Wednesday, May 10, 2017

mantara & Surpanaka in ramayan

courtesy:Smt.Saroja Ramanujam

யத்ருச்சா என்று ஒரு சொல் சமஸ்கிருதத்தில் அடிக்கடி வரும். அதற்கு அர்த்தம் தற்சயலாக. வால்மீகி இதை இரண்டு இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். ஒன்று மந்தரை விஷயத்தில் . இரண்டாவது சூர்ப்பனகை வருகை.

மந்தரையை यतो जाता, ,எங்கோ பிறந்தவள் என்று கூறி प्रासादं आरुरोह यदृच्छया, தற்செயலாக மாளிகையின் உப்பரிகைக்கு ஏறினாள் என்கிறார். அவள் அப்படி செய்யாதிருந்தால் ராம பட்டாபிஷேகம் நடந்து முடிந்திருக்கும்.

அதேபோல சூர்பனகை வரவையும் கவி तं तं देशम् राक्षसी काचित् आजगाम यदृच्छया, அந்த இடத்திற்கு ஒரு ராக்ஷசி தற்செயலாக வந்தாள் என்கிறார். அவள் வராமலிருந்தால் ராவணன் வதம் இல்லை.

அதனால் யத்ருச்சா என்பது ஈஸ்வர இச்சா என்பது நிரூபணம் ஆகிறது. Thus Manthara gave the initial push towards the fulfillment of the purpose of the incarnation and Surpanakha was responsible for the finale of the drama.

இதிலிருந்து தற்செயல் என்பது ஒன்று கிடையவே கிடையாது என்று தெரிகிறது. நம் திட்டங்கள் நடக்காமல் போவதும் நினைக்காத ஒன்று நடப்பதும் அவன் செயலே. அவன் செயல் எல்லாம் நன்மையே செய்கின்றன. இதை நம் வாழ்வில் கண்கூடாகப் பார்க்கலாம்.

நல்லவை எல்லாம் தற்செயலாக நடந்தவை. ஏனென்றால் அவை எல்லாம் நாராயணன் செயலே.

No comments:

Post a Comment