Thursday, June 1, 2017

18 Ramas in a song

Courtesy:Sri.GS.Dattatreyan

.........................ராமன் எத்தனை ராமனடி!!...........

இராமயணத்தில் பட்டாபிஷேகப் படலத்திற்குப் பிறகு வரும் இரண்டாம் காதையில் சலவைத் தொழிலாளி ஒருவர் சொன்னார் என்பதற்காக.. சீதையைக் காட்டில் விட்டுவிட்டு வரும்படி தம்பி இலக்குவனிடம் இராமர் ஆணையிடுவார். அவ்வாய்ச் சொல் ஏற்று இலக்குவன் சீதையைக் காட்டில் விட்டு விட்டு, வீடு திரும்பியபோது ராமன் நிலைப்படியில் தலையை வைத்து அழுது கொண்டிருப்பார். அப்போது இலக்குவன் அண்ணன் ராமனைப் பார்த்து.. ஏனண்ணா.. இது என்ன ? நீங்கள் தான் ஆணையிட்டீர்கள்.. இப்போது அழுதுகொண்டிருப்பதென்ன? என்று கேட்க.

"ஆணையிட்டது கோசலராமன்.. 
அழுதுகொண்டிருப்பது சீதாராமன்"

என்று ராமர் சொல்வார்.
இப்பொறிதான் .. இப்பாடல் உருவானதற்கான கருவானது என்று கண்ணதாசன் ஒரு நூலில் எழுதியுள்ளார்.

ரகுராமன்
சிவராமன்
ஸ்ரீராமன்
அனந்தராமன்
என 18 ராமன்களைக் இந்தப் பாட்டில் வரிசைப்படுத்துகிறார் கவிஞர்!

ராமன் எத்தனை ராமனடி - அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
(ராமன் எத்தனை ராமனடி!

கல்யாண கோலம் கொண்ட - கல்யாணராமன்
காதலிக்கு தெய்வம் அந்த - சீதாராமன்
அரசாள வந்த மன்னன் - ராஜாராமன்
அலங்கார ரூபம் அந்த - சுந்தரராமன்
(ராமன் எத்தனை ராமனடி)

தாயே என் தெய்வம் என்ற - கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட - தசரதராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் - கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் - ஸ்ரீஜெயராமன்
(ராமன் எத்தனை ராமனடி)

வம்சத்திற்கொருவன் - ரகுராமன்
மதங்களை இணைப்பவன் - சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் - ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் - அனந்தராமன்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!!!

படம்: லக்ஷ்மி கல்யாணம் (கவியரசரின் சொந்தப் படம் என்று நினைக்கிறேன்)
இசை: M.S.விஸ்வநாதன்
குரல்: P.சுசீலா

No comments:

Post a Comment