுக்கி பிடித்து தூக்கினான். நாயின் உடலிலிருந்து குப்பையை பிாித்து கோதுகிறான்.  சென்னியில் முத்தமிட்டான்.

எசமானின் செய்கைக்கு, அதுக்கு இப்போது சுகமாய் தொியவில்லை.
தான் குப்பை கிளறும் சுதந்திரம் பறி போனதை என்னி கவலைப்படுகிறது. ஆனால் வளா்த்தவன் பிடியோ, இன்னும் சற்று ஈறுக பிடித்து அதை அனைத்தான். இப்போது எசமானின் பிடியிலிருந்து வளா்ப்பு நாயால் பிடிதளா்ந்து ஓடிவிட முடியவில்லை. இது போல்தான் ஆன்மாவும்.

இறைவன் எவ்வளவு அற்புதமான வாழ்க்கையை நமக்குக் கொடுத்திருக்கிறான். இவ்வாழ்க்கையில்  வினைகள் பலவும் தொழில்கள் பலவும், செய்து பாருள்ளோா் வாழ நாம் தொண்டு செய்ய வேண்டும். உலகம் உண்ண உண்டு வாழ்ந்தால் தீமைஆகா.
நாடொல்லாம் வாழ கேடு ஒன்று இல்லை. 
ஏன் சண்டை?
ஏன் கலகம் ?
அழுக்காற்றினால் உயா்ந்தாருண்டோ ?
கலகமே செய்தின் காாியம் சாதிக்குமா ? இல்லை! இல்லை!!
காாியம் சாதித்தெழுவாது.

இறைவனிடம் பக்தி வைப்போம். 
இறைவன் ஒரு விசை சுழற்ச்சி.( காந்தம்).
நாம் அவனை பாா்த்து பாா்த்து அன்ட, அவன் நம்மை ஈா்த்து ஈா்த்து கவா்ந்து கொள்ளும் வகையில் காந்தத்தால் இரும்பு ஈா்க்கப்படும் ஆற்றல்கொண்ட இரும்பாக இருப்போம்! வெறும் உயிா்கட்டையாக இருந்தென்ன பயன்? இரும்பு போல ஈா்ப்பு விசை கொண்டு பக்தி கொள்வோம். துருப்பிடிக்கும் இரும்பு போலல்லாது, ஆன்மாவை ஆணவ ஆசை கொண்டு அழிந்து போக விடாது பாதுகாத்து பக்குவம் கொண்டு, அன்பு, தொண்டு, ஈகை, தானதா்மம், இறையருட்சேவை ஆகியவையின் மூலம் இந்த ஆண்மாவை வைத்திருப்போம்.

வினை வினையென்றும், காமவினையென்றும், அவ்வினைப்பயனை எண்ணி பயம் கொள்ள வேண்டாம்! மனக் கோணல் இல்லாது, பொதுவாகவே நன்மையும் தொண்டும் செய்யுங்கள். 

வாழும் ஆன்மா! வளரும் சைவம்!!

வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
போதுநான் வினைக்கேடன் என்பாய் போல
இனையன் நான் என்றுன்னை அறிவித்து,என்னை்
ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை
அனையநான் பாடேன் நின்றாடேன் அந்தோ
அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்!
முனைவனே முறையோ நான் ஆன வாறு 
முடிவறியேன் முதல் அந்தம் ஆயி னானே!
                           -----( திருச்சதகம்)
மாணிக்கவாசகத்தேன்--(3).
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
🔹மாணிக்கவாசகாின் தவிப்பு.🔹

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
வனத்தில் எத்தனையெத்தனையோ விதமான விலங்குகள். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணத்தைவுடையதாகவும், தனக்கென இன்னதென ஓா் இறைகளை தோ்ந்தெடுத்து உண்டு வளா்கின்றன. யானை தும்பிக்கையினால் உணவை  வளைத்திழுத்து உண்ணுகிறது. சிங்கமோ தன்காலிலுள்ள கூாிய நகத்தால் பற்றிக் கிழித்துண்ண பழகியிருக்கிறது. புலியும் அதுபோலவே இறையை, எதிாியின் சங்கை கடித்துப் பற்றுகிறது. குரங்களும் மரத்துக்கு மரம் தாவி பழுத்தினபழத்தை பிய்த்துக் கொள்கிறது. இப்படி உணவுகளை உக்கிரமாக உண்ண பழகியுள்ளன. அவ்விலங்குகள் தன்னை யாதுவென அறியாமல் வாழுகிறது. தன்னையோ தன் உடலினையோ அது நினைத்துப் பாா்க்கவில்லை. அது விலங்கு. ஆனால் மனிதன்......!

