Wednesday, April 29, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part33

Courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-33.

 

ராகம்: பூபாளம்                           தாளம்:சாபு

 

பல்லவி: மேலுகொனவே லக்ஷ்மி மேலுகொனவே

 

எழுந்திரு லக்ஷ்மி எழுந்திரு

 

அ.ப. மேலுகொனவே பக்தபாலனமு சேயுடகு

      மேலுகொனவே நன்னு கன்ன தல்லி-- மேலுகொனவே

 

எழுந்திரு பக்தர்ஹளை காக்கும் பொருட்டு எழுந்திரு என்னை பெற்றதாயே

 

ச.1.மேலுகோ ஸ்ரீதேவி மேலுகோ பூதேவி

   மேலுகோ ஸாம்ராஜ்யமிச்சு லக்ஷ்மி

   மேலுகோ அலமேலு மங்கம்ம மாயம்ம

   மேலுகோனி லோகமுலு பாலிம்பவம்ம--மேலுகொனவே

 

 

எழுந்திரு மகாலக்ஷ்மி எழுந்திரு பூமிதேவியே

எழுந்திரு ஸாம்ராஜ்யங்களை தருபவளே

எழுந்திரு அலமேலு மங்க தாயாரே என் அம்மாவே உலஹத்தில் உள்ள சஹல ஜீவராசிஹளையும் காப்பாற்ற  எழுந்திருங்கள்

 

ச.2.சந்தன கஸ்தூரி ஜாஜுலு விடமுலனு

   அந்துகொனி நீகொஸகி போந்துபரச்சி

   கந்தர்ப்பகோடி ஹர கலசியுன்டின நேடி

   பொந்துகா ஸேவகு பொத்தாயம்ம—மேலுகொனவே

 

சந்தனம் கஸ்தூரி ஜாதிக்காய் ஜாதிபத்ரி கலந்த தாம்பூலம் ஏற்றுக்கொண்டு உனக்கும் கொடுத்து உன்னுடன் குலாவி கோடி மன்மதனை போல் ப்ரகாசிக்கும் ஹரியுடன் ஸேர்ந்து இருந்த இன்று ஹரிக்கு நல்ல முறையில் தொண்டு செய்ய காலம் கடந்து விட்டது

 

ச.3.ஹரிரோஹாரி ஹரிரோஹாரி ஹரிரோஹாரி

   ஹரிரோ ஹரிரோ ஹரி அனுசு லேசி

   ஹரிரோ ஹரிரோ ஹரியனு கன்னுதெரிசி

   ஹரிமுகம்புன இப்புடு அந்தமுக ஜூசி—மேலுகொனவே

 

ஹரி ஹரி என்று பதிமூன்று முறை சொல்லிக்கொண்டு எழுந்து கண்களை திறந்து ஹரியின் முகத்தை அழஹாஹ பார்த்துக்கொண்டு எழுந்திரு

 

ச.4.கத்ருதனயாங்க  ஹரிகௌகிடனு நெந்தஹ

   நித்ர பொய்யேதவம்ம நிகில ஜனனி

   பத்மமுலு விகசிஞ்ச்சே ப்ரமரமுலு பைமெரஸே

   அத்ரி வேங்கடரமணு ஸன்னிதியந்து—மேலுகொனவே

 

ஹரியின் கைகளுக்குள் எவ்வளவு நேரம் படுத்து தூங்குவாய் உலஹத்தில் உள்ள சஹால ஜீவராசிகளின் தாயாரே தாமரை மலர்ஹள் மல்ர்ந்துவிட்டன வண்டுஹள் தேனை குடிக்க அந்த தாமரை பூவில் மேல் ரீங்காரமிட்டுக்கொண்டு சுற்றுகிறது திருமலை வேங்கடரமணனின் கருவறைக்கு பக்கத்தில்

 

இந்த பாட்டின் உட் பொருள்

 

இந்த பாட்டில் மஹாலக்ஷ்மி தாயாரை எழுப்புவது போல் பாவனை. வசந்தகேளிகையில் சஹிகளில் ஒருவர் தாயார் என்று குறிப்பிட்டிருந்தோம் தாயார்தான் முதல் பக்தர். ஹரிக்கு தொண்டு செய்ய பக்தர்ஹளை விழித்துக்கொள்ளுமாறு கவி குரிப்பிடுஹிறார் ஹரி பக்தனின் மனதில் இருப்பதால் ஹரி இருக்குமிடத்தில் மஹாலக்ஷ்மி தாயாரும். தாயார் இருக்குமிடத்தில் ஹரியும் இருப்பார்ஹள் என்பது உலகறிந்த விஷயம்  தாமரை மொட்டாக இருக்கும்பொழுது குனிந்தும் மலரும்போழுது நிமிர்ந்தும் இருக்கும் இறைவனை எல்லா சமயதிலும் நினைத்துக்கொண்டிருக்கும் பக்தனின் மனதில் இறைவன் இருப்பதால் பக்தனுக்கு அருள் உண்டாகிறது அந்த சமயத்தில் பக்தனின் ஹ்ருதயம் தாமரை மலர்ஹள் போல் மலர்ஹிறது அருள் கிடைத்த பக்தனை மற்ற்வர்ஹள் வண்டு polபோல் சுற்றுகிறார்கள்

No comments:

Post a Comment