Wednesday, April 29, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part32

Courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-32.

 

ராகம்: பூபாளம்                        தாளம்:ஜம்ப

 

பல்லவி: ஸ்ரீவேங்கடேஸ ராஜீவாட்க்ஷ மேலுகொனவே

         வேவேக மேலுகொனு வெலிஸாயலமரே--ஸ்ரீவேங்கடேஸ

 

திருமலை வேங்கடேஸனே அழஹான கண்களையுடையவனே வெளியில் இருட்டுபோய் வெளிச்சம் வந்துவிட்டது சீக்கிரமாஹ எழுந்திரு

 

ச.1.ஸுருலு கந்தர்வ கின்னருலேல்ல iகூடி

   தம்புரு ஸ்ருதுலனுஜேரி ஸரவிகானு

   அருணோதயமு தெலிஸி ஹரிஹரீயனுசு நர

   ஹரி நின்னு தலசேரு ஹம்ஸஸ்வரூப—ஸ்ரீவேங்கடேஸ

 

தேவர்கள் கந்தர்வர்கள் கின்னரர்கள் சேர்ந்து தம்புரு ஸ்ருதி சேர்த்து வரிசையாக அருண உதயமகியதை தெரிந்து எல்லோரும் ஹரி ஹரி என்று சொல்லிக்கொண்டு அன்னப்பறவை போல் உள்ள உன்னை நரஹரி என்று மனதில் நினைத்தார்கள்

 

ச.2.அலசிலுக பலுகுலுகுனு ஆதர பிம்பமு போலெ

   தெலிவி திக்குல மிகுல தேடபாரே

   அலரு குசகிருலன் உதாஸ்த அத்ரிபை வெலிகெ

   மலினமுலு தொலகனிதோ மஞ்சு தெரவிச்சே—ஸ்ரீவேங்கடேஸ

 

பேசும் கிளிகளின் உதடு {மூக்கு} போல் எல்லா திசைகளும் காலை விடியலுக்கு முன் சிவப்பு நிரமாகவும் மலையின் மேல் விடியும் சூரியன் ஒளியினால் பனி மூட்டங்கள் விலக பனி என்னும் திரை விலகியது

 

ச.3.தளுகொத்தநிந்திரா தாடங்க ரவிருசுல

   வெலிகன்னு தாமரலு விகசிம்பகானு

   அலமேலுமங்க ஸ்ரீவேங்கடாசலரமண

   செலவு மீரகனு முககளலு கனவச்சே—ஸ்ரீவேங்கடேஸ

 

நளினமான பெண்களின் காதுகளில் ஆபரணம் {தாடங்கம்=தோடு} போல்

சூரிய கிரணங்களின் ஒளியில் தாமரைபூக்கள் மலர அல்மேலுமங்கையின் நாயகனான திருமலையின் தலைவனே அன்பு மேலோங்க உன் முகம் அழகை காண தாமரைபூக்கள் வந்தன.

 

இந்த பாட்டின் உட் பொருள்

 

பக்தனின் மனதில் யோகநித்திரையில் இருக்கும் இறைவனின் கிரணங்களின் ஒளியில் பக்தனுடைய ஹ்ருதயகமலம் {இருதயம் என்னும் தாமரை} மலர்ஹிறது என்பது கவியின் வர்ணனை.

No comments:

Post a Comment