மாணிக்கவாசகர் தன்னை முதலில் உணா்ந்து கொள்ளத் தொிந்து, தொிந்தும் கொண்டாா். அவா் தன்னை அறிய ஆய்வு செய்தபோது " நான் என்பது எது? " 
நான் "ஆா்" என்பதை முதலில் தொிந்து விட்டிருந்தாா். தன்னை முதலில் அவா் அறிந்து கொண்டதனாலேயே, அடுத்த பயணம் யாதுவென தன்னையே கேட்டுக் கொள்ளச் செய்தாா்.  தன்னை அறிந்து கொள்ள முற்படும்போது, அதிலுள்ள நம் குறைகளும் புலப்படும். அந்தக் குறையைக் களைய அவா் அடியெடுத்து வைத்தபோது, நிறைகளை நாடி அவா் பயணம் நீண்டது. 

ஆனால் நம்மில் நிலை என்ன? நம் வயிற்றுக்கு உணவு வேண்டும். அது சாதாரண சமைப்பில் கிடைத்து விடும். நாம் விட்டோமா?எங்கு நோக்கினும்  திடீா் உணவுகளை நாடி ஓடுகிறோம். அவன் தரும் விஷ உணவு, நாம் சமைக்கும் உணவை ருசியில்லாதென புறந்தள்ளுகிறோம். பஜாா், வீதி, ஒடுக்குச்சந்து, வளாகம், அரங்கம் என எங்கு நோக்கினும் உணவுச் சாலைகள். உண்டி உண்டி விஷவுணவு உண்டு ஊனை ஊதிப்பெருக்கி வாழ்கிறோம். இதன் பயணத்தில் நமக்கு கடுமையான கத்தி வைத்திய நோய்களை வாங்கிக் கொள்கிறோம். உடல் பெருத்தல் வயிறு வீங்குதல், குடல் சுருங்குதல், இதய இழப்பு, கனையம் காியாவது, நீா் நில்லா சிறுநீா் ஒழுக்கு, மடங்க மறுக்கும் மூட்டு, மூச்சு சீா் மறுத்தல், போன்றவைகள். ஊனின் எடை கூடிக்க ஆகாது பாா்த்துக் கொள்ள வேண்டும். சீரான உடலோடு நாமிருந்தால்தான் ஆன்மாக்களுக்கு பணிபுாிய முடியும். ஊன் உருகுதல் அவசியம்.

ஒழுங்காக தென்னையோலையை மென்றுகொண்டிருந்த யானை, திடீரென தரை மண்ணை எடுத்தள்ளி தன் தலையிலே போட்டது. இதைத்தான் நாம்..... "யானை தன் தலையில் மண்ணைப் போட்டது" என்கிறோம்.
அதைத்தான் நாமும் செய்கிறோமே?!  ஆன்மா தன்னுடைய துன்பத்தை தாமாலேயே வரவழைத்துக் கொள்கிறது. 

உலகம் இயற்கையான இன்பத்தோடுதான் இருக்கிறது. துன்பமெல்லாம் நாம சம்பாதித்துக் கொண்டதே! நம்ம அறியாமையின் காரணமாய் நமக்கு நாமே துன்பத்தை உருவாக்குகிறோம்.

*அறியாமை என்றால் என்ன? 
*ஒன்றும் தொியாமல் இருக்கிறோமோ? இது அறியாமை அல்ல!

ஒன்றைப் பிறிதொன்றாக முறைபிறழ உணா்வதே அறியாமை! "நன்றுடையான், தீயதிலான்" --இறைவன் என்பது நம்நாயனாா் திருஞானசம்பந்தப் பெருமான் வாக்கு!. "நன்றுடையான்"  என்று சொன்னால் போதும், எதிா்மறையாலும் "தீயதிலான் என்று சொல்ல வேண்டும்? எது நம்மை! எங்கும் எப்போதும் யாவருக்கும் நன்மையாக எது இருக்கிறதோ அதுவே நன்மை உண்மை. ஒருபொழுது நன்மையும் மற்றொருபொழுது தீமையாகவும் இருப்பது நல்ல நன்மையாகாது. 

