Thursday, April 13, 2017

Eat crow & karuvaadu - A different meaning in tamil

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்''

என்னது காக்கா கறி சமைச்சு கருவாடு தின்பவர்தான் சைவர்களா என பதற வேண்டாம்..இது அப்படியே புரிஞ்சிக்கிட்டா இதன் தமிழ் விளையாட்டும் அர்த்தமும் புரியாமல் போகும்...

காக்கை =கால் கை அளவு
கறி சமைத்து= காய்கறி சமைத்து
கரு வாடு =கரு எனும் உயிர் வாடும் என்று
உண்பர் சைவர்= உண்பவர்கள் சைவ சமயத்தை சார்ந்தவர்கள்

அதாவது சிவனை வழிபாடு செய்யும் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் கால் வயிறு மட்டும் உண்பார்கள்..இதுதான் அவர்களது அடிப்படை நியதி...இதனல்தான் சிவனடியார்கள் எப்போதும் ஒல்லியான தேகத்துடன் இருப்பார்கள் இப்படி இருந்தால்தான் முக்திக்கு வழிகாட்டியான தவம்,யோகம் பயில முடியும்.

திருச்சிற்றம்பலம்
              ௐ

No comments:

Post a Comment