Thursday, March 30, 2017

4 paths of Saivism

Courtesy:Sri.SS.Sunderrajan

சமய குறவர்களான திருநாவக்கரசர், சம்பந்தர், சுந்தர், மாணிகாவாசகர் ஆகிய நால்வரும்  இந்த நான்கு வகை பக்திமார்கத்தில்  ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவராக திகழ்ந்தனர் என்று  பெரியோர்கள் சொல்வார்கள்.

சரியை என்பது இறைவனை வழிபடுவோர்கள் இறைவனைத் தொழுவது மட்டுமல்லாமல் அவனைத் தன்னுடைய எஜமானாகப் பாவித்து தான் அவனுக்கு அடிமை என்று எண்ணி அவனுக்கு தொண்டு செய்து வழிபட்டு முக்திக்கு வழித் தேடுவார்கள். இதை தாச மார்கம் என்பார்கள்.

இறைவனைத் தன் தகப்பனாக பாவித்து அவன் தாள் பணிந்து வழிபடு
வோர்கள் கிரியை வழி சேர்ந்தவர்கள். அவர்கள் செல்லும் மார்க்கம் ஸத்புத்திர மார்கம்.

இப்படி இல்லாமல் இறைவனைத் தன் நண்பனாகப் பாவித்து அவனை துதித்து பிரார்த்திப்பது சக மார்கம். இறைவன் தன் உடலில் உள்ளான் என வணங்கி வழிபடும் முறை. இம் முறை யோகம் எனப்படும்.

தன்னையயே இறைவனாகப் பாவித்து 'நான்' என்ற அகந்தையை அழித்து வழிபடும் முறை ஞானம் என்று அழைக்கப்படும்.

இதனால் அடையப்படும் முக்தி முறையே சாலோபம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

இந்த வழி முறைகள் ஏதோ தனித்தனியானது என்று எண்ணக்கூடாது. எல்லாமே ஒன்றில் ஒன்று இணந்து சரியையில் சரியை, சரியையில் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் என நான்காய் ஆகி  பதினாறு படிகளாய் விரிவடையும்.

சாலோகம் - ஈசனவன் கூட்டத்தில் அவ்வுலகில் வாழ்வது.
சாமீபம் - ஈசன் சமீபத்தில் அவன் ஆடும்பாதமடி வாழும் பேறு பெறுவது.
சாரூபம் - ஈசனின் வடிவே தாமும் எய்தி வாழ்வது.
சாயுச்சியம் - ஈசனே தன்னுள் கலந்து தான் அவனாகிவிட்ட அத்துவைத நிலை. சாயுச்சிய பதவி பெற்றோர்க்கு மீண்டும் பிறவி இல்லை என்பர்.

ஓங்கார ரூபமாகி
ஒளியாகி வெளியாகி உதயகிரி மீதினில்
உதிக்கின்ற தெய்வமாகிச்
சகல புவனங்களும் தானாகி நின்றவொரு
சச்சிதானந்த மயமாய்ச்
சாலோக சாமீப சாரூப சாயுஜ்ய
சகல சூட்சும தாரியாய்
விக்கிர சிவலிங்க வடிவாக வுமிகுந்த சதுர்
வேதாந்த முத்தி முதலாய்
வெகுகோடி காலங்கள் உன்னையே நம்பினேன்
வேதனே பர நாதனே
சுக்ரகெம் பீரபரி பூரண விலாசனே
சுயம்புரத மீதேறியே
துலங்குகதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரி நாராயண சுவாமியே !----– சூரிய நமஸ்கார பதிகம்

Listen the lecture

No comments:

Post a Comment