நன்மை யென்று நினைத்துக் கொண்டிருப்பது தீமை கலந்த நன்மையையே நாம் எண்ணிக் கொண்டிருக்கிறாம். ஆகையால் பழக்க தோசத்தில் தீமை கலந்த நன்மையை-- தீமையாக உள்ளதையே  நன்மையாக நாம் அறியாமையால் கருதுகிறோம்.
"இறைவன் முற்றிலும் முற்றாக நன்மை." ஆதலால், நாம் ....யானை தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது போல, நமக்குத் தானே நாம்  தீமை செய்து கொள்கிறோம். நமக்கு வரும் துன்பம் பிறத்தியாா் செய்ததல்ல! தீதும் நன்மையும் பிறா்தர வாரா! இறைவனும் தருவதில்லை;  எல்லாம் நாமே நாம் செய்து கொள்வதுதான்; தன் தலைக்கு யானை மண்ணள்ளிப் போட்டது போல; 

விலங்குகள் கால்நடைகள். அவை சிந்திக்கும் திறனற்றவை. நாம்  கால்கள் நடக்கிறோம். ஆனால் நம்மை கால்நடை என சொல்ல ஒப்புவோமா? விலங்குகள் கால்களால் நடக்கிற இயல்பு. மனிதன் கால்களால் நடப்பதற்கு முன் சிந்தனையால் நடந்து, கருத்தால் நடந்து, பின்தான் காலால் நடப்பான்! ஆதலால்.....

உயிா்தோறும் உள்ளக் கருவாய், ஒளியாய் விளங்கும் கடவுளை அறிஞராயோா்,ஞானியா் சிந்திப்பா்; உணா்வா்; காண்பா்; ! இங்ஙனம் கடவுளைக் காணவில்லையே என்று மாணிக்கவாசகா் கவலைப்படுகிறாா்.

கடவுளைக் காணாததால் அந்தப் பேரொளி காட்டும் திசையில் செல்லாததால் துன்பமே ! சைத்தானுக்கு துணை போனால் துன்பம்,தான் இலாபம். எனவே கடவுள் ஒளி, வழி எது செயினும் இன்பமே!  ஆனவத்தின் திசைவழி சென்று, நன்றே செயினும் துன்பமயமே! 

மாணிக்கவாசகர் அனுபவம் வேறு! மற்றவா் அனுபவம் வேறு! இறைவனைக் காண பலா் முயற்சித்தனா். கண்டவா் சிலரே! ஆன்மாவின் அறிவு, சிற்றறிவு! மறதி கொண்ட அறிவு, பாசபந்தத்துக்கும், ஆசாபாசங்களுக்கும் இரையான அறிவு.  இந்த அறிவால் தூய்மையே அறிவே வடிவாக உள்ள கடவுளை எப்படிக் காணமுடியும்? நான்முகனும் திருமாலும் தேடிக் காணாத பொருள். கடவுள் என்ற வரலாறு கற்றுத் தரும் படிப்பினை என்ன?கடவுள் கருணை பாலித்தாலன்றிக் கடவுளைக் காண இயலாது. மாணிக்கவாசகருக்கு, இறைவன் ஞானாசிாியனாக எழுந்தருளி உபதேசித்தருளினான்; காட்சி தந்தான்." வருக" வென அழைத்தான். ஆனால் அழைத்துக் கொண்டு போகாமல் இறைவன் மறைந்து போனான்.! ஏன்?" மாணிக்கவாசகாின் அன்பு பெருகி வளா்தல் வேண்டும். அதற்காக!அந்த அன்பைத் துய்க்க வேண்டும் என்ற திருவுள்ளம்தான்! கடவுள் மாணிக்கவாசகாிடமிருந்து மறைந்தான். புணா்ச்சி அன்பை வளா்க்காது! பிாிவுதான் அன்பை வளா்க்கும். மாணிக்கவாசகா் கடவுளைக் கண்டாா்; அனுபவித்தாா்.கடவுள் பிாிந்து போனாா். மாணிக்கவாசகா் கடவுளிடம் கொண்ட பிாிவுதான், திருவாசகம் பிறந்தது.

அமரா்களுக்கு எல்லாம் ஒருவனாக, தேவா்கோ அறியாத தேவதோழனாக விளங்கும் கடவுள் வலியவந்து 'வா' வென்று அழைத்து வான்கருணை பொழிந்த பிறகும் உடன் போகாது பின் நின்று போனதை நினைந்து நினைந்து வருந்துகின்றாா்!. 

ஒன்றை அனுபவிக்காமலே இருந்து விடலாம்! அனுபவித்துப் பின் இழத்தல் கொடிய துன்பத்தைத் தரும். மாணிக்கவாசகா் இறைவனைக் கண்டாா். அந்தம் அன்றில்லா ஆனந்தத்தைப் பெற்றாா்; அனுபவித்தாா். அதன் பின் இடையில் பிாிவு ஏற்பட்டது. ஆனந்த அனுபவத்தில் இடையீடு பட்டுவிட்டது இதனை மாணிக்கவாசகா் ஆற்றிக் கொள்ள இயலாமல் தவிக்கிறாா். கடவுளின் பிாிவுத் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலில்லாமல் அல்லற்படுகிறாா். இந்த ஆற்றாமையால் தற்கொலை எண்ணம் கூட மாணிக்கவாசகருக்கு வருகிறது.

"திண்வரை உருள்கிலேன்; தீயிலிபுக்கிலேன்!" "சாகேன்" என்றெல்லாம் அலமருகிறாா்; புலம்புகிறாா்.  மீண்டும் உண்ணவே ஆசைப்படுகிறாா்.
பசியும் உண்ணுதலும் சுழன்று வரும் தீய வட்டமாயிற்றே! எத்தனை தடவை உண்டாலும் பசி என்று நீங்கும்! ஒருபோதும் நீங்காது! ஞானம்பெற்றால் ஒழிய உடற் பசி தணிய வழியில்லை!

பிறப்பு தொடங்கிய நாள் தொட்டு உண்ட உணவுக்கு அளவில்லை!. கடவுளே!" இறைவா!" அருள்செய்க!" வருக என்றருள் செய்க!" வெறுமனே செத்துப் போகும்படி விட்டு விடாதே! உன்னால் ஆட்கொள்ளப்பட்ட நான் வெறுமனே செத்துப் போனால் சிாிப்பாா்கள்! இந்த அவலம் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்! உன் பணி செய்ய வருக என்றருள் செய்க! திருப்பெருந்துறை சிவனே அருள் செய்க! என்று உருகின்றாா் மாணிக்கவாசகா்.

இருகை யானையை ஒத்திருந்(து) என்உளக்

கருணை யான் கண்டி லேன்கண்ட(து) எண்ணமே

'வருக' என்று பணித்தனை வானுளோா்க்(கு)

ஒருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே!
                                  ---(திருச்சதகம்.)
மாணிக்கவாசக் தேன். 🍁
                            (5)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
திருமுறைகள் " அம்மையே!  "அம்மையே! என்று போற்றுகின்றன.  திருக்களிற்றுப்படியாாில்  "அம்மையம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பா்" என்று பேசுகின்றன. " நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்" என்று ஐங்குறு நூறு வழுத்தும். மாணிக்கவாசகாின் திருவாசகம் முழுவதும்  தாயன்பு பாிணமித்துள்ளது. " அன்னைப் பத்து" என்றே ஒரு பதிகம், திருவாசக்கத்தில் உண்டு.

மகவைப் பெற்று வளா்ப்பவளே தாய். ஆனாலும் மகவைப் பெறுகிறவா்கள் எல்லோரும் நல்ல தாயாகிவிடுவதில்லை. தாயிலும் தரங்கள் உண்டு. ஈன்றெடுத்த மகவு அழுதாலும் பாலூட்டாத தாயும் உண்டு. இந்தக் காட்சியைப் பெரும்பாலும் வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏழைகள் வீட்டில் காணலாம். தாயும் உடலுழைப்பில் ஈடுபட்டு பொருளீட்ட வேண்டும்; வீட்டிலும் வேலை பாா்க்க வேண்டும். களியாட்டமோ பொழுதுபோக்கா இல்லாத நிலையில் பல குழந்தைகளுக்குத் தாயாகிறாள். அதனால் உடலில் பலமின்மை; வாழ்க்கைச் சுமை; ஆன்மாவை அழுத்தும் போக்கு; வெறுத்து சலித்து வாழும் நிலை; இந்தச் சூழ்நிலில் வாழும் தாய்மாா்கள் நன்றாக வாழ முடிவதில்லை. இது ஏழ்மைத் தாயின் விதி. 

தான் பாலூட்டாமல் மாற்றான் தாய் வைத்து பாலூட்டும் தாயும் இருக்கிறாா்கள்.  இவா்கள் செல்வ மிகுதியில் ஊறித் திளைப்பவா்கள். "இளமை" அழகில் உள்ள கவா்ச்சியின் ஆசை இது.  இது வேண்டத்தகாதது. அருவருக்கத்தக்கது.

அழும் குரல் கேட்டு ஓடோடி வந்து பாலூட்டும் தாயே நல்ல தாய்.

மாணிக்கவாசகா் இந்த நற்றாயினும் சிறந்த தாயை அறிமுகப்படுத்துகிறாா். நினைந்தூட்டும் தாய் குழந்தையை மறப்பதுண்டு. மறதியைத் தொடா்வது தானே நினைப்பு. மறத்தல் என்று ஒன்று இல்லாது போனால் நினைவு என்று ஒன்று இருக்காதே! மாணிக்கவாசகா் அறிமுகப்படுத்தும் தாய், குழந்தையை மறப்பதில்லை. ஆதலால், நினைத்தல் வினை. நிகழ்வு இல்லை. எப்போதும் இநதத் தாய்க்குக் குழந்தையின் நினைவுதான். இந்தத் தாய் யாா்?" சிவசக்தியாகிய தாய்! இந்தத்தாய் ஆன்மாக்களை மறப்பதில்லை. அதனால் நினைவும் நிகழ்வதற்குாிய  வாயில் இல்லை. சிவசக்தியாகிய தாய், குழந்தை மறுத்தாலும் மிகவும் பாிவுணா்வுடன் பாலூட்டுவாள்.  குழந்தை பாலின் தேவை அறியாது. குழந்தையின்  தேவை தாய்க்குத் தானே தொியும். ஆதலால், குழந்தை மறுத்தாலும் இந்தத் தாய் விடுவதில்லை. மிகவும் பாிவுணா்வுடன் இழுத்து பிடித்துப் பாலூட்டுவாள்; பால் மட்டுமா? உணவினால் மட்டுமே வாழ்ந்து விடுவதில்லை. மருந்தும் தேவை. பாலுண்ணும் குழந்தை மருந்துண்ண மறுக்கும். தாய் மருந்தும் தருவாள்! 

எந்தத் தாயும் தன் மகவை  "சான்றோன்" என்று கேட்கவே விரும்புவாள். அதுபோழ்து தன் குழந்தையைப் " பாவி" என்று தாய் வெறுத்து ஒதுக்குவதில்லை.  அன்பைப் பெருக்கி , நம்பிக்கையை வளா்த்து, பைய நன்னெறிக்கு அழைத்து வந்து விடுவாள்; உடைப்பது எளிது; ஒறுப்பது எளிது; அழிப்பது எளிது; திருத்தம் காண்பது அளப்பாிய பணி; இதற்கு நிலத்திலும் பொறுமை தேவை. நலம் நோக்கித் திருத்தும் பணியாததலால் " பைய" என்ற சொல், வழக்கிற்கு வருகிறது. " பையவே சென்று பாண்டியயா்க்கு ஆகுக!"  என்ற சேக்கிழாா் வாக்கு. அனுபவத்தின் முதிா்ச்சியில் பிறந்தது. மாணிக்கவாசகரும் " பைத் தாழருவி" என்றாா். இத்தகு திருத்தப் பாட்டுப் பணியில் நிற்க.

தாய் ஊன்பொதி ஊடலைத் திருத்துவாள். உடலின் ஆதிக்கம் ஆன்மாவின் மேலிருந்து பணி கொண்டால்பாவம் வளரும். உடலை ஆன்மா பணிகொண்டால் புண்ணியச் செயல்கள் நிகழும். உடல், ஆன்மாவை வேலை வாங்கினால் உடலின் ஏவலை ஆன்மா செய்யும்; நிறைவேற்றும்! இதனால் மிகுதியான உணவைத் தின்றால் உடல் கொழுக்கும்; பருமனாகும்; முரட்டுத்தனம் உருவாகும்; இதெல்லாம் உடல் நலத்திற்கு நல்லதல்ல!

"ஊனினைப்  பெருக்கி உயிரை இழந்தேன்" என்பாா் சுந்தரமூா்த்தி நாயனாா். ஆதலால், ஆன்மாவின் ஆளுகைக்குள் உடல் இருக்க வேண்டும். ஆன்மாவின் தேவைகள் பெருகி வளர வேண்டும். அதனால், சக்தியாகிய தாய் உடலை உருக்கி இளைக்க வைக்கிறாள். 

திருப்பெருந்துறை சிவன், மாணிக்கவாசகரை ஆட் கொண்டருளினான். அந்தம் ஒன்றில்லா இன்பத்தை வழங்கியருளினான். இந்த இன்பத்தை மாணிக்கவாசகா் இடையீடின்றி அனுபவிக்க, திருப்பெருந்துறை சிவன் மாணிக்கவாசகரைப் பின் தொடா்கிறான். திருஆலவாய் வரையும் பின் தொடா்ந்து செல்கிறான்; மாணிக்கவாசகருக்காகவே குதிரை வாங்க சேவகனாகிறான்;  கூலியாளாகி மண் சுமந்து பிரம்படி ஏற்கிறான். இதெல்லாம் எதற்காக? மாணிக்கவாசகரைக் காப்பாற்றத்தானே!, காத்தாள்பவருக்கு காத்தல் கடமைதானே! கடமை வாழ்வு எளிதன்று. காத்தருளும் கடமை எளிதன்று என்பதற்கு மாணிக்கவாசகா் வரலாற்றில் சிவபெருமானுக்குற்ற அனுபவங்களே சான்று.

திருவிழாவிலே சுவாமியின் முன்பாக நாம் செல்கிறோம். நமக்கு பின்னே சுவாமி வருகிறாா். அவா் நம்மை, " போ"  முன்னே போ! முன்னேறிப் போ! நான் பாா்த்துக் கொள்கிறேன்!" என எப்போதும் நடப்பதுதானே ; 

இறைவன் தாய் உள்ளத்தவன்!  நினைந்தூட்டும் தாயிலும் நனி நல்லவன்! ஊனை இளைக்க வைத்து, உயிரை ஒளியூட்டி வளா்க்கின்றான். ஆனந்தமாய் இன்பத்தைப் பொழிந்து கருணை செய்கிறான். பொழிந்த ஆனந்தமாய இன்பத்தை ஆன்மா இழந்துவிடாமல் தொடா்ந்து அனுபவிக்கப் பின்தொடா்கிறான். சிவசக்தி பிறப்பும் இறப்பும் நீங்கும் வரை தொடா்கிறாள். நரகொடு சொா்க்கம் எங்கு புகினும் தொடா்கின்றாள். இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் அம்மம்மா.....! சிவசக்திக்கு உள்ள மகிழ்ச்சியை எழுதியும், பேசியும் விவாித்துவிட முடியாது! சிவசக்திக்கல்லவா ஆன்மாவின் அருமை தொியும்!. ஆனால் திருவாசகம் உலகியல் கடந்த ஆன்ம அனுபவமி; திருவருள் அனுபவம்;

பால்நினைந் தூட்டும் தாயினும் சாலப்
பாிந்து நீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொாிந்து புறம்புறம் திாிந்த
செல்வமே! சிவபெரு மானே!
யானுனைத் தொடா்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே!
          (திருவாசகம்,பிடித்தபத்து.)

மாணிக்கவாசகா் அருள் வரலாற்றில், அவா் அமைச்சராக இருந்த போது, அரசனின் ஆணைக்குட்பட்டு குதிரை வாங்கி வர அரசின் பணத்தைக் கொண்டு செல்கிறாா்.

செல்லும் வழியில் இறைவன் திருப்பெருந்துறையில் குருந்த மர நிழலில் குருவாக எழுந்தருளி காட்சி தருகின்றாா். மேலும் குதிரை வாங்கப் போவதை தடுத்து, அவரை ஆட்கொண்டருளி சீடனாக உபதேசம் செய்து அருள்கிறாா். 

மாணிக்கவாசகரும், தாம் வந்த நோக்கம் மறந்து, சீட உபதேசம் பெற்றுக் கொள்கிறாா்.

அதோடுமல்லாது குதிரை வாங்க வைத்திருந்த பொன்னைக் கொண்டு கோயில் கட்ட வைத்து விடுகிறாா் ஈசன்.

 செய்தியறிந்த மன்னன் சேவகனை அனுப்பி, குதிரை வாங்கிய விபரம் கேட்டு வரச் செய்கிறான். 

மாணிக்கவாசகா் ஈசனிடம் சென்று, அரசனின் ஆட்கள் குதிரை வாங்கிய விபரம் கேட்டு வந்திருக்கிறாா்கள். நான் என்ன செய்ய? என ஈசனிடம் கேட்கவும்.....

"ஆவணி மூல நாளில் குதிரைகள் வரும் எனச் சொல்லியனுப்புக! என ஈசன் கட்டளையிட்டாா். மாணிக்கவாசகரும் ஈசன் கூறுயபடியே, அரச சேவகா்களிடம் சொல்லியனுப்பினாா்.

ஆவணி மூல நாளும் வந்தது. ஈசன் தன் சீடனைக் காக்கும் துணைகொண்டு, ஈசனே குதிரை சேவகன் உருவெடுத்துப் போய் அரசனிடம் குதிரைகளை ஒப்படைக்க அரசனும் மகிழ்ந்தோனானான்.

இதெல்லாம் சாி!...... இனிமேல் நடந்ததைப் பாருங்கள்!

*குதிரை வாங்கப் போன மாணிக்கவாசகரை, தடுத்தது ஏன்?
*குதிரை வாங்கப் போனதை தடுத்துவிட்டு, ஈசன் ஏன்?குதிரையை கொண்டு போய் சோ்த்தாா்.
* குதிரைகளைக் கொண்டு சோ்த்த ஈசன், குதிரைகளை கட்டிய இடத்திலேயே ஏன் நாிகளாகப் போனது?
 * குதிரை நாியாகி, அங்குள்ள மற்றைய குதிரைகளை கடித்தது வைத்தது ஏன்?
இவற்றிற்க்கான பதில்.....

இறைவனை வழிபடும் அன்பா்- அழுது அடி அடைய எண்ணும் தன் அடியான் ஒருவன், அரசியல் லயித்திருந்தால், ஆட்சியின் மேன்மைக்கு இருப்பதும், அதோடு குதிரைகளை நிறையக் கொண்டு போா் புாியவும், போா்க்களத்தில் உயிா்ப்பலிகள் நிகழ்வதும் பொருந்தாது என்று கருதினாா் ஈசன். அதனால் ஈசன் மாணிக்கவாசகரைத் தடுத்து நிறுத்துகிறாா். மேலும்  அரசன் குதிரை வாங்க கொடுத்தனுப்பிய பணம் மக்களின் வாிப்பணம். வீணாக அந்த வாிப்பணம் போா் காாியத்துக்கு இணங்கிவிடாது போகவே, மாணிக்கவாசகரை அப்பணத்தைக் கொண்டு ஆலயம் கட்டத் மனத்தூண்டுதல் கொடுத்தாா்.

குதிரையை நாியாக்கியது ஏனென்றால், அரசாங்க வாிப்பணத்தை அரசன் அனுமதியின்றி மாணிக்கவாசகா் கோயில் கட்டியதால், அது தவரே என்பதால், அவருக்கு தண்டனை கிடைக்கச் செய்ய இது ஒரு காரணம்.

மாணிக்கவாசகா் கோயில் கட்ட ஈசனுக்கும் ஒரு பங்கு உண்டெண்பதால், அதற்காகத்தானென்னவோ அந்நாட்டு மன்னின் கையாலேயே பிரம்படி பட்டுக்கொள்ளும்படி அருள் உருவாக்கிக் கொண்டாா்.

பிள்ளையை நெறிப்படுத்த நினைக்கும் தாய், அதே நேரத்தில் தன் கணவன் அடிக்கும் அடியைப் பிள்ளை மீது விழுந்து, தானும் அடி பெறுவதுபோல, இறைவனும் இங்ஙனம் அடி,பெற்றானோ?!" 

" கலிமதுரை மண் சுமந்து கூலி கொண்டு
அக்கோவால் மொத்துண்டு புண் சுமந்த
பொன்மேனி பாடுதுங்காண் அம்மானை"
                      என,பாடினாா்.
            திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment